Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோவின் மேற்குப் பகுதியில் தாக்குதலுக்குள்ளான நபர் மருத்துமனையில் அனுமதி

Posted: 16 Aug 2015 08:26 PM PDT

k

kரொரன்ரோவின் மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இடம்பெற்ற தாக்குதலில் ஆயுதத்தினால் குத்தப்பட்டு காயங்களுக்கு ஆளான நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Ossington அவனியூ மற்றும் Bloor வீதிக்கு அருகில் பிற்பகல் 3 மணியளவில் இந்த கத்திக்குத்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இனம் தெரியாத நபர் ஒருவருடன் ஏற்பட்ட விவாதத்தின் போதே இந்த குத்துக் சம்பவம் இடம்பெற்றதாகவும், எனினும் எத்தகைய ஆயுதத்தினால் குத்தப்பட்டார் என்பது இனம்காணப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது

அதேவேளை இந்த நபரை ஆயுதத்தினால் குத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஒடிவிட்டதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், குறித்த சந்தேக நபரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் கறுப்பினத்தவர் என்றும், ஏறத்தாழ ஆறடி ஆறு அங்குல உயரம் உரைய, 25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர் என்றும் விபரித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post ரொரன்ரோவின் மேற்குப் பகுதியில் தாக்குதலுக்குள்ளான நபர் மருத்துமனையில் அனுமதி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து – ஒருவர் பலி

Posted: 16 Aug 2015 08:16 PM PDT

p

pஸ்காபரோ பகுதியில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவுக்கு பின்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் சிலர் மோசமான காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு Bellamy வீதி மற்றும் கிழக்கு Lawrence Avenue ஆகியவற்றின் சந்திப்புப் பகுதிக்கு வருமாறு தமக்கு இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 12.42 மணியளவில் அழைப்பு வந்திருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு Bellamy வீதியின் தெற்கு தடத்தில் அதி வேகத்துடன் பயணித்துக்குகொண்டிருந்த வாகனம் கிழக்கு Lawrence Avenue கிழக்கு தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தை மோதியதாகவும், அப்போது மோதுகைக்கு உட்பட்ட வாகனம் மூன்றாவது வாகனத்தை மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.p

தெற்கு Bellamy வீதியில் பயணித்த வாகனத்தில் இருந்த 26 வயதான பயணி ஒருவரே விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற 23 வயதான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலில் விபத்துக்குள்ளான இரு வாகனங்களில் இருந்த மேலும் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தை அடுத்து குறித்த சந்திப்புப் பகுதி சில மணித்தியாளங்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது.

The post ஸ்காபரோவில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து – ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிள்ளைகளை கடத்தியதாக குற்றஞசாட்டப்பட்ட பெண் ஒருவர் கைது

Posted: 16 Aug 2015 11:04 AM PDT

hjmnv hm v

hjmnv hm vபிரித்தானியாவில் இரண்டு பிள்ளைகளை கடத்தியதாக குற்றஞசாட்டப்பட்ட பெண் ஒருவர் ஐந்து வருடங்களின் பின்னர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அந்த பெண்ணையும், கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் அவரது இரண்டு மகன்களையும் தாம் கடந்த வியாழக்கிழமை ஹமில்ட்டன் பகுதியில் கண்டுபிடித்ததாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த மூன்று பேரும் கனடாவில் புதிய பெயர் அடையாளங்களுடன் வாழ்ந்து வந்துள்ளதாக காவல்த்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் பிள்ளைகளை கடத்திச் சென்றமை மற்றும் நீதிமன்ற ஆணையினை மீறியமை ஆகிய குற்றச் செயல்களுக்காக அவர் பிரித்தானியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து தப்பித்த அவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் யேர்மனி ஊடாக கனடாவுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.hjmnv hm v

கனடாவின் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பிலான நிறுவனத்தின் உத்தியோகத்தர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அவர்கள் மூவரும் ஹமில்ட்டன் பகுதியில் வசித்து வருவது கண்டறியப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிள்ளைகள் இருவரும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் பேணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தாம் பிரித்தானிய அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post பிள்ளைகளை கடத்தியதாக குற்றஞசாட்டப்பட்ட பெண் ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Davisville இல் கத்திக் குத்து – மூன்று சந்தேக நபர்களுக்கு வலைவீச்சு

