Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


West Hill பகுதியில் கத்தி முனையில் கொள்ளை

Posted: 19 Sep 2015 09:16 PM PDT

gh

ghஸ்காபரோ பகுதியில் West Hill பகுதியில் உள்ள A Pik Kwik பலசரக்கு கடையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

4529 Kingston வீதி, கிழக்கு Morningside அவனியூ பகுதியில் அமைந்துள்ள Pik Kwik பலசரக்குக் கடையினுள் நடந்து வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பணியாளரிடம் பணம் கேட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் கையில் கத்தியை வைத்திருந்து பணியாளரை மிரட்டி குறித்த ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற அந்த சந்தேக நபர் 20 வயதுடைய வெள்ளையின ஆண் என காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.

அதேவேளை சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 416-808-4300 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்னர்.

The post West Hill பகுதியில் கத்தி முனையில் கொள்ளை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஊழல் குற்றச்சாட்டில் ஒன்ராறியோ காவல்த்துறை அதிகாரி கைது

Posted: 19 Sep 2015 08:26 PM PDT

io

ioநிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ள ஒன்ராறியோ மாகாண காவல்த்துறை அலுவலகம், தமது நிபுனத்துவ நியமப் பிரிவினரே இந்த விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ காவல்த்துறையின் South Porcupine பிரிவைச் சேர்ந்த Sylvie Demers என்பரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5000 டொலர்களுக்கு மேல் நிதி மோசடி செய்துள்ளதாகவும், நம்பிக்கைக்கு துரோகம் செய்துள்ளதாகவும அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஒன்ராறியோ காவல்த்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட Sylvie Demers எனப்படும அந்த காவல்த்துறை உத்தியோகத்தர் ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையில் கடந்த 21 வருடங்களாக கடமையாற்றி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ளதனை அடுத்து அவர் ஊதியத்தடனான பணி இடைநீக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அடுத்தகட்ட நீதிமன்ற வழக்கு ஒக்டோபர் மாதம் Timmins நீதிமன்றத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

The post ஊழல் குற்றச்சாட்டில் ஒன்ராறியோ காவல்த்துறை அதிகாரி கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோ கத்திக்குத்துச் சம்பவங்களில் ஐவர் காயம்

Posted: 19 Sep 2015 08:20 PM PDT

o

oஸ்காபரோ பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்களில் ஐவர் காயமடைந்துள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்களும் ஸ்காபரோவின் இரு வேறு இடங்களில் அதிகாலை 2 மணிக்கு சற்று பின்னராக இடம்பெற்றுள்ளது.

Markham வீதி மற்றும் Progress அவனியூப் பகுதியில் உள்ள McDonald's உணவத்தின் அருகில் 2.01 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, உடனடியாக தாம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இரண்டுபேர் கத்திக்குத்துக் காயங்களுடன் காணப்பட்டனர் என்றும், அவர்களில் ஒருவர் உயிராபத்தான நிலையில் இருந்தார் என்றும் கூறியுள்ளனர்.

காயமடைந்த இருவருமே உடனடியாக மருத்தவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே 2.38 மணியளவில் Ellesmere மற்றும் Markham வீதிப்பகுதிக்கு வருமாறு அவசர மருத்துவப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போது அங்கும் இரண்டு நபர்கள் கத்திக்குத்துக் காயங்களுடன் இருந்தனர் என்றும்,அதிலும் ஒருவர் உயிராபத்தான நிலையிலும், மற்றையவர் சிறிய காயத்திற்கு உள்ளான நிலையிலும் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.o

அங்கு சென்றிருந்த போது இரண்டு நபர்கள் கத்திக்குத்தக் காயங்களுடன் கிடந்ததாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றையவருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டிருந்தது என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் விபரித்துள்ளனர்.

அதேவேளை கத்திக்குத்திற்கு ஆளான நிலையில் ஐந்தாவது நபர் ஒருவரும் அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார் என்றும், எனினும் எங்கு வைத்து அவருக்கு கத்திக்குத்து நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்தள்ளனர்.

இதேவேளை இது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள விசாரணையாளர்கள் இந்த சம்பவங்கள் ஒன்றுக்கொண்று தொடர்புடையவையாக இருக்கலாம் என்று நம்புவதாக கூறியுள்ளனர்.

அதேவேளை சந்தேக நபர் தொடர்பிலான தகவல்கள் எதனையும் வெளிவிடாத காவல்துறையினர் இந்த சம்பவங்கள் தொடர்பில் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post ஸ்காபரோ கத்திக்குத்துச் சம்பவங்களில் ஐவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கல்கரி விவாதத்தில் முன்வைக்க்பபட்ட பொருளாதார அறிக்கை குறித்து Tom Mulcair விளக்கம்

Posted: 19 Sep 2015 11:34 AM PDT

mm

mmபொதுத் தேர்தலை ஒட்டி கல்கரியில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றிய பொருளாதார விவாதத்தில் புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair உம் தமது பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்திருந்தார்.

அதன் பின்னர் அவர் பங்கு பற்றிய தேர்தல் பிரச்சார நிகழ்வில் தமது அந்த திட்டம் தொடர்பில் விளக்கமளித்த போது, குறிப்பிட்ட இந்த பொருளியல் விவாதத்தினை முன்னிட்டு தம்மால் வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கை, ஒட்டாவின் பிரதான பொருளியல் வல்லுனர்களால் கணிக்கப்பட்ட 67 டொலர்கள் என்ற சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் தமது பொருளியல் திட்டங்கள் வெளிப்படையானது எனவும், நீடித்து நிலைக்கக் கூடியது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.mm

முடிந்தால் தம்மைப் போலவே பொருளாதாரத் திட்டத்தினை லிபரல் கட்சி தலைவர் Justin Trudeau அல்லது பழமைவாதக் கட்சித் தலைவர் ஸ்டீப்ன ஹார்ப்ரால் எழுத்துமூலமான ஆவணமாக முன்வைக்க முடியுமா எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

சொத்துக்கள், பண்டங்களின் விலைகள் நிலையாக இன்றி எப்போதும் ஏற்ற இறக்கமாகவே காணப்படும் என்பது தாம் அறிந்த விடயமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் 47 டெலர்களை அண்மித்ததாகவே இருக்குமெனில், அது குறுகிய கால பொருளாதார நெருக்கடியாக அன்றி நீண்டகால பிரச்சினையாக உருமாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு நிலை தொடருமானால் தமது பொருளியல் திட்டங்களை மீளாய்வு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair கருத்து வெளியிட்டுள்ளார்.

The post கல்கரி விவாதத்தில் முன்வைக்க்பபட்ட பொருளாதார அறிக்கை குறித்து Tom Mulcair விளக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தைகள், சிறுவர்கள் ஆலோசனை மையங்களுக்கு 20 மில்லியன் டொலர்கள் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்

Posted: 19 Sep 2015 11:24 AM PDT

Stephen_Harper-_8052015

Stephen_Harper-_805201520 மில்லியன் டொலர்களை குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆலோசனை மையங்களுக்கு செலவிட இருப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கல்கரியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

குழந்தைகள் சிறுவர்கள் ஆலோசனை நிலையங்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 20 மில்லியன் நிதி எதிர்வரும் நான்கு வருடங்களில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கொண்ட குற்றச் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதனை உறுதி செய்வதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

சமூகங்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்துவதன் மூலமே இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்க முடியும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.Stephen_Harper-_8052015

அந்த வகையில் இவ்வாறான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, குழந்தைகள் சிறுவர்கள் ஆலோசனை மையங்களுக்கான நிதி உதவிகளையும் அதிகரிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post குழந்தைகள், சிறுவர்கள் ஆலோசனை மையங்களுக்கு 20 மில்லியன் டொலர்கள் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

Posted: 19 Sep 2015 11:18 AM PDT

police_line_6122015

police_line_6122015நோர்த் யோர்க்கின் பிரதான வீதிச் சந்திப்புப் பகுதியி்ல் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.10 அளவில் Jane Street மற்றும் Finch Avenue பகுதியில், Dune Grasswayயில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடியிருப்பு பகுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 30 வயதுகள் மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த அவசர மருத்துவ பிரிவினர் தகவல் தெரிவிக்கையில், காயமடைந்தவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லும் போது அவரது உடல்நிலை சீராக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.police_line_6122015

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தினை அடுத்து அந்த பகுதியில் காவல்த்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையினால் அந்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

The post நோர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த பழங்களில் இத்தனை சத்துக்களா?

Posted: 19 Sep 2015 08:09 AM PDT

23

2உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

மாம்பழம்

மாம்பழத்தில் விட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.2

கொய்யா பழம்

விட்டமின் சி சத்து நிறைந்துள்ளது, எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.

மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம்.

விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.23

பப்பாளி

விட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

மேலும், நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

4

அன்னாசி

அன்னாசி பழத்தில் விட்டமின் "பி" சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.iu

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக விட்டமின் "ஏ" சத்து அதிக அளவில் காணப்படும்.

பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

5

The post இந்த பழங்களில் இத்தனை சத்துக்களா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™