மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இறந்ததாக கருதி அடக்கம் செய்ய முயன்றபோது உயிர் பிழைத்த 101 வயது பாட்டி: 2 நாள் கழித்து இறந்த பரிதாபம்
- டெல்லியில் 2 நேபாள பெண்களை கற்பழித்ததாக சவுதி அரேபிய தூதர்கள் மீது வழக்கு பதிவு
- திருப்பதி கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கல்யாண ரதம் காணிக்கை: மும்பை பக்தர்கள் கொடுத்தனர்
- ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க ரூ.2.5 லட்சம் லஞ்சம்: கையும் கரன்சியுமாக சுங்கத்துறை பெண் சூப்பிரண்ட் கைது
- டாக்டர்கள் அஜாக்கிரதை: அதிக ரத்தப்போக்கினால் பிரசவித்த பெண் சாவு - நர்சிங் ஹோமை சூறையாடிய உறவினர்கள்
- தேவேந்திர பட்னாவிஸ் ஜப்பான் பயணம்
- கோலாரில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலைகள் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு: சித்தராமையா பேச்சு
- இந்தியாவில் சிறுத்தைகள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் கர்நாடகத்துக்கு 2-ம் இடம்
- திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர்களை இயக்க ஏற்பாடு
- வேலை வாய்ப்பு உருவாக்கும் துறைகளில் துணிச்சலுடன் முதலீடு செய்யுங்கள்: தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வருக்கு அடி-உதை
- மும்பை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து வேறு பொறுப்புக்கு ராகேஷ் மரியா அதிரடி மாற்றம்
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வருக்கு அடி-உதை
- ரூ.425 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கிய பிர்லா
- அவரது குழந்தையை நானே வளர்ப்பேன்: வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைதான என்ஜினீயரின் முன்னாள் காதலி உருக்கம்
- விபசார விடுதி நடத்துகிறார்: பெண் சாமியார் ராதேமா மீது மாடல் அழகி பரபரப்பு புகார்
- ஒடிசாவில் 150 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் போலீசில் சரண்
- உங்க கார்டூனெல்லாம் யார் பாக்குறான்னு கம்பெனி கல்தா குடுக்க, வெளியே வந்த கார்டூனிஸ்ட் செய்த கலக்கல் வேலை
- 16 மாநிலங்களில் இடஒதுக்கீட்டு போராட்டம்: ஹார்திக் பட்டேல் அறிவிப்பு
- பூரியில் கைப்பற்றப்பட்ட 27 மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைப்பு
| இறந்ததாக கருதி அடக்கம் செய்ய முயன்றபோது உயிர் பிழைத்த 101 வயது பாட்டி: 2 நாள் கழித்து இறந்த பரிதாபம் Posted: 08 Sep 2015 10:32 PM PDT ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் மர்ரியூடி பஜார் தெருவைச் சேர்ந்த 101 வயது பாட்டி ரோசம்மா. இவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். கடைசி மகள் வெங்கம்மாவின் வீட்டில் ரோசம்மா வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக ரோசம்மா உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். கடந்த 6–ந்தேதி ரோசம்மா மூச்சு பேச்சில்லாமல் படுத்த படுக்கையானார். இதையடுத்து அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். |
| டெல்லியில் 2 நேபாள பெண்களை கற்பழித்ததாக சவுதி அரேபிய தூதர்கள் மீது வழக்கு பதிவு Posted: 08 Sep 2015 10:15 PM PDT டெல்லி வசந்த விகார் பகுதியில் சவுதி அரேபியா தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றும் முதன்மை தூதரும், மற்றொரு தூதரும் 2 நேபாள பெண்களை விலைக்கு வாங்கி 3 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. |
| திருப்பதி கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கல்யாண ரதம் காணிக்கை: மும்பை பக்தர்கள் கொடுத்தனர் Posted: 08 Sep 2015 09:45 PM PDT மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆர்.கே.ஷெட்டி, டி.பி.முத்து, இவர்கள் இருவரும் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்கள். இவர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு கல்யாண ரதம் காணிக்கையாக வழங்கினார்கள். இந்த கல்யாண ரதம் பஸ்சின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். |