Posted: 16 Aug 2015 10:49 AM PDT

jgyfikgik

jgyfikgikDavisville இல் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் மூவரைக் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இந்த பகுதியில் வைத்து பல முறைகள் கத்தியால் குத்தப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஆண் நபர் வேறு மூன்று ஆண் நபர்களுடன் தாக்கத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரைத் பின்தொடர்ந்திருந்த அந்த மூவரும் கிழக்கு Yonge வீதியின் கிழக்கு Eglinton Avenue பகுதியில் வைத்து கத்தியால் குத்தியுள்ளனர் என்றும் காவல்த்துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், கத்திக்குத்துக்கு ஆளாகி உயிராபத்தான நிலையில் இருந்த அந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.jgyfikgik

சம்பவம்தொடர்பில் இரண்டு கறுப்பின ஆண்களையும், ஒரு வெள்ளளை இன ஆணையும் தேடி வருவதாக கூறியுள்ள காவல்த்ததுறையினர், தகவல் தெரிந்தால் தம்மிடம் தெரிவி்க்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post Davisville இல் கத்திக் குத்து – மூன்று சந்தேக நபர்களுக்கு வலைவீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கான அதி வெப்ப எச்சரிக்கை

Posted: 16 Aug 2015 10:26 AM PDT

.n.n.

.n.n.ரொரன்ரோ, ரொரன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கான அதி வெப்ப எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையினை பிறப்பித்துள்ள கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம், இன்றும் நாளை திங்கட்கிழமையும் பகல் வேளைகளில் வெப்பநிலை 30 பாகை செல்சியசை தொடும் எனவும், ஈரப்பதத்துடன் சேர்ந்து அது 40 பாகையாக உணரப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இரவு வேளைகளில் வெப்பநிலை சுமார் 20 பாகை செல்சியசாக காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிகூடிய வெப்பநிலை எவருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரித்துள்ள அதிகாரிகள்,குறிப்பாக சிறுவர்கள், வயதான முதியவர்கள், சுவாசக் கோளாறுகள் மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் அதிக அளவிலான பாதிப்பினை எதிர்நோக்க கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்..n.n.

இவ்வாறான வேளைகளில் நீரிழப்பினை தவிர்க்கும் வகையில் தாகம் எடுப்பதற்கு முன்னரே அதிக அளவிலான நீர் உள்ளிட்ட பாணங்களை அருந்துமாறும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

The post ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கான அதி வெப்ப எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோயெதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள்!

Posted: 16 Aug 2015 08:30 AM PDT

hul

hulநாம் தினமும் உண்ணும் உணவு தான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது.

அவ்வாறு அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை தெரிவு செய்து சாப்பிடுங்கள்.

இஞ்சி

இஞ்சி வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்.

இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம். தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.ju

பாதாம்

இதில் விட்டமின் இ, இரும்புசத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.j;hhh

கீரை

அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், விட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.jhj

பேரீச்சம்பழம்

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.jhul

கேரட்

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள விட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.jugy

The post நோயெதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியம் தரும் சூப்!

Posted: 16 Aug 2015 08:23 AM PDT

kj

kjமூலிகைகள், காய்கறிகள், கீரை வகைகள் என விதவிதமான சூப்கள் தயாரிக்கலாம்.

பொதுவாக, சூப் பசியைத் தூண்டக்கூடியது.

ஒரு வேளைக்கான உணவின் தேவையை ஒரு கப் சூப் அருந்துவதன் மூலமே பெற முடியும்.

ஆரோக்கியத்தை விரும்புபவர்களுக்கு மூலிகை சூப், குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான கார்ன் சூப் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சூப் வகைகளைச் செய்து கொடுக்கலாம்.

உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப் வகைகளைக் குடிக்கலாம்.kj

மூலப் பிரச்சனை இருப்பவர்கள், இதய நோயாளிகள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சூப் வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், உப்பு, வெண்ணெய் போன்றவற்றை மிகவும் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். எடை அதிகரிக்க நினைப்பவர்கள் மட்டும் சூப் வகைகளைக் குறைவாக சாப்பிடலாம்.

சிறுநீரகக் கோளாறு, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மசாலா சேர்ந்த சூப்களை அருந்த வேண்டாம்.

The post ஆரோக்கியம் தரும் சூப்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™