Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பாரதி, கலாமுக்கு நினைவுக் கவியரங்கம்
- டியு மாணவர் சங்கத் தேர்தல்: "ஏபிவிபி' அமோக வெற்றி: அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியது
- எல்லையில் அமைதி நிலவ இந்தியா- பாகிஸ்தான் புதிய முயற்சி
- தில்லியில் டெங்குவால் பலியான சிறுவனின் பெற்றோர் தற்கொலை
- "திட்டமிட்ட முயற்சி வெற்றியைத் தரும்'
- கோயில் குளத்தில் மூழ்கி சிறுமி சாவு
- ஆரணி வட்டாரத்தில் மாவட்ட வேளாண் இயக்குநர் ஆய்வு
- பொண்ணுதான் சார்..!
- முழுமையாகத் தூர்வார வேண்டும்"ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளுவதை நோக்கமாகக் கொள்ளக் கூடாது:நல்லகண்ணு
- ஆட்சி மாற்றத்துக்கு தொழிலாளர்கள் துணை நிற்க வேண்டும்:மு.க.ஸ்டாலின்
- சுயஉதவிக் குழுக்களுக்கான கடனுதவியை அதிகரிக்க வேண்டும்:ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்
- செப். 15 இல் அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை
- மெக்கா விபத்து:விஜயகாந்த் இரங்கல்
- "கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை வீடில்லாதோருக்கு அளிக்க வேண்டும்'
- பாஜகவின் தேர்தல் கூட்டணி கனவு நிறைவேறாது: ராமதாஸ்
- ஆலையில் கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி
- ரேணிகுண்டாவில் ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்
- தமிழ் வழிக் கல்வி தொடர்பான தொலைநோக்குத் திட்டம் உருவாக்க வலியுறுத்தல்
- செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: எம்எல்ஏ சு.ரவி
- ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அகற்றம்
- விபத்து: 6 பேர் பலத்த காயம்
- தருமபுரி அருகே சிறுத்தை நடமாட்டம்:பொதுமக்கள் அச்சம்
- கல்விக் கடனுக்கான வட்டி மானியம் பெற இறுதி வாய்ப்பு
- அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
- நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு
- கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்
- தமாகா நிர்வாகிகள் நியமனம்
- விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
- மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- குப்பை லாரி, டிராக்டரை வழிமறித்துப் போராட்டம்
- ரெளடி மகா கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
- மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்ககம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
- கீழப்பாவூரில் :தொழிலாளி அடித்துக் கொலை:மனைவி உள்பட 3 பேர் கைது
- குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா
- திருந்திய நெல் சாகுபடி பயிற்சி
- அரசு மதுக்கடையில் ரூ. 9 லட்சம் கையாடல்: விற்பனையாளர் கைது
- மரத்தில் ஆட்டோ மோதி ஓட்டுநர் சாவு
- வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
- பள்ளியில் மிடுக்கான வகுப்பறை தொடக்கம்
- ரயிலில் பெண் பயணிகளிடம் 15 சவரன் நகை திருடியவர் கைது
- 15 மாணவர்களுக்கு எல்ஐசி சிறப்பு விருது
- புதிதாக ஒரு கோடி பேர் வருமான வரி செலுத்த நடவடிக்கை: ஆணையர் தகவல்
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 10 பேர் இடமாற்றம்
- பள்ளி மாணவியிடம் கேலி: ஊராட்சித் தலைவர் மகன் கைது
- மதுவிலக்கை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டங்கள்
- அண்ணா பிறந்த நாள் மிதிவண்டிப் போட்டி
- தந்தையைக் கொன்ற மகன் கைது
- குற்றங்களைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: எஸ்.பி. இரா.பொன்னி
- "பல முதலாளிகள் மனித உரிமைகளை மீறி செயல்படுகின்றனர்'
- இணையதள வர்த்தகத்துக்குத் தடை கோரி விரைவில் சிறை நிரப்பும் போராட்டம்: வெள்ளையன்
- கிளையூர் தாழைமடுவு காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு
- கிரிவலப் பாதையில் ரூ.20 கோடியில் கல்வெட்டு நந்தவனம்
- அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம்
- கிராமங்களில் குற்றங்களை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்
- வன்னியர் சங்கத் தலைவர் கைது: காவல் ஆய்வாளரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
- "அம்மா' குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டம் தொடக்கம்
- பள்ளி மாணவர்களுக்கான இலவச கணினிப் பயிற்சி
- செப்.16-இல் நாடு தழுவிய தொடர் முழக்கப் போராட்டம்
- எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு நாள்
- "கள்ளுக்கு எதிரான கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடிப்போம்
- மானாமதுரையில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பால் வியாபாரி கொலை:கிணற்றில் சடலம் மீட்பு
- ராமேசுவரத்தில் சூறாவளிக் காற்று:4-ஆவது நாளாக மீன்பிடிக்க அனுமதி மறுப்பு
- மதுரை கிரானைட் குவாரியில் நரபலி புகார்: சடலங்களைப் புதைத்த இடத்தை தோண்ட முடிவு
- குறளின் விளக்கம் குறளில்!
