Tamil News | Online Tamil News |
- வருகையால் சிரமத்தை சந்தித்த மக்களிடம் மோடி வருத்தம்: பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதை விசாரிக்க உத்தரவு
- 'எல்லையில் நாங்கள் முதலில் தாக்க மாட்டோம்': ராஜ்நாத் சிங்
- மும்பை தாக்குதல்: 12 பேர் குற்றவாளிகள்
- கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ.100 கோடி நிதி: மத்திய அரசுக்கு வழங்கினார் அமிர்தானந்தமயி
- முடக்கப்படும் தொழிலாளர் நலன்: கருணாநிதி கவலை
- தென் மாவட்டங்களில் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு
- மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் கல்வி முக்கியத்துவம் பெறும்: ஸ்டாலின் நம்பிக்கை
- சட்டசபை தேர்தல் வருமா என கட்சிகள் எதிர்பார்ப்பு: முதலீட்டாளர் மாநாடு முடிந்ததால் பரபரப்பு அதிகரிப்பு
- ஐ.எஸ்.,சுக்கு ஆள்பிடித்த இந்திய பெண் கைது
- ராமலிங்க ராஜு குடும்பம் பங்கு வர்த்தகம் புரிய தடை
| வருகையால் சிரமத்தை சந்தித்த மக்களிடம் மோடி வருத்தம்: பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதை விசாரிக்க உத்தரவு Posted: சண்டிகர்: பிரதமரான பின், பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு, நேற்று மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணம், பலத்த சர்ச்சையையும், மக்களுக்கு அவதியையும் ஏற்படுத்தி விட்டது. பலவித இன்னல்களால் பாதிக்கப்பட்ட மக்களிடம், வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த நகர நிர்வாகத்திற்கு, கண்டனம் தெரிவித்து உள்ளார்; அதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின், தலைநகராக விளங்கும் சண்டிகர் நகருக்கு, பிரதமர் மோடி, நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சண்டிகர் விமான நிலையத்தில், புதிய முனையம் அறிமுகம்; ... |
| 'எல்லையில் நாங்கள் முதலில் தாக்க மாட்டோம்': ராஜ்நாத் சிங் Posted: புதுடில்லி: ''எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் எந்தச் சூழ்நிலையிலும், முதல் தாக்குதல் நடத்த மாட்டார்கள்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். |
| மும்பை தாக்குதல்: 12 பேர் குற்றவாளிகள் Posted: மும்பை : மும்பையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், 188 பேர் உயிரை பலிவாங்கிய, புறநகர் ரயில்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்; ஒருவரை கோர்ட் விடுதலை செய்து உள்ளது. |
| கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ.100 கோடி நிதி: மத்திய அரசுக்கு வழங்கினார் அமிர்தானந்தமயி Posted: கொல்லம்: 'துாய்மை இந்தியா' மற்றும் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டங்களுக்காக, மத்திய அரசுக்கு, மாதா அமிர்தானந்தமயி தேவி, 100 கோடி ரூபாய் வழங்கினார்.இதற்கான விழா, கேரள மாநிலம், கொல்லம், அமிர்தபுரியில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம், 100 கோடி ரூபாய்க்கான காசோலையை, மாதா அமிர்தானந்தமயி தேவி வழங்கினார்.விழாவில், மாதா அமிர்தானந்தமயி தேவி பேசியதாவது: கங்கை நதி, 75 சதவீதம், கழிவுகளால் மாசுபட்டுள்ளது. நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய ஐம்பூதங்களே நம்மை வாழ வைக்கின்றன; அவற்றை துாய்மையாக பராமரிப்பது ... |
| முடக்கப்படும் தொழிலாளர் நலன்: கருணாநிதி கவலை Posted: சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு; புதுப்பித்தல்; நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்தல் போன்ற அனைத்து பணிகளுக்கும், சென்னைக்கு வர வேண்டிய நிலையை மாற்றி, அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் நல வாரிய அலுவலகங்கள், தி.மு.க., ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டன; அந்த அலுவலகங்களின் கதி, தற்போது என்னவாயிற்று என்று தெரியவில்லை.நலத்திட்ட உதவிகள் கோரி, தொழிலாளர் விண்ணப்பித்தால், ஒரு மாதத்தில், தி.மு.க., அரசு தீர்வு வழங்கியது. ஆனால் தற்போது, அ.தி.மு.க., அரசு, வேண்டும் என்றே, பல காரணங்களை கூறி இழுத்தடிக்கிறது. அதனால், ... |
| தென் மாவட்டங்களில் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு Posted: சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், தென் மாவட்டங்களில், 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க, 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம், 73 ஆயிரம் பேருக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொழில் துவங்க வருவோர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட தான் ஆர்வம் காட்டுகின்றனர். தென் மாவட்டங்களில் தொழிற்சாலை துவங்க, தொழில் முனைவோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், தென் மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி, சென்னை, பெங்களூரு, கோவை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ... |
| மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் கல்வி முக்கியத்துவம் பெறும்: ஸ்டாலின் நம்பிக்கை Posted: திருவண்ணாமலை: "மாணவர்கள் அரசியலுக்கு வரும் போது, கல்வி முக்கியத்துவம் பெறும்," என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.'புதுயுக சிற்பிகள்' என்ற மாணவர் மன்றத்தின் சார்பாக, தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுக்கான வளர்ச்சி குறித்து, கல்லுாரி மாணவர்களிடம் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார். நேற்று, திருவண்ணாமலையில் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்தது.'தமிழகத்தின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் திருவண்ணாமலை, வேலுார், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள், 15 ஆயிரம் பேர் கலந்து ... |
| சட்டசபை தேர்தல் வருமா என கட்சிகள் எதிர்பார்ப்பு: முதலீட்டாளர் மாநாடு முடிந்ததால் பரபரப்பு அதிகரிப்பு Posted: இலக்கை தாண்டி, 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு, தொழில் முதலீடுகளை ஈர்த்து, அ.தி.மு.க., அரசு நடத்திய சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. அந்த உற்சாகத்தில், ஆளும் தரப்பினர் இருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகள் வட்டாரத்தில், 'எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல் வரலாம்' என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஐந்து ஆண்டு ஆட்சியின் நிறைவு கட்டத்தில் உள்ள அ.தி.மு.க., அரசு, பெரும் எதிர்பார்ப்புடன், இந்த மாநாட்டை சென்னையில் நடத்தியது. இரண்டு நாள் மாநாட்டில், அன்னிய முதலீட்டாளர்கள் உட்பட, 5,000 பிரதிநிதிகள் கலந்து ... |
| ஐ.எஸ்.,சுக்கு ஆள்பிடித்த இந்திய பெண் கைது Posted: ஐதராபாத்:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக, துபாயில் இருந்து, நாடு கடத்தப்பட்ட, அப்ஷா ஜபீன், 37 என்ற இந்திய பெண், ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார். அவருடன், கணவர் தேவேந்தர் பத்ரா என்ற முஸ்தபா மற்றும் மூன்று மகள்களையும் போலீசார் கைது செய்தனர். அப்ஷா ஜபீன் பின்னணி குறித்து, போலீசார் திடுக்கிடும் தகவலைதெரிவித்துள்ளனர். அதன் விவரம்: அப்ஷா ஜபீனுக்கு, நிக்கோலே நிக்கி ஜோசப், நிக்கி, நிக்கோலே, ஆயிஷா, என பல பெயர்கள் உண்டு. சிறுவயதில், பெற்றோருடன் அபுதாபி சென்ற அப்ஷா ஜபீன், அங்கு பள்ளிப் படிப்பை ... |
| ராமலிங்க ராஜு குடும்பம் பங்கு வர்த்தகம் புரிய தடை Posted: புதுடில்லி: சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் குடும்பத்தினர் உட்பட, எட்டு பேர், பங்கு வர்த்தகம் புரிய, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் - 'செபி' தடை விதித்துஉள்ளது. இந்த தடை உத்தரவை அமல்படுத்துமாறு, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், அவற்றின் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டு உள்ளன. சத்யம் குழுமம் எடுக்கும் முக்கிய முடிவுகளை, ராமலிங்க ராஜு, முன்கூட்டியே குடும்பத்தாருக்கு தெரிவித்து, பங்குகளை வாங்கி, அவற்றின் விலை உயர்ந்ததும் விற்று, கோடிக் கணக்கில் லாபம் ஈட்டியதாக, செபி குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 12,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |