Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்துக்கு தண்ணீர் 'நோ' : கர்நாடக அரசு மீண்டும் அடம்

Posted:

பெங்களூரு: கர்நாடகாவில் வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் நெருக்கடியில் உள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என, அம்மாநில தலைமைச் செயலர், கவுசிக் முகர்ஜி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 'கர்நாடக அரசு, காவிரி நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றவில்லை; தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை திறந்துவிடவில்லை' என, கடந்த வாரம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதத்தின் பிரதியை, கர்நாடகாவுக்கும் அனுப்பியிருந்தார்.இதற்கு, மாநில தலைமைச் செயலர் கவுசிக் முகர்ஜி, பதில் அனுப்பி ...

பீகார் தேர்தலில் தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது: 160ல் பா.ஜ., போட்டி; 83 இடங்கள் தோழமை கட்சிகளுக்கு

Posted:

புதுடில்லி: பீகார் சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் நிலவிய, தொகுதி பங்கீடு குறித்த சிக்கலுக்கு, நேற்று சுமுக தீர்வு ஏற்பட்டது. பா.ஜ., 160 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள், 83 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது; இங்கு, அடுத்த மாதம், 12ல் துவங்கி, ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும், ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிவு ...

கூட்டுறவு ஊழியர்கள் 5 பேர் பட்டினியால் பலி

Posted:

தேனி: கூட்டுறவு ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால், ஐந்து பேர் பட்டினியால் இறந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், 800க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், வட்டார கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதில், செயலர் உட்பட, 3,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும்; இதை, புதிதாக வீடு கட்டுவோருக்கு, 14 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. வட்டியை வசூலித்து, 3 சதவீதத்தை நிர்வாக செலவு செய்து கொள்ள அனுமதி உள்ளது. ...

ரயிலில் எம்.எல்.ஏ.,க்களின் வி.ஐ.பி., கோட்டா ரத்து

Posted:

சிர்சா: ரயிலில், எம்.எல். ஏ.,க்கள், முன்னாள் எம்.பி.,க்களுக்கான, 'வி.ஐ.பி., கோட்டா' இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.,க்களுக்கு, வி.ஐ.பி., என்ற முறையில், ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள், உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்களது சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களுக்கும், ரயில்களில் பயணம் செய்வதற்கான பயண டிக்கெட் உடனடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையை, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.,க்கள், தவறாக பயன்படுத்துவதாக வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, அதை ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்தது. இதுகுறித்த ...

இல்லந்தோறும் இணையதள வசதி: முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

Posted:

சென்னை: ''குறைந்த செலவில், தரமான இணையதள இணைப்புகள், இல்லந்தோறும் வழங்கப்படும்,'' என, சட்டசபையில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.விதி, 110ன் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:* தமிழகத்தின், 12,524 கிராமங்கள், 'ஆப்டிக் பைபர் கேபிள்' மூலம் இணைக்கப்படும். மத்திய அரசு நிதியுதவியில் செயல்படுத்தப்படும், 'பாரத் நெட்' என்ற இத்திட்டத்துக்காக, 'தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்படும்* தமிழகம் முழுவதும், இணைய தள வசதி அளிப்பதற்காக, கேபிள், 'டிவி' நிறுவனம், மத்திய அரசிடம் உரிமம் பெற்றுள்ளது. மேலும், 'பிராட்பேண்ட்' சேவைக்காக, ரயில் டெல் ...

ஸ்டாலின் படம் மட்டும் போதும்: திடீர் உத்தரவால் தி.மு.க.,வில் பரபரப்பு

Posted:

தன் நிகழ்ச்சிகளுக்கான பேனர், போஸ்டர்களில், தன் படத்தை தவிர, யாருடைய படத்தையும் போடக் கூடாது என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தடை விதித்திருப்பது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சட்டசபை தேர்தலை மையமாக வைத்து, ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 'நீதி கேட்கும் பேரணி, விடியல் மீட்பு பேரணி' என்ற பெயர்களில், கடலுார் மற்றும் பல்லடத்தில், ஆளும் அ.தி.மு.க., அரசை எதிர்த்து, பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன; முன்னதாக, மதுரையிலும் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, 'நமக்கு நாமே' என்ற பெயரில், மாநிலம் முழுவதும், ஸ்டாலின் சுற்றுப்பயணம் ...

கிரானைட் முறைகேடு இறுதி அறிக்கை: இன்று தாக்கல் செய்வாரா சகாயம்?

Posted:

மதுரை:மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வரும் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், இறுதி அறிக்கையை தாக்கல் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, 2014, டிச., 3ம் தேதி முதல், மதுரையில் முகாமிட்டு, கிரானைட் முறைகேடுகள் குறித்து, சகாயம் விசாரித்து வருகிறார். அவர், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, பல முறை, சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

துாத்துக்குடியில் விசாரணை:
இந்நிலையில், கிரானைட் வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

தொழிலுக்கு உகந்த மாநிலம்: 12வது இடத்தில் தமிழகம்

Posted:

'சர்வதேச முதலீட்டாளர் மாநாடு வெற்றி' என, தமிழக அரசு கூறி வரும் நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள, தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம், 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது. நக்சல் தீவிரவாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்கள் கூட தமிழகத்தை விஞ்சியுள்ளன. இது குறித்து தனியார் தொழில் துறையினர் கூறியதாவது:தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி நிச்சயம், நல்ல செய்தி ...

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பது குறித்து பேச்சு: இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி

Posted:

நியூயார்க்: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைக்க வேண்டும்; பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என, இந்தியா தரப்பில் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இடம்பெறவும் இந்தியா முயற்சித்து வருகிறது. ஆனால், நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் உள்ள ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்தியாவின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தன. மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு கூட, இந்த நாடுகள் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், ...

வரலாறு காணாத வகையில் பணவீக்கம் சரிவு! வட்டியை குறைக்க தொழில் துறை வலியுறுத்தல்

Posted:

புதுடில்லி : நாட்டின் பணவீக்க விகிதம், தொடர்ந்து, 10 மாதங்களாகக் கீழிறங்கி, வரலாறு காணாத வகையில், மைனஸ் 4.95 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில், இம்மாத கடைசியில், வங்கி வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி குறைக்கும் என்ற கருத்து, மேலோங்கி உள்ளது.
சீனப் பொருளாதாரத்தில் மந்த நிலை, போதிய மழையின்மை, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார ஊசலாட்டம் போன்ற பல்வேறு காரணங்களால், இந்திய தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன. கடந்த மார்ச்சுடன் முடிந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவீதம்; இது, கடந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™