Tamil News | Online Tamil News |
- சோனியா மீது பிரதமர் மோடி மறைமுக தாக்குதல்'ஹவாலா பாஸ்'
- இறைச்சி விற்பனைக்கு தடை விதித்ததற்கு...எதிர்ப்பு :
- சிறப்பு கூட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட ராகுல்
- பீகாரில் நிதிஷ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு!
- ரூ.2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகள்: முதல்வர் ஜெ., பெருமிதம்
- சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சட்டசபை தேர்தலுக்கான நாடகம்
- கருணாநிதி - அழகிரி சந்திப்பு நடக்காதது ஏன்?
- ராகுல் உத்தரவால் காங்., குழப்பம்
- கூடுதல் 'செக்யூரிட்டி டிபாசிட்' செலுத்தாத 1 லட்சம் மின் இணைப்பு துண்டிப்பு?
- டி.ஆர்.டி.ஓ.,வுக்கு முதல் பெண் டைரக்டர் ஜெனரல்
| சோனியா மீது பிரதமர் மோடி மறைமுக தாக்குதல்'ஹவாலா பாஸ்' Posted: போபால்:''கறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் கட்சியினர், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் பார்லிமென்டில் முட்டுக்கட்டை போடுகின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். காங்., தலைவர் சோனியாவை, 'ஹவாலா பாஸ்' என்றும் கடுமையாக விமர்சித்தார். மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த, பா.ஜ., கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:காங்., கட்சியினர், மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள்; ஆனால், எதற்காக தோற்கடிக்கப்பட்டோம் என்பதை, அவர்கள் இன்னும் உணரவில்லை. இதற்கு முன் நடந்த தேர்தலில், நாங்களும் தோல்வி ... |
| இறைச்சி விற்பனைக்கு தடை விதித்ததற்கு...எதிர்ப்பு : Posted: மும்பை:ஜெயின் சமூகத்தினரின் திருவிழாவையொட்டி, மும்பையில், சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு, சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மும்பையில் பல இடங்களில், இந்த கட்சியினர், சிக்கன் விற்பனை செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜெயின் சமூகத்தினர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆண்டுதோறும், 'பர்யுஷன் - உபவாசம்' எனப்படும் விரதம் இருப்பது வழக்கம். ... |
| சிறப்பு கூட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட ராகுல் Posted: பார்லிமென்ட்டின் சிறப்புக் கூட்டத்தை கூட்டும் மத்திய அரசின் முடிவுக்கு, காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலரும், இணக்கமாக இருந்துள்ளனர். ஆனால், காங்., துணைத் தலைவர் ராகுல் தான், பிடிவாதம் காட்டி, சிறப்புக் கூட்டத்தை நடத்தும் முடிவுக்கு, முட்டுக்கட்டை போட்டதாக தெரியவந்து உள்ளது.இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: மழைக்கால கூட்டத்தொடரின் போது, ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள், பலனளிக்காமல் போனது. காங்கிரசின் ஆதரவு இருந்தால் மட்டுமே, இம்மசோதாவை நிறைவேற்ற முடியும் என்பதால், மூத்த அமைச்சர்கள் பலரும், ... |
| பீகாரில் நிதிஷ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு! Posted: புதுடில்லி:'பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் - லாலு - காங்., கூட்டணி, 116லிருந்து, 132 தொகுதிகள் வரை, வெற்றி பெறும்' என, 'சென்டர் பார் வோட்டிங் ஒபீனியன் அண்டு டிரென்ட்ஸ் இன் எலக் ஷன் ரீசர்ச் மற்றும் சி - வோட்டர்' நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்து உள்ளது. 5 கட்டங்கள்: பீகாரில், 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், வரும் அக்., 12ம் தேதி துவங்கி, நவ., 5ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ... |
| ரூ.2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகள்: முதல்வர் ஜெ., பெருமிதம் Posted: சென்னை:''சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு, முதலீடுகள் வந்துள்ளன,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னையில், இரண்டு நாட்களாக நடந்த, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: திட்டங்களை கண்காணித்தேன்: 'தமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்' என, 2014 - 15 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. இம்மாநாடு நடத்த, கவனமாக திட்டமிடப்பட்டது; மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளும், எப்படி நடைபெற வேண்டும் என, ... |
| சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சட்டசபை தேர்தலுக்கான நாடகம் Posted: சென்னை:'முதலீட்டாளர்கள் மாநாடு, சட்டசபை தேர்தலுக்காக நடத்திய நாடகம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பது என, ஒரு பழமொழி உண்டு. அதைப்போல, நான்காண்டு காலமாக, நன்றாக துாங்கிவிட்டு, இப்போது திடீரென துாக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, முதலீடுகளை குவிக்கப் போவதாக அறிவித்து, ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில், 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு, வெறும், 5.64 சதவீதம் தான். இவ்வாறு புரிந்துணர்வு ... |
| கருணாநிதி - அழகிரி சந்திப்பு நடக்காதது ஏன்? Posted: 'முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, சட்டசபை தேர்தல் நேரத்தில், கட்சியில் சேர்த்தால் போதும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால், தற்போது அவரை சந்திக்காமல், தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நெருக்கமான வட்டாரங்கள்: கடந்த வாரம், தன் மனைவியுடன் ஆஸ்திரேலியா சென்ற அழகிரி, நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். 'இரு நாட்களாக, சென்னையில் தங்கியுள்ள அவர், கோபாலபுரம் வீட்டிற்கு சென்று, தந்தை கருணாநிதியை சந்திப்பார்; அனேகமாக இந்த சந்திப்பு, நேற்றே நடக்கலாம்' என, அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும், இருவரின் ... |
| ராகுல் உத்தரவால் காங்., குழப்பம் Posted: தமிழக காங்கிரசின், தி.மு.க., ஆதரவு போக்குக்கு, கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல், முட்டுக்கட்டை போட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. டில்லியில் அவரை சந்தித்த, தமிழக காங்., பிரமுகர்களிடம், 'தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய, இரு கட்சிகளையும், சம துாரத்தில் வையுங்கள்; இரு பக்கமும் சாய வேண்டாம்' என, அறிவுரை கூறியுள்ளார்.இதிலிருந்து, இந்த இரு கட்சிகள் அல்லாத கூட்டணியையே, ராகுல் விரும்புவது தெரியவந்து உள்ளதால், தமிழக காங்., தலைவர் இளங்கோவனும், அவரது ஆதரவு நிர்வாகிகளும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக காங்கிரசார் ... |
| கூடுதல் 'செக்யூரிட்டி டிபாசிட்' செலுத்தாத 1 லட்சம் மின் இணைப்பு துண்டிப்பு? Posted: தமிழகத்தில், ஒரு லட்சம் மின் நுகர்வோர், 'அடிஷனல் செக்யூரிட்டி டிபாசிட்' என, அழைக்கப்படும், கூடுதல் காப்பு வைப்பு தொகையை, மின் வாரியத்திற்கு செலுத்தவில்லை. அதனால், அவர்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காப்பு தொகை: தமிழ்நாடு மின் வாரியமானது, வீடுகளுக்கு புதிய மின் இணைப்பை வழங்கும் போது, மின் நுகர்வோரிடம் இருந்து, ஒரு முனை இணைப்பிற்கு, 200 ரூபாய்; மும்முனை இணைப்பிற்கு, 600 ரூபாய் என, காப்பு வைப்பு தொகை வசூலிக்கிறது. மின்சார பயன்பாட்டை பொறுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த காப்பு வைப்பு தொகையில் மாற்றம் ... |
| டி.ஆர்.டி.ஓ.,வுக்கு முதல் பெண் டைரக்டர் ஜெனரல் Posted:
பெங்களூரு : ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி.ஓ.,வின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட மஞ்சுளா, நேற்று முன்தினம்(09-09-15) பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம், இந்த பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 1962ம் ஆண்டு, ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் பிறந்த மஞ்சுளா, உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டம் பெற்று, 1987ல், டி.ஆர்.டி.ஓ., பணியில் சேர்ந்தார். ஐதராபாத்தில் உள்ள, ராணுவ மின்னணு ஆய்வகத்தில், 26 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய மஞ்சுளா, டிபன்ஸ் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 11,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |