Tamil News | Online Tamil News |
- தகவல் தொடர்பு பரிமாற்றம் அதிகரிப்பு: இந்தியா - பாக்., இடையே உடன்பாடு
- என்னிடம் சொல்லாமல் போவதா? ஸ்டாலின் மீது கருணாநிதி கோபம்
- 234 தொகுதிகளிலும் பா.ம.க., தனித்தே போட்டி: கூட்டணிக்கு கதவை மூடினார் ராமதாஸ்
- ஊரக சுகாதார திட்டத்தில் டாக்டர்கள் தேவை அதிகரிப்பு: தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் தமிழகம்
- சர்வதேச முதலீட்டாளர் மாநாடு வெற்றி: அ.தி.மு.க.,வினர் உற்சாகம்
- பீகார் தேர்தலுக்காக பணம் கேட்கும் காங்கிரஸ்? தொழிலதிபர்கள் புகார்
- வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்
- 'மீண்டும் தமிழகம் திரும்ப மாட்டோம்': இலங்கை அகதிகளிடம் உறுதிமொழி கேட்கிறது மத்திய அரசு
- ஆகம விதிமீறல் என சிவாலயங்களில் சங்கநாதத்திற்கு தடையா?
- விவசாயிகளை மறப்பதா? பிரதமர் மோடிக்கு ராகுல் கண்டனம்
- 'சீன பட்டாசுகள் இறக்குமதி தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை'
| தகவல் தொடர்பு பரிமாற்றம் அதிகரிப்பு: இந்தியா - பாக்., இடையே உடன்பாடு Posted: புதுடில்லி: இந்தியா - பாக்., எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ, இரு தரப்பிலும், தகவல் தொடர்பு பரிமாற்றத்தை அதிகரிப்பதென, இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியா - பாக்., நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் குழுவினர், டில்லியில், கடந்த இரு நாட்களாக சந்தித்து விவாதித்தனர். போர் நிறுத்த ஒப்பந்த மீறல், எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்ட முடிவில், இரு தரப்பிலும், எல்லை பகுதிகளில் அமைதி நிலவும் ... |
| என்னிடம் சொல்லாமல் போவதா? ஸ்டாலின் மீது கருணாநிதி கோபம் Posted: தன்னிடம் சொல்லாமல், திருவண்ணாமலை நிகழ்ச்சியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றதால், கோபம் அடைந்த அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, அந்த செய்தியை வெளியிட தடை விதித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.'புதுயுக சிற்பிகள்' என்ற மாணவர் மன்றம் சார்பில், திருவண்ணாமலையில், நேற்று முன்தினம் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இதில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு ஏற்பாடு செய்திருந்தார். மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசிய விவரம், 'டிவி'யில் ... |
| 234 தொகுதிகளிலும் பா.ம.க., தனித்தே போட்டி: கூட்டணிக்கு கதவை மூடினார் ராமதாஸ் Posted: ''தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், பா.ம.க., தனித்தே போட்டியிடும்,'' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதை, 'தமாஷ்' அறிவிப்பாக பார்ப்பதாக, தமிழக அரசியல் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், தனித்து போட்டியிடப் போவதாக ராமதாஸ் அறிவித்தார். எனினும், தன் நிலையை உடனே மாற்றி, சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்து, அதற்கான முஸ்தீபுகளில் இறங்கினார். பின், அதையும் திடீரென கைவிட்டார். தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், புதிய கூட்டணி ஒன்று அமைந்தது. அதில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., புதிய ஜனநாயக கட்சி, ... |
| ஊரக சுகாதார திட்டத்தில் டாக்டர்கள் தேவை அதிகரிப்பு: தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் தமிழகம் Posted: புதுடில்லி : தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் ஆகியும், போதிய மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இல்லாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இத்திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவர் தேவை, 81 சதவீதம் இருக்கிறது என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் கிராமப்புற மக்களின் சுகாதார, மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, 2005ல், என்.ஆர்.எச்.எம்., எனப்படும், தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் துவங்கப்பட்டது. 10 ஆண்டுகள் ஆன பிறகும், இத்திட்டம் பெரியளவில் முன்னேற்றம் காணவில்லை என, துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். என்.ஆர்.எச்.எம்., குறித்து, மத்திய ... |
| சர்வதேச முதலீட்டாளர் மாநாடு வெற்றி: அ.தி.மு.க.,வினர் உற்சாகம் Posted: சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், இலக்கை தாண்டி, முதலீடு கிடைத்திருப்பது, அ.தி.மு.க.,வினரிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலீட்டாளர் மாநாடு வெற்றியை, சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு, முக்கிய ஆயுதமாக பயன்படுத்த, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. |
| பீகார் தேர்தலுக்காக பணம் கேட்கும் காங்கிரஸ்? தொழிலதிபர்கள் புகார் Posted: கடந்த வாரம் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி, அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க, அரசு என்ன செய்யலாம் என, ஆலோசனை நடத்தினார். தொழிலதிபர்களுக்கு, அன்று இரவு அரசு தரப்பிலிருந்து விருந்து தரப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் சிலர், ஒரு சீனியர் அமைச்சரிடம், அவர்களுடைய முக்கிய பிரச்னையை முன் வைத்தனர். இந்த பிரச்னையை, காலையில் நடந்த கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை; அதனால் தான் இங்கு உங்களிடம் தெரிவிக்கிறோம் என்றனர்.அதிர்ச்சியடைந்த அமைச்சர், வெளியே சொல்ல முடியாத அளவிற்கு, அப்படி என்ன பிரச்னை? என ... |
| வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல் Posted: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாக மாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.தேர்வுக்கான 'வினாத்தாள் கட்டணம்' என்ற வாய்மொழி உத்தரவின்படி, கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர் குமுறுகின்றனர். 6 - 8ம் வகுப்பு வரை, 35 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 45 ரூபாய்; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 55 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், சில குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணை பள்ளியில் கொடுத்து, அந்த கணக்கில், மாணவர்களிடம் வசூலித்த ... |
| 'மீண்டும் தமிழகம் திரும்ப மாட்டோம்': இலங்கை அகதிகளிடம் உறுதிமொழி கேட்கிறது மத்திய அரசு Posted: திண்டுக்கல்: தமிழகத்தில் இருந்து இலங்கை செல்லும் அகதிகள் மீண்டும் அகதியாக திரும்பி வரக்கூடாது என உறுதிமொழி பத்திரம் வாங்கப்படுகிறது.இலங்கையில் கடந்த 1980ம் ஆண்டு இனகலவரம் ஏற்பட்ட போது, ஏராளமான அகதிகள் தமிழகத்திற்கு தஞ்சமாக வந்தனர். இங்கு பல்வேறு மாவட்டங்களில் 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், துணிமணிகள் வழங்கப்படுகின்றன. இலவச மின்சாரமும் அளிக்கப்படுகிறது.அனைத்து மாவட்டங்களிலும் முகாம்களில் தங்கியுள்ள அகதிகளிடம் இலங்கை செல்ல விருப்பம் குறித்து தாசில்தார்கள் கண்காணிப்பில் சர்வே ... |
| ஆகம விதிமீறல் என சிவாலயங்களில் சங்கநாதத்திற்கு தடையா? Posted: சென்னை: சங்கநாதம், கைலாய வாத்தியம் போன்ற வாத்தியங்களை, கோவில்களில் வாசிக்க தடை விதிக்கப்படுவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சிவாலயங்களில் சங்கநாதம், கைலாய வாத்தியம் போன்ற வாத்தியங்களை ஆகம விதி மீறல் என்று சொல்லி பல கோவில்களில், அவற்றை வாசிக்க தடை செய்யப்பட்டு வருகிறது. கோவில் வழிபாடு: பின்னர் ஆன்மிக அன்பர்களாலும், சிவனடியார்களாலும் அறநிலையத்துறையினரிடம் போராடி அவற்றை வாசிக்க அனுமதி பெறுகின்றனர். அறநிலையத்துறை கோவில்களை பராமரிக்கவும், கோவில் சொத்துகளை பாதுகாக்கவும் மட்டுமே செயல்படவேண்டுமே தவிர, கோவில் ... |
| விவசாயிகளை மறப்பதா? பிரதமர் மோடிக்கு ராகுல் கண்டனம் Posted: புதுடில்லி: ஜனநாயகத்தை பற்றி பேசும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேச மறுக்கிறார் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.டில்லியில் நில மசோதா குறித்து இளைஞர் காங்கிரசார் வெற்றி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்,ஜனநாயகத்தை பற்றி பேசும் பிரதமர் நரேந்திர மோடி, அதன் அடிப்படையாக உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேச மறுக்கிறார். இன்னும் சொல்லப் போனால், அவர்களை மறந்தேவிட்டார். விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ... |
| 'சீன பட்டாசுகள் இறக்குமதி தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை' Posted: சென்னை:''சென்னை முதலீட்டாளர்கள் மாநாடு, மிக சிறப்பாக நடந்துள்ளது; தமிழகத்துக்கு, பெரிய அளவில் முதலீடு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது,'' என, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 13,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |