Tamil Star |
- சம்பூர் வீடமைப்பு நிதிக்கு ஒரு லட்சம் டொலர் அன்பளிப்பை வழங்கிய கனடியத் தமிழர்!
- East York பகுதி வீட்டில் தீ விபத்து
- Pickering mall இல் கத்தி முனையில் கொள்ளை
- எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்பே சமப்படுத்தப்படும் வரவுசெலவுத் திட்டம்: ஹார்ப்பர்
- ரொரன்ரோ வீதிகளில் புதிய வேக வரம்பு
- பிரம்டன வீதி விபத்தில் உந்துருளி ஓட்டுனர் இருவர் படுகாயம்
| சம்பூர் வீடமைப்பு நிதிக்கு ஒரு லட்சம் டொலர் அன்பளிப்பை வழங்கிய கனடியத் தமிழர்! Posted: 15 Sep 2015 05:08 PM PDT
சம்பூர் கிராமத்தில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வீடமைப்பு நிதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இசுகாபரோநகரில் ஏழாவது ஆண்டுத் தமிழ்க் கனடியர்நிதிசேர் நடைநிகழ்வை நடத்தினர். மிகக் குறுகிய காலத்திலே அதுவும் சுமார் ஏழுநாட்களிலே கனடியத் தமிழர்களுக்கு இவ் இரண்டுஅமைப்புகளும் விடுத்த வேண்டுகோளை அடுத்து எதிர்பார்த்தஇலக்கான ஒருலட்சம் டொலர்களையும் எட்டுவதற்கு கனடியத் தமிழ் மக்கள் வாரி வழங்கினர். கனடியத் தமிழர் பேரவை ஏழு ஆண்டுகளில் அதிக நிதி திரட்டிய நிதிசேர் நடை நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது. கனடியத் தமிழ் மக்களின் கொடையுள்ளம் பற்றித் தமிழ்க் கனடியர் நிதிசேர் நடையின் இணைத் தலைவர் திரு குபேசு நவரட்ணம் கருத்துத் தெரிவிக்கையில்"தாயகமக்களின் இடர்களைப் போக்கிடக் கனடியத் தமிழ் மக்கள் என்றுமே பின் வாங்குபவர்கள் அல்ல. இவ்வாறான தேவைகள் எழும்போதெல்லாம் தாமாக முன்வந்து உதவிடும் பண்பு என்றுமே மாறாத ஒன்றாகும்" எனக் குறிப்பிட்டார். இத்திட்டத்துக்கு நிதிவழங்க மக்கள் தொடர்ந்தும் ஆர்வங் காட்டுவதாலும் மீள்குடியேற்றத்திற்கான மேலும் பல தேவைகள் சந்திக்கப்படவேண்டிய அவசியம் இருப்பதாலும் இம்மாதம் 30 ஆம் நாள் வரை நிதிசேகரிப்பு நீடிக்கப்பட்டுள்ளது. கனடியத் தமிழர் பேரவை அல்லது திருகோணமலை நலன்புரிச் சங்கத்தை நேரடியாக அழைத்து அல்லது இணையத்தளத்தில் சென்று நிதிப் பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அவர்தெரிவித்தார். அண்மையிற் சம்பூர்க் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரிற் சந்தித்திருந்தார் திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு ச. குகதாசன்அவர்கள். மழைகாலம் அண்மிப்பதால் அதற்கு முன்னதாகக் குடியிருப்புகளை அமைக்க வேண்டியுள்ளது. குடி நீர் மற்றும் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டி உள்ளன. கல்வி மற்றும் பிற அடிப்படைத் தேவைகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டியுள்ளன போன்ற கருத்துக்களை சம்பூர் மக்கள் நேரடியாக அவரிடம் தெரிவித்திருந்தனர். இந் நிகழ்விற்கனடியத் தமிழ் மருத்துவர் சங்கம், கொக்குவில் இந்துக் கல்லூரிக் கனடா கிளை, காட்லிக் கல்லூரி கனடா பழைய மாணவர் , ஒன்றாரியோ முது தமிழர் மன்றம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனடாக்கிளை, மாதகல் நலன்புரிச் சங்கம் கனடா உட்படபல்வேறு அமைப்புகள் தம் பதாகைகள் தாங்கித் தோழமையுடன் நிதிசேர் நடை நிகழ்விற் பங்கேற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந் நிதிசேர் நடை நிகழ்விற் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறப்பு பங்கேற்பாளராக ஈழத்திலிருந்து வருகை தந்திருந்த யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஈசுவரபாதம் சரவணபவான் அவர்கள் "சம்பூர் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின வீடமைப்பு நிதிக்காக கனடிய தமிழ் மக்கள் வாரி வழங்கியது புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளில் வாழும் எம் உறவுகளுக்கு ஒரு நல்ல முன் மாதிரி என்றும் அனைத்து நாடுகளில வாழும் புலம் பெயர் தமிழர்களும் இவ்வாறான பெரிய வேலைத் திட்டங்களில் இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் பேசுகையில் ஈழத்தில் ஏறக்குறைய ஒருலட்சத்துப் பத்தாயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் முன்னாள் போராளிகள் மற்றும் போரினாற் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகவும்நாம் அனைவரும் இணைந்து இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டியது தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கனடியத் தேசிய அரசியலில் வௌவேறு கட்சிகளில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் செல்வி இராதிகா சிற்சபைஈசன், திரு கரி ஆனந்தசங்கரி, திரு செந்தி செல்லையா மற்றும் ரொறன்ரோக் கல்விச் சபை உறுப்பினர் திரு. பார்த்தி கந்தவேள் உட்படப் பல்வேறு குமுகத ஆர்வல்களும் வணிக நிறுவனங்களும் இந் நிதிசேர்நடையிற் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. The post சம்பூர் வீடமைப்பு நிதிக்கு ஒரு லட்சம் டொலர் அன்பளிப்பை வழங்கிய கனடியத் தமிழர்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| East York பகுதி வீட்டில் தீ விபத்து Posted: 15 Sep 2015 10:39 AM PDT
Pape Avenue மற்றும் O'Connor Drive பகுதியில், Torrens அவனியூவில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. வீட்டின் கீழ் தளத்தில் இருந்து பரவ ஆரம்பித்ததாக நம்பப்படும் இந்த தீ, மெழுவர்த்தியில் இருந்தே பற்ற ஆரம்பித்திருக்க கூடும் என ரொரன்ரோ தீயணைப்பு படை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் தான் தீப் பரவல் தொடர்பில் தமக்கு தகவல் தந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியேறி இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தமது வீட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியின் போது வீட்டில் இருந்தோர் புகையினை சுவாசிக்கும் நிலைமை ஏற்பட்ட போதிலும், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களா என்ற தகவல்கள் எவையும் அறியக் கிடைக்கவில்லை. The post East York பகுதி வீட்டில் தீ விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Pickering mall இல் கத்தி முனையில் கொள்ளை Posted: 15 Sep 2015 10:33 AM PDT
நேற்று மாலை மூன்று மணியளவில் குறித்த அந்த வணிக வளாகத்தில் சென்ற 39 வயது ஆண் மற்றும் அவரின் தோழி ஆகியோரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகினர். காவல்த்துறையால் ஏற்கனவே தேடப்பட்டுவரும் பெண் ஒருவரை இவர்கள் கண்ட வேளையில், குறித்த அந்த ஆணின் கையில் கத்தியால் வெட்டியதாகவும், பிறிதொரு ஆண் சந்தேக நபர் தாக்குதலுக்குள்ளான நபரின் நண்பி மீது மிளகு தெளிப்பானை தெளித்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட பெண் காவல்த்துறையினரின் கண்ணில் படாது அங்கிருந்து தப்பியோடிச் செல்ல முயன்ற போதிலும், சிறிது நேரத்தின் பின்னர் Valley Farm வீதியில் அவரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். ஆண் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து மிதிவண்டியில் தப்பிச் சென்றதாகவும், இன்னமும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 18 வயது பெண்ணான Sheila Struthers என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ள காவல்த்துறையினர், சுமார் 20 வயது மதிக்கத்தக்க மற்றைய ஆண் சந்தேக நபரை தேடி வருகின்றனர். The post Pickering mall இல் கத்தி முனையில் கொள்ளை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்பே சமப்படுத்தப்படும் வரவுசெலவுத் திட்டம்: ஹார்ப்பர் Posted: 15 Sep 2015 10:01 AM PDT
தேர்தல் பரப்புரையின் உச்சமாக அனைத்து பிரதாக கட்சிகளின் தலைவர்களும் தமது பொருளியல் எதிர்வுகூறல்களை வெளியிடவுள்ள நிலையில், பிரதமர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 2014-15ஆம் நிதி ஆண்டுக்கான உபரித் தொகையாக 1.9 பில்லியன் டொலர்கள் காணப்படுவதான மத்திய வங்கியின் அறிவிப்பு வெளியான நிலையில், பிரதமரின் இந்த பொருளாதார அறிவிப்பு முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த வார இறுதியில் கல்கரியில் நடைபெறவுள்ள பொருளதார விவாதத்தில் ஏனைய பிரதான கட்சிகளின் தலைவர்களும் தமது திட்டங்களை வெளியிடவுள்ள நிலையில், மத்திய வஙகியின் இந்த அறிவிப்பு தற்போது வெளியானமை ஸ்டீபன் ஹார்ப்பருக்கு பின்னடைவாகவே நோக்கப்படுகிறது. The post எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்பே சமப்படுத்தப்படும் வரவுசெலவுத் திட்டம்: ஹார்ப்பர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ வீதிகளில் புதிய வேக வரம்பு Posted: 15 Sep 2015 08:12 AM PDT
