Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்காபரோ பூங்காவில் சடலம் மீட்பு

Posted: 31 Aug 2015 08:39 PM PDT

hk

hkஸ்காபரோவில் உள்ள பூங்கா பகுதியில் இருந்து சடலம் ஒன்று காவல்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

Eglinton அவனியூ மற்றும் Brimley வீதிப்பகுதியிலேயே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்த்துறையினர் அந்த இடத்திற்கு சென்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சடலம் அடையாளம் காணப்பட்டதா, நபர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.hk

The post ஸ்காபரோ பூங்காவில் சடலம் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Corktown பகுதியில் வாயுக்கசிவு – கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்

Posted: 31 Aug 2015 08:34 PM PDT

ui

uiCorktown பகுதியில் ஏற்பட்ட வாயுக்கசிவை அடுத்து அந்த பகுதியின் பல்வேறு கட்டங்களில் இருந்தவர்களை தீயணைப்புப் படை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

வாயுக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாடாளுமன்றம் மற்றும் Adelaide வீதியை அண்டிய பகுதிக்கு இன்று பிற்பகல் 1.41 மணியளவில் தீயணைப்புப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வந்திருந்த தீயணைப்புப் பணியாளர்கள் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து அந்த பகுதியை சுற்றி இருந்த பல்வேறு கட்டங்களிலும் இருந்தவர்களை வெளியேற்றியிருந்தனர்.

ui

மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட வேளை கருத்து வெளியிட்ட தீயணைப்பு அதிகாரிகள், என்ன வகையான வேலை மேற்கொள்ளப்படவிருக்கின்றது என்பதை தாம் இன்னமும் நிச்சயம் செய்யவில்லை என்று கூறியிருந்தனர்.

The post Corktown பகுதியில் வாயுக்கசிவு – கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் கத்திக் குத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 31 Aug 2015 03:40 PM PDT

gb

gbஸ்காபரோவில் கத்திக் குத்துக்க ஆளான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் வேளையில் Dean Park பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Sheppard அவனியூவிற்கு அருகில் அமைந்துள்ள Meadowvale வீதி மற்றும் Generation Boulevard பகுதியில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆண்நபர் ஒருவர் மீது பல முறை காத்தியால் குத்தப்பட்டிருந்தாகவும், அந்த நபர் மோசமான காயங்களுக்கு ஆளாகியிருந்தாகவும், எனினும் அவருக்கு உயிராபத்து இல்லை என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.gb

இதேவேளை இந்த கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்பான சந்தேகிக்கத் தக்கக விடயங்கள் குறித்து காவல்த்துறையினர் தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

The post ஸ்காபரோவில் கத்திக் குத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகாவின் முன்னாள் நகரபிதா Ron Searle காலமானார்

Posted: 31 Aug 2015 08:01 AM PDT

jkjkkk

jkjkkkமிசிசாகாவின் முன்னாள் நகரபிதா Ron Searle தனது 96ஆவது வயதில் நேற்று காலமானார்.

அவர் மறைந்த செய்தியை மிசிசாகாவின் தற்போதய நகரபிதா Bonnie Crombie நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையின் வாயிலான உறுதிப்படுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் நகரபிதா Ron Searle இன் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிசிசாகா நகர மக்களின் சார்பாகவும், நகரசபை உறுப்பினர்களின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போர் வீரரான Ron Searle, நகரசபை உறுப்பினராக அரசியலில் பிரவேசித்து மிசிசாகா நகர் வளர்சிகண்டுவந்த 1976ஆம் ஆண்டுக்கும் 1978ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நகரபிதாவாக கடமையாற்றியுள்ளார்.jkjkkk

அதன் பின்னர் அதிகாரத்தினை கைப்பற்றிய Hazel McCallion, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மிசிசாகாவின் நகரபிதாவாக பதவி வகித்து கடந்த வருடமே பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

The post மிசிசாகாவின் முன்னாள் நகரபிதா Ron Searle காலமானார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக துணைநிலை பணியாளர்கள் எச்சரிக்கை

Posted: 31 Aug 2015 07:43 AM PDT

pp;p;

pp;p;ஒன்ராறியோவின் பாடசாலைகளில் அடுத்த கல்வியாண்டுக்கான கற்கை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக துணைநிலை பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் தமது உறுப்பினர்கள் தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ளவதற்கு தயாராகி வருவதாக, சுமார் 55,000 பணியாளர்களை பிரதிநிதிக்கும் ஒன்ராறியோவின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

ஒன்ராறியோ மாகாண அரசுடன் மேற்கொள்ளப்பட்டுவரும், பணி ஒப்பந்ததம் தொடர்பான பேச்சுக்களுக்கு அழுத்தங்களை கொடுக்கும் முகமாகவே இந்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.pp;p;

முதற்கட்டமாக தாம் நிபந்தனைகளின் அடிப்படையில் பணியாற்றும் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், பின்னர் படிப்படியாக சுழற்சி முறையிலான வேலை நிறுத்தங்களை மாகாணம் தழுவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ளதாகவும் கல்வித்துறை துணைநிலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக துணைநிலை பணியாளர்கள் எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இதோ சரிசெய்ய டிப்ஸ்

Posted: 31 Aug 2015 07:32 AM PDT

o;ji[ju

o;ji[juஉடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும்.

அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும்.

இதோ அதனை சரிசெய்வதற்கான டிப்ஸ்

குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.o;ji[ju

அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ப்ளாக் டீ கூட ஏப்பத்திற்கு நல்ல நிவாரணியாக விளக்கும். அதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடியுங்கள்.

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

The post அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இதோ சரிசெய்ய டிப்ஸ் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாஸ்காச்சுவான் நோக்கி இன்று பயணித்துள்ளார் Tom Mulcair

Posted: 31 Aug 2015 07:29 AM PDT

gf

gfபுதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair நாட்டின் மேற்கு பிராந்தியமான சாஸ்காச்சுவான் நோக்கி இன்று பயணித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்களுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துவரும் நிலையில் அவரின் இந்த பயணம் அமைந்துள்ளது.

புதிய சனநாயக கட்சியின் முதலாவது தலைவரான Tommy Douglas சாஸ்காச்சுவான் மாநிலத்தின் முதல்வராகவே இருந்துள்ளார் என்பதுடன், சாஸ்காச்சுவான் மாநிலத்தி்னை முன்னிலைப்படுத்தியே புதிய சனநாயக கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் பலமான நிலையினை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் கடந்த 2011ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலின் போது சாஸ்காச்சுவானில் புதிய சனநாயக கட்சி ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் முன்னைய பலத்தினை உருக்கும் நோக்கில் கட்சித் தலைவர் Tom Mulcair அங்கு பயணித்துள்ளார்.

அந்த வகையில் சாஸ்காச்சுவானில் மாகாண அளவில் இன்னமும் பலமான நிலையில் உள்ள Saskatoon பகுதியில்  Tom Mulcair இன்று தனது பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு செல்லவுள்ள அவர், அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பேரணி ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.gf

இதேவேளை பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஒட்டாவாவில் இன்று தனது தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

அதேபோல பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே இன்று Halifax நடைபெறவுள்ள பேரணி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau இன்று பொது நிகழ்வுகள் எவற்றிலும் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post சாஸ்காச்சுவான் நோக்கி இன்று பயணித்துள்ளார் Tom Mulcair appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™