Tamil Star |
- துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான 12 வயது சிறுவன் – 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு –
- வீடு புகுந்து குடியிருப்பாளரை கட்டிபோட்ட சந்தேக நபர்களுக்கு காவல்த்துறை வலைவீச்சு
- கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்
- ரொரன்ரோ சிறுவன் யமேக்காவில் சுட்டுக்கொலை
- புற்றுநோய் எதிர்ப்பு நிதியங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு -பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்
- கனேடிய ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மி உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டு சிறை
- பிரிட்டிஷ் கொலம்பியா சூறாவளி – மின் விநியோக தடையால் மக்கள் பாதிப்பு
| துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான 12 வயது சிறுவன் – 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு – Posted: 30 Aug 2015 08:33 PM PDT
12 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த 15 வயது சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை பன்னிரண்டு மணியளவில் தமக்கு கிடைத்த அவசர அழைப்பை அடுத்து, தாம் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போது வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடன் 12 வயது சிறுவன் கிடந்தாக காவல்த்துறையினர் விபரித்துள்ளனர். பின்னர் சிறுவன் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே 15 வயது சிறவன் ஒருவன் மீது கைத்துப்பாக்கியை கவனக்குறைவாக பயன்படுத்தியமை, துப்பாக்கியை கையாண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் சிறுவனின் வயது வரம்பை கருத்திற் கொண்டு அவனின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. The post துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான 12 வயது சிறுவன் – 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு – appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீடு புகுந்து குடியிருப்பாளரை கட்டிபோட்ட சந்தேக நபர்களுக்கு காவல்த்துறை வலைவீச்சு Posted: 30 Aug 2015 08:29 PM PDT
பிரம்டனின் வடக்கு மத்திய வீதிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் அதிகாலை 5.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டை உடைத்து உள்நுளைந்தவர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மற்றொருவர் துப்பாக்கியுடன் பெரிய கத்தியும் வைத்திருந்தகாவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அந்த வீட்டில் பெண் ஒருவரும் இருந்ததாகவும், எனினும் அவரை அவர்கள் கட்டிப் போடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் உடனடியாகவே அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர் என்றும், அவர்கள் அங்கு எதனையும் தேடினார்களா என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை என்று காவல்த்துறையினர் கூறியுள்ளனர். The post வீடு புகுந்து குடியிருப்பாளரை கட்டிபோட்ட சந்தேக நபர்களுக்கு காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் Posted: 30 Aug 2015 05:31 PM PDT
ஆனால், சில காய்கறிகளை பெண்கள் தவிர்ப்பது நல்லது. • கத்தரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது. கத்தரிக்காய் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது. பசலைக்கீரை பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும். ப்ரோக்கோலி கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் விட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காலிபிளவர் கர்ப்பமாக இருக்கும் போது காலிபிளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் விட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. The post கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ சிறுவன் யமேக்காவில் சுட்டுக்கொலை Posted: 30 Aug 2015 03:48 PM PDT
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த சிறுவன் ஸ்காபரோவைச் சேர்ந்த Ricardo Williams என டையாளம் காணப்பட்டுள்ளார். உள்நாட்டு நேரப்படி அதிகாலை 1.51 மணியளவில் அந்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தை கேட்டு கண்விழித்தாக குறிடியிருப்பாளர்கள் தெரிவித்த நிலையில், குறித்த சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கிடக்க காணப்பட்டார் என்று காவல்ததறையினர் விபரித்துள்ளனர். உடனடியாவே சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார் எனினும், சிறுவனுக்கு ஏற்பட்ட காயத்தினால் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் ஒருவரைத் தேடி வருவதாக சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அந்த நாட்டு காவல்த்துறை தெரிவித்துள்ளது. இது தொடாபில் கனடா அகாரிகள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் விடுத்த அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தாம் உதவிவருவதாக கூறியுள்ளனர். உயிரிழந்த இந்த 14 வயது சிறுவன் ஸ்காபிரோவைச் சேர்ந்தவர் என்றும், இந்த கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக யமேக்கா சென்றிருந்தார் என்றும் கூறப்படுகிறது. The post ரொரன்ரோ சிறுவன் யமேக்காவில் சுட்டுக்கொலை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புற்றுநோய் எதிர்ப்பு நிதியங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு -பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் Posted: 30 Aug 2015 03:31 PM PDT
பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகளில் தற்போதய அரசாங்கத்தின் பயங்கரவாத சட்டம், குடியுரிமை விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் நிலையில், பிரதமர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புற்றுநோய்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிதியத்திற்கு எதிர்வரும் 2017ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு 50 மில்லியன் டொலர்கள் படி ஐந்து வருடங்களுக்கு நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்டீபன் ஹார்ப்பர் குறிப்பிட்டுள்ளார். குறித்த இந்த புற்றுநோய்க்கு எதிரான அமைப்பு ஆளும் பழமைவாதக் கட்சியினால் கடந்த 2006ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதற்கான மத்திய அரசாங்கத்தின் நிதி உதவித் திட்டம் ஏற்கவே இரண்டு தடவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 2017ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ள அந்த திட்டத்தினை மேலும் புதுப்பிப்பது தொடர்பிலேயே பிரதமர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார். குறிப்பாக பழங்குடியின மக்கள் உள்ளிட்ட கனேடியர்களுக்கு புற்றுநோய் தாக்கத்தினை கண்டறிதல் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. The post புற்றுநோய் எதிர்ப்பு நிதியங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு -பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடிய ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மி உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டு சிறை Posted: 30 Aug 2015 12:26 PM PDT
நீண்டகாலமாகவே சர்வதேச ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிவந்த இந்த வழக்கு விசாரணை தொடர்பிலான தீர்பினை எகிப்திய நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது. பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மொஹமட் ஃபாஹ்மி ஏற்கனவே எகிப்திய சிறைகளில் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்தினை கழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்போது பல்வேறு சிரமமான வழக்குகளை முன்னெடுத்து பிணையில் வெளிவந்த இவர் மீதான மீள் விசாரணையை மேற்கொண்ட எகிப்திய அரச தரப்பு, நேற்று சனிக்கிழமை அவருக்கு மீண்டும் சிறைத் தண்டனையை அறிவித்துள்ளது.
தண்டனை விதிக்கப்படட இந்த மூன்று பேரும் எகிப்திய ஊடகவியலாளர் நடைமுறையின் கீழ் தம்மை பதிவு செய்திருக்காமையே அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கான காரணம் என நேற்றைய தினம் தீர்பினை வாசித்த நீதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் பாதுகாப்பு தரப்பின் அனுமதியைப் பெறாது சாதனங்களை நாட்டினுள் எடுத்துவந்து, தவறான செய்திகளை அனுமதியின்றி வெளியிட்டு வந்ததாகவும் அவர் தனது தீர்ப்பில் குறிபபிட்டுள்ளார். The post கனேடிய ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மி உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டு சிறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரிட்டிஷ் கொலம்பியா சூறாவளி – மின் விநியோக தடையால் மக்கள் பாதிப்பு Posted: 30 Aug 2015 12:22 PM PDT பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென்மேற்கு பிராந்தியங்களை தாக்கிய சூறாவளியால் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டு போயுள்ளது. நேற்றைய தினம் பிரிட்டிஷ் கொலம்பியாவைத் தாக்கிய இந்த சூறைக் காற்றினால் பல்வேறு இடங்களிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், காரின் மீது மரம் வீழ்ந்த சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறைக் காற்று காரணமாக மாகாணத்தின் பல்வேறு பூங்காக்களும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. பல இடங்களில் அவசரகால […] The post பிரிட்டிஷ் கொலம்பியா சூறாவளி – மின் விநியோக தடையால் மக்கள் பாதிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் Reginaவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பிரம்டன் பகுதியில் வீடுபுகுந்து அங்கிருந்தவரை கட்டிப் போட்டுவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.





ரொரன்ரோவைச் சோந்த 14 வயது சிறுவன் ஒருவர் யமேக்காவின் கிங்ஸ்டன் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார் என யமேக்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமது கட்சி மீண்டும் ஆட்சியை அமைத்தால் புற்றுநோய் எதிர்ப்பு நிதியங்களுக்கு மேலதிக நிதிஒதுக்கீட்டினை மேற்கொள்வேன் என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் உறுதியளித்துள்ளார்.
அல் ஜசீரா சர்வதேச செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய கனேடிய ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மி உள்ளிட்ட மூன்று ஊடகவியலாளர்களுக்கு எகிப்திய நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.