மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பா.ஜ.க. முடிவை ஏற்க இயலாது: பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்- சோனியா அறிவிப்பு
- தனி மாநில அந்தஸ்துக்கு போராடமாட்டார்: சந்திரபாபு நாயுடு மீது ரோஜா தாக்கு
- தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பலி
- அமர்நாத் யாத்திரை: 322 பேர் கொண்ட குழு புறப்பட்டு சென்றது
- பாகிஸ்தானில் 14 ஆண்டுகள் அனாதையாக தவிக்கும் இந்திய பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய சுஷ்மா சுவராஜ்
- 44 நிமிடங்களில் 293 கியூப் புதிர்களை விடுவித்து, சென்னை மாணவன் புதிய கின்னஸ் சாதனை
- எல்லைப்பகுதியில் மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்: விடிய விடிய துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர்கள் பதிலடி
- மேற்கு வங்காளம், ஒடிசா, மணிப்பூர் மாநிலங்களில் மழைக்கு 64 பேர் பலி: 23 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு
- பாராளுமன்ற முடக்கத்துக்கு சோனியா காந்தியே முழுப் பொறுப்பு: பா.ஜ.க. பகிரங்க குற்றச்சாட்டு
- பாகிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டம்: ஒருவர் கைது - ரூ. 90 ஆயிரம் பறிமுதல்
- இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது: மத்திய அரசு தகவல்
- காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்: அருண் ஜெட்லி குற்றச்சாட்டு
- பாராளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி: டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
- நான்கு மாநிலங்களில் கடும் வெள்ளம்; 88-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- இன்றைய சமுதாயத்தில் மனைவி நள்ளிரவு விருந்துக்கு செல்வது கணவருக்கு சித்ரவதை அல்ல: மும்பை ஐகோர்ட்டு கருத்து
- இந்திய எல்லையில் பீரங்கி தாக்குதல்: பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறல்
- ம.பி. தேர்வு வாரிய ஊழல்: மேலும் 8 வழக்குகள் பதிவு - சி.பி.ஐ. நடவடிக்கை
- 3 ஆண்டுகளுக்கு பிறகு தடை நீக்கம்: மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு அனுமதி
- வியாபம் ஊழல் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: சிவராஜ் சிங் சவுகான் திட்டவட்டம்
- ஆபாச படங்களுக்கு தடை: வயது வந்தோருக்கான 800 வலைத்தளங்களை முடக்கியது மத்திய அரசு
பா.ஜ.க. முடிவை ஏற்க இயலாது: பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்- சோனியா அறிவிப்பு Posted: 02 Aug 2015 11:35 PM PDT பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21–ந் தேதி தொடங்கியது. ஆனால் இந்த கூட்டத் தொடர் இதுவரை ஒருநாள் கூட முழுமையாக நடக்க வில்லை. லலித்மோடிக்கு உதவியதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல் – மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, வியாபம் ஊழல் குற்றச்சாட்டுக்காக மத்திய பிரதேச முதல் – மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை |
தனி மாநில அந்தஸ்துக்கு போராடமாட்டார்: சந்திரபாபு நாயுடு மீது ரோஜா தாக்கு Posted: 02 Aug 2015 11:19 PM PDT ஆந்திர மாநிலம் நகரியில் நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திராவுக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கூட்டணியில்தான் உள்ளார். மத்திய மந்திரி சபையிலும் அவரது கட்சியை சேர்ந்த மந்திரிகள் உள்ளனர். |
தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பலி Posted: 02 Aug 2015 11:03 PM PDT தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் புலிசர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா. இவரது மனைவி சரிதா. இவர் தனது மகன் சிவா (வயது4). நரசிம்மாவும், சரிதாவும் மகன் சிவாலை நேற்று தங்களது வயல் வெளிக்கு அழைத்து சென்றனர். |
அமர்நாத் யாத்திரை: 322 பேர் கொண்ட குழு புறப்பட்டு சென்றது Posted: 02 Aug 2015 10:34 PM PDT அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 322 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் |
பாகிஸ்தானில் 14 ஆண்டுகள் அனாதையாக தவிக்கும் இந்திய பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய சுஷ்மா சுவராஜ் Posted: 02 Aug 2015 10:18 PM PDT பாகிஸ்தானில் 14 ஆண்டுகள் அனாதையாக தவிக்கும் இந்திய பெண்ணின் நிலையை கண்டறிந்து, அவருக்கு உதவி செய்ய தேவையான முயற்சிகளை செய்யும்படி அங்குள்ள இந்திய தலைமைத் தூதரை கேட்டுக்கொண்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் இன்று தெரிவித்துள்ளார். தவறுதலாக இந்தியாவுக்கு வந்து தவிக்கும், பேசும் மற்றும் கேட்கும் திறனை இழந்த பாகிஸ்தான் சிறுமி ஒருத்தியை நடிகர் சல்மான் கான் பத்திரமாக |
44 நிமிடங்களில் 293 கியூப் புதிர்களை விடுவித்து, சென்னை மாணவன் புதிய கின்னஸ் சாதனை Posted: 02 Aug 2015 09:22 PM PDT சென்னையை சேர்ந்த 15 வயது மாணவனான கேசவ கிருபா, 44 நிமிடங்களில் 293 கியூப் புதிர்களை விடுவித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளான். இந்த சிறப்புக்குரிய சாதனையை படைத்த கேசவ கிருபா, தாய்நாட்டுக்கு |
Posted: 02 Aug 2015 08:59 PM PDT காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதேபோல் நேற்றுமுன்தினம் ஜம்மு மாவட்டத்தின் |
Posted: 02 Aug 2015 08:51 PM PDT மேற்கு வங்காளம், ஒடிசா, மணிப்பூர் மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி 23 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். இங்கு மழை, வெள்ளத்துக்கு 64 பேர் பலியாகியுள்ளனர். அண்மையில் ஆந்திரா அருகே வங்கக்கடலில் உருவான 'கோமென்' |
பாராளுமன்ற முடக்கத்துக்கு சோனியா காந்தியே முழுப் பொறுப்பு: பா.ஜ.க. பகிரங்க குற்றச்சாட்டு Posted: 02 Aug 2015 08:28 PM PDT பல்வேறு சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் லலித்மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பான சர்ச்சைகளை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், எவ்வித அலுவல்களையும் நிறைவேற்ற விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் கடந்த 12 |
Posted: 02 Aug 2015 08:06 PM PDT பாகிஸ்தான் - இலங்கை அணிகள் விளையாடிய 'டி-20' கிரிக்கெட் போட்டியன்று பணம் வைத்து சூதாட்டம் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியை மையமாக வைத்து |
இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது: மத்திய அரசு தகவல் Posted: 02 Aug 2015 05:03 PM PDT கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு 1,000 பேருக்கு 927 என்ற அளவுக்கு இருந்த பெண்கள் விகிதம் 2011-ம் ஆண்டில் 918 ஆக குறைந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. |
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்: அருண் ஜெட்லி குற்றச்சாட்டு Posted: 02 Aug 2015 04:52 PM PDT மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நேற்று தனது 'பேஸ்புக்' பக்கத்தில் எழுதி இருப்பதாவது:- நாட்டில் எண்ணற்ற வரிகள் உள்ளன. ஒரேவிதமான வரி கிடையாது. இதனால், வரி மீது வரி என்ற நிலையே காணப்படுகிறது. எனவே, |
Posted: 02 Aug 2015 04:44 PM PDT நிதி மோசடி தொடர்பாக தேடப்பட்டு வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜையும், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவையும் பதவி நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தி வருகிறது. மத்தியபிரதேச தொழில்முறை தேர்வு வாரிய முறைகேடு |
நான்கு மாநிலங்களில் கடும் வெள்ளம்; 88-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு Posted: 02 Aug 2015 04:25 PM PDT மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான், ஒடிசாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திற்கு 88 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. வங்கக்கடலில் உருவான 'கோமென்' புயலால் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா |
Posted: 02 Aug 2015 03:51 PM PDT மும்பையை சேர்ந்த கப்பல் மாலுமி ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது திருமண வாழ்க்கையில் 2 குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், தம்பதியர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மனைவியிடம் இருந்து தனக்கு |
இந்திய எல்லையில் பீரங்கி தாக்குதல்: பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறல் Posted: 02 Aug 2015 02:55 PM PDT காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதேபோல் நேற்றுமுன்தினம் ஜம்மு மாவட்டத்தின் |
ம.பி. தேர்வு வாரிய ஊழல்: மேலும் 8 வழக்குகள் பதிவு - சி.பி.ஐ. நடவடிக்கை Posted: 02 Aug 2015 02:15 PM PDT சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிற மத்தியபிரதேச மாநிலத்தில் 'வியாபம்' என்னும் தொழில்முறை தேர்வு வாரிய ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரியம் நடத்துகிற தேர்வில் முறைகேடுகள் நடப்பதாகவும், பணம் கொடுத்து வேலை பெறுவதாகவும் புகார் எழுந்தது. |
3 ஆண்டுகளுக்கு பிறகு தடை நீக்கம்: மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு அனுமதி Posted: 02 Aug 2015 01:47 PM PDT பாலிவுட் நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரின்போது, வான்கடே |
வியாபம் ஊழல் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: சிவராஜ் சிங் சவுகான் திட்டவட்டம் Posted: 02 Aug 2015 01:13 PM PDT மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியத்தில் (வியாபம்) நடந்த கோடிக்கணக்கான ஊழல், நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றன. |
ஆபாச படங்களுக்கு தடை: வயது வந்தோருக்கான 800 வலைத்தளங்களை முடக்கியது மத்திய அரசு Posted: 02 Aug 2015 12:20 PM PDT இந்தியாவில் இணைய சேவை (ISPs) வழங்கும் நிறுவனங்களிடம், 800-க்கும் மேற்பட்ட ஆபாச இணையத்தளங்களை தடை செய்யும் படி மத்திய அரசு கோரியிருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். |
You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |