Tamil News | Online Tamil News |
- பால் கொள்முதல் விலை சரிவால் கறவை மாடுகள் விற்பனை அதிகரிப்பு: மாதம் 12,000 மாடுகள் இறைச்சிக்காக கேரளாவிற்கு பயணம்
- கோவில்களில் ஆகம விதி இல்லை: குழு தகவல்
- தூக்கு தண்டனை கூடாது: சட்ட கமிஷன் பரிந்துரை
- டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம்: கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம்
- யானை தந்தம் கடத்தல் பின்னணியில் பயங்கர கும்பல்
- கருத்து கணிப்பின் 'பகீர்' பின்னணி
- பாகிஸ்தானை தாக்க நினைத்த இந்திரா: சி.ஐ.ஏ., இணையதளத்தில் புது தகவல்
- 'பெண்களின் வேலை தான் என் பணி': அருண் ஜெட்லி பேட்டி
- பேச்சை தொடர முடியாது : பாக்., திட்டவட்டம்
- படேல் ஜாதியினர் மீண்டும் போராட முடிவு
- ஷீனா கொலையில் 'திடுக்' திருப்பம்: முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு?
| Posted: தமிழகத்தில், அளவுக்கு அதிகமாக பால் உற்பத்தியாகும் நிலையில், பாலை கொள்முதல் செய்ய, 'ஆவின்' மற்றும் தனியார் நிறுவனங்கள் மறுப்பதால், கறவை மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழக மாட்டுச் சந்தைகளில், மாதம், 12 ஆயிரம் கறவை மாடுகள் விற்கப்பட்டு, இறைச்சிக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கால்நடைத் துறை தகவலின்படி, தமிழகம் முழுவதும், 1.12 கோடி பசு மாடுகளும், 20 லட்சம் எருமை மாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளில், அரசு சார்பில் மட்டும், 48 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. |
| கோவில்களில் ஆகம விதி இல்லை: குழு தகவல் Posted: சென்னை: கோவில்களின் பாரம்பரியம் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகள் மீது, அரசு எடுக்க உள்ள நடவடிக்கையை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆங்கில நாளிதழ் ஒன்றில், 'பழமையான கோவில்களின் புராதனத்தை பாதுகாக்க, 17 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, தமிழக அரசு அமைக்கவில்லை' என, செய்தி வெளியானது. |
| தூக்கு தண்டனை கூடாது: சட்ட கமிஷன் பரிந்துரை Posted: புதுடில்லி: 'பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுபவர்கள் தவிர்த்து பிறருக்கு துாக்கு தண்டனை விதிக்க கூடாது' என, மத்திய அரசுக்கு, சட்டக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.'மரண தண்டனை மனித குலத்திற்கு எதிரானது' என, ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உலக நாடுகள் பலவற்றில், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவும் மரண தண்டனையை கைவிட வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.இதுகுறித்து, கடந்த சில மாதங்களாக சட்டக் கமிஷன் தீவிரமாக ஆலோசனை செய்தது; பல தரப்பினரின் கருத்தையும் கேட்டறிந்தது.இந்நிலையில், அறிக்கையை மத்திய அரசிடம், சட்டக்கமிஷன் ... |
| டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம்: கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம் Posted: பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக, 'எலக்ட்ரானிக் பேமென்ட்' எனப்படும், கடன் அல்லது பண அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.'நெட் பேங்கிங்' எனப்படும், வங்கிகளின் இணையதளம் வழியாக பணம் செலுத்துவது, அதே முறையில், அவரவர் மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்தும், 'மொபைல் பேங்கிங்', ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கியின் கணக்கிற்கு இணையதளம் மூலம் பணத்தை மாற்றும் வழிமுறை போன்றவை மூலம் பணம் செலுத்துவதை, மத்திய அரசு ஊக்குவிக்கிறது. ... |
| யானை தந்தம் கடத்தல் பின்னணியில் பயங்கர கும்பல் Posted: கொச்சி: இந்தியாவில், யானைகள் கொல்லப்படும் சம்பவங்களின் பின்னணியில், மாநிலங்களுக்கு இடையே, அமைப்பு ரீதியாக செயல்படும் கடத்தல் கும்பல்கள் இருப்பதாக, உலக வனவிலங்கு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில், சமீபகாலமாக மாநிலங்கள் இடையே, அமைப்பு ரீதியாக செயல்படும் கடத்தல் கும்பல்கள், வனவிலங்குகளை வேட்டையாடி, தந்தம், பல், தோல் போன்ற பொருட்களை, வர்த்தகம் செய்து வருகின்றன. இதுதொடர்பாக, 'டிராபிக்' எனப்படும், உலக வனவிலங்கு கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளதாவது:இந்தியாவில், யானைத் தந்தத்துக்கு, எப்போதும் தேவை இருந்து வருகிறது. இந்தியாவின் ... |
| கருத்து கணிப்பின் 'பகீர்' பின்னணி Posted: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக, சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின் பின்னணி குறித்து, தி.மு.க.,வுக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. |
| பாகிஸ்தானை தாக்க நினைத்த இந்திரா: சி.ஐ.ஏ., இணையதளத்தில் புது தகவல் Posted: வாஷிங்டன்: 'அண்டை நாடான பாகிஸ்தான், அணு ஆயுத தொழில்நுட்பத்தை பெற்று அந்த துறையில் வளர்ந்து வருவதை அறிந்த அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா, பாகிஸ்தானின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில், அந்நாட்டை தாக்க நினைத்தார்' என, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அமெரிக்க உளவு அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:அணு ஆயுத தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து வந்த பாகிஸ்தான், அமெரிக்காவிடமிருந்து, 'எப் - 16' ரக போர் விமானங்களை வாங்குவதை அறிந்ததும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அது மிகுந்த ... |
| 'பெண்களின் வேலை தான் என் பணி': அருண் ஜெட்லி பேட்டி Posted: புதுடில்லி: ''நாட்டின் நிதியமைச்சரான என் வேலை, வீட்டுப் பெண்களின் பணி போன்றதே. அதாவது, ஒவ்வொரு பைசாவையும் சிக்கனமாக செலவழித்து, மாதக் கடைசியில் பணக்கஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வது தான், என் முக்கிய வேலை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். முன்னாள் ராணுவத்தினர், 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' வழங்கக் கோரி, டில்லியில், 78 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நிருபர்களை சந்தித்த, அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:முன்னாள் ராணுவத்தினருக்கு, ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் வழங்க தயாராக இருக்கிறோம்; ஆனால், அவர்கள் கேட்பது போல, ஒவ்வொரு ... |
| பேச்சை தொடர முடியாது : பாக்., திட்டவட்டம் Posted: இஸ்லாமாபாத் : '' இந்தியா - பாக்., இடையிலான அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க, ஒப்புக் கொண்டால் மட்டுமே, பேச்சில் பாக்., பங்கேற்கும்,'' என, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சர்தாஜ் அஜீஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.அவர், தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டியை, பாக்., வானொலி ஒலிபரப்பியது.அதில் அவர் கூறியதாவது:இந்தியா - பாக்., எல்லையில் பதற்றம் நிலவுகிறது; இதை தணிப்பது குறித்து, இவ்வாரம், இரு நாட்டு எல்லை பாதுகாப்பு தலைவர்கள், பேச்சு நடத்த உள்ளனர். அதே சமயம், இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின், பேச்சு ரத்தானதற்கு, இந்தியா விதித்த நிபந்தனைகள் தான் ... |
| படேல் ஜாதியினர் மீண்டும் போராட முடிவு Posted: ஆமதாபாத்: குஜராத்தில், ஓ.பி.சி., அந்தஸ்து கோரி, கடந்த மாதம் பெரிய அளவில் போராட்டம் நடத்திய படேல் ஜாதியினர், இன்று முதல், அடுத்த கட்ட போராட்டத்தை துவக்கப் போவதாக அறிவித்துள்ளனர். பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான குஜராத்தில், பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் அந்தஸ்தில் உள்ள படேல் ஜாதியினர், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கோரியுள்ளனர். ஓ.பி.சி., அந்தஸ்து கிடைத்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 27 சதவீத இட ஒதுக்கீடு தங்களுக்கு கிடைக்கும் என்பதற்காக, ஹர்திக் படேல், 22, தலைமையில் போராடி வருகின்றனர். ... |
| ஷீனா கொலையில் 'திடுக்' திருப்பம்: முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு? Posted: மும்பை: ஷீனா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி உள்ளிட்ட மூன்று பேரின் போலீஸ் காவல், மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையில், மேலும் சில முக்கிய நபர்களுக்கு தொடர்பிருக்கலாம் என, போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஸ்டார் இந்தியா, 'டிவி' சேனலின் முன்னாள் தலைமை நிர்வாகி, பீட்டர் முகர்ஜி. இவரின் இரண்டாவது மனைவி இந்திராணி, தன் முதல் கணவர் மூலம் பிறந்த மகளான, ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 01,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |