Tamil News | Online Tamil News |
- கட்சிகளை ஆர்.டி.ஐ., வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
- கணிதப்பிழை இல்லை: ஜெ., பதில் மனு
- சட்டசபையில் பிரியாணி விருந்துக்கு தடை?
- நாகாலாந்து உடன்படிக்கை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது: மோடி பெருமிதம்
- 'அண்ணா நூலகத்தை உடனடியாக தரம் உயர்த்த வேண்டும்!'
- பேச அனுமதிக்கவில்லை: சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் புகார்
- இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி'அவுட்!': 7 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் பெரும் வீழ்ச்சி
- தே.மு.தி.க., தவிர்க்க முடியாத சக்தி: சமூக வலைதளத்தில் விஜயகாந்த் கடிதம்
- இந்தியாவிற்குள் நுழைய காத்திருக்கும் பயங்கரவாதிகள்
- நாட்டின் வெங்காய இறக்குமதி அதிகரிப்பு
- 'இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்'
| கட்சிகளை ஆர்.டி.ஐ., வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம் Posted: புதுடில்லி:'அரசியல் கட்சிகளை, தகவல் அறியும் உரிமை சட்டமான, ஆர்.டி.ஐ.,யின் கீழ் கொண்டு வர முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.அரசியல் கட்சிகளை, ஆர்.டி.ஐ., வரம்பிற்குள் கொண்டுவரக் கோரி, ஜனநாயகத்திற்கான சீர்திருத்தம் என்ற அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. |
| கணிதப்பிழை இல்லை: ஜெ., பதில் மனு Posted: புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில், விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், தமிழக முதல்வர் ஜெய லலிதா பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்; கர்நாடகா ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், கணிதப்பிழை எதுவும் இல்லை என்றும், தான் விடுவிக்கப்பட்டது சரியே என்றும், மனுவில், ஜெயலலிதா கூறியுள்ளார். |
| சட்டசபையில் பிரியாணி விருந்துக்கு தடை? Posted: 'நிதி நிலைமை மோசமாக உள்ளதால், மானிய கோரிக்கை மதிய விருந்து செலவில் இருந்து, மின் வாரியத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதிக விலைக்கு மின் கொள்முதல்; வட்டி செலவு உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாடு மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் துவங்கி உள்ளது; தினமும், ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும். சம்பந்தப்பட்ட துறை சார்பில், உணவு இடைவேளையின் போது, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அசைவம், சைவ உணவு வகைகள் வழங்கப்படும். துறை செயலர்கள், அமைச்சர்கள் ... |
| நாகாலாந்து உடன்படிக்கை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது: மோடி பெருமிதம் Posted: புதுடில்லி: ''நாகாலாந்து தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கை, வடகிழக்கு மாநிலங்களுக்குமட்டுமல்ல, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது,'' என, பிரதமர் மோடி பேசினார். |
| 'அண்ணா நூலகத்தை உடனடியாக தரம் உயர்த்த வேண்டும்!' Posted: சென்னை: 'சென்னையில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை முறையாக பராமரித்து தரம் உயர்த்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| பேச அனுமதிக்கவில்லை: சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் புகார் Posted: சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டசபையில் பேச அனுமதிக்காததற்கு, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தி.மு.க., - ஸ்டாலின்: சபை கூடியதும், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி, முதலில் இரங்கல் தீர்மானத்தை, சபாநாயகர் வெளியிட்டிருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சபாநாயகர் புகழாரம் வாசித்தார். குறைந்தது, 50 முறை, அமைச்சர்கள் உட்பட, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டினர்; இந்த நிகழ்ச்சியை, மறுநாள் வைத்திருக்கலாம். அப்துல் கலாம் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் ... |
| Posted: புதுடில்லி: சீனாவின் பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் வட்டி உயரும் சூழல் போன்ற காரணங்களால், நேற்று, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள், வரலாறு காணாத சரிவைச் சந்தித்தன.பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவடைந்ததால், முதலீட்டாளர்களுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்', வர்த்தகத்தின் இடையே 1,741.35 புள்ளிகளை இழந்தது. இது, கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட, மூன்றாவது மிகப் பெரிய சரிவு. இதற்கு முன், 2008, ஜன., ... |
| தே.மு.தி.க., தவிர்க்க முடியாத சக்தி: சமூக வலைதளத்தில் விஜயகாந்த் கடிதம் Posted: சென்னை : 'அரசியலில், தே.மு.தி.க., தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது' என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, சமூக வலைதளம் வாயிலாக, விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.அவரின் கடித விவரம்:ஆட்சியாளர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பல இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்து வருகிறோம். 'நமக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக்கி, மக்களுக்கு தொண்டு செய்வோம்' என்று உறுதி ஏற்போம்.தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆனால் ஆட்சியாளர்களோ, 'டாஸ்மாக்' வருமானத்திற்காக, அதை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.தமிழகத்தில், பல பிரச்னைகள் ... |
| இந்தியாவிற்குள் நுழைய காத்திருக்கும் பயங்கரவாதிகள் Posted: புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியுள்ள, 300 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைவதற்கான தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது.நாட்டின் அமைதியை சீர்குலைக்க, பாக்., பயங்கரவாதிகள் பயங்கர சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியுள்ள அவர்கள், எந்த நேரத்திலும் ஜம்மு - காஷ்மீரில் நுழையலாம் எனவும், உளவுத்துறை அதிகாரிகள் தகவல் திரட்டியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாக்., ஆக்கிரமிப்பு ... |
| நாட்டின் வெங்காய இறக்குமதி அதிகரிப்பு Posted: புதுடில்லி: நாளுக்கு நாள் வெங்காயம் விலை அதிகரித்து வருவதை அடுத்து, தேவையை சமாளிக்க, ஆப்கானிலிருந்து செய்யப்படும் வெங்காய இறக்குமதி அதிகரித்துள்ளது.இதுகுறித்து, பஞ்சாப்பைச் சேர்ந்த வெங்காய வியாபாரி கூறியதாவது:நாட்டின் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ வெங்காயம், 80 - 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தேவையை சமாளிக்க, ஆப்கானிலிருந்து தினமும், 6 - 7 லாரிகளில், வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. ... |
| 'இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்' Posted: கோவை:''இந்தியாவும், அமெரிக்காவும், உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,'' என, இந்தியாவுக்கான அமெரிக்க துாதரக அதிகாரி, ரிச்சர்ட் ராகுல் வர்மா கூறினார். கோவை வேளாண் பல்கலையில், இந்தியாவுக்கான அமெரிக்க துாதரக அதிகாரி ரிச்சர்ட் வர்மா உடனான, கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சென்னை துாதரக அதிகாரி பிலிப் எமைன், பல்கலை துணைவேந்தர் ராமசாமி முன்னிலை வகித்தனர். ரிச்சர்ட் வர்மா பேசியதாவது:வரும், 2050ம் ஆண்டுக்குள், உலக மக்கள் தொகை, 910 கோடியை அடையும். எனவே, உணவு உற்பத்தியை, 70 சதவீதமாக உயர்த்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 25,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |