Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1866

Posted: 08 Aug 2015 11:17 PM PDT

இந்திய தேர்தல் கமிஷனில் கடந்த (2014) ஆண்டில் மட்டும் 239 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்ததையடுத்து, பதிவு பெற்ற இந்திய அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1866 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 56 கட்சிகள் மட்டுமே தேசிய அளவிலும், மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மும்பையை கலக்கும் பெண் கடவுள் - கையில் சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு ஆசி

Posted: 08 Aug 2015 11:03 PM PDT

மும்பையை கலக்கும் பெண் கடவுள் - கையில் சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு ஆசி

திருப்பதி கோவிலில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted: 08 Aug 2015 10:45 PM PDT

திருப்பதி மலையில் உள்ள பாபவிநாசனம் அருவியில் மட்டுமே தண்ணீர் வருகிறது. கோகர்ப்பம், ஆகாசகங்கா போன்ற அருவிகள் ஏற்கனவே காய்ந்து விட்டன. தற்போது குமாரதாரா, பசுபுதாரா அருவிகளும் காய்ந்து விட்டன.

பத்மநாபசுவாமி கோவில் வளாகத்தில் 2–வது முறையாக கொள்ளை

Posted: 08 Aug 2015 10:22 PM PDT

பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய நிலவறைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நள்ளிரவில் கடுமையான துப்பாக்கிச் சண்டை: இந்திய வீரர் பலி

Posted: 08 Aug 2015 09:23 PM PDT

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தொடர் அத்துமீறல், இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு, எல்லை வழியாக ஊடுருவத் துடிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி வேலை ஆகியவற்றை முறியடிப்பதற்காக கடுமையாக போராடிவரும் இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் ரகசியமாக இயங்கிவரும் உள்நாட்டு தீவிரவாதிகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தற்கொலைக்கு அனுமதியுங்கள்: வியாபம் ஊழலில் சிறையில் அடைபட்டிருக்கும் 70 கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted: 08 Aug 2015 08:38 PM PDT

மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் தற்கொலை செய்து கொள்ள எங்களுக்கு அனுமதி தாருங்கள் என வியாபம் ஊழல் விசாரணையில் கைதாகி குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 70 பேர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

காஷ்மீரில் தாக்குதல்: பாக். தீவிரவாதிக்கு உதவிய 2 பேர் கைது - அதிகாரிகள் தீவிர விசாரணை

Posted: 08 Aug 2015 08:32 PM PDT

காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டம் சம்ரோலி அருகே உள்ள நர்சூ என்ற இடத்தில் கடந்த 5-ந் தேதி, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது, சாலையோரம் மறைந்து இருந்த 2 தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ் சாலையில் நடந்த இந்த திடீர் தாக்குதலில் 2

நாட்டின் முதலாவது ஹைபர்சோனிக் ஏவுகணைக்கு கலாம் பெயர்

Posted: 08 Aug 2015 08:01 PM PDT

இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த மாதம் 27-ந் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானியாகவும், தேர்ந்த கல்வியாளராகவும் திகழ்ந்த கலாமின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு மாநிலங்கள் தங்களது பல்கலைக்கழகங்கள், திட்டங்களுக்கு கலாம் பெயரை சூட்டி வருகின்றன.

மாவோயிஸ்டுகள் மிரட்டலுக்கு இடையே பிரதமர் மோடி இன்று பீகார் பயணம்: கயா பொதுக்கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு

Posted: 08 Aug 2015 07:56 PM PDT

நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள கட்சி ஆட்சி நடைபெற்று வருகிற பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 25-ந்தேதி பீகார் சென்றார். பாட்னாவில் மத்திய அரசின் திட்டங்களை

திருப்பதி கோவில் கருவறையில் தங்கத்தகடு பதிக்கும் திட்டம் கைவிடப்பட்டது

Posted: 08 Aug 2015 07:03 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறையில் உள்ள சுவர்களின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் தங்கத்தகடுகள் பதிக்க முடிவு செய்து, ''ஆனந்த நிலையம் அனந்த சுவர்ண மயம்'' என்ற ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது.

தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: சித்தராமையா பேச்சு

Posted: 08 Aug 2015 06:48 PM PDT

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது பிரதமரிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மேகதாதுவில் 2 அணைகளை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆலோசனை கூறவேண்டும்

அசாமில் 3 தீவிரவாதிகள் கைது

Posted: 08 Aug 2015 04:19 PM PDT

அசாம் மாநிலத்தின் சிரங் மாவட்டத்தில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

42 இந்திய மீனவர்களைக் கைது செய்த வங்கதேச கடற்படை

Posted: 08 Aug 2015 02:22 PM PDT

எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 42 பேரை, வங்கதேச கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களுக்குச் சொந்தமான 3 மீன்பிடி படகுகளையும் நேற்று பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க மாநில மீனவர்சங்க செயலாளர் பிஜன் மைதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு ஆயுள் தண்டனை: ஹாசன் கோர்ட்டு தீர்ப்பு

Posted: 08 Aug 2015 10:55 AM PDT

பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹாசன் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹாசன் டவுனை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி சுனந்தா. சுனந்தாவின் உறவினர் சோமசேகர் (வயது 38). இவர் அந்த பகுதியில்

மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்கள் பறிமுதல்: 4 பேர் கைது

Posted: 08 Aug 2015 10:14 AM PDT

மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு காரில் கடத்தப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ராமநகர் அருகே 4 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா புதூர் வழியாக பெங்களூருவுக்கு யானை தந்தங்களை கடத்த மர்மநபர்கள் முயற்சிப்பதாக புதூர்

நேபாளத்திற்கு கடத்த முயன்ற ரூ.1.5 கோடி அஷ்டலோக சிலைகள் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 08 Aug 2015 08:11 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் திருட்டுப்போன ரூ.1.5 கோடி மதிப்பிலான அஷ்டலோக சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். வடமாநிலங்களில் பிரபலமான கோவில்களில் எட்டு உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட விலைமதிப்பற்ற அஷ்டலோக சிலைகள்

தூய்மை இந்தியா தரவரிசை: சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு இரண்டாம் இடம்

Posted: 08 Aug 2015 06:03 AM PDT

கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்வதன் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் திருச்சி நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476

பெண்ணின் கண்ணில் 4 மாதமாக சிக்கியிருந்த 33 மி.மீ. குச்சியை வெற்றிகரமாக அகற்றிய டாக்டர்கள்

Posted: 08 Aug 2015 05:36 AM PDT

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர்கள், பெண்ணின் கண்ணில் சிக்கியிருந்த 33 மிமீ நீள மரத்துண்டை அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த சாயியதா காட்டூன் (50) என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் வீட்டில் உள்ள விறகு

ஜார்க்கண்டில் சூனியம் வைத்ததாக கூறி ஒரே நாளில் 5 பெண்கள் படுகொலை: மகளிர் ஆணையம் கண்டனம்

Posted: 08 Aug 2015 04:59 AM PDT

மூடநம்பிக்கைக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைப்பதாக சந்தேகித்து சாமியார்கள், குறிசொல்பவர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு தலைநகர் ராஞ்சி அருகில் இருக்கும் கான்ஜியா கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல், கைத்தடி

சோனியாவை எதிர்த்து விமர்சனம்: மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணிக்கு கருப்புக் கொடி காட்டி கேரள காங். போராட்டம்

Posted: 08 Aug 2015 03:47 AM PDT

பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இராணிக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கேரள மாநில இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் தலைநகர் திருவனந்தபுரம் வந்த


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™