Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


North Park இல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – குறைந்தது இருவர் காயம்

Posted: 21 Aug 2015 03:13 PM PDT

j

jரொரன்ரோவின் North Park பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் குறைந்தது இருவர் காயமடைந்தனர் என ரொரன்ரோ காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் சற்று முன்னர் Keele வீதி மற்றும் மேற்கு Lawrence அவனியூப் பகுதியல் இடம்பெற்றுள்ளது.

எனினும் காயப்பட்டவர்களின் விபரம் தொடர்பில் தற்போது எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டுக்காண காரணம் தொடர்பிலும் விபரங்கள் வெளியாகவில்லை.

குறித்த சம்பவம் இடம்பெற்ற குறித்த அந்த பகுதி மாத்திரம் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.j

The post North Park இல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – குறைந்தது இருவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,10,000 சிறுவர் பராமரிப்பு மையங்கள்

Posted: 21 Aug 2015 12:13 PM PDT

hjhj

hjhjபிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,10,000 சிறுவர் பராமரிப்பு மையங்களை அமைக்கவுள்ளதாக புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair தெரிவித்துள்ளார்.

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலேயே சிறுவர் பராமரிப்புக்கென பெற்றோர் அதிக அளவு பணத்தினை செலவிட வேண்டியுள்ள நிலையில், அந்த மாநிலத்திற்கான தேர்தல் பரப்புரையின் போது Tom Mulcair இந்த உத்தரவாதத்தினை முன்வைத்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மூன்றில் இரண்டு பங்கு சிறுவர்கள் ஒழுங்கான சிறுவர் பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுவதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் அறிந்த வகையில், பல்வேறு தாய்மார் தமது பிள்ளைகளை பராமரிப்பதா அல்லது வேலைக்கு செல்வதா என்பதை தீர்மானிப்பதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.hjhj

இவ்வாறான நிலையிலேயே தமது கட்சியின், நாடு முழுமைக்குமான ஒரு மில்லியன் சிறுவர் பராமரிப்பு நிலைய திட்டத்தினை மீள வலியுறுத்தியுள்ள புதிய சனநாயக கட்சித் தலைர், அந்த திட்டதி்ன் மூலம் பல்வேறு பெற்றோர்களும் சிறுவர்களும் பயன் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

அந்த திட்டதின் பிரகாரம் வன்கூவரில் மட்டும் 50,000 ற்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,10,000 சிறுவர் பராமரிப்பு மையங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோயாளர் பராமரிப்பு சேவை மேம்படுத்த 190 மில்லியன் டொலர்களை முதலீடு

Posted: 21 Aug 2015 12:04 PM PDT

n b n

n b nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி ஆட்சி அமைக்குமாக இருந்தால், நோயாளர் பராமரிப்பு சேவையினை மேம்படுத்தும் வகையில் தமது அரசாங்கம் 190 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக லிபரல் கட்சியின் தலைவர் Justin Trudeau உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம் நோய்வாய்ப்பட்டுள்ள தமது குடும்ப உறுப்பினர்களை கவனித்துக் கொள்ளும் அரசாங்க சேவைகள் அனைத்து கனேடியர்களுக்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் என அவர் விபரித்துள்ளார்.

இவ்வாறான உதவித் திட்டங்களை பெற்றுக் கொள்வதில் தற்போது பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வரும் நிலையில், அவ்வாறான உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான தகுதிநிலை கட்டுப்பாடுகளை தமது அரசாங்கம் தளர்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.n b n

இவ்வாறான சேவைத் திட்டங்களை அதிகரிப்பதற்கு தாம் திட்டமிட்டுள்ள போதிலும், அதன் காரணமாக கனேடியர்கள் தமது தொழில் காப்புறுதிக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது எனவும் லிபரல் கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நோயாளர் பராமரிப்பு சேவை மேம்படுத்த 190 மில்லியன் டொலர்களை முதலீடு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று காலையில சந்தேகத்திற்கு இடமான முறையில் தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

Posted: 21 Aug 2015 11:56 AM PDT

suspicious_vehicle_fires_-_8212015

suspicious_vehicle_fires_-_8212015இன்று காலையில் ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் வாகனங்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sheppard Avenueற்கு தெற்கே, Weston வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றே முதலில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயைணைப்பு படையினர், விரைவாகவே தீப் பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த நிலையில், அதற்கு அருகே சற்றுத் தொலைபில் மேலும் ஒரு வாகனமும் தீப்பற்றிக் கொண்டதான தகவல் தீயணைப்பு படையினருக்கு கிடைத்துள்ளது.

முதலாவது வாகனம் தீக்கிரையான வீட்டிலிருந்து வடக்கே சிறிது தூரத்தில் அதே வீதியில் அமைந்துள்ள பிறிதொரு வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.suspicious_vehicle_fires_-_8212015

இதனை அடுத்து இவ்விரு தீச் சம்பவங்களையும் சந்தேகத்திற்கிடமான சம்பவமாக வகைப்படுத்தியுள்ள காவல்த்துறையினர், அந்த பகுதியில் உள்ள மக்களை தமது கண்காணிப்பு ஒளிப்பதிவுகளை ஆராயுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவுகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் தென்பட்டால் தமக்கு அறியத்தருமாறும் அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், தாம் சந்தேக நபர் ஒருவரை தேடி வருவதாகவும், அதிஸ்டவசமாக இந்த தீச் சம்பவங்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

The post இன்று காலையில சந்தேகத்திற்கு இடமான முறையில் தீப்பிடித்து எரிந்த வாகனங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது? தெரிந்துகொள்ளுங்கள்

Posted: 21 Aug 2015 07:09 AM PDT

yu

yuஉடலில் இருந்து கொழுப்பு எவ்வாறு வெளியேறுகிறது என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

நாம் உட்கொள்ளும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறுகிறது. குறிப்பாக இதை ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் (triglyceride molecules) என்று கூறுகிறார்கள்.

இதில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, இந்த ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் உடைந்து வெளியேறுகிறது, இது ஆக்ஸிடேஷன்(Oxidation) என்று அழைக்கப்படுகிறது.

பத்து கிலோ எடையிலான கொழுப்பை எரிக்க, 29 கிலோ ஆக்ஸிஜனை நீங்கள் மூச்சாக உள் இழுக்க வேண்டியிருக்கிறது. yu

எடை குறைப்பு செயல்பாட்டில் 84% கொழுப்பு CO2-வாக தான் வெளியேறுகிறது. இது நுரையீரல் வழியாக வெளியேறுகிறது.

மீதமுள்ள 16% கொழுப்பு உடலில் இருந்து நீராக வெளியேறுகிறது. இந்த ஆய்வின் மூலமாக, உடல் எடை குறிப்பில் முக்கியமாக செயல்படும் உடல் உறுப்பு நுரையீரல் என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும், உடல் எடை குறைப்பு செயல்பாட்டில், சிறுநீராகவும், வியர்வையாகவும், கண்ணீராகவும், கொழுப்பு நீர் வடிவில் வெளியேறுகிறது என கண்டறிந்துள்ளனர்.

உடல் எடைக் குறைப்பதற்கு ஜாக்கிங், ஓட்டப்பயிற்சி தான் சிறந்தது, இந்த பயிற்சியில் ஈடுபடும் போது தான் நாம் அதிகமாக சுவாசிக்க முடியும், மற்றும் நுரையீரல் நிரம்ப மூச்சை உள்ளிழுத்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது? தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™