Ward 22 பகுதியில இதுவரை காலமும் இருந்து வந்த மணிக்கு 40 கிலோமீட்டர் என்ற வேகக் கட்டுப்பாட்டு அறிவிப்பு அகற்றப்பட்டு, புதிதாக மணிக்கு 30 கிலோமீட்டர் என்ற வேகக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.ள் அதேபோல ரொரன்ரோ நகரில் ரொரன்ரோ மற்றும் East York பிரதேச சபை அதிகார வரம்புக்கு உட்பட்ட 387 கிலோமீட்டர் நீளமான வீதிகளுக்கு இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் ரொரன்ரோவின் 11 தொகுதிகளில் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த திட்டத்தினை பூர்தி செய்வதற்கு ஓராண்டு ஆகலாம் எனவும் ரொரன்ரோ போக்குவரத்து துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ரொரன்ரோவின் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமையவுமே இந்த புதிய வேகக்குறைப்பு விதிமுறை நடப்புக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனத்தினால் பாதசாரி ஒருவர் மோதப்பட்டால் அவர் உயிரிழப்பதற்கான சாத்தியம் 20 சதவீதமாக உள்ள நிலையில், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனத்தினால் மோதப்பட்டால் உயிரிழக்கும் சாத்தியம் 5 சதவீதமாக குறைவடைகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. The post ரொரன்ரோ வீதிகளில் புதிய வேக வரம்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டன வீதி விபத்தில் உந்துருளி ஓட்டுனர் இருவர் படுகாயம் Posted: 15 Sep 2015 07:28 AM PDT
Dixie வீதி மற்றும் North Park Drive பகுதியில் இரவு 10.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை பீல் பிராந்திய காவல்த்தறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்தில் சிக்கிய இரண்டு உந்துருளிகளின் ஓட்டுனர்களும் மிகவும் மோசமான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் காயமடைந்தவர்கள் தொடர்பிலான பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. விபத்தினை தொடர்ந்து காவல்த்துறையினரின் விசாரணை நடவடிக்கைகளுக்காக Dixie வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தினை நேரில் கண்டோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post பிரம்டன வீதி விபத்தில் உந்துருளி ஓட்டுனர் இருவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மதிப்புக்குரிய இரா.சம்பந்தனினதும் கிழக்குமாகாணசபையின் உறுப்பினரும் கல்வி அமைச்சருமான திரு.தண்டாயுதபாணியினதும் அவசரவேண்டுகோளை அடுத்துக் கனடியத் தமிழர் பேரவையும் திருகோணமலை நலன்புரிச்சங்கம் கனடாக் கிளையும் இணைந்து ..

இன்று காலை East York பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில தீப் பரவல் ஏற்பட்டதனை அடுத்து தீயணைப்பு முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று Pickering mall இல் இருவர் மீது மிளகு தெளிப்பானை தெளித்து அவர்களை கத்தியால் தாக்கி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனேடிய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதிக்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே சமப்படுத்தப்படுவதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
ரொரன்ரோ வீதிகளில் பாதுகாப்பினை மேலும் அதிகரிக்கும் வகையில் நகரின் சில உள்ளக சாலைகளில் புதிய வேக கட்டுப்பாடுகள் இந்த வாரத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

பிரம்டன் பகுதியில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு உந்துருளி ஓட்டுனர்கள் படுகாயமடைந்துள்ளனர்.