Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சொத்துபட்டியல் வெளியீடு: சந்திரபாபு நாயுடு மீது லட்சுமி பார்வதி தாக்கு

Posted: 28 Sep 2015 10:53 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த 5 ஆண்டுகளாக தனது சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டு சொத்து விவரங்களை அவரது மகன் லோகேஷ் வெளியிட்டார். அதில், தங்கள் குடும்பத்தின் மொத்த சொத்து ரூ.61.25 கோடி எனவும் இதில் கடன் ரூ.15.30 கோடிபோக ரூ.45.95 கோடி இருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் மோடி நவம்பரில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்: துருக்கியில் ஜி–20 மாநாட்டில் பங்கேற்கிறார்

Posted: 28 Sep 2015 10:18 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்தது. இன்று அவர் நாடு திரும்புகிறார். அடுத்த மாதம் (அக்டோபர்) முழுவதும் பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்தவுள்ளார். அவர் பீகாரில் சுமார் 20

சந்திரகிரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் தம்பதி தற்கொலை

Posted: 28 Sep 2015 10:13 PM PDT

ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம் தொண்டவாடா எஸ்.டி.காலனி பகுதியை சேர்ந்தவர் உஜ்ஜய்யா மகன் கவி (வயது22). இவருக்கு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா(18) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். கணவன்–மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். திருமணமாகி 4 ஆண்டுகள்

கேரள தலைமை செயலகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை - பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் தடியடி

Posted: 28 Sep 2015 10:09 PM PDT

கேரளாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாகவும், இதைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்தது.

ஆந்திராவில் டெங்கு காய்ச்சலால் 17 ஆயிரம் பேர் பாதிப்பு

Posted: 28 Sep 2015 09:59 PM PDT

ஆந்திராவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கர்னூல், சித்தூர், விசாகப்பட்டினம், கடப்பா ஆகிய மாவட்டங்களில்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. தினமும் 15 முதல் 20 பேர் வரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன்

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி - 78 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Posted: 28 Sep 2015 09:52 PM PDT

திருப்பதி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி வசூலானது. நேற்று காலை முதல் இன்று காலை வரை 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் தினந்தோறும்

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் கர்நாடகம் அறிவிப்பு

Posted: 28 Sep 2015 08:40 PM PDT

காவிரி கண்காணிப்பு குழுவின் 5-வது கூட்டம் அதன் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான சசிசேகர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவரும்,

இந்தியாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை

Posted: 28 Sep 2015 08:26 PM PDT

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு அண்மையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லஸ்கர் இ-தொய்பா, ஜெஷ் இ-முகமது, ஸ்புல் முஜாகிதீன் மற்றும் பாபர் கல்சா சர்வதேச குழு, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை ஆகியவற்றின் தலைவர்களை ஒன்றாக கூட்டி ஆலோசனை நடத்தியதாக மத்திய புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம்: பாரதீய ஜனதா புகாருக்கு காங்கிரஸ் பதிலடி

Posted: 28 Sep 2015 08:09 PM PDT

பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் அமெரிக்கா சென்று விட்டது பற்றி பாரதீய ஜனதா விமர்சித்து இருந்தது. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்வதை

தேர்தல் சின்னத்துடன் செல்பி: மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted: 28 Sep 2015 07:32 PM PDT

பாராளுமன்ற தேர்தலின் போது, குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்களித்த மோடி, வாக்குச்சாவடிக்கு அருகே பா.ஜனதாவின் தேர்தல் சின்னமான தாமரையுடன் செல்பி எடுத்துக்கொண்டார். தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட அவர் மீது வழக்கு தொடருமாறு, மாநில அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

அன்புள்ள அம்மாவுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கும் செல்லமகள்: வீடியோ

Posted: 28 Sep 2015 05:28 PM PDT

அம்மா-மகன் அளவுக்கு சமூகத்தால் சரிவர புரிந்து கொள்ளப்படாத உறவாகவே அம்மா-மகள் உறவு இருந்து வருகிறது. அற்புதங்கள் நிரம்பிய அனைத்து உறவுகளையும் போலவே இந்த உறவும் தன்னிகரற்றது. மனித உறவுகள், அது கொடுக்கும் உணர்வுகள், வயதான பின் மீண்டும் குழந்தையாக மாறும் பெற்றோர், இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும்,

மேற்கு வங்கத்தில் மேலும் 4 பேர் பலி: கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Posted: 28 Sep 2015 05:19 PM PDT

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் பலியானதையடுத்து, கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மிருகங்களை பலியிடுவதை தடை செய்ய கோரி மனு: விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 28 Sep 2015 02:55 PM PDT

மிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்கள் மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வி.ராதாகிருஷ்ணன் என்பவர் மதரீதியான பண்டிகைகளில் மிருகங்களை பலியிடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று வரையறுக்கும் மிருகவதை தடை சட்டத்தின் பிரிவு 28-ஐ நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கேரளாவில் வங்கியில் ரூ.7½ கோடி நகைகள் கொள்ளை

Posted: 28 Sep 2015 01:41 PM PDT

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், காஞ்சங்காட்டை அடுத்த செறுவத்தூர் பஸ் நிலையம் அருகே ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் ஒரு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததாக

பதறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சோம்நாத் பார்தி

Posted: 28 Sep 2015 10:34 AM PDT

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி மாநில அரசில் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பார்தி. தற்போது எம்.எல்.ஏ. ஆக உள்ளார். தன்னை கடந்த 5 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருவதாக சோம்நாத் பார்தி மீது அவருடைய மனைவி லிபிகா டெல்லி மகளிர் ஆணையத்திலும், போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன் பேரில் சோம்நாத் பார்தி மீது

அப்துல் கலாமின் பேரன் பா.ஜனதாவில் சேர்ந்தார்

Posted: 28 Sep 2015 08:35 AM PDT

மக்களின் ஜனாதிபதி, மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் அண்ணன் வழிப் பேரன் ஏ.பி.ஜே. ஷேக் சலீம் இன்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து அவர் முன்னிலையில் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார். இதுகுறித்து சலீம் கூறுகையில், "கடந்த ஆண்டே பா.ஜனதாவில் சேர

காங்கிரசின் பலவீனத்தை பயன்படுத்தி உயர் அமைப்புகளை கட்டுப்படுத்திய கம்யூனிஸ்ட்: வெங்கையா தாக்கு

Posted: 28 Sep 2015 07:38 AM PDT

காங்கிரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி உயர் அமைப்புகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக வெங்கையா நாயுடு குற்றம் சாட்டினார். மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, முன்னணி நிறுவனங்களுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற நபர்களை மத்திய அரசு நியமித்து வருவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து வெங்கையா நாயுடு கூறியதாவது:-

அசாமில் 200 பேருடன் சென்ற விசைப்படகு கவிழ்ந்தது: மீட்பு பணிகள் தீவிரம்

Posted: 28 Sep 2015 07:20 AM PDT

அசாமின் காம்ரூப் மாவட்டத்தில் சுமார் 200 பேருடன் சென்ற விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. கோலோஹி ஆற்றில் நடந்த படகுப் போட்டியில் பங்கேற்பதற்காக சேகான் என்ற இடத்தில் இருந்து சாம்புபாரா என்ற இடத்திற்கு இன்று பிற்பகல் ஒரு விசைப்படகு சென்று கொண்டிருந்தது. அந்த விசைப்படகில் 150 முதல் 200 பயணிகள் வரை இருந்திருக்கலாம் என தெரிகிறது.

பங்குச்சந்தைகள் சரிவு: சென்செக்ஸ் 247 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 28 Sep 2015 06:30 AM PDT

மும்பை பங்குச்சந்தையில் வாரத்தின் துவக்க நாளான இன்று சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது. ரிசர்வ் வங்கி நாளை வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பினால் முதலீட்டாளர்கள் இன்று பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். இதுதவிர ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் மந்தநிலை, ஆசிய சந்தைகளில் ஏற்ற இறக்கம் ஆகியவையும் இந்திய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இஸ்ரோவின் விண்வெளி சாதனை: பிரதமர் - முதல் அமைச்சர்கள் வாழ்த்து

Posted: 28 Sep 2015 05:00 AM PDT

விண்வெளியில் உள்ள புறஊதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 'அஸ்ட்ரோசாட்' என்ற செயற்கைக்கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™