Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


50 லட்சம் பேர் தங்கள் டி.என்.ஏ-வை பிரதமர் மோடிக்கு அனுப்புவார்கள்: புதிய போராட்டத்தை தொடங்கினார் நிதீஷ் குமார்

Posted: 09 Aug 2015 11:17 PM PDT

பிரதமர் மோடிக்கும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு இடையிலான மோதல் அதிகரித்தப்படியே உள்ளது. முக்கியமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் திட்டங்களை பீகாரின் கயாவில் தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது 'தேர்தலுக்கு பிறகு காட்டு

ஜார்கண்ட் மாநில கோயில் விழா: கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

Posted: 09 Aug 2015 10:30 PM PDT

ஜார்கண்ட் மாநிலம், டியோகர் மாவட்டத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இன்று அதிகாலை நிகழ்ந்த தள்ளுமுள்ளுவினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவினங்களுக்காக தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் அறிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி என்ன பேச வேண்டும்? தகவல் அனுப்புவோர் பட்டியல் 10 ஆயிரத்தை தாண்டியது

Posted: 09 Aug 2015 10:05 PM PDT

இந்தியாவின் சுதந்திர தினம் வருகிற 15–ந் தேதி (சனிக்கிழமை) நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

பாலக்காடு அருகே காங்கிரஸ் நிர்வாகி கொலை: இளைஞர் காங். பிரமுகர் கைது

Posted: 09 Aug 2015 09:52 PM PDT

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த சாவக்காடு, மன்னத்தலாவைச் சேர்ந்தவர் அனிபா(வயது30). அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகியாக இருந்தார். கடந்த 7–ந்தேதி வீட்டில் இருந்த இவரை மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இது பற்றி அனிபாவின் தாயார் ஆயிஷா போலீசில் புகார் செய்தார்.

ரெயிலில் பிச்சை எடுப்பவர்களின் உதவியை நாட மத்திய அரசு முடிவு

Posted: 09 Aug 2015 09:45 PM PDT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல புதிய திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டங்களை நாட்டில் உள்ள எல்லா தரப்பு மக்களும் புரிந்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மத்திய

சாலக்குடி தொகுதி எம்.பி.யான நடிகர் இன்னசென்ட் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 09 Aug 2015 09:24 PM PDT

மலையாள திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் இன்னசென்ட். மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் தலைவராக கடந்த 2000–வது ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சாலக்குடி தொகுதியில் மார்க்சிஸ்டு

சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Posted: 09 Aug 2015 08:55 PM PDT

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 73-வது ஆண்டு தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஓய்வின்றி பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கு என் வீர வணக்கம். இன்று (நேற்று) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 73-வது ஆண்டு தினம் ஆகும். இந்த இயக்கம், இந்தியாவின் விடுதலைக்கு வழிநடத்தியது. விடுதலைப்போராட்ட வீரர்கள் அல்லது அவர்களை சார்ந்தவர்களுக் கான அகவிலைப்படியை 218 சதவீதமாக ஆக்கி, அவர்களின் ஓய்வூதியம் 2014-15 ஆண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தாய்ப்பால் கொடுப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.நா தகவல்

Posted: 09 Aug 2015 08:44 PM PDT

உலக தாய்ப்பால் வாரம் கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐ.நா-வின் யுனிசெப் அமைப்பு தாய்ப்பால் கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறித்து புள்ளிவிபரங்களை சேகரித்தது. இதில் இந்தியாவில் தாய்ப்பால் கொடுப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 44.6 சதவீத குழந்தைகளுக்கு பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடு

அருணாசலப்பிரதேசத்தில் 3 பேருடன் மாயமான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டெடுப்பு

Posted: 09 Aug 2015 08:39 PM PDT

அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த நான்காம் தேதி காணாமல் போன பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு காங்கிரஸ் கூட்டத்தில் தீக்குளித்த தொண்டர் சாவு

Posted: 09 Aug 2015 08:27 PM PDT

ஆந்திர மாநிலம் திருப்பதியில் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசினார். அப்போது திருப்பதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் முனிகாமகோட்டி (வயது 41) என்பவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்

ஜார்கண்ட் கோயில் விழாவில் தள்ளுமுள்ளு: கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

Posted: 09 Aug 2015 08:19 PM PDT

ஜார்கண்ட் மாநிலம், டியோகர் மாவட்டத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இன்று அதிகாலை நிகழ்ந்த தள்ளுமுள்ளுவினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் உயிரிழந்தனர். தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில்

பக்தர்களை கட்டிப்பிடிப்பதில் தவறு இல்லை: சர்ச்சைக்குரிய மும்பை பெண் சாமியார் பேட்டி

Posted: 09 Aug 2015 08:16 PM PDT

மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதேமா. எப்போதும் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டு அசத்தும் இவர், குட்டை பாவாடை அணிந்து நடனம் ஆடியதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. தன்னிடம் வரும் பக்தர்களை நெருக்கமாக கட்டிப்பிடிப்பதாகவும் அவர்மீது புகார்

சமாதான ஒப்பந்தம்: வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பேசுவேன் - நாகாலாந்து முதல்-மந்திரி ஷெலியாங் தகவல்

Posted: 09 Aug 2015 08:07 PM PDT

வடகிழக்கு மாநிலங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் (ஐ.எம்.பிரிவு), மத்திய அரசுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தம் கடந்த வாரம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் குறித்து நாகாலாந்து முதல் மந்திரி ஷெலியாங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

டெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நேரடி ஒளிபரப்பு

Posted: 09 Aug 2015 08:02 PM PDT

டெல்லியை சேர்ந்த ஷோபா ராம் என்பவர் கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சம்பந்தபட்ட நோய்களால் அவதிப்பட்டுவந்தார். இவருக்கு கடந்த 31-ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானில் உள்ள புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் தடுப்புமையத்தின் மருத்துவர் கோரோ ஹோண்டா

இந்தியா முழுவதும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு: மத்திய அரசுக்கு குழு சிபாரிசு

Posted: 09 Aug 2015 07:57 PM PDT

அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலை மறுவடிவமைப்பு செய்யவும், வலுப்படுத்தவும் ஏற்ற வகையில் ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் கல்வித்துறை செயலாளர் எம்.கே.காவ் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை மத்திய அரசின் மனிதவள

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி

Posted: 09 Aug 2015 07:52 PM PDT

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையான இடுக்கி அணை உள்ளது. குறவன்-குறத்தி மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள இந்த அணை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

பழங்குடியினரின் நில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு

Posted: 09 Aug 2015 07:51 PM PDT

உலக பழங்குடியினர் தினத்தையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், பழங்குடியினரின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு நடத்தி சாசா கமிட்டி சில பரிந்துரைகளை அளித்தது. மத்திய அரசு அந்த கமிட்டியின் பரிந்துரைகளை தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும். பழங்குடியினர் மேம்பாட்டு திட்டங்கள், அவர்களுக்கான சுகாதார நலன் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

2 நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது: பாராளுமன்ற முடக்கம் முடிவுக்கு வருமா?

Posted: 09 Aug 2015 07:16 PM PDT

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இதில் லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், தொடரின் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த தயார் என கூறிய மத்திய அரசு, பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், அவை நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதனால் மசோதா தாக்கல், விவாதம் போன்ற முக்கியமான அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை

மத நல்லிணக்கம்: கண்கள் கட்டப்பட்ட இஸ்லாமியரைக் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்திய பொதுமக்கள்

Posted: 09 Aug 2015 05:29 PM PDT

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த ஆண்டு சமூக பரிசோதனைக்காக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் தீவிரவாதிகளின் உருவத்தை படமாக வரைந்து காட்டிம்படி சொல்லப்பட்டது. சொல்லி வைத்தார் போல் அனைவரும் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட உருவத்தை மட்டுமே

பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டார்: மோடி மீது லாலு பிரசாத் குற்றச்சாட்டு

Posted: 09 Aug 2015 01:52 PM PDT

பிரதமர் பதவியின் தரத்தை நரேந்திரமோடி தாழ்த்தி விட்டதாக ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார். பீகார் மாநிலம் கயாவில் நேற்று நடந்த பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™