Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திராவில் குகை கோவிலுக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி

Posted: 16 Aug 2015 11:05 PM PDT

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மற்றும் சம்மம் மாவட்ட எல்லையில் உள்ள மலையில் ஆதிவாசி மக்களின் கிராம தேவதையாக வணங்கப்படும் குப்பல பங்கம்மா தாயார் கோவில் உள்ளது. மலை குகைக்குள் இந்த தாயார் சிலை உள்ளது. குகைக்கு மேலே நீர்வீழ்ச்சி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் பீரங்கி தாக்குதல்

Posted: 16 Aug 2015 10:34 PM PDT

காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினர் மீதும், கிராம மக்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்து மீறி ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று 8–வது நாளாக பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக பீரங்கியால் சுட்டனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நேற்று பாகிஸ்தான் வீரர்கள் 30 கிராமத்தினரை குறி வைத்து தாக்குதல்

ஜாம்ஷெட்பூரில் குண்டு வெடிப்பு: தீவிரவாதிகள் கைவரிசையா?

Posted: 16 Aug 2015 10:24 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெல்டியா பகுதியில் நேற்றிரவு குண்டு வெடித்தது. அந்த பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் அந்த வெடிகுண்டு பார்சல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த நிலையில் அந்த குண்டு வெடித்தது. இதில் அந்த குப்பை தொட்டி நாலாபுறமும் சிதறியது. சுமார் 6 அடி சுற்றவுக்கு அந்த வெடிகுண்டு சிதறல்கள் காணப்பட்டன.

அப்துல் கலாம் சிலை அமைக்க நாடு முழுவதும் மக்கள் ஆர்வம்

Posted: 16 Aug 2015 10:14 PM PDT

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த மாதம் 27–ந்தேதி மரணம் அடைந்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக திகழ்ந்த அவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் மானசீக குருவாக ஏற்று உள்ளனர்.

திருப்பதியில் கொட்டி தீர்த்த மழை: பக்தர்கள் அவதி

Posted: 16 Aug 2015 10:07 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சனிக்கிழமையுடன் சுதந்திர தின விடுமுறையும் வந்ததால் அன்றைய தினம் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் அலை மோதினார்கள். நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 18 மணி நேரம் காத்து நின்றனர். கோவிலுக்கு

மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தல்: 16 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பா.ஜனதா சாதனை - மோடி பாராட்டு

Posted: 16 Aug 2015 09:55 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 16 மாநகராட்சிகளுக்கு கடந்த 12–ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட்டன. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

போலீசாரின் துப்பாக்கியை பறித்து 3 மணிநேரம் ரகளை: மனநிலை பாதிக்கப்பட்ட கைதி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

Posted: 16 Aug 2015 09:52 PM PDT

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மனநல ஆஸ்பத்திரியில் போலீசாரின் துப்பாக்கியை எடுத்து சுட்டு ரகளையில் ஈடுபட்டதால் விசாரணை கைதி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காளஹஸ்தி அருகே செம்மரம் கடத்திய 10 பேர் கைது

Posted: 16 Aug 2015 09:36 PM PDT

சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி தாலுகா போலீசார் கம்மபுத்தூர் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் செமமரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து

ஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொடியேற்றிய தொண்டர்கள் கைது

Posted: 16 Aug 2015 09:32 PM PDT

நாடு முழுவதும் கடந்த 15–ந்தேதி சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி பொதுமக்களும் சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். கேரளாவில் கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமதித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது. கேரள மாநிலம்

ஆவணி மாத பிறப்பு: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

Posted: 16 Aug 2015 09:31 PM PDT

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத பிறப்பையொட்டி நேற்று மாலை சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. நேற்று மாலை சுவாமி

காங்கிரஸ் கட்சியில் தான் தமிழர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன: நடிகை குஷ்பு பேட்டி

Posted: 16 Aug 2015 08:51 PM PDT

பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு நேற்று பெங்களூர் சென்றிருந்தார்.

இஸ்லாமிய கலைஞரால் பொன்னால் எழுதப்பட்ட பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு பரிசு

Posted: 16 Aug 2015 08:11 PM PDT

குஜராத்தில் உள்ள சூரத் நகரில் சுபமங்கலம் என்ற அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது இஸ்லாமிய கலைஞரால் பொன்னால் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை மோகன்

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி: மத்திய மந்திரி தகவல்

Posted: 16 Aug 2015 08:09 PM PDT

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர்கள் தாங்கள் பணி புரிய விரும்பும் மாநிலங்களில் பயிற்சி பெறுவதும், அதன்பிறகு அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.

தூய்மைப்படுத்தும் திட்டம் தொடக்கம்: கங்கை நதி பாயும் இடங்களை விமானம் மூலம் படம் எடுக்க நடவடிக்கை

Posted: 16 Aug 2015 07:57 PM PDT

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த நதி உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 ஆயிரத்து 892 மீட்டர் உயரமுள்ள கவுமுக் மலையில் உற்பத்தியாகி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் ஓடுகிறது. கங்கை நதியின் மொத்த நீளம் 2 ஆயிரத்து 525 கிலோ மீட்டர் தூரமாகும்.

வேலைக்கார பெண்ணுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம்: மத்திய அரசின் புதிய தொழிலாளர் கொள்கை தயாராகிறது

Posted: 16 Aug 2015 07:47 PM PDT

வேலைக்கார பெண்ணுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளமும், ஆண்டுக்கு 15 நாள் சம்பளத்துடன்கூடிய விடுமுறையும், பிரசவ விடுப்பும் வழங்க வகை செய்து மத்திய அரசின் தொழிலாளர் கொள்கை தயாராகிறது. "வீட்டு வேலைக்கார பெண்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. பாலியல்

பீகார் மாநில புதிய கவர்னராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்

Posted: 16 Aug 2015 07:45 PM PDT

பீகார் மாநில புதிய கவர்னராக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். தலைநகர் பாட்னாவில் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராம்நாத் கோவிந்த் பீகாரின் 36-வது கவர்னர் ஆவார்.

இன்னும் 2 ஆண்டுகளில் வங்கிகளில் 78 ஆயிரம் பேர் ஓய்வு பெறுகிறார்கள்

Posted: 16 Aug 2015 07:37 PM PDT

இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி, ஐ.டி.பி.ஐ., பாரதீய மகளிர் வங்கி உள்பட 22 தேசிய வங்கிகள் உள்ளன. இதில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் 78 ஆயிரத்து 800 பேர் அடுத்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுகிறார்கள்.

மத்திய அரசுக்கு பாராளுமன்ற நிலைக்குழு கண்டனம்: ராணுவத்துக்கு குண்டு துளைக்காத சட்டைகள் வாங்காதது ஏன்?

Posted: 16 Aug 2015 07:36 PM PDT

பாதுகாப்பு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை, சமீபத்தில் முடிந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நிலைக்குழு அனுமதி வழங்கியும், ராணுவத்துக்கு குண்டு துளைக்காத சட்டைகள் (புல்லட் புரூப்

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை: டி.ஜி.பி.க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது

Posted: 16 Aug 2015 07:31 PM PDT

ராஜஸ்தான் டி.ஜி.பி.க்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் 'எஸ்.எம்.எஸ்.' வந்தது. அதில் சுதந்திர தினத்தன்று ஜெய்ப்பூரில் குண்டு வெடித்து ரத்த ஆறு ஓடும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜெய்ப்பூர் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றத்தில் அமளி- சபையின் மையப்பகுதிக்கு சோனியா வந்தது அதிர்ச்சி அளித்தது: சுமித்ரா மகாஜன் பேட்டி

Posted: 16 Aug 2015 07:14 PM PDT

பாராளுமன்றத்தில் கடந்த 12-ந் தேதி நடந்த அமளியின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி, பாரதீய ஜனதா உறுப்பினர் ஒருவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதைக்கேட்ட சோனியா காந்தி கடும் அதிர்ச்சி அடைந்து ஆவேசத்துடன் சபையின் மையப்பகுதிக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™