Tamil News | Online Tamil News |
- பயணிகள் உயிர் பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் அலட்சியம்: ஆள் விழுங்கும் துவாரத்துடன் இயங்கும் அரசு பஸ்
- தி.மு.க.,வுடன் கூட்டணி சேர ராகுல் தடை
- தனித்து போட்டியிட தயாராகிறது பா.ஜ.,: அமித் ஷா அதிரடி தமிழகத்தில் எடுபடுமா?
- 'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- பருவநிலை பாதிப்பில் வளரும் நாடுகளுக்கு நீதி வேண்டும்: ஐ.நா., பொதுச் சபையில் பிரதமர் உரை
- ஸ்டாலின் பயணத்திற்கு எதிராக அ.தி.மு.க.,வின் புது திட்டம்: அரசின் சாதனை விளக்க பேனர் வைக்க உத்தரவு
- மின்வெட்டு இருக்கிறதா, இல்லையா என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்: கருணாநிதி
- இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் வீட்டில் சி.பி.ஐ., 'ரெய்டு': மகளின் திருமணத்தன்று நடந்ததால் பெரும் பரபரப்பு
- ஸ்டாலினுக்கு இது தேவையா?
- குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே வருமா?
| பயணிகள் உயிர் பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் அலட்சியம்: ஆள் விழுங்கும் துவாரத்துடன் இயங்கும் அரசு பஸ் Posted: தமிழக அரசு பஸ்சின் அடித்தள ஓட்டையில் இருந்து, பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், நெல்லை போக்குவரத்து கழக மற்றொரு பஸ்சிலும் பயணிகளை காவு வாங்கும் ஓட்டை இருப்பது, பஸ் பயண பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது. பஸ்களின் பராமரிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல், அதிகாரிகளின் அலட்சியம் தொடர்வதால் பயணிகளின் உயிர்களுக்கு உத்தரவாதமில்லை.சமீபத்தில் கேரள மாநிலம் புனலுார் அருகே, நெல்லை அரசு போக்குவரத்து கழக பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக, சுவாதி என்கிற பெண் பயணி, சாலையில் விழுந்து ... |
| தி.மு.க.,வுடன் கூட்டணி சேர ராகுல் தடை Posted: சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தடை விதித்து விட்டதால், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், அவரது கோஷ்டியினரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், இளங்கோவன் மீதான கோபம் காரணமாக, தமிழக மாவட்ட காங்கிரசாரை சந்தித்து, கூட்டணி குறித்து கருத்து கேட்கும் பணியை, மேலிட பிரதிநிதி சென்னா ரெட்டியிடம், ராகுல் ஒப்படைத்து விட்டார். |
| தனித்து போட்டியிட தயாராகிறது பா.ஜ.,: அமித் ஷா அதிரடி தமிழகத்தில் எடுபடுமா? Posted: தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்காக, 234 தொகுதிகளுக்கும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, தேசிய செயலர் முரளிதர ராவ் ஆகியோர் முன்னிலையில், சென்னையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. |
| 'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல் Posted: புதுடில்லி: இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பள்ளியில் சேர்க்க பணம் இல்லாமை, வீட்டு வேலைகள் போன்ற பல்வேறு காரணங்களால், சிறுவயதில் பள்ளியில் சேர முடியாமல் போவது சகஜம். மாறாக, படிப்பு அவசியம் இல்லை என நினைப்பதால், பெரும்பாலானோர் பள்ளியில் சேர்ந்து படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக, என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வறிக்கையில் ... |
| பருவநிலை பாதிப்பில் வளரும் நாடுகளுக்கு நீதி வேண்டும்: ஐ.நா., பொதுச் சபையில் பிரதமர் உரை Posted: நியூயார்க்: ''சுற்றுச்சூழல் தொடர்பான கண்ணோட்டத்தை, பருவநிலை மாற்றம் என்பதில் இருந்து, பருவநிலை நீதி என்ற இலக்கின் அடிப்படையில், மறுசீராய்வு செய்வதற்கு இதுவே சரியான நேரம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா., பொதுச் சபையில் உரையாற்றினார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 'ஐ.நா.,வின் நிலையான வளர்ச்சி' மாநாட்டில், பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:பருவநிலை மாற்றம் என்பது, அனைத்து நாடுகளையும் பாதிக்கும் பொதுவான அம்சம் தான்; ஆனால், அதற்கான பொறுப்புகளை ஏற்பதில், பாரபட்சமான அணுகுமுறை கூடாது; அது, அனைத்து நாடுகளின் ஒட்டுமொத்த முயற்சிக்கும் தடைக்கல்லாக ... |
| ஸ்டாலின் பயணத்திற்கு எதிராக அ.தி.மு.க.,வின் புது திட்டம்: அரசின் சாதனை விளக்க பேனர் வைக்க உத்தரவு Posted: தேனி: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் 'நமக்கு நாமே விடியல்' சுற்றுப்பயணத்திற்கு எதிராக, அவர் செல்லும் பாதையில் அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க பேனர்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் 'நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்' என்ற பெயரில்,கடந்த செப்.,21ல் கன்னியாகுமரியில் பிரசாரத்தை துவக்கினார். தினமும் ஒரு மாவட்டத்தில் தங்கி பிரசாரம் செய்து வரும் அவர், பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் சென்று குறைகள் கேட்டும், அரசின் செயல்பாடுகளை விமர்ச்சித்தும் வருகிறார். ஸ்டாலின் குறிப்பிடும், 'தமிழத்தில் காணொளி ஆட்சி நடக்கிறது' ... |
| மின்வெட்டு இருக்கிறதா, இல்லையா என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்: கருணாநிதி Posted: சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:சட்டசபையில், மின்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்த, துறையின் அமைச்சர், 'தமிழகத்தில் மின்வெட்டு இல்லை' என, பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால், 'காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டது; பல மாவட்டங்களில், 2 மணிநேர மின்வெட்டு ஏற்பட்டுள்ளது' என, செய்திகள் வந்துள்ளன.அமைச்சரோ, 'தற்போது மின்வெட்டு இல்லை; மின்தடையே உள்ளது' என்கிறார். மின்தடை என்ற தொழில்நுட்ப பெயரைப் பயன்படுத்தி, நடைமுறையில் மின்வெட்டு இல்லை என, நிரூபிக்க முயற்சிக்கிறார்.மின்வெட்டு இருக்கிறதா, இல்லையா என்பது நாட்டு மக்களுக்குத் ... |
| Posted: சிம்லா : வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், இமாச்சல பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, வீர்பத்ர சிங் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். அவர் மகளின் திருமணத்தன்று நடந்த இந்த சோதனையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மன்மோகன் சிங் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2009 - 11ம் ஆண்டுகளில், மத்திய உருக்குத்துறை அமைச்சராக, தற்போதைய, இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் பதவி வகித்தார்.அப்போது, வீர்பத்ர சிங், அவர் மனைவி பிரதீபா சிங், மகன் விக்ரமாதித்யா சிங், மகள் அபராஜிதா சிங், ஆகியோர், ... |
| Posted: தமிழக அரசியலில் தற்போது நடைபெறும் சம்பவங்கள், டில்லி அரசியல்வாதிகளிடையே, குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்களிடையே, பரபரப்பாக அலசப்படுகிறது. அது வேறொன்றுமல்ல. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் நடை, சைக்கிள் பயணங்கள் தான். டி - ஷர்ட், பேன்ட் அணிந்து, சைக்கிளில் பயணம் செய்து, இளைஞர்களின் மனதில் இடம் பெற முயற்சித்து வருகிறார். திடீரென தெருவோரக் கடைகளில் உட்கார்ந்து, இளைஞர்களோடு டீ அருந்துகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, வாலிப வாக்காளர்களை, தி.மு.க., பக்கம் கவர்ந்து, கட்சியின் ஓட்டு வங்கியை உயர்த்தப் பார்க்கிறார். ... |
| குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே வருமா? Posted: ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்றுவதற்காக, பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடர், வழக்கத்துக்கு மாறாக, முன்கூட்டியே துவங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து, டில்லியில் பார்லிமென்ட்டின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை வேகப்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த வகையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவையும், ஜி.எஸ்.டி., மசோதாவையும் கொண்டு வர, அது படாத பாடுபடுகிறது. இதில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்த கட்சியிலிருந்தே ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 27,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |