Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கருத்துச் சித்திரம்

Posted: 29 Aug 2015 01:43 PM PDT

பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்தியா மட்டுமே: பாக்.ராணுவம் தகவல்

Posted: 29 Aug 2015 01:39 PM PDT

பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்தியா மட்டுமே என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஷாஹித் ஹுசைன் சையது தலைமையிலான நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை கமிட்டியானது நேற்று ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் சென்றது. அப்போது முப்படைகளின் தலைவர் ஜெனரல் ரஷாத் மஹமூத் மற்றும் அவரது குழுவினர் நிலவரத்தை விவரித்தனர். 10000 கோடி டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை கடந்த 2 ஆண்டாக இந்தியா கொள்முதல் செய்து குவித்து வைத்துள்ளது. இவற்றில் 80 சதவீதம் பாகிஸ்தானுக்கு இலக்காக வைத்து ...

பகல் தூக்கம் நல்லதா?

Posted: 29 Aug 2015 01:26 PM PDT

பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது தவறு என்கின்றன, ஆய்வுகள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத் தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 8 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் ...

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

Posted: 29 Aug 2015 01:25 PM PDT

36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளது. லண்டனில் நடைபெறும் யூரோ ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டிகளில் ஸ்பெயினை இங்கிலாந்து வீழ்த்த, நெதர்லாந்து அணி ஜெர்மனியை வீழ்த்த, இறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற நிலையில் ஒரு அணிக்கு தகுதி பெற கிடைத்த வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி பெற்றுள்ளது. கடந்த மாதம் பெல்ஜியம், ஆண்ட்வெர்ப்பில் நடந்த உலக ஹாக்கி ...

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா?

Posted: 29 Aug 2015 01:10 PM PDT

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. *குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். *இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள். *மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் ...

ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள்

Posted: 29 Aug 2015 01:09 PM PDT

மஞ்சள்: மகாலட்சுமியின் அம்சமாகவும், அவள் மனத்திற்கு விருப்பமானவைகளில் முக்கியமானதும் மஞ்சள் ஆகும். மகாலட்சுமியின் இருப்பிடம் எனக் கருதப்படும் மஞ்சளை, சுமங்கலிப் பெண்கள் முகத்தில் பூசிக் குளித்தல், புத்தாடைகள் அணியும் பொழுது அவற்றின் நுனியில் தடவுதல், அன்றாட உணவில் கலந்து கொள்ளுதல் எனப் பல வகையில் பயன்படுத்தி வருகின்றனர். திருமணங்கள் நடைபெறும் பொழுது கூடியிருக்கும் உறவினர், பெரியோர்களிடமும், மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்வதற்காக அட்சதை என ஒரு பொருளைக் கொடுப்பதுண்டு. அட்சதை என்பது, முனைமுரியாத ...

பேலியோ டயட் / நியாண்டர் செல்வன்

Posted: 29 Aug 2015 01:07 PM PDT

ஃபேஸ்புக்கில் 'ஆரோக்கியம் & நல்வாழ்வு' எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருபவர். இக்குழுவில், ஆதிமனிதன் உண்ட உணவை ஒட்டிய உணவுமுறை மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்ற பல நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்குமான டயட் முறைகளும் தீர்வுகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குழுவில் சுமார் 20,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பலரும் இந்த உணவு முறையால் நல்ல பலனைக் கண்டுள்ளார்கள். பேலியோ டயட் (முன்னோர் உணவு) என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் இந்த உணவுமுறை, ...

கேரட்டில் உள்ள சத்துக்கள்

Posted: 29 Aug 2015 12:51 PM PDT

'பளிச்'சென்று பார்வையை ஈர்க்கும் கேரட்டில் பல ஆரோக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் சில... * வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் கேரட் ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. * கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், கொழுப்பைக் கரைக்கும் சக்தி கொண்டது. * தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. * கேரட் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் ...

மறுபிறவி

Posted: 29 Aug 2015 12:47 PM PDT

எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!

கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி

Posted: 29 Aug 2015 12:43 PM PDT

- தேங்காய்ப் பால் எடுக்கும்போது முதல் பால் மட்டும் ஆப்பம், இடியாப்பத்துக்கு போதுமானது – பிறகு அந்த தேங்காய் சக்கையை வாணலியில் எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். – ஒரு கப் தேங்காய் சக்கைக்கு, கால் கப் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் எட்டு, ஒரு டீஸ்பூன் பெருங்காயம் இவற்றை எண்ணெயில் வறுத்து உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கவும். – இது கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி. கூட்டு, பொரியலில் சேர்க்கலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். – —————————————— தெய்வானை, ...

தமிழக அரசியல் செய்திகள்

Posted: 29 Aug 2015 12:38 PM PDT

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் ...

2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்

Posted: 29 Aug 2015 12:31 PM PDT

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்–வீராங்கனைகளுக்கு மிக உயரிய விருதான கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது, துரோனாச்சார்யா விருதுகள ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடந்தது. அதில் வழங்கப்பட்ட விருதுகளின் விபரம் பின்வருமாறு:- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது சானியா மிர்சா (டென்னிஸ் வீராங்கனை) அர்ஜூனா விருது பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (ஹாக்கி) தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்) ஜிது ...

அன்னையின் பெருமை...!

Posted: 29 Aug 2015 12:00 PM PDT

அறிமுகம்-- பால்துரை

Posted: 29 Aug 2015 11:54 AM PDT

பெயர்:பால்துரை
சொந்த ஊர்: ஆண்டிபட்டி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: வலைத்தளம்
பொழுதுபோக்கு: நல்ல விசயங்களை நல்லவர்களுடன் பகிர்வது
தொழில்: பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி: நாமும் வாழவேண்டும் நம்மை  சூழ்ந்தவரும் வாழ வழிவிடவேண்டும் ....


மகிழ்வித்தல்

Posted: 29 Aug 2015 11:10 AM PDT

மலராய் நானிருந்தால் மணம் வீசி உன்னை   மகிழ்விப்பேன்!! நதியாய் நானிருந்தால் நீராட்டி உன்னை மகிழ்விப்பேன்!! ஆடையாக நானிருந்தால் அணிவித்து உன்னை மகிழ்விப்பேன்!! இசையால் நானிருந்தால் இன்பமளித்து உன்னை மகிழ்விப்பேன்!! புத்தகமாய் நானிருந்தால் புரட்டி பார்த்தே என்னில் மகிழ்ந்திருப்பாய்! காவியமாக நானிருந்தால் கண்டு களித்தே என்னில் களித்திருப்பாய் !! நான் ஒன்றுக்கும் உதவாக்கரையாக பிறந்தேன் என்று நினைத்து வருந்தினேன்!! ஆனால் இன்று இவை எல்லாவற்றிற்கும் ...

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்

Posted: 29 Aug 2015 09:14 AM PDT

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் ...

அபான முத்திரை

Posted: 29 Aug 2015 09:11 AM PDT

- – செய்முறை.. கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது. இந்த முத்திரை உட்கார்ந்து கொண்டு செய்ய வேண்டும். தினமும் 30 நிமிடம் இந்த முத்திரையை செய்யலாம். பயன்கள்…. இந்த முத்திரையை தினமும் செய்து வந்தால் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியும். மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது. – —- நன்றி- மாலை மலர்

பெண் என்பவள் மல்டி டாஸ்க் மாஸ்டர்..!!

Posted: 29 Aug 2015 09:10 AM PDT

- - ஒருவர் கோழிப்பண்ணை ஆரம்பித்தார். அவர் கோழிகளிடம், நான் உங்களுக்கு நல்ல உணவு போடறேன், நீங்க தினமும் முட்டை போடணும், என்றார் - ஒரு மாதமாகியது. எல்லா கோழிகளும் முட்டை போட்டன. ஒண்ணு மட்டும் போடலை. அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு,உனக்கும் நல்ல உணவு தர்றேன்...மத்ததெல்லாம் முட்டை போடும் போது, நீ மட்டும் ஏன் முட்டை போடலை?-என்றார் - அது கூறியது...''முட்டாளே நான் சேவல்!" - ---------------------------------------------- - பரீட்சை நடந்தது. ஒரு மாணவன் எல்லா பிட்டுகளையும் உடலின் ...

தொண்டை மண்டல கோவில்கள்: சிவன்,விஷ்ணு மற்றும் அம்மன் கோவில்கள்

Posted: 29 Aug 2015 09:08 AM PDT

தொண்டை நாடு தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டை நாடு, நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் தாய்நாடாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை ஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் ...

மல்லிகைப்பூ

Posted: 29 Aug 2015 07:35 AM PDT

மல்லிகைப்பூ மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சில அடிப்படை விடயங்களை உங்களுக்குக் கூறுகிறோம். வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் ...

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா

Posted: 29 Aug 2015 07:30 AM PDT

"இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக 21 கிலோ எடை பெருக்கி குண்டு ஆகியிருக்கிறார் அனுஷ்கா "எப்படி நடந்தது இந்த மேஜிக்?' என்று இயக்குநர் பிரகாஷிடம் பேசினோம். – "சௌந்தர்யா (அனுஷ்கா) சின்ன வயதிலிருந்தே கொழு கொழு வென்று குண்டாக வளர்ந்து வரும் பொண்ணு. அவளோட அன்றாட வேலைகளில் ஒன்று வெயிட் மிஷினில் ஏறி நின்று எடை பார்ப்பது. – ஒரு சைனீஸ் ரெஸ்ட்டாரண்டில் வேலை பார்க்கும் அவளுக்கு 28 வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகலையே என்ற பெரிய கவலை அம்மா ஊர்வசிக்கு. அவள் உடல் இளைக்காத வரை வரன் எதுவும் அமையாதுன்னு ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 29 Aug 2015 07:29 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

மீட்பதெப்படி? – கவிதை

Posted: 29 Aug 2015 07:11 AM PDT

அந்தகார இருட்டினில் அடுக்கடுக்காய் சொற்கள் நிசப்த வெளியில் சஞ்சரித்து வந்து விழும் கவிதையாய் எழுத நினைக்கையில் உறக்கம் கெடுக்ககும் வெளிச்சமென உறுமும் துணை எண்ணி ஒத்திபோட்டேன் எழுத்தை – விடியலில் கலந்து வைத்த காபியில் கரைந்தன சில வார்த்தைகள் – மிக்சியில் சட்னியில் அரைபட்டு பொடியாகின இன்னும் சில சொற்கள் – குழம்புக்காய் கரைத்த புளியில் கரைந்தன அடுத்தடுத்த வரிகள் – அடுப்படியில் எரிந்தது துடித்துக் கொண்டிருந்த கவிதையின் உயிர் – கலந்தும் கரைத்தும் பொடித்தும் எரித்தும் வார்த்தைகளைத் ...

ஆண்தன்மை அதிகரிக்க

Posted: 29 Aug 2015 07:10 AM PDT

ஆண்தன்மை அதிகரிக்க இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் ...

பறவைகளிடமிருந்து பறக்க கற்றுவிட்டு….

Posted: 29 Aug 2015 07:09 AM PDT


-

பறவைகளிடமிருந்து
பறக்க கற்றுவிட்டு
பறவைகளுக்கே
பறக்க சொல்லித் தர முயலும்
மனிதனுக்கு,
வேட்டை உத்திகள்
மறக்கடிக்கப்பட்டு
நாயான இனத்தை
தினம் தினம் பார்த்து
கடந்து போகின்றன
பறவைகள்
புறமுதுகு காட்டி…
–
——————–
ஸ்ரீராம்
நன்றி – பாக்யா

யோகி சுத்தானந்த பாரதிதியார்

Posted: 29 Aug 2015 07:06 AM PDT

- "தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள் திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான் மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள் மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன் மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார் மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி புரியும் தவசியாளன்"- என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார். – சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர், காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார். அவரை 'செல்லம்' ...

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Posted: 29 Aug 2015 07:03 AM PDT

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ...

பத்து அடி உயர ரோஜா செடி

Posted: 29 Aug 2015 06:57 AM PDT

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பத்து அடி உயரம் வரை  இந்த ரோஜா செடிவளர்ந்து இருந்தது  . சுமார் ஆறு ஆண்டுகள் வரை  பூக்கள்  பூத்துக் குலுங்கின. நான் வேறு எங்கும் இது போன்ற செடி  பார்த்தது இல்லை. அதற்கு தனியாக உரம் எதுவும் போடவில்லை. அதற்குப்பின்  எத்தனையொ  ரோஜா செடிகள் வைத்தும் அவை இந்த செடிபோல்  வளரவில்லை. அந்த செடியில் காணொளிக் காட்சியினை  இங்கு பார்க்கலாம் https://www.youtube.com/watch?v=aWOTCysmou4

நயன்தாரா பூ

Posted: 29 Aug 2015 06:55 AM PDT

- - நித்யகல்யாணி என்று ஒரு பூச்செடியுள்ளது. இது இரவு நேரத்தில் பூக்கும். ஒரு பூ கீழே விழுந்தால் உடனே இன்னொரு பூ பூத்துவிடும். – இந்தப் பூச்செடிக்கு வடமொழியில் நயன்தாரா என்று பெயர் – த்ரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, பெயரில் பூ இருக்கிறதா..? – ———————————- சோமசுந்தரம்

நம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன்

Posted: 29 Aug 2015 06:22 AM PDT

இந்த வார ஆனந்த விகடனிலிருந்து ...... வேகம், அதிவேகம், அதீத வேகம்... இதுவே ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் வேதம்! உலகின் ஆபத்தான விளையாட்டுகளில் ஃபார்முலா 1 கார் பந்தயமும் ஒன்று. அதில் தற்போதைய நம்பர் 1 வீரர், லூயிஸ் ஹாமில்ட்டன்.1984-ம் ஆண்டு கிறிஸ்துமஸ். இங்கிலாந்தின் ஸ்டீவனேஜ் நகரத்தில் ஆண்டனியும் அவரது மனைவி கார்மெனும் பண நெருக்கடியால் பாலகன் இயேசு பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை. ஆண்டனி ரயில்வேயில் சாதாரணத் தொழிலாளி. ஆனால், 1985-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பிறந்த அவரது மகனின் ஸ்பரிசத்தில், அவருக்குள் ...

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி சலுகை: மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு!

Posted: 29 Aug 2015 06:19 AM PDT

புதுடெல்லி: 2009 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2014 மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளில் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் வட்டி தள்ளுபடி பெற இதுவே கடைசி வாய்ப்பு என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்விக்கடனுக்கு அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் அறிவிக்க ...

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்...

Posted: 29 Aug 2015 06:09 AM PDT

படம் – கல்கியின் 'பொன்வயல்' இயற்றியவர்-கவியோகி சுத்தானந்த பாரதி பாடியவர் சீர்காழி.கோ.சிவசிதம்பரம் – ————————————— – சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால் சிரிப்புத்தான் வருகுதையா எரிப்பினை வைத்துள்ளே இனிப்பாகப் பேசியே வெத்துக்கதையாய் வாழும் பித்தர் கூட்டத்தைக் கண்டால் (சிரிப்புத்தான்) பல்லையிளித்துக் காட்டும் பகட்டுக்கு கொட்டுவார் பசியெனும் ஏழையை பரிவின்றித் திட்டுவார் செல்வம் கொள்ளையடித்தே சிறையிலே பூட்டுவார் திருடர் மிரட்டினாலே திறவுகோலை நீட்டுவார் (சிரிப்புத்தான்) நாமே ...

அடிபட்ட ஆடு - பதறுகின்ற மனசு...!!

Posted: 29 Aug 2015 05:31 AM PDT

– சாலை விபத்தில் அடிபட்ட ஆடு துடிக்கையில் பதறுகின்ற மனசு இறைச்சிக் கடையில் ஆட்டை வெட்டும்போது பதறுவதிலையே..! – நன்னிலம் இளங்கோவன் – ———————- –[color:dab3= #660000] முதியவர்களைக் காணும்போது அச்சம் நானும் இப்படி ஆவேனே என்று! – என்னைக் காணும் முதியவர்களுக்கு ஏக்கம் நானும் இப்படி இருந்தவன் தானே என்று..! – இன்பென்ட் பெராரோ – —————————————


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™