மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- செம்மரக்கடத்தல்காரர்களை மிரட்டி ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஆந்திர போலீசார் கைது
- சந்திரபாபு நாயுடு பயணத்துக்கு குண்டு துளைக்காத சொகுசு பஸ்: ரூ.5 கோடி செலவில் ஆந்திர அரசு வாங்கியது
- தமிழகம் மற்றும் கேரளாவில் கோவில்களில் உண்டியல் திருடிய கொள்ளையன் கைது
- அமர்நாத் யாத்திரை: குகைக்கோயில் பனிலிங்கத்தை இதுவரை மூன்றரை லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
- திருவனந்தபுரம் அருகே டி.வி. தலையில் விழுந்து 1 வயது குழந்தை சாவு
- சாகும்வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமேற்றவரை சந்தித்து அறிவுரை கூறிய பிரதமர் மோடி
- பாபர் மசூதி கட்ட நடவடிக்கை எடுத்தால் மோடிக்கு எடைக்கு எடை தங்கம்: சமாஜ்வாடி தலைவர் அறிவிப்பு
- மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடிதத்தில் எழுத்துப்பிழைகள் - சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்
- இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து? தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
- யதார்த்தங்களை பிரதிபலிக்கிற வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் வேண்டும்: மோடி பேச்சு
- இந்தியன் வங்கி 109-வது நிறுவன தினம்: மத்திய மந்திரி அருண் ஜெட்லி பங்கேற்பு
- பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு மகனின் கடிதம்
- பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணைப் பற்றி அவதூறு: முலாயம் சிங்க்கு நீதிமன்றம் சம்மன்
- பெண்களுக்கான வயாக்ரா இந்தியாவிற்கு வர பல ஆண்டுகள் ஆகலாம்
- நகராட்சி ஊழியரை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
- போதிய எரிபொருள் இல்லாமல் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானிகள் சஸ்பெண்ட்
- அதிகாரியை தாக்கிய வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரண் அடைந்தார்
- இந்திய பங்குச்சந்தைகள் சரிவு: சென்செக்ஸ் 242 புள்ளிகள் வீழ்ச்சி
- உதம்பூர் தாக்குதல் தீவிரவாதி நவீத்தை லாரியில் ஏற்றி வந்த டிரைவர் கைது
- இந்தியாவின் அறிவுரையை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு: ஹூரியத் தலைவர்களை சந்திப்பதில் உறுதி
| செம்மரக்கடத்தல்காரர்களை மிரட்டி ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஆந்திர போலீசார் கைது Posted: 21 Aug 2015 10:54 PM PDT ஆந்திரமாநிலம் ரேணு குண்டாவை சேர்ந்தவர்கள் சிவா, முரளி, புவனேஸ்வரி. செம்மரக்கடத்தல் தொடர்பாக இவர்கள் மீது ரேணுகுண்டா, வடமால் பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் 3 பேரும் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்கள். |
| சந்திரபாபு நாயுடு பயணத்துக்கு குண்டு துளைக்காத சொகுசு பஸ்: ரூ.5 கோடி செலவில் ஆந்திர அரசு வாங்கியது Posted: 21 Aug 2015 10:54 PM PDT ஆந்திர முதல்–மந்திரி மாதம் ஒரு மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். அவரது சுற்றுப் பயணத்துக்காக ரூ.5 கோடி செலவில் குண்டு துளைக்காத சொகுசு பஸ்சை ஆந்திர அரசு போக்குவரத்து துறை வாங்கி உள்ளது. துப்பாக்கி சூட்டிலும், குண்டு வெடிப்பிலும் சேதம் அடையாத வகையில் பஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது. |
| தமிழகம் மற்றும் கேரளாவில் கோவில்களில் உண்டியல் திருடிய கொள்ளையன் கைது Posted: 21 Aug 2015 10:54 PM PDT தமிழகம் மற்றும் கேரள எல்லையையொட்டி உள்ள கோவில்களில் அடிக்கடி உண்டியல் கொள்ளை நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. காரணம், கொள்ளையில் ஈடுபடும் நபர் தனது |
| அமர்நாத் யாத்திரை: குகைக்கோயில் பனிலிங்கத்தை இதுவரை மூன்றரை லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Posted: 21 Aug 2015 10:27 PM PDT அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 58 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது. |
| திருவனந்தபுரம் அருகே டி.வி. தலையில் விழுந்து 1 வயது குழந்தை சாவு Posted: 21 Aug 2015 10:18 PM PDT திருவனந்தபுரத்தை அடுத்த காஞ்சிரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 1 வயதில் அருணவ் என்ற மகன் இருந்தான். நேற்று முன்தினம் வீட்டில் குழந்தை அருணவ் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது டி.வி. ஸ்டாண்ட் அருகே விளையாடியபோது எதிர்பாராத விதமாக டி.வி. பெட்டி சரிந்து அருணவ் தலையில் விழுந்தது. |
| சாகும்வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமேற்றவரை சந்தித்து அறிவுரை கூறிய பிரதமர் மோடி Posted: 21 Aug 2015 08:29 PM PDT நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று, அவரை நேரில் சந்திக்கும்வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். அவரை சந்திக்க முடியாவிட்டால் சாகும் வரைகூட செருப்பின்றி, வெறுங்காலில் நடப்பேன் என்று இரண்டாண்டுகளுக்கு முன்னர் சபதமேற்ற நபரை நேற்று சந்தித்த |
| பாபர் மசூதி கட்ட நடவடிக்கை எடுத்தால் மோடிக்கு எடைக்கு எடை தங்கம்: சமாஜ்வாடி தலைவர் அறிவிப்பு Posted: 21 Aug 2015 08:23 PM PDT மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டித்து, தூக்கில் போடப்பட்ட யாகூப் மேமன் மனைவிக்கு டெல்லி மேல்-சபை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்குக்கு கடிதம் எழுதியவர், பரூக் கோசி. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடிதத்தில் எழுத்துப்பிழைகள் - சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் Posted: 21 Aug 2015 08:07 PM PDT மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வில் நல்லதொரு தேர்ச்சி பெற்றதற்காக டெல்லி பள்ளி ஒன்றுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பெயரில் பாராட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. |
| இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து? தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை Posted: 21 Aug 2015 07:45 PM PDT ரஷியாவின் உபா நகரில் இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்கள் கடந்த மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. |
| யதார்த்தங்களை பிரதிபலிக்கிற வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் வேண்டும்: மோடி பேச்சு Posted: 21 Aug 2015 07:35 PM PDT இந்திய, பசிபிக் தீவு நாடுகள் உச்சி மாநாட்டை ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில் பசிபிக் தீவு நாடுகளான பிஜி, பப்புவா நியூ கினியா, குக் தீவுகள், டொங்கா, டுவாலு, நாவ்ரு, கிரிபட்டி, வனுவாட்டு, சாலமன் தீவுகள், |
| இந்தியன் வங்கி 109-வது நிறுவன தினம்: மத்திய மந்திரி அருண் ஜெட்லி பங்கேற்பு Posted: 21 Aug 2015 07:05 PM PDT இந்தியன் வங்கியின் 109-வது நிறுவன தினம் புதுடெல்லியில் கொண்டாடப்பட்டது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 109 கிளை மற்றும் 109 நேரடியாக பணம் செலுத்தும் எந்திரங்கள் கொண்ட மையங்களையும் தொடங்கி வைத்தார். |
| பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு மகனின் கடிதம் Posted: 21 Aug 2015 05:16 PM PDT குழந்தையை பெற்று கொள்வதாலேயே ஒருவர் முழுமையாக தந்தையாக ஆகிவிட முடியாது. மாறாக தனது குழந்தைகளுக்கு அனைத்து செயல்களிலும் முன் மாதிரியாக இருந்து, அவர்களை அன்பு மிக்கவர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக உருவாக்கும் போது தான் ஒருவர் தந்தையாக தனது கடமையை முழுமையாக ஆற்றுகிறார். அதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட் ஒரு சிறந்த உதாரணம். 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக அப்போது முதல் மந்திரியாக இருந்த மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்தவர் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட். |
| பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணைப் பற்றி அவதூறு: முலாயம் சிங்க்கு நீதிமன்றம் சம்மன் Posted: 21 Aug 2015 03:22 PM PDT உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அரசின் எலக்ட்ரிக் ரிக்க்ஷா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. உறவினரே அவரை கொலை செய்து இருக்கிறார். ஆனால் அந்த பெண் கவலைக்கிடமாக இருந்தபோது தன்னை 4 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். சொத்து தகராறில் அனைவரையும் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். |
| பெண்களுக்கான வயாக்ரா இந்தியாவிற்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் Posted: 21 Aug 2015 01:00 PM PDT பெண்களுக்கு பாலியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வயாக்ரா மாத்திரையை பிளிபான்செரின் என்ற பெயரில் அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இப்படி தாம்பத்திய ஆர்வம் குறைகிற பெண்கள், இந்த மாத்திரையை எடுத்துக்கொள்கிறபோது, அது மூளையில் உள்ள சில ரசாயனங்களின் அளவினை அதிகரிக்க செய்கிறது. இதனால் தாம்பத்தியத்தில் ஆர்வம் கூடும். இந்த மாத்திரையால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என விமர்சனங்கள் எழுந்தன. |
| நகராட்சி ஊழியரை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது Posted: 21 Aug 2015 10:04 AM PDT டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். புதுடெல்லி நகராட்சி ஊழியரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கமாண்டோ சுரீந்தர்சிங் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். |
| போதிய எரிபொருள் இல்லாமல் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானிகள் சஸ்பெண்ட் Posted: 21 Aug 2015 08:54 AM PDT தோஹாவில் இருந்த 142 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் கொச்சிக்கு கடந்த 18-ம் தேதி வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் போதுமான எரிபொருள் இல்லாத நிலையில், திருவனந்தபுரத்தில் தரையிறங்கியது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்துமாறு விமான போக்குவரத்து |
| அதிகாரியை தாக்கிய வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரண் அடைந்தார் Posted: 21 Aug 2015 07:45 AM PDT பஞ்சாயத்து அதிகாரியை தாக்கிய வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. இன்று காவல்நிலையத்தில் சரணடைந்தார். மத்திய பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டத்தில் ஜன்பத் பஞ்சாயத்து அதிகாரி உதய்ராஜ் சிங்கை, திகம்கர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கே.கே.ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கடத்தி சென்று தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக |
| இந்திய பங்குச்சந்தைகள் சரிவு: சென்செக்ஸ் 242 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 21 Aug 2015 06:33 AM PDT சீன பங்குச்சந்தையின் போக்கு மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் நிலவரம் ஆகியவை இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எதிரொலித்தன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் இன்று 65.91 (இன்ட்ரா-டே) என வீழ்ச்சி அடைந்திருப்பதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. |
| உதம்பூர் தாக்குதல் தீவிரவாதி நவீத்தை லாரியில் ஏற்றி வந்த டிரைவர் கைது Posted: 21 Aug 2015 06:15 AM PDT பாகிஸ்தான் தீவிரவாதி முகமது யாகூப் நவீத்தை லாரியில் ஏற்றிவந்த டிராக்டர் டிரைவரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்ரோலி அருகே |
| இந்தியாவின் அறிவுரையை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு: ஹூரியத் தலைவர்களை சந்திப்பதில் உறுதி Posted: 21 Aug 2015 05:40 AM PDT எல்லைப்பகுதியில் மோதல்களும் மனக்கசப்பும் நிலவி வரும் சூழ்நிலையிலும், பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரவே இந்தியா விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தானின் செயல் தொடர்ந்து முட்டுக்கட்டையை ஏற்படுத்துகிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |