மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காய்களை பழுக்க வைக்க கார்பைடு பயன்படுத்தினால் 6 மாதம் சிறை: தெலுங்கானா அரசு புதிய சட்டம்
- நகர்ப்புறங்களுக்கு இணையான வசதி: 300 கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்
- 35 ஆண்டுகளுக்கு பிறகு மகளை சந்தித்த தாய் ஆனந்த கண்ணீர்
- திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
- டெல்லியில் டெங்கு காய்ச்சல் பலி 14 ஆக உயர்ந்தது: மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
- விமான நிலையங்களில் சோதனை: முக்கிய பிரமுகருக்கான சலுகையை இழந்தார், ராபர்ட் வதேரா
- காஷ்மீரில் நிலநடுக்கம்
- நாகா தீவிரவாத இயக்கத்துக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை
- இந்திய எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் 4 முறை தாக்குதல்
- இந்திரா, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்தியது ஏன்? மத்திய அரசு விளக்கம்
- கிரகங்களை ஆய்வு செய்ய அஸ்ட்ரோசாட் செயற்கைகோள் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது: கிரண்குமார் தகவல்
- நேபாள பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த சவுதி தூதரக அதிகாரி இந்தியாவை விட்டு சென்றுவிட்டார்: மத்திய அரசு
- போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல்: முலாயம் சிங் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு
- தீவிரவாதத்துக்கு துணை போவதை நிறுத்துங்கள்: ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மீது சிரியா அதிபர் பாய்ச்சல்
- டெல்லி விமான நிலையத்தில் சுங்க அலுவலகத்தில் இருந்த 23½ கிலோ தங்கம் மாயம்
- விநாயகர்சதுர்த்தி: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வாழ்த்து
- கடைகளின் வெளியே பல்புகளை திருடிய கலால்துறை சப்-இன்ஸ்பெக்டர் கைது
- உத்தர பிரதேசத்தில் பியூன் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 255 பிஎச்டி பட்டதாரிகள்
- பிரதமரின் மவுனம் சுஷ்மா-வசுந்தரா செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்வதாகவே உள்ளது: அசோக் கெலாட்
- தமிழக அரசு பஸ்சுக்குள் இருக்கை உடைந்து ஓட்டை வழியாக கீழே விழுந்த பெண்: போக்குவரத்து அதிகாரி மீது வழக்கு
| காய்களை பழுக்க வைக்க கார்பைடு பயன்படுத்தினால் 6 மாதம் சிறை: தெலுங்கானா அரசு புதிய சட்டம் Posted: 16 Sep 2015 10:59 PM PDT ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மா, மற்றும் பப்பாளி உள்பட சில காய்களை பழுக்க வைக்க 'கார்பைடு' என்ற ரசாயன பொருள் பயன்படுத்தப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. 'கார்பைடு' பயன்படுத்தி பழுக்க வைக்கும் அந்த பழங்கள் முற்றிலும் விஷத் தன்மை கொண்டதாக மாறி விடுகிறது என்றும் இதனை அறியாமல் பழங்களை சாப்பிடுபவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் |
| நகர்ப்புறங்களுக்கு இணையான வசதி: 300 கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசு புதிய திட்டம் Posted: 16 Sep 2015 10:55 PM PDT மத்திய அரசு 300 கிராமங்களை மேம்படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்துக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி ரூரல் மிஷன் (எஸ்.பி.எம்.ஆர்.எம்.) என பெயரிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான அனுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்து. |
| 35 ஆண்டுகளுக்கு பிறகு மகளை சந்தித்த தாய் ஆனந்த கண்ணீர் Posted: 16 Sep 2015 10:55 PM PDT கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் யதீந்திராபால் விஜு. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு மும்பையில் வசித்தனர். அங்கு அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். அதன் பிறகு கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கீதா கணவரை பிரிந்து கேரளா வந்து விட்டார். அவரது மகள் தந்தையுடன் வசித்து வந்தார். |
| திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா Posted: 16 Sep 2015 10:50 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆந்திர மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஆந்திர மாநில முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு, மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிரம்ஹினி ஆகியோர் நேற்று திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடுவுக்கு பட்டு துண்டால் பரிவட்டம் கட்டப்பட்டது. அதற்கு மேலே வெள்ளித் தட்டில் பட்டு வஸ்திர |
| Posted: 16 Sep 2015 10:06 PM PDT டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. 1900க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று 41 வயது பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் அதேசமயம், நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே |
| விமான நிலையங்களில் சோதனை: முக்கிய பிரமுகருக்கான சலுகையை இழந்தார், ராபர்ட் வதேரா Posted: 16 Sep 2015 08:09 PM PDT சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழில் அதிபர் ராபர்ட் வதேரா கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வி.வி.ஐ.பி. அந்தஸ்தில் இருந்தார். இதனால் அவர் இந்திய விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கான சோதனை விலக்கு அந்தஸ்தை பெற்றிருந்தார். இந்நிலையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் ராபர்ட் வதேரா நில மோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் அவர் |
| Posted: 16 Sep 2015 07:53 PM PDT காஷ்மீரில் நேற்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் சில நொடிகள் உணரப்பட்டது. தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்தியா-சீனா எல்லைக் கோடு அமைந்துள்ள அக்சாய் சின் பகுதியிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. |
| நாகா தீவிரவாத இயக்கத்துக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை Posted: 16 Sep 2015 04:47 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "குண்டு வெடிப்புகளையும், தாக்குதல்களையும் நடத்தி வருகிற 'நா |
| இந்திய எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் 4 முறை தாக்குதல் Posted: 16 Sep 2015 04:22 PM PDT பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் மீதும் எல்லையோர கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் |
| இந்திரா, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்தியது ஏன்? மத்திய அரசு விளக்கம் Posted: 16 Sep 2015 04:22 PM PDT கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வெளியிடப்பட்ட முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உருவப்படம் பொறித்த தபால் தலைகளை, தொடர்ந்து வெளியிடுவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. |
| கிரகங்களை ஆய்வு செய்ய அஸ்ட்ரோசாட் செயற்கைகோள் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது: கிரண்குமார் தகவல் Posted: 16 Sep 2015 04:09 PM PDT இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன(இஸ்ரோ) தலைவர் கிரண்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வதற்காக 'அஸ்ட்ரோசாட் |
| Posted: 16 Sep 2015 03:48 PM PDT நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை டெல்லியில் உள்ள சவுதி அரேபிய நாட்டு தூதரகத்தில் முதல்நிலை செயலாளராக பணியாற்றும் அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அரியானா மாநிலம் குர்கானில் டி.எல்.எப். |
| போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல்: முலாயம் சிங் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு Posted: 16 Sep 2015 03:15 PM PDT உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரி அமிதாப் தாக்குர். ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரியான அவருக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒத்துப்போகவில்லை. தன்னை சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் மிரட்டியதாக கூறிய அவர், அது தொடர்பாக தனக்கும், முலாயம் |
| தீவிரவாதத்துக்கு துணை போவதை நிறுத்துங்கள்: ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மீது சிரியா அதிபர் பாய்ச்சல் Posted: 16 Sep 2015 01:22 PM PDT அகதிகள் மீது அக்கறை இருந்தால் தீவிரவாதத்துக்கு துணை போவதை ஐரோப்பா அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் தெரிவித்துள்ளார். |
| டெல்லி விமான நிலையத்தில் சுங்க அலுவலகத்தில் இருந்த 23½ கிலோ தங்கம் மாயம் Posted: 16 Sep 2015 01:05 PM PDT டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தும் போது, சட்ட விரோதமாக கடத்தி கொண்டு வரப்படும் தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்வது வழக்கம். அப்படி பறிமுதல் |
| விநாயகர்சதுர்த்தி: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வாழ்த்து Posted: 16 Sep 2015 12:21 PM PDT விநாயகசதுர்த்தி விழாவையொட்டி ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விநாயகசதுர்த்தி விழா கொண்டாடும் இந்த சந்தோஷமான நேரத்தில் நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களுக்கும் எனது |
| கடைகளின் வெளியே பல்புகளை திருடிய கலால்துறை சப்-இன்ஸ்பெக்டர் கைது Posted: 16 Sep 2015 08:02 AM PDT ஜம்மு மற்றும் காஷ்மீரில் நானக் நகர் பகுதியில் உள்ள கடையின் வெளியே இருந்த சி.எப்.எல். பல்புகளை மாநில கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் திருடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| உத்தர பிரதேசத்தில் பியூன் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 255 பிஎச்டி பட்டதாரிகள் Posted: 16 Sep 2015 07:06 AM PDT படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைகளை செய்து தன்னிறைவு அடைந்து வரும் இந்தக்கால பட்டதாரிகளின் நிலையை உணர்த்தும் விதமாக, உத்தர பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலக பியூன் வேலைக்கு 255 பிஎச்டி பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ள |
| பிரதமரின் மவுனம் சுஷ்மா-வசுந்தரா செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்வதாகவே உள்ளது: அசோக் கெலாட் Posted: 16 Sep 2015 05:44 AM PDT ஐ.பி.எல். ஊழல் வழக்கில் தொடர்புடைய லலித் மோடிக்கு உதவி செய்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். |
| Posted: 16 Sep 2015 05:05 AM PDT கேரள மாநிலம் புனலூர் காயம்குளம் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சாந்தி (வயது 30). சாந்தியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும். சமீபத்தில் சாந்தி தனது கணவருடன் ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அதன்பிறகு அவர் தனது கணவருடன் கேரளா புறப்பட்டார். இதற்காக தமிழக விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |