மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மூளை சாவு அடைந்த சிறுமியின் கண்தானத்தால் பார்வை பெற்ற 2 மாணவர்கள்
- திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் எம்.ஏ., ஆங்கிலம் தேர்வில் மந்திரியின் மனைவிக்கு பதிலாக ஆஜரானவர் சிக்கினார்
- ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கவிழ்ந்தது பற்றிய தகவல் அறிய அவசர போன் எண்கள் அறிவிப்பு
- விபத்துக்கு பொறுப்பு ஏற்று சுரேஷ்பிரபு ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
- பலத்த மழையால் விபத்து ஏற்பட்டது: ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு தகவல்
- ஆந்திராவில் செம்மர கட்டை கடத்திய 2 தொழிலாளர்கள் கைது
- அமர்நாத் யாத்திரை: 327 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது
- ஆந்திராவில் 2½ மாதங்களில் விஷக்காய்ச்சலுக்கு 18 பேர் பலி: ஜெகன்மோகன் ரெட்டி நேரில் ஆறுதல்
- லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் ஐதராபாத் வந்தடைந்தனர்
- திருப்பதியில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட் வழங்க நடவடிக்கை
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலி
- இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதலை சமாளிக்க திணறும் பாகிஸ்தான்: எல்லையோர கிராமங்களை காலி செய்கிறது
- 14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இளம்பெண் விரைவில் இந்தியா திரும்புகிறார்
- திருவனந்தபுரம் கோளரங்கத்தில் தமிழில் வர்ணணை: நாளை நடைபெறும் விழாவில் உம்மன்சாண்டி பங்கேற்பு
- போபால் அருகே ஆற்றுப் பாலத்தின் மீது சென்ற இரு ரெயிகள் தடம் புரண்ட விபத்தில் 25 பேர் பலி: பிரதமர் இரங்கல்
- இரண்டு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: 15 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தது - 300 பேர் மீட்பு
- ராஜீவ்காந்தி கொலை விசாரணை: ஆயுள் தண்டனையை குறைப்பது மாநில அரசின் உரிமை-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
- ம.பி.யில் இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்து: பலர் பலியாகி இருக்கலாம் என அச்சம்
- யோகா தினம் பற்றி எஸ்.எம்.எஸ். அனுப்ப 15.87 கோடி செலவு: மத்திய அரசு தகவல்
- திருவள்ளுவர் பற்றி கட்டுரை போட்டி நடத்த 4 பல்கலைக்கழகங்கள் விருப்பம்: ஸ்மிரிதி இரானி தகவல்
| மூளை சாவு அடைந்த சிறுமியின் கண்தானத்தால் பார்வை பெற்ற 2 மாணவர்கள் Posted: 04 Aug 2015 11:01 PM PDT திருவனந்தபுரம் அருகே கரகுளம் ஏனிகரா நிலவூர்தட்டம் பகுதியை சேர்ந்தவர் அஜீத். இவரது மகள் அஞ்சனா (வயது 3). வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது அஞ்சனா திடீர் என்று மயங்கி விழுந்தார். அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமிக்கு மூளை சாவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். |
| Posted: 04 Aug 2015 10:50 PM PDT சத்தீஸ்கர் மாநில கல்வி மந்திரியின் மனைவிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் எம்.ஏ., ஆங்கில தேர்வு எழுதிய ஒரு பெண், தேர்வு அறை அதிகாரிகளிடம் சிக்கி, பின்னர் ஓட்டம் பிடித்த சம்பவம் அம்மாநிலத்தில் 'காமெடியை கிளப்பி' உள்ளது. |
| ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கவிழ்ந்தது பற்றிய தகவல் அறிய அவசர போன் எண்கள் அறிவிப்பு Posted: 04 Aug 2015 10:39 PM PDT காமாயானி மற்றும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கவிழ்ந்தது பற்றிய தகவல்கள் அறிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த போன் எண்கள் விவரம் வருமாறு:– மும்பை – 022–5280005 போபால் – 0755–40011609 |
| விபத்துக்கு பொறுப்பு ஏற்று சுரேஷ்பிரபு ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை Posted: 04 Aug 2015 10:28 PM PDT மத்திய பிரதேச மாநில ரெயில் விபத்து குறித்து டுவிட்டர் இணையத் தளத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறி இருப்பதாவது:– மத்திய பிரதேச மாநிலம் இடர்சியில் தீ விபத்தால் ஏற்பட்ட சிக்னல் கோளாறு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப்போது ஒரே நாளில் 2 ரெயில்கள் தடம் புரண்டுள்ளன. ரெயில்வேயில் என்ன நடக்கிறது மிஸ்டர் பிரபு? நாங்கள் எப்போதும் உங்களை நல்ல மந்திரியாக கருதுகிறோம். நான் |
| பலத்த மழையால் விபத்து ஏற்பட்டது: ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு தகவல் Posted: 04 Aug 2015 10:19 PM PDT மத்திய பிரதேச மாநில ரெயில் விபத்து குறித்து ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கூறியதாவது:– மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ரெயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுதான் ரெயில்கள் கவிழ காரணமாகி விட்டது. விபத்த குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி |
| ஆந்திராவில் செம்மர கட்டை கடத்திய 2 தொழிலாளர்கள் கைது Posted: 04 Aug 2015 10:17 PM PDT திருப்பதி அருகேயுள்ள செர்லோ பள்ளி பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். |
| அமர்நாத் யாத்திரை: 327 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது Posted: 04 Aug 2015 10:13 PM PDT அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 327 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் |
| ஆந்திராவில் 2½ மாதங்களில் விஷக்காய்ச்சலுக்கு 18 பேர் பலி: ஜெகன்மோகன் ரெட்டி நேரில் ஆறுதல் Posted: 04 Aug 2015 09:53 PM PDT ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் செல்ல பள்ளி மண்டலம் பகுதியில் கொத்த மாஜேரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு விஷக்காய்ச்சல் பரவ தொடங்கியது. இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இவர்களில் பலர் |
| லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் ஐதராபாத் வந்தடைந்தனர் Posted: 04 Aug 2015 09:40 PM PDT லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, பின்னர் மீட்கப்பட்ட இந்திய ஆசிரியர்கள் ஐதராபாத் நகரை வந்தடைந்தனர். சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரை கடத்தி பிணையத் தொகை வசூலித்து வருகின்றன. சிலரை தலை துண்டித்து |
| திருப்பதியில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட் வழங்க நடவடிக்கை Posted: 04 Aug 2015 09:35 PM PDT திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஆந்திராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருமலை–திருப்பதி |
| ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலி Posted: 04 Aug 2015 09:26 PM PDT ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். |
| இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதலை சமாளிக்க திணறும் பாகிஸ்தான்: எல்லையோர கிராமங்களை காலி செய்கிறது Posted: 04 Aug 2015 09:24 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி அருகே கடந்த ஒருவார காலமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் இந்தியாவிடம் வாலாட்டி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி தந்து |
| 14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இளம்பெண் விரைவில் இந்தியா திரும்புகிறார் Posted: 04 Aug 2015 09:17 PM PDT பாகிஸ்தானில் 14 ஆண்டுகள் அனாதையாக தவிக்கும் இந்தியப் பெண்ணை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில், இந்தியாவில் இருந்து வந்த ரெயிலின் ஒரு பெட்டியில் சுமார் |
| திருவனந்தபுரம் கோளரங்கத்தில் தமிழில் வர்ணணை: நாளை நடைபெறும் விழாவில் உம்மன்சாண்டி பங்கேற்பு Posted: 04 Aug 2015 09:12 PM PDT கேரள அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் சார்பில் பிரியதர்சினி கோளரங்கம் கடந்த 1994–ம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த கோளரங்கத்தில் பல |
| Posted: 04 Aug 2015 08:25 PM PDT மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஹர்டா மாவட்டத்தில் உள்ள மச்சக் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது சென்ற இரு ரெயில்கள் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்திருந்த தண்டவாளத்தில் இருந்து விலகி, தடம் புரண்டதால் அந்த ரெயில்களின் சில பெட்டிகள் ஆற்றுக்குள் கவிழ்ந்த |
| இரண்டு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: 15 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தது - 300 பேர் மீட்பு Posted: 04 Aug 2015 05:05 PM PDT மத்திய பிரதேசத்தின் ஹார்டா அருகே நீரில் மூழ்கியிருந்த ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதில் 15 ரயில் பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய 300 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். பலர் பலியாகிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. |
| Posted: 04 Aug 2015 03:58 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. |
| ம.பி.யில் இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்து: பலர் பலியாகி இருக்கலாம் என அச்சம் Posted: 04 Aug 2015 03:03 PM PDT மத்திய பிரதேசத்தின் ஹார்டா அருகே நீரில் மூழ்கியிருந்த ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதில் பலர் பலியாகிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. |
| யோகா தினம் பற்றி எஸ்.எம்.எஸ். அனுப்ப 15.87 கோடி செலவு: மத்திய அரசு தகவல் Posted: 04 Aug 2015 12:23 PM PDT கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி உலகம் முழுவதும் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. |
| திருவள்ளுவர் பற்றி கட்டுரை போட்டி நடத்த 4 பல்கலைக்கழகங்கள் விருப்பம்: ஸ்மிரிதி இரானி தகவல் Posted: 04 Aug 2015 11:55 AM PDT 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணில் வாழ்ந்த திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலக நாடுகளில் சிறந்த போதனை நூலாக போற்றப்படுகிறது. தற்போது, திருவள்ளுவரின் பெருமை மற்றும் திருக்குறளின் மேன்மையான சிந்தனைகளை பிரபலப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |