Tamil News | Online Tamil News |
- வலைவிரிக்கும் வருமான வரித்துறை
- 'நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்'
- 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு உதவ சம்மதம்;'சிலிக்கான் வேலி' தலைவர்கள் தாராளம்
- எம்.பி.,க்கள் சம்பளத்தை நிர்ணயிக்ககுழு அமைக்க மத்திய அரசு திட்டம்
- விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணம் யார்? 'வாட்ஸ் ஆப்' ஆடியோவால் பரபரப்பு
- போராட்டம் அறிவித்துள்ள லாரி உரிமையாளர்களுக்கு அழைப்பு;பேச்சுக்கான கதவு திறந்திருப்பதாக அமைச்சர் கட்காரி அறிவிப்பு
- 'சர்வதேச விசாரணையில் பின்வாங்க கூடாது': மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
- வியாபார நோக்கத்தில், 'மினரல் வாட்டர்' ; சுத்திகரிப்பு முறை பின்பற்றாத நிறுவனங்கள்
- அன்னிய தொழில் முதலீடு கண்காணிக்கப்படுகிறதா?
- நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்!
| வலைவிரிக்கும் வருமான வரித்துறை Posted: புதுடில்லி:ஆண்டுக்கு, நான்கு லட்சம் ரூபாய் வருவாய் உள்ளோரும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், வரி விதிக்கத்தக்க வருவாய் உள்ளோரும், வருமான வரித்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறையின் கொள்கைகளை நிர்ணயிக்கும் முக்கிய அமைப்பாக, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம் திகழ்கிறது. இதன் தலைவர் அனிதா கபூர், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:வரி விதிக்கத்தக்க வருவாய் உள்ளவர்கள், வரி செலுத்தத் துவங்க வேண்டும். அதிகளவிலான நபர்கள், சிறிய ... |
| 'நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்' Posted: கோல்கட்டா:''ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் உள்ள, விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் நேதாஜியின் அஸ்தியை,டி.என்.ஏ., சோதனை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்,'' என, நேதாஜியின் மகள் அனிதா போஸ், 72, வேண்டுகோள் விடுத்துள்ளார். தனிப்படை: பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நம் நாட்டை அடிமைப்படுத்தி இருந்த போது அவர்களை விரட்டியடிக்க, இந்திய தேசிய ராணுவம் என்ற பெயரில் தனி படையை உருவாக்கியவர், வங்கத்தைச் சேர்ந்த, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.அவர், கடந்த, 1945ல், ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்ததாக கூறிய ... |
| 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு உதவ சம்மதம்;'சிலிக்கான் வேலி' தலைவர்கள் தாராளம் Posted: சிலிக்கான் வேலி;அமெரிக்காவின் முன்னணி கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ள, 'சிலிக்கான் வேலி'யில், அந்நாட்டு கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். முப்பது ஆண்டுகளுக்கு பின், சிலிக்கான் வேலி பகுதிக்கு சென்று உள்ள இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள மோடியிடம், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு தாராளமாக உதவி செய்ய, அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் முக்கியஅம்சங்களாவன: *இந்தியாவின், 500 ரயில் நிலையங்களில், பொதுமக்களின் தகவல் தொடர்புக்காக, இலவச, 'வை - பை' வசதியை, 'கூகுள்' நிறுவனம் ... |
| எம்.பி.,க்கள் சம்பளத்தை நிர்ணயிக்ககுழு அமைக்க மத்திய அரசு திட்டம் Posted: புதுடில்லி;எம்.பி.,க்களின் சம்பள விவகாரம் குறித்து முடிவு செய்வதற்கு, சுதந்திரமாக செயல்படக் கூடிய, மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைக்க,மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நம் நாட்டில், தற்போது, எம்.பி.,க்களுக்கு, மாதம் தோறும், 50 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, தொகுதி உதவித் தொகை, பயண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. விமர்சனம்; இந்நிலையில், 'எம்.பி.,க்களின் சம்பள உயர்வை, அவர்கள் அங்கம் வகிக்கும் பார்லிமென்ட்டே முடிவு செய்யக் கூடாது' என, பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து ... |
| விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணம் யார்? 'வாட்ஸ் ஆப்' ஆடியோவால் பரபரப்பு Posted: 'கோகுல்ராஜ் கொலை வழக்கில், மரண தண்டனையையும் ஏற்க தயார். ஆனால், பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணமான, மேற்கு மண்டல ஐ.ஜி., - எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற, யுவராஜின் பேச்சு, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று வெளியானது. இதனால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காதல் பிரச்னை; சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த, கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லுாரி மாணவரை, காதல் பிரச்னையில், ஒரு கும்பல் கடத்தி, கொலை செய்தது.இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், சங்ககிரியைச் சேர்ந்த, 'ரிக்' அதிபரும், தீரன் ... |
| Posted: புதுடில்லி: ''ஸ்டிரைக் நடத்துவதை கைவிட்டு, லாரி உரிமையாளர் சங்கத்தினர், அரசுடன் பேச்சு நடத்த முன்வர வேண்டும். பேச்சுக்கான கதவு, அவர்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது,'' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மாற்றக் கோரியும், சுங்கச் சாவடிகளில் ஏற்படும் பிரச்னைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், அக்., 1ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தால், தமிழகத்தில், 4.18 ... |
| 'சர்வதேச விசாரணையில் பின்வாங்க கூடாது': மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை Posted: சென்னை;தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:ஜெனீவாவில் நடக்கும், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின், 30வது கூட்டத்தில், மனித உரிமை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.அதில், 'இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து, சர்வதேச நாடுகளின் நீதிபதிகளை கொண்ட, சர்வதேச கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்' என, தெரிவித்து இருந்தார்.ஆனால், இலங்கை அரசு, 'உள்நாட்டு விசாரணை மட்டும் தான் நடத்துவோம்; சர்வ தேச நீதிபதிகள், சட்ட வல்லுனர்களின் யோசனைகளை ஏற்போம்' என, தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில், உள்நாட்டு விசாரணையை துவங்கப் போவதாகவும் ... |
| வியாபார நோக்கத்தில், 'மினரல் வாட்டர்' ; சுத்திகரிப்பு முறை பின்பற்றாத நிறுவனங்கள் Posted: கோவை : மினரல் வாட்டர் என்ற பெயரில் சுத்திகரிப்பு முறைகள் எதையும் பின்பற்றாமல், தரச்சான்று வாங்காமல் கிடைக்கும் தண்ணீரை கேன்களில் அடைத்து, மோசடியாக வியாபாரம் செய்வது, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.மனிதனுக்கு மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்கும் இன்றியமையாதது தண்ணீர். இந்த தண்ணீருக்கு தான் அண்டை மாநிலங்களுடன் தீராத பிரச்னைகள் நிலவுகின்றன. மனித உடலில் ஜீரணம், வியர்வையை வெளியேற்றுதல், உடல் வெப்பநிலையை சமமாக வைத்திருத்தல், சத்துக்களை எடுத்து செல்லுதல், திட, திரவ கழிவுகளை வெளியேற்றுதல், ரசாயன மாற்றம் நிகழ்தல் போன்றவற்றுக்கு அடிப்படையாக ... |
| அன்னிய தொழில் முதலீடு கண்காணிக்கப்படுகிறதா? Posted: இந்தியாவில், வெளிநாட்டு நிறுவனங்கள், தொழில் துவங்குவதற்கான வழிமுறைகள், சமீபகாலங்களில், எளிமையாகியுள்ளன. ஏராளமான துறைகளில், தொழில் துவங்க, அரசின்அனுமதி தேவையே கிடையாது. ரிசர்வ் வங்கியை மட்டும் அணுகி, தொழில் துவங்கவுள்ள விவரங்களை தெரிவித்து, அது தொடர்பாக ஒருங்கிணைப்பு நிறுவனத்தை அமைக்க அனுமதி பெற்று, கம்பெனிகள் பதிவாளரிடம், நிறுவனத்தை பதிவு செய்தால்போதும்.ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை துவங்கிவிடலாம். இதற்கு, 'ஆட்டோமெட்டிக் ரூட்' என பெயர்.அனுமதி பெற ... |
| நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்! Posted: உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் 'இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 28,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |