Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் ஆசீர்வாத சேவை 28–ந்தேதி முதல் அறிமுகம்

Posted: 20 Aug 2015 11:07 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆசீர்வாத சேவை நடைபெற்று வருகிறது. அதே போல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் ஆசீர்வாத சேவையை அறிமுகப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. வருகிற 28–ந்தேதி பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி பூஜை விழா நடக்கிறது

அமர்நாத் யாத்திரை: 168 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது

Posted: 20 Aug 2015 10:53 PM PDT

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 168 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பயங்கரம்: 13 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கும்பல்

Posted: 20 Aug 2015 10:43 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டாய் மாவட்டம் சுர்சா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி உடல் நலம் இல்லாத தனது தந்தைக்கு மருந்து வாங்கச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பல இடங்களில் தேடினார்கள்.

பீகார் சட்டசபை தேர்தல்: சோனியாகாந்தி 30–ந்தேதி பிரசாரம்

Posted: 20 Aug 2015 10:32 PM PDT

பீகார் சட்டசபைக்கு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியாக உள்ளது. பீகார் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கும், பா.ஜ.கவுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில்

பிரிவினைவாத தலைவர்களுடன் பாக். தேசிய ஆலோசகர் சந்திப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

Posted: 20 Aug 2015 10:30 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் தேசிய ஆலோசகர்கள் மட்டத்தில் 23-ம் தேதி நடைபெறவுள்ள உயர்மட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவரும் பாகிஸ்தான் தேசிய ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் சந்தித்து பேசுவதை அனுமதிக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை

திருப்பதியில் பலத்த மழை: மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Posted: 20 Aug 2015 10:26 PM PDT

திருப்பதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நேற்று மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. மழையினால் மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மரங்கள் முறிந்து

ஆந்திர போலீசாரை தாக்கி செம்மரக்கட்டை கடத்திய 45 தமிழர்கள் தப்பி ஓட்டம்

Posted: 20 Aug 2015 10:16 PM PDT

ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழ் நாட்டைச் சேர்ந்த 30 தொழிலாளர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் செம்மரக்கட்டை கடத்தல் சம்பவம் தொடர்ந்தது. சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டபம், புல்லையாதாரி பள்ளியில்

கருப்பு பண ஒழிப்பில் இந்தியா-சீசெல்ஸ் உடன்பாடு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 20 Aug 2015 09:21 PM PDT

மத்திய மந்திரிசபை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய தகவல் தொடர்பு, தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரப்பிரதேசத்தில் மேளம் அடிப்பவரின் உறுப்பை வெட்டி, துப்பாக்கியால் சுட்டு திருநங்கைகள் வெறியாட்டம்

Posted: 20 Aug 2015 09:15 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் திருநங்கையர் கூட்டத்தில் மேளம் அடிப்பவராக இருந்துவந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய சிலர், அவரை சுட்டுக் கொல்லவும் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கெட் நொறுக்கு தீனிகளை பள்ளி அருகே விற்க தடை: மத்திய அரசு அமைத்த கமிட்டி சிபாரிசு

Posted: 20 Aug 2015 09:06 PM PDT

பள்ளி செல்லும் குழந்தைகளிடையே 'ஜங்க் புட்' எனப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், அவர்களுக்கு ஆரோக்கியமற்ற உடல் பருமன் ஏற்படுகிறது. அத்துடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்: பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி

Posted: 20 Aug 2015 08:35 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 17-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 129 உள்ளாட்சி மன்றங்களில் உள்ள 3,351 வார்டுகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஆஜ்மீர் மாநகராட்சி உள்பட 66 உள்ளாட்சி மன்றங்களை ஆளுங்கட்சியான பா.ஜனதா

எம்.பி. மகனுக்கு எஸ்கார்ட்டாக சென்று ரூ. ஒன்றரை லட்சத்துடன் எஸ் ஆன பெண்ணுக்கு போலீஸ் வலை

Posted: 20 Aug 2015 08:30 PM PDT

வழிகாட்டும் எஸ்கார்ட்டாக நடித்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யின் மகனிடம் இருந்து கத்தி முனையில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்ற பெண்ணை மும்பை போலீசார் தேடி வருகின்றனர்.

சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து விஜயகாந்த் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

Posted: 20 Aug 2015 04:45 PM PDT

தமிழக சட்டசபை கூட்டத் தொடரை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விஜயகாந்தின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். சென்னை ஐகோர்ட்டில் டி.ஜெகதீஸ்வரன் என்பவர், 2012-ல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரை பொதுமக்கள் பார்க்க வசதியாக தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட

ஒரு குவிண்டால் ரூ. 4,900: வெங்காய விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

Posted: 20 Aug 2015 03:16 PM PDT

வெங்காய விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, ஒரு குவிண்டால் ரூ. 4,900 என்ற அளவை எட்டியுள்ளது. இந்தியாவின் முக்கிய வெங்காய சந்தையான நாசிக்கில் உள்ள லசல்கோனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், லசல்கோன் சந்தையில் இன்று ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.4,900க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமண மத சடங்குக்கு நீதிமன்றம் தடை: வி.ஹெச்.பி. கடும் எதிர்ப்பு

Posted: 20 Aug 2015 01:08 PM PDT

சமண மதத்தின் துறவிகள் உண்ணா நோன்பிருந்து (வடக்கிருந்து) உயிர் துறக்கும் "சந்தாரா' என்ற சடங்குக்கு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த தடைக்கு விஸ்வ இந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீண் தொகாடியா வெளியிட்ட அறிக்கையில், "சந்தாரா' எனப்படும் வடக்கிருந்து உயிர் துறக்கும் சடங்கைத் தடை செய்து உத்தரவிட்டிருப்பதை, மதம்- கலா

ஒரு அசாதாரணமான வாழ்க்கை - இந்திய ராணுவத்தின் புதிய வீடியோ

Posted: 20 Aug 2015 10:35 AM PDT

சுதந்திர தினத்திற்கு முன்னதாக, இந்திய ராணுவம் "ஒரு அசாதாரணமான வாழ்க்கை" என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அது இணையவாசிகளிடம் வைரலாக பரவியது. தற்போது ராணுவம் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவிவருகிறது. நாடு முழுவதும் ராணுவத்தினருக்கு ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவாதம் நடைபெற்று வரும்

நவாசுதீன் சித்திக்கின் நடிப்பு எனக்கு உத்வேகமளிக்கிறது - கெஜ்ரிவால்

Posted: 20 Aug 2015 09:30 AM PDT

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தசரத் மான்ஜி. இந்தியாவின் மலை மனிதர் என்று பீகார் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தனியொரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர

எழுத்தாளர் புரந்தரேவுக்கு மகாராஷ்டிர பூஷண் விருது: வலுக்கும் எதிர்ப்பு

Posted: 20 Aug 2015 09:25 AM PDT

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று நூலாசிரியருமான பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரேவுக்கு (93), அந்த மாநிலத்தின் உயரிய விருதான 'மகாராஷ்டிர பூஷண் விருது' நேற்று வழங்கப்பட்டது.

பெற்றோர்களின் கண்முன்னே கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமி: இதற்கு என்ன சொல்லுகிறீர்கள் முலாயம் சிங்?

Posted: 20 Aug 2015 08:27 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கன்னஜ் மாவட்டத்தில்தான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தில் தான் ஒரு சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை: பின்னணியில் முதல்வரின் மகளா?

Posted: 20 Aug 2015 06:33 AM PDT

பாகிஸ்தான் துணை தூதருடனான பேச்சுவார்த்தையை முடக்கும் வகையில், இன்று காலை கைது செய்யப்பட்ட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் இரண்டே மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த தடுப்புக் காவலும், விடுவிப்பும் நாடகம் என காஷ்மீர் முன்னாள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™