- முத்தான முத்தம்
- புலருமா அப்பொழுது?
- இந்தவாரம் கலாரசிகன்
- மண்ணாயினும் கொண்டு வீசுமினே!
- சொல் தேடல் -25
- அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர்கள் நியமனம்:ஆணைகளை வழங்கினார் முதல்வர்
- விவசாயிகளை மறந்துவிட்டார் மோடி:ராகுல் காந்தி தாக்கு
- தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல்:ஏபிவிபி அமோக வெற்றி
- தில்லியில் டெங்குவால் பலியான சிறுவனின் பெற்றோர் தற்கொலை
- ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரும் ரயில்வே ஊழியர்கள்:பிரதமருக்கு கடிதம்
- சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்:ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தல்
- போர்க் குற்ற விசாரணை அறிக்கை நகல்: இலங்கை அரசிடம் வழங்கியது ஐ.நா.
- கர்நாடகத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: 2 பேர் பலி
- அக்.2 உண்ணாவிரதத்தை ரத்து செய்ய ஹசாரே முடிவு
- சல்மான் கானின் மேல்முறையீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறிய மனு தள்ளுபடி
- கூடுதல் உணவு தானிய ஒதுக்கீடு கோரும் கேரளம்
- போலி நெய் தொழிற்சாலை: ஒருவர் கைது
- ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் மீட்பு
- மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எல்லையில் அத்துமீறல் அதிகரிப்பு:பாகிஸ்தான் குற்றச்சாட்டு
- லடாக் எல்லைக்கு அருகே இந்திய - சீனப் படைகள் மோதல்
- சிவசேனைப் பிரமுகர் மீது தாக்குதல்
- மாட்டிறைச்சிக்குத் தடை: ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு
- "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்துக்கு அதிருப்தி: முன்னாள் ராணுவத்தினர் பேரணி
- பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு
- ஜிஎஸ்டி மசோதா விவகாரம்:கருத்தொற்றுமை எட்டப்பட்டால் முன்கூட்டியே நாடாளுமன்ற கூட்டத் தொடர்
- அமெரிக்காவில் 3-ஆவது சர்வதேச ஹிந்தி மாநாடு
- பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறல்
- பயஸ்- ஹிங்கிஸ் ஜோடி புதிய சாதனை
- சர்வதேச ஆடவர் டென்னிஸ்:இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் சாம்பியன்
- உலகக் கோப்பை செஸ்:2-ஆவது சுற்றில் ஹரிகிருஷ்ணா, சேதுராமன்
- ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி:அரையிறுதியில் ஜப்பானிடம் இந்தியா தோல்வி
- 4-ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
- ஜூனியர் குத்துச்சண்டை:இந்திய வீரர் சச்சின் வெண்கலம் வென்றார்
- பிரிட்டன்: தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு
- நேபாள கலவரம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பான் கி-மூன் வலியுறுத்தல்
| பாரதி, கலாமுக்கு நினைவுக் கவியரங்கம் Posted: 12 Sep 2015 01:16 PM PDT மகாகவி பாரதியார், குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரின் நினைவுக் கவியரங்கம் தில்லி தமிழ் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். |
| டியு மாணவர் சங்கத் தேர்தல்: "ஏபிவிபி' அமோக வெற்றி: அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியது Posted: 12 Sep 2015 01:11 PM PDT தில்லி பல்கலைக்கழக (டியு) மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. |
| எல்லையில் அமைதி நிலவ இந்தியா- பாகிஸ்தான் புதிய முயற்சி Posted: 12 Sep 2015 01:10 PM PDT எல்லையில் அமைதி நிலவ இந்தியா-பாகிஸ்தான் இடையே தகவல் தொடர்பை வலுப்படுத்தும் வகையில், தில்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர்களின் கூட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. |
| தில்லியில் டெங்குவால் பலியான சிறுவனின் பெற்றோர் தற்கொலை Posted: 12 Sep 2015 01:09 PM PDT தெற்கு தில்லி லடோ சராய் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த ஒரே மகன் அவினாஷின் (7) பெற்றோர் லட்சுமி சந்திரா, பபிதா ரோத் ஆகியோர் நான்காவது மாடியிலிருந்து குதித்து புதன்கிழமை நள்ளிரவு தற்கொலை செய்து கொண்டனர். |
| "திட்டமிட்ட முயற்சி வெற்றியைத் தரும்' Posted: 12 Sep 2015 01:06 PM PDT லட்சியத்தை நோக்கி திட்டமிட்ட முயற்சியை மேற்கொள்வோரே வெற்றியாளராக முடியும். அந்த வகையில் மாணவர்கள் திட்டமிட்டு படித்தால் வெற்றி கிட்டும் என்று தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஆணையர் ரமேஷ்சந்த்மீனா கூறினார். |
| கோயில் குளத்தில் மூழ்கி சிறுமி சாவு Posted: 12 Sep 2015 01:06 PM PDT பள்ளிகொண்டா அருகே வெட்டுவானம் கோயில் குளத்தில் மூழ்கி சிறுமி வெள்ளிக்கிழமை இறந்தார். |
| ஆரணி வட்டாரத்தில் மாவட்ட வேளாண் இயக்குநர் ஆய்வு Posted: 12 Sep 2015 01:06 PM PDT திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சபாநடேசன் ஆரணி வட்டாரத்தில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 12 Sep 2015 12:36 PM PDT பொண்ணுதான் சார்..! |
| முழுமையாகத் தூர்வார வேண்டும்"ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளுவதை நோக்கமாகக் கொள்ளக் கூடாது:நல்லகண்ணு Posted: 12 Sep 2015 12:33 PM PDT ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளுவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், தூர்வாரும் பணியை முழுமையாகச் செய்ய வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தினார். |
| ஆட்சி மாற்றத்துக்கு தொழிலாளர்கள் துணை நிற்க வேண்டும்:மு.க.ஸ்டாலின் Posted: 12 Sep 2015 12:32 PM PDT தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு தொழிலாளர்கள் துணை நிற்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். |
| சுயஉதவிக் குழுக்களுக்கான கடனுதவியை அதிகரிக்க வேண்டும்:ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் Posted: 12 Sep 2015 12:31 PM PDT சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் அளிக்கும் கடனுதவியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஹெச்.ஆர். கான் கூறினார். |
| செப். 15 இல் அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை Posted: 12 Sep 2015 12:31 PM PDT முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு வரும் செவ்வாய்க்கிழமை (செப். 15) முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தவுள்ளார். |
| மெக்கா விபத்து:விஜயகாந்த் இரங்கல் Posted: 12 Sep 2015 12:30 PM PDT மெக்கா விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: |
| "கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை வீடில்லாதோருக்கு அளிக்க வேண்டும்' Posted: 12 Sep 2015 12:30 PM PDT கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை வீடில்லாத ஏழை மக்களுக்கு அரசு அளிக்க வேண்டும் என, அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கீதா வேண்டுகோள் விடுத்தார். |
| பாஜகவின் தேர்தல் கூட்டணி கனவு நிறைவேறாது: ராமதாஸ் Posted: 12 Sep 2015 12:29 PM PDT தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தங்களது அணியில் பாமக சேரும் என்ற பாஜகவின் கனவு நிறைவேறாது என பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் கூறினார். |
| ஆலையில் கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி Posted: 12 Sep 2015 12:29 PM PDT ஒசூர் தனியார் தொழிற்சாலையில் சனிக்கிழமை கொதிகலன் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். |
| ரேணிகுண்டாவில் ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் Posted: 12 Sep 2015 12:29 PM PDT ரேணிகுண்டா அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரேணிகுண்டா சிறப்புக் காவல் படை டி.எஸ்.பி ஸ்ரீதர் தெரிவித்தார். |
| தமிழ் வழிக் கல்வி தொடர்பான தொலைநோக்குத் திட்டம் உருவாக்க வலியுறுத்தல் Posted: 12 Sep 2015 12:28 PM PDT தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வி தொடர்பான தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: எம்எல்ஏ சு.ரவி Posted: 12 Sep 2015 12:27 PM PDT அரக்கோணம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார். |
| ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அகற்றம் Posted: 12 Sep 2015 12:27 PM PDT குடியாத்தம் சந்தப்பேட்டை மாட்டுச் சந்தை வளாகத்தில், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. |
| Posted: 12 Sep 2015 12:27 PM PDT லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலத்த காயமடைந்துனர். வேலூரிலிருந்து ஒசூர் நோக்கி அரசுப் பேருந்து சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்றது. நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் அருகே இரும்புக் குழாய் சுமை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் மாதவன் (42), நடத்துநர் முருகேசன் (48) , சென்னையைச் சேர்ந்த குமார் (47), ஜெயராமன் (35), சித்தூரைச் சேர்ந்த ராஜேஸ் (31), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வெங்கடாசலம் (45) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| தருமபுரி அருகே சிறுத்தை நடமாட்டம்:பொதுமக்கள் அச்சம் Posted: 12 Sep 2015 12:27 PM PDT தருமபுரி அருகே சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். |
| கல்விக் கடனுக்கான வட்டி மானியம் பெற இறுதி வாய்ப்பு Posted: 12 Sep 2015 12:27 PM PDT மத்திய அரசின் உத்தரவின்படி, 1.4.2009 முதல் 31.3.2014 வரை வங்கிகள் மூலம் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்விக்கு பெற்ற கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம் தகுதியுடைய மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து ஆட்சியரின் செய்திக் குறிப்பு: |
| அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு Posted: 12 Sep 2015 12:27 PM PDT ஆம்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை எம்எல்ஏ அ.அஸ்லம் பாஷா சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு Posted: 12 Sep 2015 12:27 PM PDT நல்லாசிரியர் விருது பெற்ற நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சி.ரவிவர்மனுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. |
| கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் Posted: 12 Sep 2015 12:27 PM PDT வேலூரை அடுத்த சித்தேரியில் கால்நடை பராமரிப்புத் துறை, வேலூர் காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. |
| Posted: 12 Sep 2015 12:27 PM PDT தமிழ் மாநில காங்கிரஸ் மாதனூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். |
| விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் Posted: 12 Sep 2015 12:27 PM PDT குடியாத்தம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், நகைக்கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது குறித்தும் காவல்துறை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 12 Sep 2015 12:27 PM PDT மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கான நோட்டீஸ் வாங்க மறுத்த பொதுமக்கள் பொதுப் பணித் துறை அதிகாரிகளை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| குப்பை லாரி, டிராக்டரை வழிமறித்துப் போராட்டம் Posted: 12 Sep 2015 12:27 PM PDT வேலூர், கஸ்பாவில் குப்பைகளைக் கொட்ட வந்த லாரி, டிராக்டரை வழிமறித்து அப்பகுதி மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ரெளடி மகா கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது Posted: 12 Sep 2015 12:27 PM PDT வேலூரில் ரெளடி மகா கொலை வழக்கில் மேலும் ஒருவரை வேலூர் வடக்குக் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். |
| மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்ககம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை Posted: 12 Sep 2015 12:27 PM PDT மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்ககம் அமைக்க வேண்டும் என்று வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| கீழப்பாவூரில் :தொழிலாளி அடித்துக் கொலை:மனைவி உள்பட 3 பேர் கைது Posted: 12 Sep 2015 12:27 PM PDT திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா Posted: 12 Sep 2015 12:27 PM PDT ஆம்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| திருந்திய நெல் சாகுபடி பயிற்சி Posted: 12 Sep 2015 12:27 PM PDT காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடி முறையில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணி அத்திப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| அரசு மதுக்கடையில் ரூ. 9 லட்சம் கையாடல்: விற்பனையாளர் கைது Posted: 12 Sep 2015 12:27 PM PDT திருப்பத்தூர் அருகே அரசு மதுபானக் கடையில் ரூ.9 லட்சம் கையாடல் செய்த வழக்கில் அதன் விற்பனையாளரை போலீஸார் கைது செய்தனர். |
| மரத்தில் ஆட்டோ மோதி ஓட்டுநர் சாவு Posted: 12 Sep 2015 12:26 PM PDT அரக்கோணத்தில் மரத்தின் மீது ஆட்டோ மோதியதில், அதன் ஓட்டுநர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதில், பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார். |
| வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 12 Sep 2015 12:26 PM PDT வாலாஜாபேட்டை வழக்குரைஞர்கள் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் வாலாஜா மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளியில் மிடுக்கான வகுப்பறை தொடக்கம் Posted: 12 Sep 2015 12:26 PM PDT மாதனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், அபுதாபியில் பணிபுரியும் பொறியாளர் அளித்த நன்கொடை மூலம் மிடுக்கான வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| ரயிலில் பெண் பயணிகளிடம் 15 சவரன் நகை திருடியவர் கைது Posted: 12 Sep 2015 12:26 PM PDT ரயிலில் பெண் பயணிகளிடம் 15 பவுன் நகைகளை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| 15 மாணவர்களுக்கு எல்ஐசி சிறப்பு விருது Posted: 12 Sep 2015 12:26 PM PDT திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த பெரியகரன் அரசு உயர்நிலைப் பள்ளி, தோரணம்பதி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் சிறந்த மாணவ, மாணவிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு எல்.ஐ.சி.யின் சிறந்த மாணவர் விருது வழங்கப்பட்டது. |
| புதிதாக ஒரு கோடி பேர் வருமான வரி செலுத்த நடவடிக்கை: ஆணையர் தகவல் Posted: 12 Sep 2015 12:26 PM PDT தமிழகத்தில் நடத்தப்படும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் மூலம் புதிதாக ஒரு கோடி பேரை வருமான வரி செலுத்த வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று வருமான வரித்துறை ஆணையர் வி.மகாலிங்கம் பேசினார். |
| துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 10 பேர் இடமாற்றம் Posted: 12 Sep 2015 12:26 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் 10 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| பள்ளி மாணவியிடம் கேலி: ஊராட்சித் தலைவர் மகன் கைது Posted: 12 Sep 2015 12:26 PM PDT வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கேலி செய்ததாக ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| மதுவிலக்கை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் Posted: 12 Sep 2015 12:26 PM PDT திருவண்ணாமலையில் மதுவிலக்கு குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் அறிவிப்பை விளக்கி தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. |
| அண்ணா பிறந்த நாள் மிதிவண்டிப் போட்டி Posted: 12 Sep 2015 12:26 PM PDT திருவண்ணாமலையில் அண்ணா பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட மிதிவண்டிப் போட்டியில், திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். |
| Posted: 12 Sep 2015 12:26 PM PDT திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக, தந்தையைக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர். |
| குற்றங்களைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: எஸ்.பி. இரா.பொன்னி Posted: 12 Sep 2015 12:26 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி கூறினார். |
| "பல முதலாளிகள் மனித உரிமைகளை மீறி செயல்படுகின்றனர்' Posted: 12 Sep 2015 12:26 PM PDT பல முதலாளிகள் மனித உரிமைகளை மீறி செயல்படுகின்றனர் என சார் ஆட்சியர் ஆர்த்தி கூறினார். |
| இணையதள வர்த்தகத்துக்குத் தடை கோரி விரைவில் சிறை நிரப்பும் போராட்டம்: வெள்ளையன் Posted: 12 Sep 2015 12:26 PM PDT இணையதள வர்த்தகத்தை தடை செய்யக் கோரி விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறினார். |
| கிளையூர் தாழைமடுவு காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு Posted: 12 Sep 2015 12:26 PM PDT செங்கம் அருகே கிளையூர் தாழைமடுவு காளியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். |
| கிரிவலப் பாதையில் ரூ.20 கோடியில் கல்வெட்டு நந்தவனம் Posted: 12 Sep 2015 12:26 PM PDT திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ. 20 கோடி மதிப்பில் கல்வெட்டு நந்தவனம் அமைப்பதற்கான நடவடிக்கையில் அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. |
| அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம் Posted: 12 Sep 2015 12:26 PM PDT திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் அதிமுக அரசின் நான்காண்டு சாதனைகள், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் வெற்றி குறித்த பொதுக்கூட்டம் போளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கிராமங்களில் குற்றங்களை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் Posted: 12 Sep 2015 12:26 PM PDT கிராம ஊராட்சி மன்றத் தலைவர், காவல் துறை இணைந்து குற்றங்களை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வன்னியர் சங்கத் தலைவர் கைது: காவல் ஆய்வாளரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் Posted: 12 Sep 2015 12:26 PM PDT செங்கம் அருகே வன்னியர் சங்கத் தலைவரைக் கைது செய்த காவல் ஆய்வாளரை கண்டித்து பாமகவினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| "அம்மா' குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டம் தொடக்கம் Posted: 12 Sep 2015 12:26 PM PDT அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு "அம்மா' குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது. |
| பள்ளி மாணவர்களுக்கான இலவச கணினிப் பயிற்சி Posted: 12 Sep 2015 12:25 PM PDT |
| செப்.16-இல் நாடு தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் Posted: 12 Sep 2015 12:25 PM PDT பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான செல்லிடப்பேசி கோபுரங்களின் சேவையை தனி நிறுவனமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 16-ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றார் பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் சி.கே.மதிவாணன். |
| எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு நாள் Posted: 12 Sep 2015 12:24 PM PDT தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 94ஆவது நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. |
| "கள்ளுக்கு எதிரான கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடிப்போம் Posted: 12 Sep 2015 12:23 PM PDT கள்ளுக்கு எதிரான கட்சிகளின் வேட்பாளர்களை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிப்போம் என்றார் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி. |
| மானாமதுரையில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பால் வியாபாரி கொலை:கிணற்றில் சடலம் மீட்பு Posted: 12 Sep 2015 12:22 PM PDT மானாமதுரை அருகே பணம் கேட்டு கடத்தப்பட்ட பால் வியாபாரி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் கிணற்றிலிருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
| ராமேசுவரத்தில் சூறாவளிக் காற்று:4-ஆவது நாளாக மீன்பிடிக்க அனுமதி மறுப்பு Posted: 12 Sep 2015 12:22 PM PDT ராமேசுவரத்தில் சூறாவளிக்காற்று தொடர்ந்து வீசி வருவதால் பாதுகாப்புக் கருதி மீனவர்கள் கடலுக்கு செல்ல நான்காவது நாளான சனிக்கிழமையும் அனுமதி மறுக்கப்பட்டது. |
| மதுரை கிரானைட் குவாரியில் நரபலி புகார்: சடலங்களைப் புதைத்த இடத்தை தோண்ட முடிவு Posted: 12 Sep 2015 12:22 PM PDT மதுரை அருகே கிரானைட் குவாரிக்காக இருவரை நரபலி கொடுத்து அவர்களது சடலங்கள் புதைக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அந்த இடத்தை தோண்டிப் பார்க்க உயர் நீதிமன்ற சட்ட ஆணையர் உ. சகாயம் முடிவு செய்துள்ளார். |
| Posted: 12 Sep 2015 12:21 PM PDT திருக்குறளுக்கு முதலில் விளக்கவுரை எழுதியவர் பரிமேலழகர் எனச் சிலரும், மண்டூக முனிவர் எனச் சிலரும் கூறுவர். ஆனால், உண்மையில் திருக்குறளுக்கு முதன்முதலில் விளக்கவுரை எழுதியவர் திருவள்ளுவர்தான் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையும் அதுதான். |
| Posted: 12 Sep 2015 12:20 PM PDT நவமணிகளில் ஒன்று முத்து. "துன்னரிய தரளம், நித்திலம், ஆரம், முத்து ஆம்' என்று முத்தின் பெயர்களைக் கூறுகிறது ஆசிரிய நிகண்டு. அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியம் |
| Posted: 12 Sep 2015 12:19 PM PDT சங்ககாலப் பெண்கள் இல்லறம் சிறக்க மாண்புடன் வாழ்ந்து வந்தனர். குடும்பம், சமுதாயம் ஆகியவற்றில் பெண்களின் கருத்துகளுக்கு மதிப்பிருந்தன; பெண்கள் போற்றப்பட்டனர்; |
| Posted: 12 Sep 2015 12:17 PM PDT இந்தவாரம் கலாரசிகன் |
| Posted: 12 Sep 2015 12:16 PM PDT பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வாரை, வைணவ மறைக்கு "முதல் தாய்' என்பர். நம்மாழ்வார் தம்மைத் தலைவியாகப் பாவித்து, ("நாயக-நாயகி' பாவத்தில்) பெருமாள் மீது காதல் கொண்டு பாடியவர். வெண்ணிலவு, குளிர் தென்றல், மயக்கும் மாலைப்பொழுது, இனிக்கும் இரவு ஆகியவை தலைவிக்குக் காதல் நோயைப் பெருக்கும் தன்மையுடையவையாகும். |
| Posted: 12 Sep 2015 12:15 PM PDT con என்னும் சொல் எதனைக் குறிக்கிறது? இச்சொல் கணிப்பொறி, அலைபேசி இவற்றின் திரைகளில் இருக்கும் பல்வேறு வண்ணக் குறியீடுகளையும் கோயிற் சிலைகளையும் குறிக்கிறது. The Icon of Lord Nataraja is the symbolic representation of the cosmic dance என்று குறிப்பர். |
| அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர்கள் நியமனம்:ஆணைகளை வழங்கினார் முதல்வர் Posted: 12 Sep 2015 12:10 PM PDT தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட 7,243 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். |
| விவசாயிகளை மறந்துவிட்டார் மோடி:ராகுல் காந்தி தாக்கு Posted: 12 Sep 2015 12:09 PM PDT ""ஜனநாயகம் குறித்து பேசும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் அடித்தளமாக விளங்கும் விவசாயிகள், தொழிலாளர்களை முழுவதும் மறந்து விட்டார்'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். |
| தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல்:ஏபிவிபி அமோக வெற்றி Posted: 12 Sep 2015 12:08 PM PDT தில்லி பல்கலைக்கழக (டியு) மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. |
| தில்லியில் டெங்குவால் பலியான சிறுவனின் பெற்றோர் தற்கொலை Posted: 12 Sep 2015 12:08 PM PDT தெற்கு தில்லி லடோ சராய் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த ஒரே மகன் அவினாஷின் (7) பெற்றோர் லட்சுமி சந்திரா, பபிதா ரோத் ஆகியோர் நான்காவது மாடியிலிருந்து குதித்து புதன்கிழமை நள்ளிரவு தற்கொலை செய்து கொண்டனர். |
| ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரும் ரயில்வே ஊழியர்கள்:பிரதமருக்கு கடிதம் Posted: 12 Sep 2015 12:06 PM PDT முன்னாள் ராணுவத்தினருக்காக "ஒரே பதவிக்கு, ஒரே ஓய்வூதியம்' திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்த நிலையில், அதுபோன்ற திட்டத்தை தங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 12 Sep 2015 12:06 PM PDT கள்ளச் சந்தையில் சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வதைத் தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். |
| இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்:ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தல் Posted: 12 Sep 2015 12:05 PM PDT இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| போர்க் குற்ற விசாரணை அறிக்கை நகல்: இலங்கை அரசிடம் வழங்கியது ஐ.நா. Posted: 12 Sep 2015 12:05 PM PDT இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில், தனது அறிக்கையின் நகலை இலங்கை அரசிடம் வெள்ளிக்கிழமை அளித்தது. |
| கர்நாடகத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: 2 பேர் பலி Posted: 12 Sep 2015 12:04 PM PDT கர்நாடக மாநிலம், கலபுர்கி அருகே துரந்தோ ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், பயணிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். |
| அக்.2 உண்ணாவிரதத்தை ரத்து செய்ய ஹசாரே முடிவு Posted: 12 Sep 2015 12:02 PM PDT தில்லியில், அடுத்த மாதம் 2-ஆம் தேதிக்கு திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்வதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்தார். |
| சல்மான் கானின் மேல்முறையீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறிய மனு தள்ளுபடி Posted: 12 Sep 2015 12:02 PM PDT ஹிந்தி நடிகர் சல்மான் கான் உள்பட முக்கியஸ்தர்களின் மேல்முறையீட்டு மனுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை எதிர்த்து கொலைக் குற்றவாளி தரப்பில் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| கூடுதல் உணவு தானிய ஒதுக்கீடு கோரும் கேரளம் Posted: 12 Sep 2015 12:01 PM PDT மத்தியத் தொகுப்பிலிருந்து தற்போது கூடுதலாக வழங்கி வரும் 30,000 டன் உணவு தானிய ஒதுக்கீட்டைத் தொடருமாறு கேரள அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. |
| போலி நெய் தொழிற்சாலை: ஒருவர் கைது Posted: 12 Sep 2015 12:01 PM PDT ஹரியாணா மாநிலம் ஹிஸார் அருகில் போலி நெய் தயாரித்த தொழிலகத்துக்கு போலீஸார் சீல் வைத்ததனர். மேலும், இதுதொடர்பாக ஒருவரைக் கைது செய்தனர். |
| ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் மீட்பு Posted: 12 Sep 2015 12:01 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சனிக்கிழமை மீட்கப்பட்டார். |
| மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எல்லையில் அத்துமீறல் அதிகரிப்பு:பாகிஸ்தான் குற்றச்சாட்டு Posted: 12 Sep 2015 12:00 PM PDT இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன என்று பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றம் சாட்டினார். |
| லடாக் எல்லைக்கு அருகே இந்திய - சீனப் படைகள் மோதல் Posted: 12 Sep 2015 12:00 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் எல்லைக்கு அருகே, இந்திய ராணுவமும், சீன ராணுவமும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டன. |
| சிவசேனைப் பிரமுகர் மீது தாக்குதல் Posted: 12 Sep 2015 11:59 AM PDT மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சிப் பிரமுகர் ஒருவரை, மர்ம நபர்கள் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். |
| மாட்டிறைச்சிக்குத் தடை: ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு Posted: 12 Sep 2015 11:59 AM PDT ஜம்மு-காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதித்து அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து பிரிவினைவாத அமைப்புகளின் சார்பில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. |
| "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்துக்கு அதிருப்தி: முன்னாள் ராணுவத்தினர் பேரணி Posted: 12 Sep 2015 11:58 AM PDT மத்திய அரசு அறிவித்த "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நிராகரித்துள்ள முன்னாள் ராணுவ வீரர்களில் ஒரு பிரிவினர், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக தில்லியில் பேரணி நடத்தினர். |
| பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு Posted: 12 Sep 2015 11:56 AM PDT நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட 6 துறைகளில் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படத் தகுதியுடைய உள்நாட்டு தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
| ஜிஎஸ்டி மசோதா விவகாரம்:கருத்தொற்றுமை எட்டப்பட்டால் முன்கூட்டியே நாடாளுமன்ற கூட்டத் தொடர் Posted: 12 Sep 2015 11:53 AM PDT சரக்கு-சேவைகள் வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) மசோதா விவகாரத்தில் கருத்தொற்றுமை எட்டப்பட்டால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே கூட்டுவதற்கு அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| அமெரிக்காவில் 3-ஆவது சர்வதேச ஹிந்தி மாநாடு Posted: 12 Sep 2015 11:52 AM PDT மூன்றாவது சர்வதேச ஹிந்தி மொழி மாநாடு அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பாகிஸ்தான் படையினர் மீண்டும் அத்துமீறல் Posted: 12 Sep 2015 11:51 AM PDT ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி, பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். |
| பயஸ்- ஹிங்கிஸ் ஜோடி புதிய சாதனை Posted: 12 Sep 2015 11:51 AM PDT யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்று, புதிய சாதனை படைத்துள்ளது. |
| சர்வதேச ஆடவர் டென்னிஸ்:இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் Posted: 12 Sep 2015 11:46 AM PDT கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீரரை வீழ்த்தி, இந்தியாவின் ராம்குமார் |
| உலகக் கோப்பை செஸ்:2-ஆவது சுற்றில் ஹரிகிருஷ்ணா, சேதுராமன் Posted: 12 Sep 2015 11:45 AM PDT உலகக் கோப்பை செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றுக்கு இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, சேதுராமன் ஆகியோர் முன்னேறியுள்ளனர். |
| ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி:அரையிறுதியில் ஜப்பானிடம் இந்தியா தோல்வி Posted: 12 Sep 2015 11:44 AM PDT ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. |
| 4-ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி Posted: 12 Sep 2015 11:44 AM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இயான் மோர்கன் 92 ரன்கள் விளாச, 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. |
| ஜூனியர் குத்துச்சண்டை:இந்திய வீரர் சச்சின் வெண்கலம் வென்றார் Posted: 12 Sep 2015 11:43 AM PDT ஜூனியர் குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர் சச்சின் வெண்கலப் பதக்கம் வென்றார். |
| பிரிட்டன்: தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு Posted: 12 Sep 2015 11:42 AM PDT பிரிட்டனில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஜெரிமி கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| நேபாள கலவரம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பான் கி-மூன் வலியுறுத்தல் Posted: 12 Sep 2015 11:42 AM PDT அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவது தொடர்பாக நேபாளத்தில் நிகழ்ந்து வரும் கலவரங்களைத் தடுத்து நிறுத்த அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |