Tamil News | Online Tamil News |
- 'தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும்'
- 'இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்': ஜெயலலிதா உத்தரவு
- 'மாஜி' அமைச்சர் ராஜாவுக்கு எதிராக ஆதாரம் உள்ளது
- 'கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை தவறல்ல!'
- மரண தண்டனை விதிக்கும் நடைமுறை ரத்தாகுமா? சட்ட கமிஷன் இந்த வாரம் அறிக்கை
- மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு
- சூரியசக்தி நகரம்:கோயம்புத்தூர் தேர்வு
- சோனியா மருமகனிடம் சோதனை: மகிழ்ச்சி என்கிறார் ராபர்ட் வாத்ரா
- தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவக்கம்: மதுவிலக்கு பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயார்
- ரயில்களில் கண்காணிப்பு கேமரா: ரூ.700 கோடி செலவிட முடிவு
| 'தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' Posted: சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:வரப்போகிறது, வரப்போகிறது என, நான்கைந்து மாதமாக சொல்லப்பட்டு வந்த, தமிழக சட்டசபை கூட்டம் கடைசியாக வந்து விட்டது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், பிரதான எதிர்க்கட்சியான, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், கூட்ட தொடர் முழுவதற்கும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு விட்டனர்.சபை காவலர்களுடன் மோதிய, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ஒரு கூட்ட தொடரில் மட்டுமின்றி, இரண்டாவது கூட்ட தொடரிலும், பங்கேற்க முடியாது என, சபாநாயகர் அறிவித்துள்ளார்.நடைபெறவுள்ள சட்டசபை கூட்ட தொடரில், அரசின் அனைத்து துறைகளுக்குமான ... |
| 'இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்': ஜெயலலிதா உத்தரவு Posted: சென்னை: 'தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனியும் தொடர வேண்டாம்' என, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை: காங்கிரஸ் பற்றியும், தன்னைப் பற்றியும் ஊடகங்களில் தினந்தோறும் செய்திகள் வர வேண்டும் என்பதற்காக, பல்வேறு முறையற்ற கருத்துகளை வெளியிட்டு வரும் இளங்கோவன், என்னை, பிரதமர் மோடி சந்தித்து பேசியதை கொச்சைப்படுத்தி, நாகரிகமற்ற, பண்பாடற்ற மற்றும் கீழ்த்தரமான முறையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் பிரச்னையில், பிரதமருக்கு ... |
| 'மாஜி' அமைச்சர் ராஜாவுக்கு எதிராக ஆதாரம் உள்ளது Posted: 'முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது வழக்கு தொடர, போதிய ஆதாரங்கள் உள்ளன' என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உட்பட, 17 பேர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சமீபத்தில் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, கடந்த 19, 20ம் தேதிகளில், டில்லியில் உள்ள ராஜாவின் வீடு உட்பட, 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது.இதில், 6.5 கிலோ வைரம் பதித்த தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி மற்றும் 200க்கும் மேற்பட்ட சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்நிலையில், தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த ... |
| 'கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை தவறல்ல!' Posted: புதுடில்லி: ''பணயத்தொகை கேட்டு நடக்கும் கடத்தல் குற்றங்களுக்கு, மரண தண்டனை விதிப்பதை, அபாண்டமானதாக கருத முடியாது,'' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. கடத்தல் மற்றும் கொலை வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம், 364 - ஏ பிரிவின் கீழ், மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், குற்றவாளி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு விவரம்: பணயத்தொகை கேட்டு நடக்கும் கடத்தல் சம்பவங்களில், சாதாரண கிரிமினல்கள் மட்டும் அல்லாது, பயங்கரவாதிகளும் ... |
| மரண தண்டனை விதிக்கும் நடைமுறை ரத்தாகுமா? சட்ட கமிஷன் இந்த வாரம் அறிக்கை Posted: புதுடில்லி: உலக நாடுகள் பலவற்றில், ரத்து செய்யப்பட்டுள்ள துாக்கு தண்டனைக்கு, இந்தியாவிலும் விடை கொடுக்கப்படுமா என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் நிலையில், அது தொடர்பான அறிக்கையை, மத்திய சட்டக் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டிடம் இந்த வாரம் வழங்க உள்ளது.மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' யாகூப் மேமனுக்கு, சமீபத்தில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, நாடு முழுவதும் விவாதம் கிளம்பியது. 'இந்த நாகரிக சமுதாய காலத்திலும், கொடூர குற்றம் புரிந்தவர்களை, அரசே கொலை செய்வதா?' என, ஒருசாராரும், 'கொடூர குற்றவாளிகளுக்கு ... |
| மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு Posted: புதுடில்லி: பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், பல நேரங்களில், மானிய சிலிண்டர் மட்டும் உணவு தயாரிக்க போதுமானதாக இருப்பதில்லை. இதனால், சந்தை விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன.அவற்றிற்கான பணத்தை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திரும்ப வழங்கி வந்தது. கடந்த ... |
| சூரியசக்தி நகரம்:கோயம்புத்தூர் தேர்வு Posted: புதுடில்லி: நாடு முழுவதும், 50 சூரியசக்தி நகரங்களை உருவாக்கும், 'மாஸ்டர் பிளானு'க்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், தமிழகத்தின் கோயம்புத்துார் நகரம், சோதனை அடிப்படையில், சூரியசக்தி நகரமாக உருவாக்க தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கூறியிருப்பதாவது:சூரிய சக்தி நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க, கடந்த 2009ல், 26 ஆலோசக நிறுவனங்களை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பணியில் அமர்த்தியது. இவற்றின் பரிந்துரைப்படி, நாடு முழுவதும், 60 சூரியசக்தி நகரங்களை ... |
| சோனியா மருமகனிடம் சோதனை: மகிழ்ச்சி என்கிறார் ராபர்ட் வாத்ரா Posted: புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின், 68, மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு, 46, வழங்கப்பட்டிருந்த, 'விமான நிலையங்களில் சோதனையிடக் கூடாது' என்ற சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இனிமேல் அவர் உள்நாட்டு விமான நிலையங்களில், சாதாரண பயணி போல சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதி, ராபர்ட் வாத்ரா மற்றும் சிலருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையை ரத்து செய்யுமாறு, கேட்டுக் கொண்டு உள்ளது.இதுகுறித்து, ராபர்ட் வாத்ரா கூறும்போது, ''மத்திய அரசின் முடிவு எனக்கு மகிழ்ச்சி ... |
| தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவக்கம்: மதுவிலக்கு பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயார் Posted: ஐந்து மாத இடைவெளிக்குப் பின், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், மதுவிலக்கு உட்பட, பல பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அதேநேரத்தில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், விஜயகாந்த் தவிர, மற்ற யாரும், கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்பதால், அவர் தனி ஆளாக சபைக்கு சென்று, விவாதங்களில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. 19 நாட்கள் சபை நடைபெற உள்ள, இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, முன்னாள் ... |
| ரயில்களில் கண்காணிப்பு கேமரா: ரூ.700 கோடி செலவிட முடிவு Posted: ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், 20 ஆயிரம் பெட்டிகளில், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 24,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |