Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ரூ. 25 கோடி மதிப்பு நிலம் மீட்பு
- மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுரை
- செப். 2-ல் வேலைநிறுத்தம்: மின் வாரிய ஊழியர்கள் பிரசாரக் கூட்டம்
- மண் திருட்டு: 2 டிராக்டர்கள் பறிமுதல்
- 50 மாணவர்கள் ரத்த தானம்
- ஆந்திர பந்த்: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்
- லாரி உரிமையாளர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
- வீரராகவர் கோயிலில் பவித்ர உற்சவ விழா
- புனித ஆரோக்கிய அன்னை ஆலயப் பெருவிழா
- பேரிடர் மேலாண்மை ஒத்திகை
- கல்விக்காக 4 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.வி.ரமணா
- இலவச கண் சிகிச்சை முகாம்
- கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- தலைமை ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
- இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
- மணல் கடத்தல்: 8 பேர் கைது
- பவானி அம்மன் கோயிலில் மகா மண்டபம் திறப்பு
- 100 ஆண்டுகள் பழைமையான அரச மரம் முறிந்து விழுந்தது: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- காஞ்சிபுரம்
- வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்
- ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்திய நாராயண பூஜை
- வரலட்சுமி விரதம்: திருவிளக்கு பூஜை
- ஸ்ரீராஜகாளீஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா
- இந்து முன்னணி தெருமுனை பிரசாரக் கூட்டம்
- பூலித்தேவன் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்
- தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதான சிக்னல்களைச் சீரமைக்க கோரிக்கை
- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் தர்னா
- செப். 1 இல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு முகாம்
- நாகம்பட்டி கல்லூரியில் ரத்த தான முகாம்
- 350 பேருக்கு விலையில்லா பொருள்கள்
- தூத்துக்குடியில் 658 பேருக்கு பட்டா அளிப்பு
- தீப்பெட்டி ஆலை உரிமையாளர் தற்கொலை
- "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தூத்துக்குடி: மத்திய அரசுக்கு வர்த்தக சபை நன்றி
- கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
- குறுக்குச்சாலை பள்ளியில் 190 மாணவர்களுக்கு சைக்கிள்
- இலவச சைக்கிள் வழங்கும் விழா
- தருவைகுளத்தில் மனுநீதி நாள் முகாம்
- கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
- நாசரேத் கல்லூரியில் ரத்த பரிசோதனை முகாம்
- ரெட்டார்குளம் கோயிலில் 504 திருவிளக்கு பூஜை
- தூத்துக்குடி
- நலத்திட்ட உதவிகள் அளிப்பு
- தேவேந்திர குல வேளாளர் சமூக ஆலோசனைக் கூட்டம்
- காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
- கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- நாகர்கோவிலில் ஐ.ஏ.எஸ். பயிற்சி முகாம்
- ஆரல்வாய்மொழி அருகே வீடுபுகுந்து பொருள்கள் திருட்டு
- நித்திரவிளை அருகே மர்மநபர்களால் கார் தீவைத்து எரிப்பு
- குமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு பிரசாரப் பயணம்
- திருநந்திக்கரையில் ஓணம் கொண்டாட்டம்
- குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா இன்று நிறைவு
- நாகர்கோவில்
- மீனாட்சிபுரம்,தெங்கம்புதூரில் செப்.1இல் மின்தடை
- மாதாந்திர பராமரிப்புப் பணி: குழித்துறையில் 11 மணி நேர மின்தடை: பொதுமக்கள் அவதி
- பிகார் தேர்தல்: அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு
- புது தில்லி
- ரகளை செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை: இருவர் கைது
- ஏடிஎம்மில் நூதன கொள்ளை: இருவர் சிக்கினர்
- காயமடைந்த வீரர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்
- சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது தெற்கு தில்லி மாநகராட்சி கடும் நடவடிக்கை
- தில்லி விமான நிலைய சேவை: புதிய செயலி அறிமுகம்
- ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: தில்லி தமிழ்ச் சங்கம் நன்றி
- படிக்கும் ஆர்வத்தை தூண்ட நடவடிக்கை எடுங்கள்: புத்தக பதிப்பகங்களுக்கு மத்திய இணை அமைச்சர் அறிவுறுத்தல்
- ஒரே பதவி, ஒரே ஒய்வூதியம்: வீரமரணம் அடைந்த அதிகாரியின் தாயார் போராட்டக்காரர்களுக்கு ராக்கி கட்டினார்
- விவேகானந்தா பூங்காவில் பெண்களுக்காக பாதுகாவலர்கள் நியமனம்
- சகோதரியின் இல்லத்துக்கு சென்று கொண்டாடிய கேஜரிவால்
- தில்லியில் ரக்ஷா பந்தன் உற்சாகக் கொண்டாட்டம்
- டிடிஇஏ பள்ளிகளில் தேசிய விளையாட்டு தினம்
- தில்லி புத்தகக் கண்காட்சி: மாணவர்களைக் கவரும் கிராஃபிக்ஸ் புத்தகங்கள்!
- ஆம் ஆத்மி எம்.பி.க்கள் இருவர் இடைநீக்கம்: கட்சி விரோதச் செயலால் மேலிடம் நடவடிக்கை
- ரத்ததான முகாம்
- ஆசிரியர்களுக்கு உடல் நலக் கல்வி பயிற்சி
- தோட்டத்துக்குள் புகுந்து 40 தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்
- வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில் இளைஞர் குத்திக் கொலை:15 ஆடுகள் வெட்டிச் சாய்ப்பு
- கருத்தரங்கம்
- கலாமின் 10 உறுதிமொழிகள்: ஆசிரியர் தினத்தில் ஏற்க வேண்டுகோள்
- "மதுரை வீரன் உண்மை வரலாறு':நூலுக்கான தடையை நீக்க நீதிமன்றத்தை நாட முடிவு
- மருதாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
- குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு
- மதுரையில் பழ வியாபாரி வீட்டில் ரூ.3.92 லட்சம் நகைகள் திருட்டு
- மேம்பாலம் அமைக்கக் கோரி மறியல்:ஒசூரில் 30 பேர் கைது
- உயர்கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு
- ரயிலில் 2 கிலோ தங்க நகைகள் திருட்டு:வழக்கு சேலத்துக்கு மாற்றம்
- மூவர் கொலை: வழக்குரைஞர்கள் உள்பட 8 பேர் கைது:கோவை, சேலம் சிறைகளில் அடைப்பு
- கட்டடப் பொறியாளர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு
- விவசாயி சாவு
- அறந்தாங்கி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் போலீஸாரிடம் ஒப்படைப்பு
- சாலை விபத்து: முதியவர் சாவு
- வேளாங்கண்ணியில் திருவிழா:சிறப்பு ரயில்கள் இயக்கம்
- மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர் சேர்ப்பு விழா
- முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...
- மதுரை, திருச்சியில் 101 டிகிரி வெயில்
- 7 அடி உயரத்துக்குள்பட்ட விநாயகர் சிலைகளையே வைக்க வேண்டும்: கோட்டாட்சியர் உத்தரவு
- கால்நடைகளுக்கு விடுபடாமல் கோமாரி தடுப்பூசி போடுங்கள்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை
- வியாபாரி வீட்டில் ரூ. 1.50 லட்சம் திருட்டு
- தங்கம்: பவுனுக்கு ரூ. 120 உயர்வு
- திறன் மேம்பாட்டுப் பயிற்சித் தொடக்கம்
- செவிலியர் பட்டயப் படிப்புக்கு நாளை முதல் கலந்தாய்வு
- வேடியப்பன் கோயில் திருவிழா விவகாரம்: கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் தீர்வு
- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் திருட்டு
| பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ரூ. 25 கோடி மதிப்பு நிலம் மீட்பு Posted: 29 Aug 2015 01:18 PM PDT ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றங்கரையோரத்தில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 25 கோடி மதிப்பிலான விவசாய நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர். |
| மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுரை Posted: 29 Aug 2015 01:17 PM PDT மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவுரை வழங்கினார். |
| செப். 2-ல் வேலைநிறுத்தம்: மின் வாரிய ஊழியர்கள் பிரசாரக் கூட்டம் Posted: 29 Aug 2015 01:17 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து மின் வாரிய ஊழியர்கள் பிரசாரக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினர். |
| மண் திருட்டு: 2 டிராக்டர்கள் பறிமுதல் Posted: 29 Aug 2015 01:16 PM PDT திருத்தணி அருகேயுள்ள தெக்களூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மண் திருடியதாக, 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 29 Aug 2015 01:16 PM PDT திருவள்ளூரை அடுத்த கொழுந்தலூரில் உள்ள வெங்கடேஸ்வரா அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், 50 மாணவர்கள் ரத்த தானம் அளித்தனர். |
| ஆந்திர பந்த்: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் Posted: 29 Aug 2015 01:15 PM PDT ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி பிரதான எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகப் பேருந்துகள், வாகனங்கள் எல்லையில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டன. |
| லாரி உரிமையாளர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன் Posted: 29 Aug 2015 01:14 PM PDT அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைத் தடுக்க லாரி உரிமையாளர்களிடம் மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். |
| வீரராகவர் கோயிலில் பவித்ர உற்சவ விழா Posted: 29 Aug 2015 01:13 PM PDT திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் பவித்ர உற்சவ விழா நடைபெற்று வருகிறது. |
| புனித ஆரோக்கிய அன்னை ஆலயப் பெருவிழா Posted: 29 Aug 2015 01:13 PM PDT வியாசர்பாடி சாஸ்திரி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 49-ஆம் ஆண்டு பெருவிழாவை சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் கொடியேற்றி சனிக்கிழமை இரவு தொடக்கி வைத்தார். |
| Posted: 29 Aug 2015 01:12 PM PDT கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள பாரத் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை அண்மையில் நடைபெற்றது. |
| கல்விக்காக 4 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.வி.ரமணா Posted: 29 Aug 2015 01:12 PM PDT அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக 4 ஆண்டுகளில் ரூ. 65 ஆயிரம் கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார் என பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறினார். |
| Posted: 29 Aug 2015 01:11 PM PDT மதுராந்தகம் இந்து கார்னேஷன் பள்ளி வளாகத்தில், இலவச கண் சிகிச்சை, கண்புரை அறுவைச் சிகிச்சைக்கான நோயாளிகள் தேர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 29 Aug 2015 01:10 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே கர்நாடகத்துக்குக் கடத்த முயன்ற ரூ.16.40 லட்சம் மதிப்புள்ள 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். |
| தலைமை ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் Posted: 29 Aug 2015 01:09 PM PDT காஞ்சிபுரம் அருகே நாகப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் கோவிந்தசாமியின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. |
| இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் Posted: 29 Aug 2015 01:08 PM PDT காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 29 Aug 2015 01:08 PM PDT காஞ்சிபுரத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பவானி அம்மன் கோயிலில் மகா மண்டபம் திறப்பு Posted: 29 Aug 2015 01:07 PM PDT ஜெயலலிதா தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றதை அடுத்து, வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மறைமலைநகர் அருள்மிகு பவானி அம்மன் கோயிலில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மகா மண்டபத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். |
| 100 ஆண்டுகள் பழைமையான அரச மரம் முறிந்து விழுந்தது: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு Posted: 29 Aug 2015 01:06 PM PDT செங்கல்பட்டு திம்மராஜபுரம் பகுதி ஜிஎஸ்டி சாலையில் தனியார் பேருந்து அலுவலகம் அருகே இருந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான அரச மரத்தின் கிளை வெள்ளிக்கிழமை இரவு திடீரென முறிந்து விழுந்தது. இதில், அருகே இருந்த மின் கம்பம் சாய்ந்தது. |
| Posted: 29 Aug 2015 01:05 PM PDT |
| வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் Posted: 29 Aug 2015 01:05 PM PDT காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவத்தின் முதல்நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்திய நாராயண பூஜை Posted: 29 Aug 2015 01:05 PM PDT பெளர்ணமியையொட்டி, மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்தில், சத்திய நாராயண பூஜையை தவயோகி ரகோத்தம்ம சுவாமி சனிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| வரலட்சுமி விரதம்: திருவிளக்கு பூஜை Posted: 29 Aug 2015 01:04 PM PDT வரலட்சுமி விரதத்தையொட்டி, செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன. |
| ஸ்ரீராஜகாளீஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா Posted: 29 Aug 2015 01:03 PM PDT ஆறுமுகனேரி பெரியான்விளை ஸ்ரீராஜகாளீஸ்வரி அம்மன் திருக்கோயில் கொடை விழா நடைபெற்றது. |
| இந்து முன்னணி தெருமுனை பிரசாரக் கூட்டம் Posted: 29 Aug 2015 01:02 PM PDT சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில், கொள்கை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம், இரட்டைகிணறு கிராமத்தில் நடைபெற்றது. |
| பூலித்தேவன் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் Posted: 29 Aug 2015 01:02 PM PDT சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாள் விழா செப். 1ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் துறை, வருவாய் துறை, சமுதாய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதான சிக்னல்களைச் சீரமைக்க கோரிக்கை Posted: 29 Aug 2015 01:01 PM PDT மதுரை - தூத்துக்குடி 47பி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இணைப்புச் சாலை வளைவுகளில் உள்ள பழுதான சிக்னல்களை சரி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலையோர கிராமப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் தர்னா Posted: 29 Aug 2015 01:01 PM PDT அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் செப். 2ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோவில்பட்டி கிளை சார்பில் சனிக்கிழமை தர்னா நடைபெற்றது. |
| செப். 1 இல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு முகாம் Posted: 29 Aug 2015 01:00 PM PDT தூத்துக்குடியில் மெர்க்கன்டைல் வங்கி சார்பில், செப். 1ஆம் தேதி பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| நாகம்பட்டி கல்லூரியில் ரத்த தான முகாம் Posted: 29 Aug 2015 01:00 PM PDT ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 12 ஆவது ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ். மூக்கையா முகாமைத் தொடங்கிவைத்தார். |
| 350 பேருக்கு விலையில்லா பொருள்கள் Posted: 29 Aug 2015 12:59 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 350 பேருக்கு அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன. |
| தூத்துக்குடியில் 658 பேருக்கு பட்டா அளிப்பு Posted: 29 Aug 2015 12:59 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 658 பேருக்கு பட்டாக்களை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினார். |
| தீப்பெட்டி ஆலை உரிமையாளர் தற்கொலை Posted: 29 Aug 2015 12:58 PM PDT கோவில்பட்டியில் தீப்பெட்டிக்கான மூலப்பொருள் விற்பனை நிலையம் மற்றும் தீப்பெட்டி ஆலை நடத்தி வந்தவர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தூத்துக்குடி: மத்திய அரசுக்கு வர்த்தக சபை நன்றி Posted: 29 Aug 2015 12:55 PM PDT தூத்துக்குடியை "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இணைத்து அறிவித்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய வர்த்தக சபை அறிவித்துள்ளது. |
| கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு Posted: 29 Aug 2015 12:54 PM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கணினித் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. |
| குறுக்குச்சாலை பள்ளியில் 190 மாணவர்களுக்கு சைக்கிள் Posted: 29 Aug 2015 12:53 PM PDT விளாத்திகுளம் அருகேயுள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| Posted: 29 Aug 2015 12:53 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| தருவைகுளத்தில் மனுநீதி நாள் முகாம் Posted: 29 Aug 2015 12:52 PM PDT விளாத்திகுளம் அருகேயுள்ள தருவைகுளத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. |
| கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து Posted: 29 Aug 2015 12:51 PM PDT கழுகுமலையில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. |
| நாசரேத் கல்லூரியில் ரத்த பரிசோதனை முகாம் Posted: 29 Aug 2015 12:51 PM PDT நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உள்தர உறுதிப்படுத்தும் குழு சார்பில் ரத்தப் பிரிவு கண்டறியும் முகாம் நடைபெற்றது. |
| ரெட்டார்குளம் கோயிலில் 504 திருவிளக்கு பூஜை Posted: 29 Aug 2015 12:51 PM PDT சாத்தான்குளம் அருகே உள்ள ரெட்டார்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள்,ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் மாவட்ட இந்து முன்னணி சார்பில் 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| Posted: 29 Aug 2015 12:50 PM PDT |
| Posted: 29 Aug 2015 12:49 PM PDT கோவில்பட்டியில் ஜூனியர் சாம்பர் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. |
| தேவேந்திர குல வேளாளர் சமூக ஆலோசனைக் கூட்டம் Posted: 29 Aug 2015 12:49 PM PDT கோவில்பட்டியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| காயல்பட்டினத்தில் கந்தூரி விழா Posted: 29 Aug 2015 12:48 PM PDT காயல்பட்டினத்தில் மகான் வரகவி காஸிம் புலவர் நாயகமின் கந்தூரி விழா 3 நாள்கள் நடைபெற்றது. |
| கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 29 Aug 2015 12:48 PM PDT அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் சனிக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். |
| நாகர்கோவிலில் ஐ.ஏ.எஸ். பயிற்சி முகாம் Posted: 29 Aug 2015 12:47 PM PDT சிகரம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சார்பில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டுதல் பயிற்சி, இப்பயிற்சியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு நாகர்கோவில் அசிசி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஆரல்வாய்மொழி அருகே வீடுபுகுந்து பொருள்கள் திருட்டு Posted: 29 Aug 2015 12:46 PM PDT நாகர்கோவிலை அடுத்த ஆரல்வாய்மொழி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நித்திரவிளை அருகே மர்மநபர்களால் கார் தீவைத்து எரிப்பு Posted: 29 Aug 2015 12:46 PM PDT நித்திரவிளை அருகே காரை தீவைத்து எரித்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| குமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு பிரசாரப் பயணம் Posted: 29 Aug 2015 12:45 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் குமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் சனிக்கிழமை பிரசாரப் பயணம் நடைபெற்றது. |
| திருநந்திக்கரையில் ஓணம் கொண்டாட்டம் Posted: 29 Aug 2015 12:45 PM PDT திருநந்திக்கரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் அறிவியல் இல்லம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. |
| குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா இன்று நிறைவு Posted: 29 Aug 2015 12:45 PM PDT குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. |
| Posted: 29 Aug 2015 12:44 PM PDT |
| மீனாட்சிபுரம்,தெங்கம்புதூரில் செப்.1இல் மின்தடை Posted: 29 Aug 2015 12:44 PM PDT மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செப்டம்பர் 1 ஆம் தேதி மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. |
| மாதாந்திர பராமரிப்புப் பணி: குழித்துறையில் 11 மணி நேர மின்தடை: பொதுமக்கள் அவதி Posted: 29 Aug 2015 12:43 PM PDT குழித்துறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 11 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்படுவது சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| பிகார் தேர்தல்: அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு Posted: 29 Aug 2015 12:42 PM PDT பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமானதாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளையும், சொந்த ஊரில் பணியாற்றும் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 29 Aug 2015 12:42 PM PDT |
| ரகளை செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை: இருவர் கைது Posted: 29 Aug 2015 12:41 PM PDT தென்மேற்கு தில்லியிலுள்ள தாஸ்னா கிராமத்தில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| ஏடிஎம்மில் நூதன கொள்ளை: இருவர் சிக்கினர் Posted: 29 Aug 2015 12:41 PM PDT தேசிய தலைநகர் வலயப் பகுதியான ஃபரீதாபாதில், ஏடிஎம்களில் நூதன மோசடியில் ஈடுபட்டு, அதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| காயமடைந்த வீரர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் Posted: 29 Aug 2015 12:40 PM PDT தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு போலீஸ்காரர், ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆறுதல் கூறினார். |
| சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது தெற்கு தில்லி மாநகராட்சி கடும் நடவடிக்கை Posted: 29 Aug 2015 12:39 PM PDT சொத்து வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கையை தெற்கு தில்லி மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நிகழாண்டில் சுமார் 3,000 பண்ணை வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| தில்லி விமான நிலைய சேவை: புதிய செயலி அறிமுகம் Posted: 29 Aug 2015 12:39 PM PDT விமானப் பயணிகளுக்கு தகவல்களை அளிக்கும் வகையில் ஃபிளைடெல் (flyDEL) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, "ஆப்பிள்' மென்பொருள் பயன்பாடு அடங்கிய செல்லிடப் பேசியில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. |
| ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர்: தில்லி தமிழ்ச் சங்கம் நன்றி Posted: 29 Aug 2015 12:34 PM PDT தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயர் சூட்ட முடிவு செய்துள்ளதற்காக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), மத்திய அரசு, தில்லி அரசு ஆகியவற்றுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. |
| Posted: 29 Aug 2015 12:33 PM PDT மக்களிடையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு பதிப்பகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தினார். |
| ஒரே பதவி, ஒரே ஒய்வூதியம்: வீரமரணம் அடைந்த அதிகாரியின் தாயார் போராட்டக்காரர்களுக்கு ராக்கி கட்டினார் Posted: 29 Aug 2015 12:32 PM PDT "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி விஜயந்த் தாப்பரின் தாயார் சனிக்கிழமை ராக்கி கயிறு கட்டினார். |
| விவேகானந்தா பூங்காவில் பெண்களுக்காக பாதுகாவலர்கள் நியமனம் Posted: 29 Aug 2015 12:32 PM PDT வடக்கு தில்லியிலுள்ள விவேகானந்தா பூங்காவுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஊர்க்காவல் படையினரை வடக்கு தில்லி மாநகராட்சி நியமித்துள்ளது. |
| சகோதரியின் இல்லத்துக்கு சென்று கொண்டாடிய கேஜரிவால் Posted: 29 Aug 2015 12:31 PM PDT சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரிலுள்ள தனது சகோதரியின் இல்லத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை சென்று கொண்டாடினார். |
| தில்லியில் ரக்ஷா பந்தன் உற்சாகக் கொண்டாட்டம் Posted: 29 Aug 2015 12:31 PM PDT சகோதாரத்துவத்தைப் போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை உற்சாகத்துடன் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| டிடிஇஏ பள்ளிகளில் தேசிய விளையாட்டு தினம் Posted: 29 Aug 2015 12:30 PM PDT தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தேசிய விளையாட்டு தினம் (ஆகஸ்ட் 29) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| தில்லி புத்தகக் கண்காட்சி: மாணவர்களைக் கவரும் கிராஃபிக்ஸ் புத்தகங்கள்! Posted: 29 Aug 2015 12:29 PM PDT தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய புத்தகக் கண்காட்சியில் "கிராஃபிக்ஸ்' மற்றும் அறிவியல் படைப்புகள் இளம் தலைமுறையினரை வெகுவாக ஈர்த்து வருகின்றன. |
| ஆம் ஆத்மி எம்.பி.க்கள் இருவர் இடைநீக்கம்: கட்சி விரோதச் செயலால் மேலிடம் நடவடிக்கை Posted: 29 Aug 2015 12:28 PM PDT தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இரு மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் தரம்வீரா காந்தி, ஹரிந்தர் சிங் கல்சா ஆகியோரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்து ஆம் ஆத்மி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. |
| Posted: 29 Aug 2015 12:27 PM PDT திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தீபம் அரிமா சங்கம் இணைந்து ரத்த தான முகாமை சனிக்கிழமை நடத்தின. |
| ஆசிரியர்களுக்கு உடல் நலக் கல்வி பயிற்சி Posted: 29 Aug 2015 12:27 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செய்யாறில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு உடல் நலக் கல்வி குறித்த பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. |
| தோட்டத்துக்குள் புகுந்து 40 தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல் Posted: 29 Aug 2015 12:26 PM PDT திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகே தனியார் தோட்டத்துக்குள் புகுந்து ஒரே நாளில் 40 தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார். |
| வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில் இளைஞர் குத்திக் கொலை:15 ஆடுகள் வெட்டிச் சாய்ப்பு Posted: 29 Aug 2015 12:25 PM PDT திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் குத்திக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் எதிர்த்தரப்பைச் சேர்ந்தவரின் 15 ஆடுகளை வெட்டிக் கொன்றனர். |
| Posted: 29 Aug 2015 12:25 PM PDT வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. |
| கலாமின் 10 உறுதிமொழிகள்: ஆசிரியர் தினத்தில் ஏற்க வேண்டுகோள் Posted: 29 Aug 2015 12:25 PM PDT ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 10 உறுதி மொழிகளை மாணவர்களும், இளைஞர்களும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவரது முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் கேட்டுக்கொண்டர். |
| "மதுரை வீரன் உண்மை வரலாறு':நூலுக்கான தடையை நீக்க நீதிமன்றத்தை நாட முடிவு Posted: 29 Aug 2015 12:24 PM PDT ஆதித் தமிழர் பேரவையின் தொழிலாளர் அணி சார்பில் வெளியிடப்பட்ட "மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற நூலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும், ஆளுநரிடம் முறையிடவும் முடிவு செய்திருப்பதாக பேரவையின் நிறுவனர் |
| மருதாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு Posted: 29 Aug 2015 12:24 PM PDT தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வந்தவாசியை அடுத்த மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அந்தப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு Posted: 29 Aug 2015 12:23 PM PDT குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவர்கள் 3 பேர் சனிக்கிழமை மாலை இறந்தனர். |
| மதுரையில் பழ வியாபாரி வீட்டில் ரூ.3.92 லட்சம் நகைகள் திருட்டு Posted: 29 Aug 2015 12:23 PM PDT மதுரையில் பழ வியாபாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.3.92 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றிருப்பது சனிக்கிழமை தெரியவந்தது. |
| மேம்பாலம் அமைக்கக் கோரி மறியல்:ஒசூரில் 30 பேர் கைது Posted: 29 Aug 2015 12:23 PM PDT மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| உயர்கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு Posted: 29 Aug 2015 12:23 PM PDT ஆரணியை அடுத்த தேவிகாபுரம் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ரயிலில் 2 கிலோ தங்க நகைகள் திருட்டு:வழக்கு சேலத்துக்கு மாற்றம் Posted: 29 Aug 2015 12:23 PM PDT ஆந்திரத்தைச் சேர்ந்த நகைக் கடை ஊழியரிடம் 2 கிலோ தங்க நகைகள் ரயிலில் திருடப்பட்ட விவகாரத்தில், இந்த வழக்கு கோவை ரயில்வே போலீஸில் இருந்து சேலம் ரயில்வே போலீஸýக்கு மாற்றப்பட்டுள்ளது. |
| மூவர் கொலை: வழக்குரைஞர்கள் உள்பட 8 பேர் கைது:கோவை, சேலம் சிறைகளில் அடைப்பு Posted: 29 Aug 2015 12:22 PM PDT கோவையில் மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதல்கட்டமாக கைது செய்யப்பட்ட இரு வழக்குரைஞர்கள் உள்பட 8 பேர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். |
| கட்டடப் பொறியாளர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 29 Aug 2015 12:22 PM PDT திருவண்ணாமலை மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கம், எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தின் அமைப்பியல் துறை இணைந்து கட்டடப் பொறியாளர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தின. |
| Posted: 29 Aug 2015 12:21 PM PDT செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். |
| அறந்தாங்கி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் போலீஸாரிடம் ஒப்படைப்பு Posted: 29 Aug 2015 12:21 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் திருப்புனவாசல் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. |
| Posted: 29 Aug 2015 12:21 PM PDT திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். |
| வேளாங்கண்ணியில் திருவிழா:சிறப்பு ரயில்கள் இயக்கம் Posted: 29 Aug 2015 12:20 PM PDT வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவிலில் நடைபெறும் திருவிழாவையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர் சேர்ப்பு விழா Posted: 29 Aug 2015 12:20 PM PDT திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், உறுப்பினர் சேர்ப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு... Posted: 29 Aug 2015 12:19 PM PDT மறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ. ஞானசேகரன் தெரிவித்தார். |
| மதுரை, திருச்சியில் 101 டிகிரி வெயில் Posted: 29 Aug 2015 12:19 PM PDT தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, திருச்சி, பாளையம்கோட்டையில் சனிக்கிழமை 101 டிகிரி வெயில் பதிவானது. இதேபோல நாகப்பட்டினத்தில் 100 டிகிரி வெயில் பதிவானது. |
| 7 அடி உயரத்துக்குள்பட்ட விநாயகர் சிலைகளையே வைக்க வேண்டும்: கோட்டாட்சியர் உத்தரவு Posted: 29 Aug 2015 12:18 PM PDT சதுர்த்தி விழாவையொட்டி, 7 அடி உயரத்துக்குள்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி அறிவுரை வழங்கிப் பேசினார். |
| கால்நடைகளுக்கு விடுபடாமல் கோமாரி தடுப்பூசி போடுங்கள்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை Posted: 29 Aug 2015 12:18 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் விடுபடாமல் கோமாரி நோய்த் தடுப்பூசி போட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அறிவுரை வழங்கினார். |
| வியாபாரி வீட்டில் ரூ. 1.50 லட்சம் திருட்டு Posted: 29 Aug 2015 12:18 PM PDT புதுக்கோட்டையில் தேங்காய் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சத்தை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர். |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 120 உயர்வு Posted: 29 Aug 2015 12:17 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 120 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ. 20,080-க்கு சனிக்கிழமை விற்கப்பட்டது. தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக நிலையாக இல்லாமல் |
| திறன் மேம்பாட்டுப் பயிற்சித் தொடக்கம் Posted: 29 Aug 2015 12:17 PM PDT திருவண்ணாமலையில் பெருந்தொழில் நிறுவனங்களின் உதவியுடன், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| செவிலியர் பட்டயப் படிப்புக்கு நாளை முதல் கலந்தாய்வு Posted: 29 Aug 2015 12:17 PM PDT செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. |
| வேடியப்பன் கோயில் திருவிழா விவகாரம்: கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் தீர்வு Posted: 29 Aug 2015 12:16 PM PDT செங்கம் அருகே வேடியப்பன் கோயில் ஆடித் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முடிவுக்கு வந்தது. |
| ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் திருட்டு Posted: 29 Aug 2015 12:15 PM PDT கடலூரில் விமானப் படையின் முன்னாள் அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |