Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஆட்கடத்தல் தொடர்பில் மூவர் கைது, ஒருவர் தேடப்படுகிறார்

Posted: 16 Sep 2015 08:43 PM PDT

u

uஒன்ராறியோவின் Stratford பகுதியில் பதின்மவயதைச் சேர்ந்த ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பெரியவர்கள் எனவும், ஒருவர் வயதில் குறைந்த சிறுவர் எனவும், மூவருமே ஆண்கள் எனவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், அவர்கள் மீது ஆட்கடத்தல், பலவந்தமாக தடுத்து வைத்தல் உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆட்கடத்தில் பாதிக்கப்பட்டவர் சமூக வலைத்தளத்தின் ஊடாகவே இந்த குழுவிடம் சிக்கிக் கொண்டதாகவும், இந்த கோடை காலத்தின் போதே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமாகும் நபர்களை சந்திப்பது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்கும்படி காவல்த்துறையினர் பதின்மவயது சிறுவர்களை எச்சரித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஆட்கடத்தல் தொடர்பில் மூவர் கைது, ஒருவர் தேடப்படுகிறார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ டவுன்ரனில் கத்திக்குத்து: படுயாமடைந்த ஆண் மருத்துவமனையில்

Posted: 16 Sep 2015 08:39 PM PDT

ji

jiஇன்று காலை ரொரன்ரோ டவுன்ரன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Yonge street மற்றும் Charles street பகுதியில், Yorkville குடியிருப்பில் இன்று காலை ஐந்து மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் ஏழு, எட்டு கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாக அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரி பிழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரமபித்துள்ள போதிலும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

The post ரொரன்ரோ டவுன்ரனில் கத்திக்குத்து: படுயாமடைந்த ஆண் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்பேட்டாவிற்கான வரி அதிகரிப்பு திட்டத்தை கடுமையாக சாடுகிறார் கனேடியப் பிரதமர்

Posted: 16 Sep 2015 09:06 AM PDT

,n.ui

,n.uiஅல்பேட்டாவிற்கான புதிய சனநாயக கட்சியின் வரி அதிகரிப்பு திட்டத்தை தற்போதைய கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கடுமையாக சாடியுள்ளார்.

வன்கூவரின் வட பகுதியில் நேற்றைய நாள் தனது தேர்தல் பரப்புறையை மேற்கொண்டிருந்த நிலையிலேயே புதிய சனநாயக கட்சியின் வரி அதிகரிப்பு திட்டத்தை சாடிய கனேடியப் பிரதமர்,குறித்த அந்த திட்டம் தற்போது மந்தமடைந்துள்ள பொருளாதார நிலையினை மேலும் மோசமாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Rachel Notley அல்பேர்ட்டா மாநிலத்தின் முதல்வராக அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னரே, அல்பேர்ட்டாவின் பொருளாதாரமானது மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடுதழுவிய ரீதியிலான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கு தமது அரசாங்கம் காரணம் இல்லை என கூறிய அவர் மசகு எண்ணெய் விலை அனைத்துலக ரீதியில் அரைப்பங்காக வீழ்ச்சியடைந்தமையே கனேடிய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றும் தமது அரசாங்கத்தை தற்காத்து பேசியுள்ளார்.,n.ui

அதேவேளை கனடாவின் தற்போதைய பொருளாதார மந்த நிலை அல்பேர்ட்டாவில் மேலும் அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமைக்கு புதிய சனநாயக கட்சி தலைமையிலனா மாநில அரசாங்கமே காரணம் எனவும், குறிப்பாக மாநில மக்கள் மீதான வரிச் சுமையினை மாகாண அரசாங்கம் அதிகரித்துள்ளமையே இதற்கு முழுமுதற் காரணம் என்றும் அவர் விபரித்துள்ளார்.

கடந்த மே மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை அரசாங்கத்தினை அமைத்துக் கொண்ட Rachel Notley, பெரிய நிறுவனங்களுக்கான வரியினை 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரித்ததுடன், ஆண்டுக்கு 1,25,000 டொலருக்கும் மேல் வருமானம் பெறுவோருக்கான தனிநபர் வரியினையும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

The post அல்பேட்டாவிற்கான வரி அதிகரிப்பு திட்டத்தை கடுமையாக சாடுகிறார் கனேடியப் பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியம் தரும் எலுமிச்சை புல்

Posted: 16 Sep 2015 08:57 AM PDT

po

poஎலுமிச்சை புல்(lemon Grass) இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றை குணமாக்க உதவியாக இருக்கிறது.

இதுமட்டுமன்றி பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது.

மருந்து மாத்திரைகளை விட வீட்டு வைத்தியம் சளி, இருமல், குளிர் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்தது.

மருத்துவ பயன்கள்

எலுமிச்சை புல் டீ பருகுவதால் இருமல், குளிர் காய்ச்சல் இருப்பின் அவற்றை குணப்படுத்துகிறது.

நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் அவதி படுபவர்களுக்கு உதவுகிறது.

நச்சு பொருட்களை அகற்றி உடலை தூய்மையாக்கி கொழுப்பின் அளவை குறைப்பதற்காகவும் பயன்படுகிறது.

சிறுநீரகம், கணையம், கல்லீரல், சிறுநீர்ப்பை போன்ற அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது.

செரிமான அமைப்பில் பிரச்சனைகள் ஏற்படாமல் செரிமான அமைப்பை மேம்படுத்தி இரத்த ஒட்டத்தை சீரமைக்கிறது.

மேலும் மாதவிடாய் கோளாறால் அவதிப்படும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதை முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு தொல்லையிலிருந்து விடுபடலாம்.[pui

எலுமிச்சை புல்லை எப்படி பயன்படுத்தலாம்?

சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேயிலை, இஞ்சி சேர்த்து தேநீர் மாதிரியும் பருகலாம்.

எலுமிச்சை புல், இரண்டு மூன்று கிராம்பு, சிறிய துண்டு இலவங்கப்பட்டை, மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பின்னர் இதனை வடித்துவிட்டு குடித்தால் காய்ச்சல், இருமல், சளி ஆகியவை குணமடையும்.

இது ஆண்டிபாக்டீரியா மற்றும் காலானின் பண்புகளை கொண்டிருக்கிறது.

po

The post ஆரோக்கியம் தரும் எலுமிச்சை புல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவில் பொது போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பது குறித்து விவாதம்

Posted: 16 Sep 2015 08:55 AM PDT

l,hj

l,hjரொரன்ரோவில் பொது போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் உள்ள சாத்தியப்பாடு குறித்து ரொரன்ரோ போக்குவரத்து கழகம் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பயணம் ஒன்றுக்கு சுமார் 25 சதத்தினை அதிரிக்கும் வகையிலான பரிந்துரை தொடர்பிலான விவாதம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுமானால் நடைமுறைக்கு வருவதற்கு ஒருமாத காலம் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ரொரன்ரோ போக்குவரத்து கழகத்தின் வரவுசெலவுத் திட்ட குழுவினர், போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான ஏழு வழிகள் தொடர்பில் நேற்றைய தினம் ஆழமாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

எனினும் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள ரொரன்ரோ போக்குவரத்து கழகத்தின் இயக்குனர் சபை கூட்ட விவாதத்தில் எடுத்து்க கொள்வதற்கான எந்தவொரு திட்டமும் நேற்றை கூட்டத்தில் முடிவாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.l,hj

ரொரன்ரோ போக்குவரத்துக் கழகத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 95 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக காணப்பட்டதனை அடுத்து, அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆலோசிக்கப்பட்டதாக TTC யின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தனி்ப்பட்ட பயணச் சீட்டுக்கான கட்டணத்தினை 25 சதத்தினால் அதிகரிப்பது, பயண அட்டைகள், முழுநாள் பயண சீட்டுகள், மெட்ரோ பாஸ் போன்றவற்றுக்கான கட்டணத்தினை ஐந்து அல்லது பத்து சதத்தினால் அதிகரிப்பது போன்றவற்றுக்கான சாதக பாதகங்கள் நேற்றைய கூட்டத்தின் போது அலசப்பட்டதாக கூறப்படுகிறது.

The post ரொரன்ரோவில் பொது போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பது குறித்து விவாதம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் நலத்துக்கு தேவையான 6 உணவுகள்!

Posted: 16 Sep 2015 08:49 AM PDT

32

32உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும்.

அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெள்ளைப் பூண்டு

குடல் புண் மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் உள்ளது. உடலில் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உருவாக வெள்ளைப்பூண்டின் பங்கு முக்கியமானது.2

வெங்காயம்

ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு கிருமிகளையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுக்கும் தன்மை வெங்காயத்தில் உண்டு.

நோய் தொற்றைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற ராசயனப் பொருள்தான், பாக்டீரியாக்கள், நச்சு கிருமிகள் போன்றவை உடலில் சேர விடாமல் தடுக்கின்றன.5

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இந்த விட்டமின், காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய் தொற்று கிருமிகளை எதிர்த்துப் போராடி, சேராமல் தடுக்கின்றன.6

பருப்பு வகைகள்

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற வகைகளில் உள்ள விட்டமின் ஈ, வெள்ளை ரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.32

இறால் மீன் மற்றும் நண்டு

அழிந்து போன செல்களால் ஏற்படும் நோயை தடுக்கும் சக்தி, இறால் மீன் மற்றும் நண்டு உணவில் உள்ளது.

இதற்கு இதில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. வாரம் ஒரு நாள் இவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.lk

தேநீர்

தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு, நோய் எதிர்ப்பு செல்கள் அழியாமல் தடுக்கிறது. நோய் தொற்றை தடுக்கலாம்.k

The post உடல் நலத்துக்கு தேவையான 6 உணவுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி கனடாவிலும் பேரணி

Posted: 16 Sep 2015 08:47 AM PDT

hj

hjஇலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி கனடாவிலும் மாபெரும் போரணியை நடத்துவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உள்ள விசாரணையை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவ்வாறான உள்ள விசாரணைக்கு கண்டனம் வெளியிட்டும், அனைத்துலக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி வேண்டியும் இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

ரொரன்ரோ யூனிவேர்சிட்டி அவனியூவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 7 மணிவரையில், இந்த பேரணி நடைபெறும் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.hj

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகளும் மற்றும் உலகின் பல பாகங்களில் இருக்கும் உறவுகளும் ஜெனீவாவில் ஐ. நா. முன்றலில் முருகதாசன் திடல் நோக்கி பேரணியாக அணி திரள இருக்கும் எழுச்சிக் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அந்த நிகழ்விற்கு வலுச் சேர்க்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்களும் சம காலத்தில் அதே நாளில் ரொறொன்ரோவில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நீதி வேண்டி மாபெரும் அணியாக திரண்டு எழுந்து போராட உள்ளதனை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பேரணியில் கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கனடியத் தமிழர் சமூகம் மற்றும் மாணவர் சமூகமுமாக அணி திரண்டு, இணைந்து, நீதியை வேண்டி போராட அணி திரண்டு வருமாறு கனடிய தமிழர் தேசிய அவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

The post அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி கனடாவிலும் பேரணி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒட்டாவா நபருக்கு எதிராக 76 ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள்

Posted: 16 Sep 2015 08:21 AM PDT

Ottawa_Police_Car

Ottawa_Police_Carஒட்டாவைச் சேர்ந்த 33 வயது ஆண் ஒருவருக்கு எதிராக பல்வேறு ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணைகளின் ஒரு பகுதியாக காவல்த்துறையினர் கடந்த திங்கட்கிழமை மூன்ற இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டதாகவும், அவற்றில் இரண்டு உடல் பிடித்துவிடும் நிலையங்களாக செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்து பாதிக்கப்பட்ட நான்கு பெண்களை மீட்டுள்ள அதிகாரிகள், 14,000 டொலர் ரொக்கப்பணத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.Ottawa_Police_Car

குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 33 வயதான Zhao Liu என்பவர் மீது, 17 பெண்களை கடத்தி வைத்திருந்தமை தொடர்பில் 76 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளின் போது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் குற்றச்சாட்டுகள் எவையும் பதிவு செய்யப்படாமல் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post ஒட்டாவா நபருக்கு எதிராக 76 ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™