Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அமர்நாத் யாத்திரை: 235 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது

Posted: 05 Aug 2015 10:42 PM PDT

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 235 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத்

திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கிறது

Posted: 05 Aug 2015 10:30 PM PDT

திருப்பதியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 பிரம்மோற்சவங்கள் வரும். அதன்படி இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் வருகிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 16–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது. இது வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகும்.

அமெரிக்க நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கு: கோவா முன்னாள் மந்திரி கைது

Posted: 05 Aug 2015 10:08 PM PDT

கோவா மாநிலத்தில் கடந்த 2007–ம் ஆண்டு முதல் 2012–ம் ஆண்டு வரை பொதுப் பணித்துறை மந்திரியாக இருந்தவர் சர்ச்சில் அல்மோ. கோவா முதல்–மந்திரியாக சிறிது காலம் இருந்துள்ள இவர் பாராளுமுன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கோவா பொதுப் பணித்துறை மந்திரியாக இவர் இருந்த போது குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டப்பணிகள் ஆய்வுக்கான டெண்டரை அமெரிக்க நிறுவனத்திடம்

வீட்டில் கழிவறை இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்: பீகாரில் புதிய சட்டம் அறிமுகம்

Posted: 05 Aug 2015 09:34 PM PDT

பீகார் மாநில சட்டசபையில் நேற்று பஞ்சாயத்து ராஜ் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது:– பீகார் மாநில உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள்

ஆவணிமாத சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16–ந்தேதி மாலை திறப்பு

Posted: 05 Aug 2015 09:16 PM PDT

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை ஆகியவை மிகவும் சிறப்பு பெற்றது. இந்த பூஜைகள் போல ஒவ்வொரு தமிழ் மாதமும் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வருகிற 16–ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை ஆ

உணவு பாதுகாப்பு துறை சான்று பெற 5 நாள் அவகாசம்: தமிழக லாரிகளுக்கு கேரளா அனுமதி

Posted: 05 Aug 2015 09:07 PM PDT

தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் கேரளாவிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதாக கேரளா குற்றம்சாட்டியது.

மத்திய பிரதேசத்தில் ரெயில்கள் விபத்து: வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து

Posted: 05 Aug 2015 08:32 PM PDT

மும்பையில் இருந்து வாரணாசி சென்று கொண்டிருந்த காமயாணி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 2 ரெயில்கள் மத்திய பிரதேசத்தில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக வடமாநிலங்களுக்கு செல்லும் நீண்டதூர ரெயில்கள் மாற்றுப்பாதையில்

அழிவை நோக்கி அலையும் கப்பலை போன்றது காங்கிரஸ்: சிவசேனா தாக்கு

Posted: 05 Aug 2015 08:29 PM PDT

லலித் மோடிக்கு உதவிய மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரிகள் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பாராளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முடக்கி வருகிறது. இதற்காக காங்கிரசுக்கு மத்திய-மாநில பா.ஜனதா அரசில் அங்கம்

மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவுடன் விக்கிரமராஜா சந்திப்பு

Posted: 05 Aug 2015 07:49 PM PDT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் உரிமம்

டெல்லியில் பயங்கர ஆயுதங்களுடன் 9 தீவிரவாதிகள் ஊடுருவல்

Posted: 05 Aug 2015 07:23 PM PDT

இந்திய சுதந்திர தினம் 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்காக தலைநகர் டெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும்

கலாம் பெயரில் மத்திய அரசு விருது வழங்குமா? மந்திரி பதில்

Posted: 05 Aug 2015 05:10 PM PDT

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் மத்திய அரசு விருது வழங்குமா என்ற உறுப்பினரின் கேள்விக்கு மத்திய மந்திரி ஹர்சவர்தன் பதில் அளித்தார். அப்துல் கலாம், நாட்டின் ஜனாதிபதியாக 2002-2007 காலகட்டத்தில் பதவி

சொத்துக்குவிப்பு வழக்கில் 6 நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

Posted: 05 Aug 2015 04:51 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி கடந்த ஜூன் 23-ந் தேதி கர்நாடக அரசு சார்பில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஐ.ஐ.டி, என்.ஐ.டி.,யிலிருந்து 3 ஆண்டுகளில் 4,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறினர்

Posted: 05 Aug 2015 04:38 PM PDT

இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,யிலிருந்து 3 ஆண்டுகளில் 4,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐ.ஐ.டி.யிலிருந்து 2060 மாணவர்களும், என்,ஐ.டி.லிருந்து 2352 மாணவர்களும்

விபத்து நடந்த பகுதியில் மழையால் 500 மீட்டர் தூர ரெயில்பாதை அரிப்பு: ரெயில்வே வாரியத் தலைவர் தகவல்

Posted: 05 Aug 2015 04:14 PM PDT

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகர் அருகே நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து ஒரே இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தடம்புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டல் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிக்கும் முடிவில் எந்தவித அரசியலும் இல்லை

Posted: 05 Aug 2015 02:45 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து உள்ளது. இந்த மனு மீதான

நூறு நாள் வேலைத்திட்ட சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மத்திய மந்திரிசபை முடிவு

Posted: 05 Aug 2015 01:01 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், நூறு நாள் வேலைத் திட்டமான 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்' கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அவர்களது வங்கி கணக்கிலேயே

2 ரெயில்கள் தடம்புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

Posted: 05 Aug 2015 12:13 PM PDT

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மும்பையில் இருந்து வாரணாசிக்கு காமயானி எக்ஸ்பிரஸ் ரெயில் மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கிரியா என்ற கிராமத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. மசாக் என்ற ஆற்றுப் பாலத்தின் மீது அந்த ரெயில் சென்றபோது, திடீரென தடம்புரண்டு அதன் 7 பெட்டிகள் ஆற்றுக்குள் பாய்ந்தன.

குர்தாஸ்பூர் தாக்குதலுக்குப் பிறகு அதிரடி: பஞ்சாபில் 31 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Posted: 05 Aug 2015 08:45 AM PDT

பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் தாக்குதல் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அங்கு பணியாற்றிய முக்கிய காவல் அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 27-ம்தேதி குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். கடுமையாகப் போராடி தீவிரவாதிகளை வீழ்த்திய காவல்துறையை பொதுமக்கள் பாராட்டினர்

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதா, இல்லையா? - குழப்பத்தை ஏற்படுத்தும் பரிசோதனை முடிவுகள்

Posted: 05 Aug 2015 08:34 AM PDT

மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன. அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை மற்றும்

சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களிடமே சிக்கிக் கொண்ட பாகிஸ்தான் தீவிரவாதி: பரபரப்பு தகவல்

Posted: 05 Aug 2015 07:59 AM PDT

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை, சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களே தைரியமாகப் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள உதம்பூருக்கு 10 கி.மீ தொலைவில் சம்ருலி என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™