Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கூட்டணி பேர விவகாரத்தில் தி.மு.க.,வில் மோதல்... வெடித்தது:ஸ்டாலின் ஆதரவாளர் பேட்டியால் கருணாநிதி கோபம்

Posted:

'சட்டசபை தேர்தலில், தி.மு.க., 170 தொகுதிகளில் போட்டியிடும்' என, கட்சியின் அதிகாரப் பூர்வ செய்தி தொடர்பாளரும், தலைமை நிலைய செயலரும், ஸ்டாலின் ஆதரவாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்திருப்பதால், கூட்டணி பேரம் தொடர்பாக, அக்கட்சியில் மோதல் வெடித்துள்ளது.

தன் ஆதரவாளரை, தன்னிச்சையாக பேட்டியளிக்க வைத்து, கட்சியில், ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி கொந்தளிப்பதாக, கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆங்கில நாளிதழுக்கு இளங்கோவன் அளித்த பேட்டியை மறுத்து, கட்சித் தலைமை அவசர மறுப்பு அறிக்கை ...

இலங்கை பார்லி., எதிர்க்கட்சி தலைவர் பதவியில்... தமிழர்:32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அங்கீகாரம்

Posted:

இலங்கை பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், 82, தேர்வு செய்யப்பட்டுள்ளார். 32 ஆண்டுகளுக்கு பின், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவி, மீண்டும் ஒரு தமிழருக்கு கிடைத்துள்ளது.
இலங்கையில், சமீபத்தில் நடந்த பார்லி., தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றது; ரணில் பிரதமரானார். முன்னாள் அதிபர் ராஜபக் ஷேயின், இலங்கை சுதந்திர கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து, ...

69 எண்ணெய் வயல்கள் ஒதுக்கீட்டில் புதுமை

Posted:

புதுடில்லி:தங்களால் நடத்த முடியவில்லை என தெரிவித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான, ஓ.என்.ஜி.சி., மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள், மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ள எண்ணெய் வயல்களில், 69 வயல்களை தனியாருக்கு ஏலம் விடவுள்ள வரவேற்கத்தக்க முயற்சியில், வருவாயை பங்கிடும் புதிய முறை பின்பற்றப்பட உள்ளது.இதன் மூலம், இதுவரை இல்லாத வகையில், புதிய முறையில் மத்திய அரசு வருமானத்தை பெருக்கிக் கொள்ள உள்ளது.

லாலு - நிதிஷ் கூட்டணிக்கு முலாயம் 'டாட்டா!'

Posted:

புதுடில்லி:பீகார் சட்டசபை தேர்தலிலும், அதற்குப் பிறகு வரும் பிற மாநில சட்டசபை தேர்தல்களிலும், பார்லிமென்டிலும் இணைந்து செயல்படுவது என, முடிவு செய்திருந்த, முந்தைய, 'ஜனதா பரிவார்' கட்சிகள் நேற்று சிதறின.

வெளியேறி...:'
பீகார் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து, எங்களிடம் விவாதிக்கவே இல்லை; எங்களுக்கு தொகுதிகள் வழங்கவில்லை' என தெரிவித்துள்ள, முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, நேற்று வெளியேறி, தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை, முலாயமின் சகோதரரும், கட்சியின் மூத்த தலைவருமான ராம்கோபால் யாதவ் ...

விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி! * பிரேமலதா அறிவிப்பு

Posted:

''யாரிடமோ சூட்கேஸ் வாங்கிக் கொண்டு கருத்து கணிப்பை நடத்தி, முடிவுகளை பொய்யாக வெளியிடுகின்றனர்,'' என, தே.மு.தி.க., மகளிர் அணி தலைவி பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். வேலுார் மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், மக்களுக்காக மக்கள் பணியில், நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, திருப்பத்துாரில் நடந்தது. விஜயகாந்த் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், பிரேமலதா பேசியதாவது: தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால், நரிக்குறவர்களுக்கு, 'மொபைல், ரேஷன் கார்டு' வழங்கப்படும். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். சட்டசபைக்கு விஜயகாந்த் ...

30 வி.ஐ.பி.,களுக்கு பாதுகாப்பு வாபஸ்!

Posted:

புதுடில்லி : முன்னாள் சபாநாயகர் உட்பட, 30 வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்பட்டு வந்த, மத்திய பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக, உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், முன்னாள் சபாநாயகர் மீரா குமார், '2ஜி' அலைக்கற்றை வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் இருக்கின்றனர். மேலும், கேரளா கவர்னர் பி.சதாசிவம், மேகாலயா கவர்னர் வி.சண்முகநாதன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும், 30 ...

கிராம மேம்பாட்டுக்கு ரூ.9,000 கோடியில் திட்டங்கள்

Posted:

சென்னை:''நடப்பு நிதி ஆண்டில், கிராமப்புற மேம்பாட்டுக்காக, 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு:* ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம், நடப்பு நிதி ஆண்டில், 4,000 கி.மீ., சாலைகள், 800 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்* 'நபார்டு' வங்கி திட்டம் மூலம், 41 பாலங்கள் 50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். கட்டடங்கள் உள்ளிட்ட பல பணிகள், 375 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்* சமூக பாதுகாப்பு உதவிகளை கிராம மக்களுக்கு விரைந்து அளிக்க, 3,890 ...

ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளம் தர ஐ.டி., நிறுவனங்கள் தயார்!

Posted:

பல்கலை மற்றும் கல்லுாரிகளில், இந்த ஆண்டுக்கான, 'கேம்பஸ் இன்டர்வியூ' துவங்கியுள்ளது. இதில், 50 ஐ.டி., நிறுவனங்கள் பங்கு பெற்று, ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வரை, சம்பளம் தர முன்வந்துள்ளன.அண்ணா பல்கலை, எஸ்.ஆர்.எம்., - வி.ஐ.டி., - பி.எஸ்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பெரும் பாலான பல்கலைகளில், நடப்பு கல்வி ஆண்டின் வளாக நேர்காணல் தேர்வு துவங்கியுள்ளது. இந்த ஆண்டு, ஐ.டி., நிறுவனங்களுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகின்றனர்.'மைக்ரோசாப்ட் இந்தியா, டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஐ.பி.எம்., - எச்.சி.எல்., அமேசான் இந்தியா' உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்கள், அண்ணா பல்கலையிலும், ...

தொழிற்சாலைகளுக்கு அறிவிக்கப்படாத மின் தடை? ஜெனரேட்டர் பயன்படுத்த வாய்மொழி உத்தரவு

Posted:

காற்றாலை மின்சாரம் குறைந்ததால், தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் பயன்படுத்தும்படி, மின் வாரிய அதிகாரிகள் வாய்மொழி உத்தர விட்டுள்ளனர்.தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட். இதில், தொழிற்சாலைகளின் தேவை, 3,000 மெகாவாட். தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அனல், 4,660 மெகாவாட்; நீர், 2,288; எரிவாயு, 516 மெகாவாட் என, 7,464 மெகாவாட் திறனுடைய, மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 5,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இதுதவிர, மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 5,518 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், தினமும், 3,000 மெகாவாட் தான் ...

போருக்கு தயார் பாக்., அறை கூவல்

Posted:

இஸ்லாமாபாத்:''இந்திய தலைவர்களுக்கு 'போர் எண்ணம்' வருமேயானால், அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து, பயங்கர சேதத்தை ஏற்படுத்த, பாகிஸ்தானும் தயாராக உள்ளது,'' என, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கொக்கரித்துள்ளார்.அண்மையில், இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங், 'இந்தியா, வருங்காலத்தில் விரைவான, குறுகிய கால போர்களை நடத்த தயாராக உள்ளது' என்று தெரிவித்திருந்தார்.இது குறித்து, பாக்., வானொலி நிகழ்ச்சி ஒன்றில், கவாஜா ஆசிப் பேசியதாவது:பாக்., அமைதியை விரும்புகிறது; ஆனால், இந்திய தலைவர்களுக்கு போர் எண்ணம் வந்தால், அது, குறுகிய கால அல்லது நீண்ட கால போராக இருந்தாலும், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™