Tamil News | Online Tamil News |
- 'புஸ்' ஆனது வேலைநிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை
- நிலக்கரி சுரங்கங்களை அடுத்து எண்ணெய் வயல்களும் தாரைவாாப்பு: 70 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு
- தொழிலாளர்களை தேடி பீகாருக்கு செல்லும் நிறுவனங்கள்
- பிரதமர் அலுவலகத்தின் 'சரிசமமான தீர்ப்பு': நிம்மதி பெருமூச்சில் உள்துறை அமைச்சகம்
- ரூ.55க்கு ஒரு கிலோ வெங்காயம்: முதல்வர் ஜெ., அறிவிப்பு
- சட்டசபையில் விஜயகாந்த் ஆஜர்: கையெழுத்து போட்டு விட்டு திரும்பிச் சென்றார்.
- தி.மு.க.,வை மீண்டும் கலாய்க்கிறார் அழகிரி தடாலடி:ஸ்டாலின் முதல்வராகவே முடியாது என்கிறார்
- தமிழகத்தில் அரிசி விலை 'கிடுகிடு'
- அறைகளை பார்த்து அதிர்ச்சி: மருத்துவ மாணவர்கள் ஓட்டம்
- இந்தியாவால் பிராந்திய அமைதிக்கு அபத்தாம்: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் புலம்பல்
| 'புஸ்' ஆனது வேலைநிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை Posted: சென்னை:தொழிற்சங்கங்கள் நேற்று நடத்தியவேலை நிறுத்தம், தமிழகத்தில்பிசுபிசுத்தது. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. பெரும்பாலான ஊழியர்கள் வராததால், வங்கிகள், மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன .அரசுத் துறைகளில் அன்னியமுதலீட்டை அனுமதிக்க கூடாது; தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும்; விலைவாசி உயர்வைகட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று, நாடு தழுவிய போராட்டம் நடத்தின.ஆனால், தமிழகத்தில் பஸ், ரயில், ஆட்டோக்கள் வழக்கம்போல் ... |
| Posted: புதுடில்லி: நிதி ஆதாரங்களுக்காக துடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசின் கஜானாவுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாயை கொண்டு வரும் முயற்சியாக, 69 எண்ணெய் வயல்களை, தனியாருக்கு ஏலம் விட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், தங்கள் வருவாய் அல்லது உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. அதன் பின், நிருபர்களை சந்தித்த, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்களான, ஓ.என்.ஜி.சி., ... |
| தொழிலாளர்களை தேடி பீகாருக்கு செல்லும் நிறுவனங்கள் Posted: லுாதியானா: பஞ்சாபைச் சேர்ந்த பல தொழிற்சாலைகளுக்கு, ஊழியர்கள் கிடைக்காததால், அவற்றின் பிரதிநிதிகள், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு நேரடியாக சென்று, கிராமவாசிகளை சந்தித்து, மொபைல் போன் உள்ளிட்ட ஊக்கப்பரிசுகளை தந்து, அவர்களை வேலையில் சேர்த்து வருகின்றனர்.பஞ்சாப் மாநிலத்தில், ஏராளமான ஜவுளி ஆலைகள், பால் பண்ணைகள், சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றனன; இவற்றுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல், நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இங்கே, லுாதியானாவில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக, ௫௦ ஆயிரம் முதல், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வரை ... |
| பிரதமர் அலுவலகத்தின் 'சரிசமமான தீர்ப்பு': நிம்மதி பெருமூச்சில் உள்துறை அமைச்சகம் Posted: மத்திய உள்துறை செயலராக இருந்த கோயல், அப்பதவியிலிருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்ட பரபரப்பு முடிவதற்குள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவரும், அமைச்சகத்தின் கூடுதல் செயலருமான சிங்கும், அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.ஆகஸ்ட், 31ல், மத்திய அரசின், மிக முக்கியமான உள்துறை செயலர் பதவியிலிருந்த எல்.சி.கோயல், இந்திய வர்த்தக மேம்பாட்டு மையத்தின் தலைவராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னணி குறித்து, நேற்று டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாகவே, ராஜ்நாத் சிங்கிற்கும், கோயலுக்கும் ... |
| ரூ.55க்கு ஒரு கிலோ வெங்காயம்: முதல்வர் ஜெ., அறிவிப்பு Posted: சென்னை: 'வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பசுமை நுகர்வோர் கடைகளில், ஒரு கிலோ, 55 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படுகிறது' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பருவநிலை மாற்றம் காரணமாக, வெங்காயம் விளைச்சல் குறைந்து, வெளிச்சந்தையில் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க, கர்நாடக மாநிலம், யஷ்வந்த்பூர், மகாராஷ்டிரா மாநிலம் லாசல்கான் பகுதிகளிலிருந்து, பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னை புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் உள்ள, 42 பண்ணை பசுமை ... |
| சட்டசபையில் விஜயகாந்த் ஆஜர்: கையெழுத்து போட்டு விட்டு திரும்பிச் சென்றார். Posted: சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, சட்டசபைக்கு வந்தார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிச் சென்றார்.கடந்த 2012ல், சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நேரடி மோதலுக்கு பின், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சட்டசபைக்கு செல்வதில்லை. கூட்டத்தொடர் நடக்கும் போது, ஏதேனும் ஒரு நாளில், சட்டசபைக்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டுச் செல்வார்.கடந்த மார்ச் மாதம், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அன்று சபைக்கு வராத விஜயகாந்த் மட்டும், ... |
| தி.மு.க.,வை மீண்டும் கலாய்க்கிறார் அழகிரி தடாலடி:ஸ்டாலின் முதல்வராகவே முடியாது என்கிறார் Posted: கோடி செலவு செய்தாலும் சரி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தமிழக முதல்வராகவே முடியாது; இது சத்தியம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறினார். கருத்து கணிப்பு நடந்தது எப்படி? தி.மு.க.,வின் நிலை என, பல விவகாரங்கள் குறித்து அழகிரிதடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார். 'தினமலர்' நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:சமீபத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொய்யான ஒரு கருத்து கணிப்பை, 'மக்கள் ஆய்வு மையம்' தலைவர் ராஜநாயகம், வெளியிட்டுள்ளார். அப்படியொரு கருத்து கணிப்பை, அவர் நியாயமாக எடுக்கவே இல்லை என்பது தான், என் ... |
| தமிழகத்தில் அரிசி விலை 'கிடுகிடு' Posted: சென்னை: தமிழகத்திற்கு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும், உயர் ரக அரிசி விலை கிலோவுக்கு, நான்கு ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குண்டரிசி, டீலக்ஸ் உள்ளிட்ட அரிசி விலை குறைந்துள்ளது.தமிழகத்தில், நெல் விளைச்சல் இருந்தாலும், தேவைக்கேற்ப இல்லாததால், அரிசி தேவைக்கு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களையே நம்ப வேண்டியுள்ளது. ஆந்திராவிலிருந்து, பாபட்லா வகையும், கர்நாடகாவிலிருந்து, சோனா, காவிரி சோனா வகை நெல்லும் தமிழகத்திற்கு வருகின்றன.ஆந்திரா, கர்நாடகாவிலும், பருவ மழை பெய்யாததால், விளைச்சல் குறைந்து, ஒரு மூட்டை நெல்லுக்கு, 100 - 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ... |
| அறைகளை பார்த்து அதிர்ச்சி: மருத்துவ மாணவர்கள் ஓட்டம் Posted: சென்னை: போதிய விடுதி வசதி இல்லாததால், சென்னை மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்பு துவங்கிய முதல் நாளே விடுமுறை அறிவித்து, மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.தமிழகம் முழுவதும், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் நேற்று முன்தினம் துவங்கின. சென்னை மருத்துவக் கல்லுாரியில், புதிய மாணவர்களை வரவேற்கும், பிரத்யேக வரவேற்பு விழா நடந்தது. இதன் பின், பிராட்வே பகுதியில் உள்ள விடுதியில் சேர மாணவர்கள் சென்றனர்.'ஏற்கனவே, இட நெருக்கடியில் உள்ளோம்; புதிய மாணவர்களை தங்க அனுமதிக்கக்கூடாது' என, மூத்த ... |
| இந்தியாவால் பிராந்திய அமைதிக்கு அபத்தாம்: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் புலம்பல் Posted: இஸ்லாமாபாத் : இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள், காஷ்மீர் மக்களுக்கு அச்சமூட்டுவதுடன், பிராந்தியத்தில் அச்சுறத்தல் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விளையாட்டு மைதானம் ஒன்றை துவக்கிவைத்து பேசிய அவர், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவத்தினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இது, இந்த பிராந்தியத்தில் நிலவி வரும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தினர் அமைதி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 03,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |