Tamil News | Online Tamil News |
- சென்னை உட்பட தமிழகத்தில் 12 நகரங்கள்...தேர்வு: 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்ற மத்திய அரசு முடிவு
- 'ஜி.எஸ்.எல்.வி.,' ராக்கெட் சாதனை வெற்றி
- ஆரோக்கிய பராமரிப்பு வசதி 184 மாவட்டங்கள் தேர்வு: மோடி
- அதிருப்தி அடைந்த அமித் ஷா!
- நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார்
- 'மவுலிவாக்கம் விபத்து அறிக்கை முழுமையாக இல்லை'
- நிபந்தனையை தளர்த்த இளங்கோவன் மனு
- இன்னும் இரு ஆண்டுகளில் பக்கிங்ஹாம் கால்வாயில் படகு
- விஜயகாந்துக்கு எதிரான புகார் மீண்டும் விசாரிக்க உத்தரவு
| சென்னை உட்பட தமிழகத்தில் 12 நகரங்கள்...தேர்வு: 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்ற மத்திய அரசு முடிவு Posted: நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசின், கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல் சுற்றில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகியுள்ள, 98 நகரங்களை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, அறிவித்தார். சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட, தமிழகத்தின், 12 நகரங்கள், இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பின், பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், மோடி அரசின் கனவுத் திட்டமாகக் கருதப்படுகிறது. ... |
| 'ஜி.எஸ்.எல்.வி.,' ராக்கெட் சாதனை வெற்றி Posted: சென்னை:தகவல் தொடர்புக்கு உதவும், 'ஜி-சாட் 6' செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி., டி6' ராக்கெட் நேற்று மாலை வெற்றிகரமாக, புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ', தகவல் தொடர்புக்கு உதவும், 'ஜி-சாட்-' வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜி.எஸ்.எல்.வி., - டி6 ராக்கெட் மூலம், ஜி-சாட் 6 செயற்கைக்கோள், நேற்று, மாலை, 4:52க்கு, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், 2வது ஏவுதளத்திலிருந்து, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.விண்ணில் செலுத்தப்பட்ட, 17வது நிமிடத்தில், ஜிசாட் 6 செயற்கைக்கோள், ... |
| ஆரோக்கிய பராமரிப்பு வசதி 184 மாவட்டங்கள் தேர்வு: மோடி Posted: புதுடில்லி:''ஆரோக்கிய பராமரிப்பில் மிகவும் பின்தங்கியுள்ள, 184 மாவட்டங்களில், சிறப்பு திட்டங்கள் மூலம், சுகாதார வசதியில் தன்னிறைவு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்சி மாநாடு: டில்லியில், 24 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற, 'கால் டு ஆக் ஷன்' உச்சிமாநாட்டை, மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமான சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும். இத்துறையில், மாநிலங்களிடையே உள்ள பாகுபாட்டை போக்கி, மேம்பட்ட ஆரோக்கிய பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக, பின்தங்கிய, 184 மாவட்டங்கள் ... |
| Posted: புதுச்சேரியில், விரைவில் காலியாகவுள்ள ராஜ்யசபா எம்.பி., பதவியை, பா.ஜ.,வுக்கு விட்டுத் தர, அமித் ஷா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, 25ம் தேதி, புதுச்சேரி வந்தார். கட்சியினரை சந்திப்பதற்கு முன், புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை சந்தித்தார்.அப்போது, புதுச்சேரியில் விரைவில் காலியாகவுள்ள, ராஜ்யசபா எம்.பி., பதவியை, கூட்டணி கட்சியான, பா.ஜ.,வுக்கு விட்டுக் கொடுக்குமாறு ரங்கசாமியிடம், கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து, பா.ஜ., பிரமுகர்கள் ... |
| நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார் Posted: பெங்களூரு:ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, விதிமுறைகளை மீறி, பெங்களூருவிலும், மைசூருவிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக, சமூக ஆர்வலர் குழுவினர் புகார் எழுப்பியுள்ளனர்.தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து, 'கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊழலுக்கு எதிராக போராடி வருகின்றனர். உத்தரவிடும்படி...: சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, கடந்த, 24ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீது, சொத்து குவிப்பு ... |
| 'மவுலிவாக்கம் விபத்து அறிக்கை முழுமையாக இல்லை' Posted: சென்னை:''மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக, நீதிபதி ரகுபதி அளித்துள்ள அறிக்கை, முழுமை பெறாத அறிக்கை,'' என, தி.மு.க., சட்டசபை கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.அவர் நேற்று கூறியதாவது:மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து, நீதிபதி ரகுபதி சமர்ப்பித்த விசாரணை அறிக்கை, இரு நாட்களுக்கு முன், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல குளறுபடிகள் உள்ளன; முழுமை பெறாத அறிக்கையாக உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக்கு குழுமமான - சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம், என்ன விசாரணை நடந்தது என்ற குறிப்பு இல்லை.விசாரணை கமிஷன் சட்டப்பிரிவு - 8ன்படி, கமிஷனுக்கென, சில விதிமுறைகள் ... |
| நிபந்தனையை தளர்த்த இளங்கோவன் மனு Posted: சென்னை:'தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு, அச்சுறுத்தல் உள்ளது; எனவே, முன் ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.காமராஜர் அறக்கட்டளையில் வேலை செய்தவர் வளர்மதி. இவர், போலீசில் கொடுத்த புகாரை அடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், அறக்கட்டளை நிர்வாகி நாராயணன் ஆகியோர் மீது, தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில், இளங்கோவன், நாராயணன் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி, 'மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்' என, நிபந்தனை ... |
| இன்னும் இரு ஆண்டுகளில் பக்கிங்ஹாம் கால்வாயில் படகு Posted: பக்கிங்ஹாம் கால்வாயில் 2017ம் ஆண்டு படகு போக்குவரத்து துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது; இதற்கான பணிகள், டிசம்பர் மாதம் துவங்குகிறது.கடந்த 1806ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில், கவர்னராக இருந்த பக்கிங்ஹாம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து, தமிழகத்தின் மரக்காணம் வரை 418 கி.மீ., துாரத்துக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் வெட்டினார்; அந்த கால்வாய் அவர் பெயரால் 'பக்கிங்ஹாம் கால்வாய்' என்றே அழைக்கப்படுகிறது.நாளடைவில் சாலை மற்றும் ரயில் போக்கு வரத்து அதிகரித்துவிட்டதால் பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழி போக்குவரத்து 1950ம் ஆண்டு- நிறுத்தப்பட்டது. சென்னையில் ... |
| விஜயகாந்துக்கு எதிரான புகார் மீண்டும் விசாரிக்க உத்தரவு Posted: சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீதான புகாரை, மீண்டும் விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான பஷீர் அகமது என்ற விஜய் கார்த்திக் என்பவர், மே 11ம் தேதி, சென்னை, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரை பதிவு செய்யாததால், வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீடு எதிரில், என் அலுவலகம் உள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்து, மே மாதம் உத்தரவிட்டது. அலுவலகம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 28,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |