Tamil News | Online Tamil News |
- மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை
- மத்திய அரசின் திட்டங்கள் குறைப்பு? வரும் 4ல் 'நிடி ஆயோக்' விவாதம்
- வைர கடத்தலில் தாவூத்
- பிளாஸ்டிக், பாலிதீன் கவர்களில் உணவு பண்டங்களுக்கு தடை? மத்திய அரசின் கருத்தை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்
- பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா எகத்தாளம்: 'எங்களின் போராட்டத்தால் தான் நில மசோதா முடங்கியது'
- விவசாயிகளை குழப்பும் எதிர்க்கட்சிகள்: மோடி உருக்கம்
- கருணாநிதி - ஸ்டாலின் இடையே புகைச்சல்
- கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை அமோகம்
- இலங்கையிடம் 'விரஹா' கப்பல்: தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு
- 2 கிலோ சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு அடுத்த திட்டம்
- கீதாவை ஒப்படைக்க பாக்., கோர்ட்டில் வழக்கு
| மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை Posted: அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள், நாளை துவங்குகின்றன. மாணவர்கள், 'ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது; மாணவியருக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில், ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரி, 20வது மருத்துவக் கல்லுாரியாக இணைந்து உள்ளது.இந்த கல்லுாரிகளில் உள்ள, 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்களுக்கும், இரண்டு கட்டங்களாக மாணவர் சேர்க்கை முடிந்து, ... |
| மத்திய அரசின் திட்டங்கள் குறைப்பு? வரும் 4ல் 'நிடி ஆயோக்' விவாதம் Posted: புதுடில்லி:'திட்டக் கமிஷனுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பின், மாநில முதல்வர்களை உள்ளடக்கிய துணைக்குழு கூட்டம், மத்திய அரசு திட்டங்கள் எண்ணிக்கையை குறைப்பது குறித்து, செப்டம்பர் 4ல், விவாதித்து முடிவெடுக்கும்' என, மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:மத்திய பிரதேச முதல்வரான, பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான துணைக்குழு, நான்கு முறை கூடி விவாதித்து உள்ளது. அதில், மத்திய அரசு நிதியுதவி மூலம் மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களை, 72ல் இருந்து, 30 ஆகக் குறைப்பது; ... |
| Posted: மும்பை:மும்பை நிழலுலக தாதாவும், மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக இருந்தவனுமான தாவூத் இப்ராகிம், 'பிளட் டயமண்ட்' எனப்படும், முறைகேடாக வெட்டியெடுக்கப்படும் வைர வியாபாரத்தில் கோடி கோடியாக குவித்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன. மும்பையில், 1993ல், 257 அப்பாவிகள் உயிரை பலி வாங்கிய தொடர் வெடிகுண்டு தாக்குதலை அரங்கேற்றிய தாவூத் இப்ராகிம், தாக்குதலுக்கு முன், தன் உறவினர்களுடன் பாகிஸ்தான் தப்பிச் சென்று விட்டான்.அந்நாட்டின் உளவு அமைப்பான, இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும், ஐ.எஸ்.ஐ.,யின் அரவணைப்பில் இருக்கும் தாவூத் ... |
| Posted: புதுடில்லி: மருந்து மற்றும் உணவுப் பொருட்களை, பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதை, முழுமையாக தடை செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, அந்த நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தை கேட்டுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 'ஹிம் ஜக்குருதி' என்ற அமைப்பு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், 'மருந்து மற்றும் உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகின்றன; இது, உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களில் இவற்றை விற்பனை செய்வதற்கு, ... |
| Posted: பாட்னா: ''எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பால், மத்திய அரசு பணிந்துவிட்டது; விவசாயிகளுக்கு எதிரான, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கைவிட்டுவிட்டது. அந்த மசோதா தேவையில்லை என்பதே மக்களின் விருப்பம்; அது நிறைவேறிவிட்டது,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா பேசினார்.தேர்தல் பிரசாரத்திற்காக, இருமுறை பீகாருக்கு சென்ற பிரதமர் மோடி, நிதிஷ் குமார் அரசையும், அவருடன் புதிதாக கூட்டு சேர்ந்துள்ள லாலு பிரசாத்தையும் கடுமையாக சாடி இருந்தார். மேலும், காங்கிரசின் சந்தர்ப்பவாத கூட்டணியையும் விமர்சித்திருந்தார்.இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில், ... |
| விவசாயிகளை குழப்பும் எதிர்க்கட்சிகள்: மோடி உருக்கம் Posted: புதுடில்லி: ''நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து, ஒரு சிலர், விவசாயிகளிடம் பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். நில மசோதா தொடர்பாக, எவ்வித ஆலோசனை தெரிவிக்கப்பட்டாலும், அதை, மசோதாவில் சேர்க்க தயாராக உள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை, அகில இந்திய வானொலி மூலம், 'மனதின் குரல்' என அழைக்கப்படும், 'மன் கீ பாத்' என்ற தலைப்பில், உரை நிகழ்த்தி வருகிறார். வதந்தியை பரப்புகின்றனர்: நேற்று, அவர் நிகழ்த்திய உரை:நில மசோதா தொடர்பாக, ஒரு தரப்பினர் தேவையற்ற வதந்தியை ... |
| கருணாநிதி - ஸ்டாலின் இடையே புகைச்சல் Posted: 'மக்கள் ஆய்வு மையம்' வெளியிட்ட கருத்து கணிப்புக்குப் பின், 'தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்' என, அவரது ஆதரவு மாவட்ட செயலர்கள் வலியுறுத்துவதால், கருணாநிதி, ஸ்டாலின் இடையே புகைச்சல் உருவாகி உள்ளது.அதனால், பெரம்பலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ள ஸ்டாலின், முக்கிய முடிவு எடுக்க, விரைவில் பெங்களூருக்கு செல்ல உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை அமோகம் Posted: கோவை: கோவையில், கூலிப்படை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம், தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தலைதுாக்கி உள்ளதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது; கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை அமோகமாக நடக்கிறது.தமிழகத்தில், துப்பாக்கி கலாசாரம் துளிர்விட்டதை உறுதிப்படுத்தும் வகையில், கோவையில் சில நாட்களுக்கு முன், வாகனத்தில் வந்த மூவரை, கூலிப்படை கும்பல், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது.தனிநபர் ஒருவர், தன் பாதுகாப்புக்கு, துப்பாக்கி உரிமம் வாங்க போலீஸ் கமிஷனர், கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும். பலகட்ட விசாரணைக்கு பின், ... |
| இலங்கையிடம் 'விரஹா' கப்பல்: தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு Posted: ராமேஸ்வரம்: போரின்போது, விடுதலைப் புலிகளின் கடல் பிரிவு வீரர்களை அழிக்க உதவிய, இந்திய, 'விரஹா' கப்பல், இலங்கையிடமே தாரை வார்க்கப்பட்டதற்கு, தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கடந்த, 2006ம் ஆண்டில் இலங்கையில் ராணுவம், விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த போரின்போது, அப்போதைய மத்திய காங்., அரசு, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான, 'விரஹா' எனும் ரோந்து கப்பலை, ஒப்பந்த அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியது. இந்த கப்பல், 75 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்டது; பீரங்கி, நீர்மூழ்கி கப்பலை கண்டறியும் நவீன ரேடார் ஆகியவை உள்ளன.இலங்கை இறுதிக்கட்ட ... |
| 2 கிலோ சிலிண்டர் விற்பனை: மத்திய அரசு அடுத்த திட்டம் Posted: புதுடில்லி: ஏழை குடும்பங்கள் பயனடையும் வகையிலும், எளிதாக எடுத்துச் செல்லும் வகையிலும், 2 கிலோ எடையுள்ள சமையல், 'காஸ்' சிலிண்டர்களை விற்பனை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான சமையல் காஸ் இணைப்பை பெற, 'ஆன் - லைன்' மூலமாக பதிவு செய்யும் திட்டம், நேற்று துவக்கி வைக்கப்பட்டது. டில்லியில், இந்த திட்டத்தை துவக்கி வைத்த, மத்திய பெட்ரோலிய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான் பேசியதாவது:வாடிக்கையாளர்கள், இந்த திட்டத்தின் சமையல் காஸ் இணைப்பு பெறுவதற்கு, ஆன் - லைன் மூலமாக முன்பதிவு செய்ய முடியும். பதிவு செய்த, 48 மணி நேரத்துக்குள், ... |
| கீதாவை ஒப்படைக்க பாக்., கோர்ட்டில் வழக்கு Posted: கராச்சி: அண்டை நாடான பாகிஸ்தானில், தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ள, கீதா, 23, என்ற வாய் பேச இயலாத பெண்ணை, இந்திய பெற்றோருடன் சேர்ப்பதற்காக, தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாலிக் என்பவர், கராச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோர்ட், கீதா மற்றும் அவரை பாதுகாத்து வரும், 'எதி பவுண்டேஷன்' நிறுவனத்தின் தலைவர் அப்துல் சத்தார் எதி ஆகியோர், இன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்திய எல்லைக் கிராமம் ஒன்றில் வசித்ததாக கருதப்படும் கீதா, 4 வயதில், தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 31,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |