Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


திருச்செந்தூர் கடலில் 423 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Posted: 19 Sep 2015 12:28 PM PDT

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட 423 விநாயகர் சிலைகள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.

புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 19 Sep 2015 12:21 PM PDT

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தூத்துக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இயற்கையை மீட்டுத் தரும் "ஆரோக்கியம்' கண்காட்சி: டாக்டர் கீதாலட்சுமி:கண்காட்சி இன்று நிறைவு

Posted: 19 Sep 2015 12:19 PM PDT

நகரவாசிகள் இழந்துவிட்ட இயற்கையை ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சி மீட்டுத் தருகிறது என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.

தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Posted: 19 Sep 2015 12:19 PM PDT

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிபாடு நடத்தப்பட்ட 22 விநாயகர் சிலைகள் சனிக்கிழமை கடற்கரைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் மோதல்:சிலை உடைப்பு, கடைகள் அடைப்பு, 5 பேர் காயம்

Posted: 19 Sep 2015 12:18 PM PDT

திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அறநிலையத் துறை ஆணையர் ஆய்வு

Posted: 19 Sep 2015 12:18 PM PDT

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில், இந்து அறநிலைய மற்றும் ஆட்சித் துறை ஆணையர் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

"கிரானைட் குவாரியில் எலும்புக்கூடுகள்:சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்'

Posted: 19 Sep 2015 12:18 PM PDT

மதுரையில் கிரானைட் குவாரியில் எடுக்கப்பட்டு வரும் எலும்புக்கூடுகள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 19 Sep 2015 12:17 PM PDT

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

களியக்காவிளை அருகே சாலையில் பாயும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

Posted: 19 Sep 2015 12:17 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள பி.பி.எம். சந்திப்பில் கழிவுநீரோடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பாய்ந்தோடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

"நமக்கு நாமே' பயணம் ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

Posted: 19 Sep 2015 12:17 PM PDT

"நமக்கு நாமே' பயணம் ஏன் என்பதற்கான விளக்கத்தை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். "நமக்கு நாமே' என்ற மீட்புப் பயணத்தை குமரியில் இருந்து அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறார். முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆகியோரை அவர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நரிக்குளம் முதல் முருகன்குன்றம் வரை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 19 Sep 2015 12:17 PM PDT

கன்னியாகுமரி நாற்கரசாலையில் நரிக்குளம் தொடங்கி, முருகன்குன்றம் வரையிலான பகுதியில் மேம்பாலம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சனிக்கிழமை நடைபெற்ற கொட்டாரம் வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

களியலில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 19 Sep 2015 12:17 PM PDT

குமரி மாவட்டம், களியலில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமாகா இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

Posted: 19 Sep 2015 12:16 PM PDT

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி தமாகா இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் ஆற்றூரில் நடைபெற்றது.

உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்:கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி

Posted: 19 Sep 2015 12:16 PM PDT

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி, தொந்தரவு அளித்தனர் என்று, அவரது தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி கூறினார்.

விஷ்ணுபிரியா தற்கொலைக்கு குடும்பப் பிரச்னை காரணமல்ல: தந்தை

Posted: 19 Sep 2015 12:15 PM PDT

விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்னை காரணமல்ல என்று அவரது தந்தை ரவி சனிக்கிழமை தெரிவித்தார்.

970 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 19 Sep 2015 12:15 PM PDT

மார்த்தாண்டம் அருகே 2 வேன்களில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 970 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய்யை தனிப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இரு முறை தற்கொலைக்கு முயற்சித்தார்

Posted: 19 Sep 2015 12:15 PM PDT

பணியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள விஷ்ணுபிரியா முயற்சித்தது அவர் எழுதிய கடிதத்தின் மூலம் தெரியவந்தது.

குமரி கடலில் திருவள்ளுவர் சிலை படகுத் தளம் சீரமைப்பு

Posted: 19 Sep 2015 12:14 PM PDT

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை படகுத்தளத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு தாற்காலிகமாக படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதிமுகவை நசுக்க திமுக முயற்சி:வைகோ புகார்

Posted: 19 Sep 2015 12:14 PM PDT

மதிமுகவை நசுக்க திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

Posted: 19 Sep 2015 12:14 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார்.

ரூ.150 கோடி மோசடி வழக்கு: பிரபல தொழிலதிபர் கைது

Posted: 19 Sep 2015 12:13 PM PDT

ரூ.150 கோடி மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்

Posted: 19 Sep 2015 12:13 PM PDT

அகரமுதலித் திட்ட இயக்ககம்: ஆவண எழுத்தர் உள்பட 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Sep 2015 12:13 PM PDT

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் ஆவண எழுத்தர் உள்பட இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இயக்ககத்தின் இயக்குநர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குமரி மாவட்டத்தில் 29 முதல் முகாம் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு

Posted: 19 Sep 2015 12:12 PM PDT

குமரி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வசதியாக 29 ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு குறைகளைக் கேட்க முகாம் நடைபெறுகிறது.

பி.எட். சேர்க்கை:கட்-ஆஃப் வெளியீடு:இன்று தரவரிசைப் பட்டியல்?

Posted: 19 Sep 2015 12:12 PM PDT

பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் விவரத்தை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொல்லங்கோடு அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்; 2 பேர் கைது

Posted: 19 Sep 2015 12:12 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு மணல் கடத்த முயன்ற லாரியை பறிமுதல் செய்த போலீஸார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ரூ. 1.24 கோடி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 19 Sep 2015 12:11 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.24 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்: குமரி அதிமுகவினருக்கு மாவட்டச் செயலர் அழைப்பு

Posted: 19 Sep 2015 12:10 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தும் முகாம்களில் அதிமுகவினர் தவறாமல் பங்கேற்று, தகுதியான அனைவரையும் பட்டியலில் சேர்க்குமாறு கட்சியின் மாவட்டச் செயலர் என். தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தலைநகரில் மழை: டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Posted: 19 Sep 2015 12:10 PM PDT

தில்லியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் கூறியதாவது:

துடரி - துடரிப்பழம்

Posted: 19 Sep 2015 12:09 PM PDT

சங்க இலக்கியங்களில் எண்ணற்ற பழவகைகள் கூறப்பட்டாலும் "துடரி' என்னும் பழம் பற்றிய தெளிவு தற்போது தேவையாகிறது. புறநானூற்றுப் பாடலில் அப்பழம் பற்றிய குறிப்பு உள்ளது.

நினைவுக்கலை ஏந்தல் "திருக்குறள்' இராமையா!

Posted: 19 Sep 2015 12:08 PM PDT

"நினைவுக்கலை ஏந்தல்', "பதின் கவனகர்' (தசாவதானி) என்றெல்லாம் போற்றப்படும் திருக்குறள் பெ. இராமையாவைத் தமிழ்கூறு நல்லுலகம் தவப் புதல்வனாகப் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

தோழியின் ஊடல்...

Posted: 19 Sep 2015 12:08 PM PDT

தமிழில் அன்பின் இணையரிடம் ஏற்படும் சிறு பிணக்கு ஊடல் எனப்படும். அன்பினருக்குள் ஏற்படும் இந்த ஊடல் மேலும் அன்பினை மிகுவிக்கக்கூடியது. சங்ககால களவு வாழ்க்கையில் தலைவன்-தலைவி இருவரும் சந்திப்பதற்குக் குறியிட்ட இடத்துக்கு காதலி வரத் தவறியபோது

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 19 Sep 2015 12:07 PM PDT

இந்தவாரம் கலாரசிகன்

சொல் தேடல் -26

Posted: 19 Sep 2015 12:06 PM PDT

முன்னாளில் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குபவரை, விழா ஏற்பாட்டாளர் தலைமை ஏற்க முன்மொழியப் பிறிதொருவர் வழிமொழிவார். தலைமையுரை நிகழும். தொடர்ந்து தலைவரே பங்குபெறுவோர்களை அறிமுகப்படுத்த, அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். பிறகு தலைவரின் முடிவுரை நிகழும். விழா நடத்துபவர் நன்றியுரை கூறி முடிப்பார்.

நிலுவை வழக்குகள் குறித்த விவரங்களை அறிய புதிய இணையதளம் தொடக்கம்

Posted: 19 Sep 2015 12:01 PM PDT

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் குறித்து அறிவதற்காக, புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தல்:அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு

Posted: 19 Sep 2015 12:01 PM PDT

புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் என். கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது. 4 சுயேச்சைகளின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒப்பந்தமின்றி ரூ.13,000 கோடியில் ஆதார் அட்டைப் பணிகள்:காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டது அம்பலம்

Posted: 19 Sep 2015 12:00 PM PDT

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான, ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் எதுவும் கோராமல், அந்தப் பணிகளை பெருநிறுவனங்களுக்கு அளித்துள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது.

இந்திய - அமெரிக்க தொழிலதிபர்களிடையே உரையாற்றுகிறார் மோடி

Posted: 19 Sep 2015 11:59 AM PDT

அமெரிக்க - இந்திய தொழிலதிபர்கள் இடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் நிகழ்ச்சி இந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தம்:மாநிலம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்

Posted: 19 Sep 2015 11:59 AM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) நடைபெறுகிறது.

வாசன் குழுமத்துக்கு 28 கேள்விகள்

Posted: 19 Sep 2015 11:54 AM PDT

"ப.சிதம்பரமும் ரூ.223 கோடி கருப்புப் பணப் பரிவர்த்தனையும்" என்ற தலைப்பில் கடந்த 17-ஆம் தேதி தினமணியில் வெளியான கட்டுரை தொடர்பாக சுட்டுரை தளத்தை அலசியபோது வாசன் குழுமம் இது தொடர்பான தனது நிறுவனத்தின் வர்த்தக முகநூலில் "அனைவரின்

இந்தியாவின் வளர்ச்சிக்கு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம்:நிஷா தேசாய் பிஸ்வால்

Posted: 19 Sep 2015 11:51 AM PDT

"இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்' என்று அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுத் துறை இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறினார்.

மத மோதல்கள் நடைபெற்றால் ஆட்சியர்கள், எஸ்.பி.க்களே பொறுப்பு:அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை

Posted: 19 Sep 2015 11:51 AM PDT

உத்தரப் பிரதேசத்தில், மத மோதல் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றால், அதற்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர்களே நேரடிப் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்தார்.

உலகப் பொருளாதாரச் சரிவு இந்தியாவை பாதிக்கவில்லை

Posted: 19 Sep 2015 11:50 AM PDT

"சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும், அது, இந்தியாவை பாதிக்கவில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

பாகிஸ்தானுடன் காஷ்மீர் ஒருபோதும் இணையாது

Posted: 19 Sep 2015 11:49 AM PDT

பாகிஸ்தானின் அங்கமாக காஷ்மீர் ஒருபோதும் ஆகாது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்புராம்விலாஸ் பாஸ்வானின் மருமகன் போர்க்கொடி

Posted: 19 Sep 2015 11:47 AM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் மருமகன் அனில்குமார் சாது போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

காஷ்மீர்: முன்னாள் பயங்கரவாதி உள்ளிட்ட 3 பேர் சுட்டுக் கொலை

Posted: 19 Sep 2015 11:47 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பயங்கரவாதி, அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிராந்திய பிரச்னைகளில் இந்தியா தலையிடாது:ஹமீது அன்சாரி

Posted: 19 Sep 2015 11:46 AM PDT

"தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம் பெற்றுள்ள நாடுகளுடன் ஒருங்கிணைந்த நட்புறவை வளர்க்கவே இந்தியா விரும்புகிறது; அந்த நாடுகளின் பிராந்திய அல்லது கடல்சார் பிரச்னைகளில் இந்தியா தலையிடாது' என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

தொடரை வெல்லப் போவது யார்? கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய - வங்கதேச "ஏ' அணிகள் இன்று மோதல்

Posted: 19 Sep 2015 11:45 AM PDT

இந்திய - வங்கதேச "ஏ' அணிகளிடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பயஸ் - போபண்ணா ஜோடி தோல்வி

Posted: 19 Sep 2015 11:44 AM PDT

செக் குடியரசு அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வியைத் தழுவியதால் இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

தேசிய ஓபன் தடகளப் போட்டி:200 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் டூட்டி சந்த்

Posted: 19 Sep 2015 11:43 AM PDT

தேசிய ஓபன் தடகளப் போட்டியின் 200 மீ. ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் ரயில்வே அணி வீராங்கனை டூட்டி சந்த். இதன் மூலம் இப்போட்டியில் அவரது தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

கொரிய ஓபன் பாட்மிண்டன்:இறுதிச் சுற்றில் அஜய் ஜெயராம்

Posted: 19 Sep 2015 11:42 AM PDT

கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் அஜய் ஜெயராம் முன்னேறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று தேர்வு?

Posted: 19 Sep 2015 11:42 AM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கால்பந்து தகுதிச் சுற்று :ஈரானிடம் இந்தியா தோல்வி

Posted: 19 Sep 2015 11:41 AM PDT

பதினாறு வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றில் ஈரானிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.

வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களுக்கு பாதுகாப்பு: ஓலா கால் டாக்ஸி புதியத் திட்டம்

Posted: 19 Sep 2015 11:40 AM PDT

வாடிக்கையாளரின் தொலைபேசி எண்களை, ஓட்டுநர்களிடமிருந்து மறைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் திட்டத்தை ஓலா கால் டாக்ஸி அறிமுகம் செய்துள்ளது.

ரான்பாக்ஸியின் இரு பிரிவுகளை விற்க சன் ஃபார்மா திட்டம்

Posted: 19 Sep 2015 11:40 AM PDT

சன் ஃபார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்தியாவிலுள்ள தனது ரான்பாக்ஸி நிறுவனத்தின் இரு பிரிவுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

சர்க்கரை, கிரீம் பொட்டலங்களை தயாரிக்க ரயில்வே முடிவு

Posted: 19 Sep 2015 11:39 AM PDT

"இந்திய ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்' (ஐஆர்சிடிசி) ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் வழங்கும் உணவுடன் சேர்க்கப்படும் சர்க்கரை, கிரீம் ஆகிய

வாராக் கடனுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு: ஐடிஎஃப்சி-க்கு அனுமதி

Posted: 19 Sep 2015 11:39 AM PDT

இந்தியாவின் கட்டுமானத் தொழில் நிதி நிறுவனமான ஐடிஎஃப்சி, தனது மாற்ற இயலா இருப்புத் தொகையிலிருந்து ரூ.2,500 கோடி ரூபாயை வாராக் கடன் நிதி ஒதுக்கீடுக்கு மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்ட மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted: 19 Sep 2015 11:38 AM PDT

எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானியப் படையினர் வெளிநாடுகளிலும் போர் புரிவதற்கு வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில்

மனித உரிமைகளைக் காப்பதில் இலங்கை அரசு உறுதி:அமெரிக்க அமைச்சர்

Posted: 19 Sep 2015 11:37 AM PDT

மனித உரிமைகளைக் காப்பதில் இலங்கை அரசு வலுவான நோக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

துபாய் மன்னரின் மகன் மாரடைப்பால் மரணம்

Posted: 19 Sep 2015 11:37 AM PDT

துபாய் மன்னரின் மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமது (33) சனிக்கிழமை காலமானார்.

ஏவுகணை வீச்சு எதிரொலி:காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்

Posted: 19 Sep 2015 11:36 AM PDT

இஸ்ரேல் மீது பாலஸ்தீனப் பயங்கரவாதிகள் இரு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தினர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய விமானங்கள் காஸா பகுதியில் குண்டுகள் விசித் தாக்கின்.

தெற்கு சூடான் எண்ணெய் லாரி வெடிவிபத்து :பலி எண்ணிக்கை 193-ஆக உயர்வு

Posted: 19 Sep 2015 11:35 AM PDT

தெற்கு சூடான் நாட்டில் நேரிட்ட எண்ணெய் லாரி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193-ஆக உயர்ந்தது.

சிரியாவில் 45 அரசுப் படையினர் அல்-காய்தாவால் படுகொலை

Posted: 19 Sep 2015 11:35 AM PDT

சிரியாவில் அரசுப் படையைச் சேர்ந்த 45 போர்க் கைதிகளை அல்-காய்தா பயங்கரவாதிகள் படுகொலை செய்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமை தெரிவித்தது.

நேபாளத்தின் அரசியல் சாசனப் பிரகடனம் மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும்:வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்

Posted: 19 Sep 2015 11:35 AM PDT

""நேபாளத்தின் புதிய அரசியல்மைப்பு சாசனப் பிரகடனமானது, மகிழ்ச்சியான தருணமாகத் திகழ வேண்டும்'' என்று வெளியுறவுத்துறை செயலர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் விமான தளத் தாக்குதல்: 28 பேர் கைது

Posted: 19 Sep 2015 11:35 AM PDT

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், விமானப் படைக்குச் சொந்தமான விமான தளத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக 28 பேரை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்தனர்.

தொல்லியல் - அருங்காட்சியகத் துறையின் 9 நூல்கள்:முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

தொல்லியல் -அருங்காட்சியகத் துறையின் சார்பில் ஒன்பது புதிய நூல்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதை வெளியிட்டார்.

விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

இந்து முன்னணி சார்பில்,  விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 33 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

மாவட்ட தடகளப் போட்டி: விடிஎஸ் ஜெயின் பள்ளி சாம்பியன்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

பள்ளத்தில் விழுந்த பசு மீட்பு

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

செங்கத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

வந்தவாசி ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அம்மையப்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

124 மாணவர்கள் ரத்ததானம்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் கல்லூரி மாணவர்கள் 124 பேர் ரத்த தானம் செய்தனர்.

தொண்டு மையத்தில் திருக்குறள் எழுதும் விழா

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தில் திருக்குறள் எழுதும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாஜக ஆலோசனைக் கூட்டம்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

போளூர், சேத்துப்பட்டு ஒன்றிய பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் போளூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

செய்யாறை அடுத்த அருகாவூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா தகராறு: டி.ஆர்.ஓ.விடம் இரு தரப்பினர் மனு

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

திருவண்ணாமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சனிக்கிழமை இரு தரப்பினர் மாவட்ட வருவாய் அலுவலர் சா. பழனியிடம் மனு கொடுத்தனர்.

அதிக மதிப்பெண் பெறும் அரசுப் பள்ளிகளுக்கு பரிசு: அமைச்சர் பேச்சு

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளியின் ஆசிரியர்களுக்கு 5 பவுன் தங்க நகை பரிசாக அளிக்கப்படும் என்று தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கார்கள் மோதல்: வியாபாரி சாவு

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் புறவழிச் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தோல் வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தார்.

மனைவி கொலை: கணவர் கைது

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

உருட்டுக் கட்டையால் அடித்து மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் மாநகரில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டில் அதிமுக பொதுக் கூட்டம்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

ஆற்காடு நகர அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2 மாதக் குழந்தைக்கு ரத்தக் குழாய் குறைபாடு அறுவைச் சிகிச்சை: மருத்துவக் கல்லூரி டீன் தகவல்

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

பிறந்து 2 மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாயில் காணப்பட்ட குறைபாடு அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் செல்வராஜ் தெரிவித்தார்.

தவறி விழுந்து சிறுவன் சாவு

Posted: 19 Sep 2015 11:33 AM PDT

செய்யாறு அருகே லாரியில் ஏறி விளையாடியபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தலைமை ஆசிரியர்- ஊராட்சித் தலைவர் மோதல்: விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா ரத்து

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

வாணியம்பாடி அருகே தலைமை ஆசிரியருக்கும், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மாணவர்களுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கும் அரசு விழா ரத்து செய்யப்பட்டது.

பெருமாள் கோயிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் திருவள்ளுவர் நகர் ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயக சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க பாமக வலியுறுத்தல்

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என  வேலூர் கிழக்கு மாவட்ட பாமக வலியுறுத்தியது.

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

ஆம்பூர் நகர அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கஸ்பா-பி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு முகாம்

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: அரசுகளுக்கு விஐடி வேந்தர் வலியுறுத்தல்

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

கல்விக்கு அதிக நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

தொடர்ந்து 5 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே: அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பேச்சு

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

தேர்தலின்போது அறிவித்தப்படி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வரும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என தக்கோலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார்.

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

ராணிப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

தீப் பிடித்து எரிந்து கார் நாசம்

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

நாட்டறம்பள்ளி அருகே கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சூதாட்டம்: 3 இளைஞர்கள் கைது

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

திருவண்ணாமலை அருகே பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

நடத்துநர் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

ஆரணியை அடுத்த மேல்நகர் கிராமத்தில் தனியார் பேருந்தின் நடத்துநர் வீட்டில் நுழைந்து 10 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

வாக்குச்சாவடி திமுக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் வாக்குச் சாவடி முகவர்களுக்கான  ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மைய நூலகத்தில் புரவலர் சேர்ப்பு

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை புரவலர் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலியல் புகார் நடவடிக்கையில் மெத்தனம்: ஆய்வாளர் உள்பட 4 பேருக்கு கட்டாய ஓய்வு

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

வேலூர் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் மெத்தனம் காட்டியதாக காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இரு தலைமைக் காவலர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த எம்எல்ஏ கோரிக்கை

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

வேலூர் மாநகராட்சியில் சேரும் குப்பைகளுக்குத் தீர்வாக திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். குப்பை கொட்ட மாற்று இடங்களை தேர்வு செய்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும் என மாவட்ட ஆட்சியரிடம் அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு கோரிக்கை மனு கொடுத்தார்.

அரசுப் பேருந்து மோதியதில் ரேஷன் கடை ஊழியர் சாவு

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

வேலூரில் அரசுப் பேருந்து மோதியதில் நியாய விலைக் கடை ஊழியர் உயிரிழந்தார்.

கோஷ்டி மோதல்: 23 பேர் கைது

Posted: 19 Sep 2015 11:32 AM PDT

கே.வி.குப்பம் அருகே இரு கோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நாளில் அன்று - (20.09.1994) - குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் 6 ஆண்டுகளில் போக்கப்படும் - மத்திய அரசு தகவல்

Posted: 19 Sep 2015 11:30 AM PDT

உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் முறையை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது இன்னும் 6 ஆண்டுகளுக்குள் போக்குவதற்காக ரூ.850 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™