Tamil Star |
- Ajax இல் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு
- North York பாடசாலையின் முன்பாக பதின்ம வயது மாணவன் மீது கத்திக்குத்து
- கனேடிய ஊடகவியலாளர் Fahmy எகிப்திய சிறையில் இருந்து விடுதலையானார்
- ரொரன்ரோ கிழக்கில் கத்திக்குத்துக்கு ஆளான நபர் உயிரிழப்பு – சந்தேக நபர் சரணடைந்தார்
- ஐ.நா பொதுச் சபை மாநாடு – இறுதி வரிசை நாடுகளில் உரையாற்றும் கனடா
- சாப்பிட்டவுடன் பல் துலக்கலாமா? இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடலாமா?
| Ajax இல் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு Posted: 23 Sep 2015 10:07 PM PDT
Salem வீதிக்கு அருகில் நெடுஞ்சாலை 401 இன் கிழக்கு நோக்கிய வழித்தடங்களில் இன்று காலை ஆறு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து பற்றி இன்று இரவு காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், இந்த விபத்தில் இரண்டு போக்குவரத்து ரக் ரக வாகனங்களும், ஆறு சிறிய வாகனங்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த வாகனங்களுள் ஒரு சிறிய வானம் ரக் வாகனம் ஒன்றின் முன்பகுதியின் கீழே சென்று மாட்டிக் கொண்டதாகவும், அந்த சிறிய வாகனத்தில் ஆண் ஓட்டுநர் ஒருவர் இருந்தார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மிசிசாகாவைச் சேர்ந்த 63 வயதான அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். உயிரிழந்த மற்றைய நபர் Oshawaவைச் சேர்ந்த 57 வயது நபர் என்றும், உயிராபத்தான நிலையில் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து குறித்த நெடுஞ்சாலையின் பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் திறந்து விடப்பட்டது. விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். The post Ajax இல் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| North York பாடசாலையின் முன்பாக பதின்ம வயது மாணவன் மீது கத்திக்குத்து Posted: 23 Sep 2015 09:56 PM PDT
Don Mills and York Mills விதிப்பகுதியில் உள்ள 200 Graydon Hall Drive இல் அமைந்துள்ள George S. Henry Academyயின் முன்புறமாக இன்று புதன்கிழமை காலை 11.40 மணியளவில் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 17 வயதான அந்த மாணவனின் நெஞ்சுப் பகுதியில் பல தடவைகள் கத்தியால் தகுத்தப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு ஆளான அந்த மாணவன் உடனடியாகவே மருத்துமனைக்கு கெண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மோசமனா காயங்கள் காணப்பட்ட போதிலும் அவர் உயிர்பிழைப்பார் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கத்திக்குத்துக் காயத்துடன் குறித்த மாணவன் உதவி கேட்டுப் பாடசாலைக்குள் தாமாகவே மீண்டும் உள்நுளைந்திருந்தார் என்று சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்த சம்பவம் தொடாபில் 17 வயது சந்தேக நபா ஒருவர் தாமாகவே முன்வந்து காவல்த்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்த்துறையினர் குறித்த சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு சுமத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. The post North York பாடசாலையின் முன்பாக பதின்ம வயது மாணவன் மீது கத்திக்குத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடிய ஊடகவியலாளர் Fahmy எகிப்திய சிறையில் இருந்து விடுதலையானார் Posted: 23 Sep 2015 08:30 PM PDT
இந்த இரு ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100 சிறைக் கைதிகளை விடுதலை செய்யவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அல்-ஜசீரா ஊடகத்தின் ஊடகவியலாளர்களான இவர்கள் இருவரின் விடுதலையை அடுத்த பெரும்மளவிலான ஆதரவாளர்களும் சகபாடிகளும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கனேடிய ஊடகவியலாளர் Mohamed Fahmy விடுதலையானதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையில் தனது இந்த விடுதலை நம்பமுடியாமல் இருப்பதாக ஆச்சரியம் வெளியிட்டள்ளார்.
தாங்கள் விடுதலையானோம் என்ற உண்மையை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்கின்ற போதிலும் இனி எதனையும் எண்ணி தாம் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சகோதரத்திற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அல்ஜசீரா ஊடகவியலாளரான மொஹமட் பக்மி அவரது நண்பர்கள் இருவருடன் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எகிப்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கனேடிய ஊடவியலாளர் Mohamed Fahmy மற்றும் எகிப்திய ஊடகவியாளரான Baher Mohamed ஆகிய இருவரும் எகிப்பதிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் விடுதலையாகியுள்ளனர். மற்றைய ஊடகவியலாளரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Peter Greste ஏற்கனவே அவுஸ்திரோலியாவிற்கு நாடு கடத்தப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவரின் விடுதலை தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. The post கனேடிய ஊடகவியலாளர் Fahmy எகிப்திய சிறையில் இருந்து விடுதலையானார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ கிழக்கில் கத்திக்குத்துக்கு ஆளான நபர் உயிரிழப்பு – சந்தேக நபர் சரணடைந்தார் Posted: 23 Sep 2015 12:31 PM PDT
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணிக்கு சற்ற முன்னராக Neilson வீதி மற்றும் Military Trail, Oakmeadow Boulevard பகுதியில் இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அவசர மருத்துவ பிரிவினர் கருத்து வெளியிடுகையில், தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்துக்கு சென்ற போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மோசமான கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கத்தியால் உடலின் மேற்பகுதியில் குத்தப்பட்டிருந்ததாகவும், மோசமான காயங்களுடன் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தின் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணை நடாத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் காவல்த்துறையினரிடம் சரணடைந்துள்ளார். சரணடைந்த அந்த சந்தேக நபர் 31 வயதான Reg Spring என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்துள்ள காவல்த்துறையினர் அவர் மீது இரண்டாம் தரக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதுடன், இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர். The post ரொரன்ரோ கிழக்கில் கத்திக்குத்துக்கு ஆளான நபர் உயிரிழப்பு – சந்தேக நபர் சரணடைந்தார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நா பொதுச் சபை மாநாடு – இறுதி வரிசை நாடுகளில் உரையாற்றும் கனடா Posted: 23 Sep 2015 12:25 PM PDT
இம்முறை மாநாட்டில் 195 நாடுகள் உரைநிகழ்த்துகையில், 193 ஆவது நாடாக கனடா உரை நிகழத்தும் படியாகவே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி இறுதியாக உரைநிகழ்த்தவுள்ள சிறிய நாடுகளான சான் மரீனோ மற்றும் பலாவ் ஆகிய இரு நாடுகளுக்கும் முன்பாக கனடா உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இறுதியிலிருந்து மூன்றாவது நாடாக கனடா உரை நிகழ்த்துகிறது. கனேடிய பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெறவுள்ளது. இதனால் நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற நிலைமை காணப்படுவதாகவும், கனடா இறுதி வரிசை நாடுகளில் உரையாற்றும் நிலை ஏற்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று எனவும் கூறப்படுகிறது. பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரோ, வெளியுறவு அமைச்சர் றொப் நிக்கொல்சனோ இந்த மாநாட்டில் உரைநிகழ்த்த செல்லாத நிலையில், அவர்களை பிரதிநிதித்து துணை வெளியுறவு அமைச்சர் Daniel Jean அவர்களே இந்த மாநாட்டில் உரைநிகழ்த்த செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடாத சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கிறிஸ்டியன் பரடைஸ் அவர்களே வழமைக்கு மாறான சிறு குழுவுடன் இம்முறை ஐ.நா. பொதுச் சபை மாநாட்டுக்கு செல்லவுள்ளதாக வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கனேடிய குழுவுக்கு தலைமைதாங்கி செலலவுள்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர், ஐ.நா பொதுப் பேரவையின் துணை நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. The post ஐ.நா பொதுச் சபை மாநாடு – இறுதி வரிசை நாடுகளில் உரையாற்றும் கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாப்பிட்டவுடன் பல் துலக்கலாமா? இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடலாமா? Posted: 23 Sep 2015 08:20 AM PDT
சாப்பிட்டவுடன் பல் துலக்கலாமா? பழங்கள்,குளிர் பானங்கள்,ஒயின்,அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும். உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும். சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும்,அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்குஎந்த பாதிப்பும் ஏற்படாது. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று.காலை மாலை இருவேளையும் பல்துலக்குங்கள். இரவு நேரத்தில் பிரியாணி இரவு நேரத்தில் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அசைவம் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும். அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும். அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது. இரவு நேரத்தில் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வு எடுக்கும். அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது நல்லதல்ல. இதனால் தொடர் ஜீரணக்கோளாறு பிரச்னைகள் ஏற்படலாம். The post சாப்பிட்டவுடன் பல் துலக்கலாமா? இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடலாமா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Ajax பகுதியில் நெடுஞ்சாலை 401 இல் பல வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
North York பாடசாலையின் முன்பாக வைத்து பதின் வயது மாணவன் ஒருவன் மீது கத்திக்குத்து இன்று காலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
எகிப்திய ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பை அடுத்து கனேடிய ஊடவியலாளர் Mohamed Fahmy மற்றும் எகிப்திய ஊடகவியாளரான Baher Mohamed ஆகிய இருவரும் இன்று புதன் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் கனடா இறுதி வரிசை நாடுகளில் ஒன்றாக உரை நிகழ்த்துகிறது.