| Posted: 08 Sep 2015 08:42 PM PDT ஏற்றுமதியாளரின் சரக்குக்கு அனுமதி அளிக்க இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விமான நிலைய சுங்கத்துறை பெண் சூப்பிரண்ட்டை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் கரன்சியுமாக கைது செய்தனர். |
| டாக்டர்கள் அஜாக்கிரதை: அதிக ரத்தப்போக்கினால் பிரசவித்த பெண் சாவு - நர்சிங் ஹோமை சூறையாடிய உறவினர்கள் Posted: 08 Sep 2015 08:31 PM PDT பிரசவத்துக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பெண் அதிகமான ரத்தப்போக்கினால் உயிரிழந்ததையடுத்து, பலியான பெண்ணின் உறவினர்கள் அந்த ஆஸ்பத்திரியை அடித்து, நொறுக்கி, சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| தேவேந்திர பட்னாவிஸ் ஜப்பான் பயணம் Posted: 08 Sep 2015 08:07 PM PDT முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். அவருடன் சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே மற்றும் மராட்டிய சுற்றுலா மேம்பாட்டு கழகம், மராட்டிய தொழில் மேம்பாட்டு |
| கோலாரில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலைகள் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு: சித்தராமையா பேச்சு Posted: 08 Sep 2015 08:03 PM PDT கோலார் தாலுகா வேம்கல் பகுதியில் சுமார் 700 ஏக்கர் நிலப்பரப்பில் கர்நாடக அரசு புதிய தொழிற்பேட்டையை அமைத்துள்ளது. அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கோலார் மாவட்ட கலெக்டர் திரிலோக் சந்திரா தலைமை தாங்கினார். கோலார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.எச்.முனியப்பா முன்னிலை வகித்தார். |
| இந்தியாவில் சிறுத்தைகள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் கர்நாடகத்துக்கு 2-ம் இடம் Posted: 08 Sep 2015 08:02 PM PDT இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் மூலமும், உயிரினங்களின் கால்தடம் மற்றும் அவற்றின் கழிவுகள் ஆகியவை மூலமும் கணக்கெடுப்பு |
| Posted: 08 Sep 2015 07:58 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசு சுற்றுலாத்துறையும் இணைந்து 16-ந் தேதி முதல் 3 ஹெலிகாப்டர்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை சேர்ந்த சித்தூர் மாவட்ட அதிகாரி டி.வி.சந்திரமவுலி கூறியிருப்பதாவது:- |
| Posted: 08 Sep 2015 07:22 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில், நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி, ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா, |
| மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வருக்கு அடி-உதை Posted: 08 Sep 2015 07:12 PM PDT கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் தனியார் கலைக்கல்லூரி ஒன்று உள்ளது. அதன் முதல்வராக பணியாற்றும் ஆனந்த் என்பவர், கடந்த 3-ந் தேதி மாணவ-மாணவிகளை கோவாவுக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு ஆனந்த் மது போதையில், மாணவிகளுக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. |
| மும்பை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து வேறு பொறுப்புக்கு ராகேஷ் மரியா அதிரடி மாற்றம் Posted: 08 Sep 2015 05:07 PM PDT மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து ராகேஷ் மரியா(58) திடீரென மாற்றப்பட்டு இந்திய துணை ராணுவ படையின் மும்பை பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், துணை ராணுவ படையின் மும்பை பொது இயக்குநராக பதவி வகித்து வந்த அதிகாரியான அகமது ஜவேத் மும்பை மாநகரின் புதிய |
| மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வருக்கு அடி-உதை Posted: 08 Sep 2015 04:37 PM PDT கோவாவுக்கு சுற்றுலா அழைத்து சென்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வரை, பெற்றோர்களும், மாணவர்களும் அடித்து உதைத்தனர். கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் தனியார் கலைக்கல்லூரி ஒன்று உள்ளது. அதன் முதல்வராக பணியாற்றும் ஆனந்த் என்பவர், கடந்த 3-ந் தேதி மாணவ-மாணவிகளை கோவாவுக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு ஆனந்த் மது போதையில், மாணவிகளுக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. |
| ரூ.425 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கிய பிர்லா Posted: 08 Sep 2015 04:15 PM PDT மும்பையின் பிளஷ் மலபார்ஹில் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜாடியா இல்லத்தை தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா ரூ.425 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இதுகுறித்து இந்தக் கட்டட விற்பனையில் முக்கியப் பங்காற்றிய ஜே.எல்.எல் என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "25,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஜாடியா இல்லத்தை ரூ.425 கோடிக்கு பிர்லா வாங்கியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 08 Sep 2015 03:11 PM PDT எனக்காகவே கோகுல் குற்றங்களை செய்து உள்ளார். அதற்கு கைமாறாக அவரது குழந்தையை என் குழந்தைபோல் வளர்ப்பேன் என்று கோகுலின் நண்பரின் மனைவியும் முன்னாள் காதலியுமான ஷாலினி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிற்கு கடந்த 5-ந்தேதி அதிகாலை விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக 'வாட்ஸ் அப்' மற்றும் செல்போன் வழியாக மிரட்டல் வந்தது. |
| விபசார விடுதி நடத்துகிறார்: பெண் சாமியார் ராதேமா மீது மாடல் அழகி பரபரப்பு புகார் Posted: 08 Sep 2015 01:56 PM PDT மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்த பெண் சாமியார் ராதேமா மீது சமீபத்தில் 32 வயது பெண் ஒருவர் போலீசில் வரதட்சணை புகார் தெரிவித்தார். அதில் ராதேமா தன்னுடைய கணவர் வீட்டாரை தூண்டி தன்னை வரதட்சணை கொடுமைக்கு உட்படுத்துவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தவிர, ராதேமாவின் சீடர் ஒருவருடன் தன்னை உடலுறவு கொள்ள வற்புறுத்துவதாக மற்றொரு நடிகையும் குற்றம் சுமத்தினார். இந்த சம்பவம் |
| ஒடிசாவில் 150 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் போலீசில் சரண் Posted: 08 Sep 2015 12:18 PM PDT ஒடிசா மாநிலத்தின் மல்கங்கிரி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர்கள், 2 கிராம கமிட்டி உறுப்பினர்கள் உட்பட 150 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் போலீசாரிடம் நேற்று சரணடைந்தனர். ஒரு பக்கம் மலைவாழ் மக்களையும், ஏழைகளையும் நக்ஸலைட்டுகள் கொடுமைப்படுத்துகின்றனர். ஒன்றுமறியாத மக்களை "போலீஸாருக்குத் |
| Posted: 08 Sep 2015 10:33 AM PDT எல்லாருக்குமே வாழ்க்கைல ஒரு கட்டம் வரும். அடுத்து என்ன பண்ணப் போறோங்குறத முடிவு பண்ண வேண்டிய இக்கட்டான கட்டம். இதப் பண்னு அதப் பண்ணுனு அட்வைஸ் குவியுற அந்த கட்டத்துல நம்ம எடுக்குற முடிவுதான் நம்ம வாழ்க்கையையே மாத்துறதா இருக்கும். இந்த மாதிரியான ஒரு கட்டத்துல, ஒரு நாளிதழ் அலுவலகத்துலருந்து வெளியேற்றப்பட்ட ஒரு கார்டூனிஸ்ட் என்ன பன்றாருங்கறத நீங்களே பாருங்க........... |
| 16 மாநிலங்களில் இடஒதுக்கீட்டு போராட்டம்: ஹார்திக் பட்டேல் அறிவிப்பு Posted: 08 Sep 2015 08:53 AM PDT குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரை ஓபிசி பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஹார்திக் பட்டேல் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. |
| பூரியில் கைப்பற்றப்பட்ட 27 மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைப்பு Posted: 08 Sep 2015 06:02 AM PDT ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் வசித்து வருபவர் மனோரஞ்சன் ஜேனா. மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படும் இவர், தன் வீட்டில் மண்டை ஓடுகளை வைத்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |