Tamil Star |
- ஆறாவது தளத்தில் இருந்து விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதி
- காவல்த்துறைக்கு பெரும் எண்ணிக்கையில் புதியவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்
- மத்திய ரொரன்ரோவில் கத்திக்குத்து – மூவருக்கு காவல்த்துறை வலைவீச்சு
- பிரதமருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட துண்டுப் பிரசுரம் ஒட்டிச் சென்ற நபர்
- வாழை இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்!
| ஆறாவது தளத்தில் இருந்து விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதி Posted: 20 Aug 2015 10:52 AM PDT
நோர்த்யோர்க் Downsview neighbourhood பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நடந்த அந்த கட்டம் 1 De Boers Drive பகுதியில் அமைந்துள்ளதாகவும், இன்று அதிகாலை 2.30 மணிக்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் 32 ஆவது பிரிவுக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் மேலிருந்து விழுந்த போது, சூரிய ஒளிக்காக விரிவுபடுத்திப் போடப்பட்டிருந்த கண்ணாடித் தளம் ஒன்றின் மீது விழுந்தார் என்று எனினும் சம்பவ இடத்திற்கு தாம் வந்து சேர்ந்த போது, கட்டத்தில் இருந்து தரையில் விழுந்த அந்த பெண்ணை அவரின் காதலன் மீண்டும் அடுக்குமாடிக் கட்டடத்தின் ஆறாவது தளத்திற்கே தூக்கிச் சென்றிருந்ததாக அவசர மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் The post ஆறாவது தளத்தில் இருந்து விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காவல்த்துறைக்கு பெரும் எண்ணிக்கையில் புதியவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் Posted: 20 Aug 2015 10:22 AM PDT
பொதுத் தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் Thomas Mulcair, அண்மைய மாதங்களில் மோசமான துப்பாககிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற பிரிட்டிஸ் கொலம்பியாவின் Surrey பகுதியில் உள்ள மக்கள மத்தியில் உரையாற்றும் போது இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி ஆட்சி அமைத்தால், ஆட்சியின் முதல் நான்கு வருடத்தினுள் காவல்த்துறைக்கு புதிய ஆட்சியினை இணைத்துக் கொள்வதற்காக தமது அரசாங்கம் 250 மில்லியன் டொலர்களை செலவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2,500 முன்னணி நிலை காவல்த்துறை உத்தியோகத்தர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும், அவர்கள் நாட்டிலுள்ள குடியிருப்பு பகுதிகள், வீதிகளில் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் விபரித்துள்ளார். பிரிட்டிஸ் கொலம்பியாவின் Surrey பகுதியில் துப்பாக்கிச் சூட்டு வன்முறைகளும், தெருச் சண்டியர் கும்பல்களின் வன்முறைகளும் தற்போது என்றுமில்லாதவாறு ஆபத்தான கட்டத்தினை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வன்கூவர் நகரில் மாத்திரம் கடந்த மார்ச்ச மாதத்திலிருந்து இதுவரையில் 30ற்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post காவல்த்துறைக்கு பெரும் எண்ணிக்கையில் புதியவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மத்திய ரொரன்ரோவில் கத்திக்குத்து – மூவருக்கு காவல்த்துறை வலைவீச்சு Posted: 20 Aug 2015 09:00 AM PDT
Yonge street மற்றும் Gerrard street வீதிச் சந்திப்பு பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பீட்சா உணவகப் பகுதியில் இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினை சென்றடைந்த போது அங்கே ஆண் ஒருவர் கழுத்துப் பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு உயிராபத்தான நிலையில் காணப்பட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் ஆறு நர்பளுக்கு இடையே இடம்பெற்ற தெருச் சண்டையின் போது இந்த கத்திக் குத்து இடம்பெற்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தினையும் சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ள காவல்த்துறையினர், அந்த பகுதியில் தொடர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கத்திக் குத்துக்கு இலக்கானவர் வயது குறைந்த இளைஞர் எனவும், உயிராபத்தான காயங்களுடன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ள போதிலும், அவரின் பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. The post மத்திய ரொரன்ரோவில் கத்திக்குத்து – மூவருக்கு காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரதமருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட துண்டுப் பிரசுரம் ஒட்டிச் சென்ற நபர் Posted: 20 Aug 2015 08:29 AM PDT
தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்று வரும் நிலையில், வன்கூவர் நோக்கி பேரணியாக 60 வாகனங்கள் சென்ற நிலையில், அவற்றில் ஒன்றினை செலுத்திச் சென்ற Rob Wells என்பவர் தனது காரில் பிரதமருக்கு எதிரான வார்த்தைகள் கொண்ட பிரசுரத்தினை தனது காரில் ஒட்டியிருந்ததாக கூறப்படுகிறது. தாம் பேரணியாக சென்ற அனைத்து இடங்களிலும் தன்னுடைய பிரசுரத்தினை பார்த்த மக்கள் பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து திரும்பி வரும் வழியில், எட்மண்டனுக்கு அருகே தம்மை மறித்த போக்குவரத்து காவல்த்துறையினர், குறித்த அந்த வாசகத்தினை அகற்றுமாறு கோரியதுடன், ஏனைய வாகனமோட்டிகளை திசைதிருப்பும் வகையில் நடந்து கொண்டமைக்கான அபராதச் சீட்டினையும் வழங்கியுள்ளனர். குறித்த அந்த நபரின் செயற்பாடு தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவரை தாம் தடுத்து நிறுத்தி தண்டம் விதித்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post பிரதமருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட துண்டுப் பிரசுரம் ஒட்டிச் சென்ற நபர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாழை இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்! Posted: 20 Aug 2015 07:29 AM PDT
என்னதான் வண்ண வண்ண கலர்களில் அழகிய பீங்கான் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள் வந்துவிட்டாலும், வாழை இலை சாப்பாட்டுக்கென்று தனி ருசி இருக்கிறது. நாம் வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கிறது. வாழை இலையில் உள்ள சத்துக்கள் நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், விட்டமின் ஏ.சி, மற்றும் கே, குடற்புண்களை ஆற்றும் ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மருத்துவ பயன்கள் 1.முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். 2. வாழை இலையில் நீரை தெளித்து உணவுகளை வைத்து நாம் சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும், உணவோடு சேர்ந்து நமது உடலுக்குள் செல்கிறது. 3. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 4. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 5. சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 6. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும். 7. விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 8. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவி வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். வாழை இலை சாறு வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இதன் எடைக்கு எடை தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழை இலை துண்டுகளை மிக்சியில் அடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து, 10 நிமிடங்கள் இளஞ்சூட்டில் அடுப்பில் வைத்து வடிகட்டி, சூடாறிய பின்பு 10 - 15 மி.லி தினமும் 2- 3 வேளை சாப்பிட்டு வரவும். இவ்வாறு குடித்து வந்தால் தோல் சுத்தமாகும். ஈறு வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும். The post வாழை இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட துண்டுப் பிரசுரம் ஒன்றினை காரின் கண்ணாடியில் ஒட்டியிருந்த நபருக்கு எதிராக போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நாகரீக உலகில் மனிதர்கள் வாழை இலை சாப்பாட்டை மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.