மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பீகார் சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல்: அக்டோபர் மாதம் நடத்த முடிவு
- பீகார் தேர்தலில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி: நிதீஷ்–லல்லு கூட்டணியில் தேசியவாத காங். விலகல்
- சரக்கு–சேவை வரி மசோதாவுக்கு திரிணாமுல் காங். திடீர் ஆதரவு: பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடுகிறது
- அமர்நாத் யாத்திரை: 98 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது
- உ.பி-யில் வீட்டு கூரை சரிந்து விழுந்து விபத்து: 9 பலி - 3 பேர் படுகாயம்
- எல்லையில் அத்துமீறலால் இந்தியா பதிலடி: பாக். வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் நடைமுறை ரத்து
- ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பு: மோடி, சந்திரபாபு நாயுடு மீது புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு
- காஷ்மீரில் இன்று காலை மசூதியில் குண்டு வெடித்தது: 10 பேர் காயம்
- சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் கேரள மாணவிக்கு இதயம், நுரையீரல் மாற்று ஆபரேஷன்
- 1940–ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருப்பதி கோவில் லட்டு 75 ஆண்டை நிறைவு செய்தது
- என்.சி.சி. மாணவர் சாவில் மர்மம்: பெற்றோர் பரபரப்பு புகார்
- டெர்மினேட்டர் படங்கள் உண்மையாகிறதா? தொழிலாளியை கொன்ற ரோபோ - ஹரியானாவில் பயங்கரம்
- பாராளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா திடீர் விருந்து
- பெண் மந்திரி செருப்பை கையில் தூக்கி சென்ற உதவியாளர்: காங்கிரஸ் கண்டனம்
- டெல்லி திகார் சிறையில் விசாரணைக்கைதி அடித்துக்கொலை
- கட்டிய மனைவியாக இருந்தாலும் குற்றம் குற்றமே: நெற்றிக் கண்ணைத் திறந்த டிராபிக் போலீஸ்
- வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்வு: 52 லட்சம் பேர் பாதிப்பு
- அக்பர் காலத்தில் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் பொக்கிஷமான குரான்: கடத்தல் கும்பலிடமிருந்து பறிமுதல்
- நாடாளுமன்ற போராட்டம் ஜனநாயகப் படுகொலை - சுமித்ரா மகாஜன்
- கடலில் மிதந்த 1000 ரூபாய் நோட்டுகள்: கேட்வே ஆப் இந்தியாவில் பரபரப்பு
| பீகார் சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல்: அக்டோபர் மாதம் நடத்த முடிவு Posted: 12 Aug 2015 10:53 PM PDT பீகார் மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற நவம்பர் மாதம் 29–ந்தேதியுடன் முடிகிறது. இதையொட்டி பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது. உள்துறை மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் |
| பீகார் தேர்தலில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி: நிதீஷ்–லல்லு கூட்டணியில் தேசியவாத காங். விலகல் Posted: 12 Aug 2015 10:52 PM PDT பீகார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. ஆனால் அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம், எதிர்க்கட்சியான பா.ஜனதாவும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. முதல் – மந்திரி நிதீஷ்குமார் ஏற்கனவே வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். பிரதமர் மோடி பா.ஜனதாவை ஆதரித்து 2 பிரசார |
| Posted: 12 Aug 2015 10:41 PM PDT சரக்கு–சேவை வரி மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடுகிறது. இந்த மசோதாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சரக்கு–சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதாவை நடப்பு பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. பாராளு மன்றத்தின் மக்களவையில் இந்த மசோதா |
| அமர்நாத் யாத்திரை: 98 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது Posted: 12 Aug 2015 10:40 PM PDT அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 98 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. |
| உ.பி-யில் வீட்டு கூரை சரிந்து விழுந்து விபத்து: 9 பலி - 3 பேர் படுகாயம் Posted: 12 Aug 2015 10:24 PM PDT உத்தரப்பிரதேசத்தில், சிதைவடைந்திருந்த வீட்டின் கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. அம்மாநிலத்தின் பாண்டா மாவட்டத்தில் இருந்த ஒரு வீட்டின் மேற்கூரை மிக மோசமாக சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இது பற்றி அண்டை |
| எல்லையில் அத்துமீறலால் இந்தியா பதிலடி: பாக். வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் நடைமுறை ரத்து Posted: 12 Aug 2015 10:19 PM PDT நாட்டின் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது எல்லையில் காவல் பணியில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ வீரர்களும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் இதுபோல் ரம்ஜான் பண்டிகையின் போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் வாகா எல்லையில் உள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு |
| Posted: 12 Aug 2015 10:16 PM PDT மாநில பிரிவினையின் போது அளித்த உறுதிமொழிபடி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| காஷ்மீரில் இன்று காலை மசூதியில் குண்டு வெடித்தது: 10 பேர் காயம் Posted: 12 Aug 2015 10:07 PM PDT காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் சோபியான் நகரில் புகழ்பெற்ற ஜமீயா மஸ்ஜித் மசூதி உள்ளது. இன்று அதிகாலை அந்த பகுதியில் வழக்கமான தொழுகை நடந்தது. 6.30 மணிக்கு தொழுகை முடிந்து அனைவரும் வீடுகளுக்கு செல்ல புறப்பட்டனர். மசூதி வெளி வாசலில் கழற்றி விட்டிருந்த காலணிகளை எடுக்கச் சென்ற போது அங்கு ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. செருப்புகள் மீது கிடந்த |
| சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் கேரள மாணவிக்கு இதயம், நுரையீரல் மாற்று ஆபரேஷன் Posted: 12 Aug 2015 10:00 PM PDT கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியைச் சேர்ந்தவர் பஷீர் ஹசன். இவரது ஒரே மகள் அம்பிளி (வயது 22). இவர் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு திடீரென இதயத்தில் கோளாறு ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். |
| 1940–ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருப்பதி கோவில் லட்டு 75 ஆண்டை நிறைவு செய்தது Posted: 12 Aug 2015 09:52 PM PDT திருப்பதி என்றாலே லட்டு தான் அனைவரின் கண்முன் நிற்கும். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவையுடன் இன்றும் கோலோச்சி நிற்கிறது. காப்புரிமை பெற்ற இந்த லட்டு பிரசாரம் இன்று 75 ஆண்டு நிறைவு செய்து |
| என்.சி.சி. மாணவர் சாவில் மர்மம்: பெற்றோர் பரபரப்பு புகார் Posted: 12 Aug 2015 09:31 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள பத்தனம்திட்டா மாலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் தனுஷ்கிருஷ்ணா (வயது 19). கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரத்தில் ஒரு கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். |
| டெர்மினேட்டர் படங்கள் உண்மையாகிறதா? தொழிலாளியை கொன்ற ரோபோ - ஹரியானாவில் பயங்கரம் Posted: 12 Aug 2015 08:52 PM PDT ஹரியானா மாநிலத்தில் உள்ள கார் பாகங்கள் தயாரிக்கும் எஸ்.கே.ஏ. என்ற தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளி ஒருவர் ரோபோ தாக்கி உயிரிழந்துள்ளார். குர்கான் அருகே மானேசரில் உள்ள அந்த தொழிற்சாலையில் வெல்டிங் |
| பாராளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா திடீர் விருந்து Posted: 12 Aug 2015 08:41 PM PDT ஐ.பி.எல். ஊழலில் தொடர்புடைய லலித் மோடிக்கு விசா கிடைக்க உதவிய விவகாரம், இவ்விவகாரத்தில் தொடர்புடைய மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜின் ராஜினாமா, ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜேவின் ராஜினாமா மற்றும் மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் ஆகிய |
| பெண் மந்திரி செருப்பை கையில் தூக்கி சென்ற உதவியாளர்: காங்கிரஸ் கண்டனம் Posted: 12 Aug 2015 08:11 PM PDT வறட்சியால் பாதிக்கப்பட்ட பர்பானி மாவட்டம் சன்பேத் கிராமத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி பங்கஜா முண்டே சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலை சகதியால் நிரம்பி இருந்ததால், அவர் தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி விட்டு நடந்தார். |
| டெல்லி திகார் சிறையில் விசாரணைக்கைதி அடித்துக்கொலை Posted: 12 Aug 2015 07:51 PM PDT டெல்லி திகார் சிறையில் திபக் என்ற விசாரணைக்கைதி அடைக்கப்பட்டிருந்தார். அவரை அடைத்திருந்த அறையில் ஆயுள் தண்டனை கைதி உள்ளிட்ட மேலும் 4 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் இரவு தீபக்கிடம் சக கைதிகள் 4 பேரும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். |
| கட்டிய மனைவியாக இருந்தாலும் குற்றம் குற்றமே: நெற்றிக் கண்ணைத் திறந்த டிராபிக் போலீஸ் Posted: 12 Aug 2015 05:29 PM PDT போலீஸ்காரர்கள் அதுவும் டிராபிக் போலீஸ்காரர்கள் என்றாலே கரித்துக் கொட்டப்படும் சமூக வலைதளங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த டிராபிக் போலீஸ் ஒருவர் பலரது பாராட்டையும் பெற்று வருகிறார். |
| வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்வு: 52 லட்சம் பேர் பாதிப்பு Posted: 12 Aug 2015 03:24 PM PDT மேற்கு வங்காளத்தில் கனமழை காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு மேலும் 7 பேர் பலியானதையடுத்து, இதுவரை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. |
| அக்பர் காலத்தில் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் பொக்கிஷமான குரான்: கடத்தல் கும்பலிடமிருந்து பறிமுதல் Posted: 12 Aug 2015 01:54 PM PDT நண்பர்கள் பரிசாகக் கொடுத்த சின்ன கீசெயின் காணாமல் போனால் கூட மனம் எப்படி பதறும்? சின்ன பொருட்களுக்கே இப்படி என்றால், 400 வருடம் பழமையான குரான் தொலைந்து போனால் எப்படி இருக்கும்? ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலிருந்து 160 கி.மீ தொலைவிலுள்ள பியவார் நகரைச் சேர்ந்த, ஜெய்தேவ் பிரசாத்துக்கு(55) 2011-ம் ஆண்டு அவரது நண்பர், |
| நாடாளுமன்ற போராட்டம் ஜனநாயகப் படுகொலை - சுமித்ரா மகாஜன் Posted: 12 Aug 2015 11:56 AM PDT நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்தே லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் நடைபெற்ற மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு அவையை நடத்தவிடாமல் முடக்கி வைத்துள்ளனர். |
| கடலில் மிதந்த 1000 ரூபாய் நோட்டுகள்: கேட்வே ஆப் இந்தியாவில் பரபரப்பு Posted: 12 Aug 2015 11:02 AM PDT கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கேட்வே ஆப் இந்தியா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலை ரசித்து |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |