மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- யாகூப் மேமனுக்கு தூக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்
- மேற்கு வங்காளத்தில் இன்று சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 பேர் பலி
- அமர்நாத் யாத்திரை: 306 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது
- மாணவி பாலியல் பலாத்காரம்: தலைமை ஆசிரியருக்கு அடி உதை
- ஆந்திராவில் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
- திருவனந்தபுரம் அறிவியல் கோளரங்கில் ரூ.13 கோடியில் நவீன வசதிகள்: தமிழ் வர்ணனை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு
- பத்மநாபசுவாமி கோவில் அருகே கடையை உடைத்து கொள்ளை: குஜராத் வாலிபர் சிக்கினார்
- 3 நாள் பவித்ர உற்சவம்: திருப்பதி கோவிலில் கட்டண சேவை ரத்து
- உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க தவறினால் நூறு ரூபாய் அபராதம்: குஜராத் அரசு அதிரடி உத்தரவு
- தந்தையுடன் இருக்க ஆசைப்பட்ட மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கொடூரத் தாய்
- ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் பலியான மக்களுக்கு பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலி: ஜப்பான் மந்திரி நன்றி
- செல்போன் கதிர்வீச்சால் சிட்டு குருவிகளின் இன விருத்தி பாதிக்கப்படும்: மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
- காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம்: தீவிரவாத நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் - ராஜ்நாத் சிங் உறுதி
- மீண்டும் மோடி அரசு மீது பாலிவுட் நடிகை ஸ்ருதி சேத் விமர்சனம்
- காசோலை மோசடி வழக்குகளில் பணத்தை விரைவாக மீட்க சட்ட திருத்தம்
- பாராளுமன்றத்தில் 1 அல்லது 2 பயங்கரவாதிகள் உள்ளனர்: மீண்டும் சர்சையில் சாத்வி பிராச்சி
- லலித்மோடி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு சுஷ்மா சுவராஜ் சவால்
- பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது: நடைமுறையில் இல்லாத 295 சட்டங்கள் ஒழிப்பு - மோடி அரசு அதிரடி
- திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ரூ.13 ஆயிரம் திருட்டு: பெங்களூரு பக்தர் கைது
- பீகாரில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை
| யாகூப் மேமனுக்கு தூக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் Posted: 06 Aug 2015 11:03 PM PDT மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு 257 பேரை பலி வாங்கிய தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் கடந்த 30–ந்தேதி நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டான். முன்னதாக யாகூப் மேமன் தண்டனை நிறுத்தக்கோரி தாக்கல் செய்த மனு 30–ந் தேதி அதிகாலையில் கடைசி நேரத்தில் தள்ளுபடியானது. இந்த மனுவை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பிரபுல்லா |
| மேற்கு வங்காளத்தில் இன்று சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 பேர் பலி Posted: 06 Aug 2015 11:01 PM PDT மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மால்டா மாவட்ட தலைநகரிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரோடுவாரி பகுதியில் இன்று காலை சுமார் 7 மணியளவில் சிலர் |
| அமர்நாத் யாத்திரை: 306 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது Posted: 06 Aug 2015 10:47 PM PDT அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 306 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. |
| மாணவி பாலியல் பலாத்காரம்: தலைமை ஆசிரியருக்கு அடி உதை Posted: 06 Aug 2015 10:34 PM PDT ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கோவிந்தம்பள்ளி ராகவேந்திரா காலனியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ராமசந்திரா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டாக அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் |
| ஆந்திராவில் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு Posted: 06 Aug 2015 10:24 PM PDT ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசராம்பேட்டை பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சரத்பாபு. இவர் கடந்த ஜனவரி மாதம் இங்கு பணியில் சேர்ந்தார். இந்த போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பெண் போலீஸ் ஒருவர் பணியில் |
| திருவனந்தபுரம் அறிவியல் கோளரங்கில் ரூ.13 கோடியில் நவீன வசதிகள்: தமிழ் வர்ணனை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு Posted: 06 Aug 2015 10:16 PM PDT திருவனந்தபுரத்தில் கேரள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம் சார்பில் பிரியதர்ஷினி கோளரங்கம் உள்ளது. 1984–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கோளரங்கம் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு வழிகளில் பயன்பட்டு வந்தது. இங்குள்ள |
| பத்மநாபசுவாமி கோவில் அருகே கடையை உடைத்து கொள்ளை: குஜராத் வாலிபர் சிக்கினார் Posted: 06 Aug 2015 09:55 PM PDT திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள் உள்ளன. கோவிலின் ரகசிய அறைகளில் இந்த நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. |
| 3 நாள் பவித்ர உற்சவம்: திருப்பதி கோவிலில் கட்டண சேவை ரத்து Posted: 06 Aug 2015 09:25 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை 3 நாட்கள் பவித்ர உற்சவ விழா நடக்கிறது. கோவிலில் பக்தர்கள், பொதுமக்கள், ஊழியர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு பரிகாரம் செய்தல், கோவிலில் தீட்டு கழித்தல் போன்றவற்றுக்காக இந்த பவித்ர உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. |
| உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க தவறினால் நூறு ரூபாய் அபராதம்: குஜராத் அரசு அதிரடி உத்தரவு Posted: 06 Aug 2015 09:20 PM PDT உள்ளாட்சித் தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள குஜராத் மாநில அரசு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓட்டளிக்க தவறுபவர்கள் நூறு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2009-ம் ஆண்டு திருத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் சட்ட விதிமுறைகளை மேற்கோள் காட்டி இந்த புதிய உத்தரவை பிறப்பித்த |
| தந்தையுடன் இருக்க ஆசைப்பட்ட மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கொடூரத் தாய் Posted: 06 Aug 2015 08:41 PM PDT விவாகரத்து செய்த முன்னாள் கணவர் மீதிருந்த கோபத்தால் தந்தையுடன் சேர்ந்து வாழ விரும்பிய சிறுவனை பெற்றத் தாயே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் பலியான மக்களுக்கு பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலி: ஜப்பான் மந்திரி நன்றி Posted: 06 Aug 2015 08:25 PM PDT ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசப்பட்ட எழுபதாவது நினைவு தினத்தையொட்டி இந்திய பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதற்கு ஜப்பான் மந்திரி நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது, உலகின் முதல் அணுகுண்டாக |
| Posted: 06 Aug 2015 08:15 PM PDT மும்பை மாநகராட்சி பூங்காக்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் 4ஜி செல்போன் கோபுரங்கள் வைக்க பிரபல தனியார் தொலை தொடர்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து கிரண் சாந்தாராம் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். |
| Posted: 06 Aug 2015 05:10 PM PDT காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டான். |
| மீண்டும் மோடி அரசு மீது பாலிவுட் நடிகை ஸ்ருதி சேத் விமர்சனம் Posted: 06 Aug 2015 04:59 PM PDT இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் #SelfieWithDaughter என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை, செல்பி மற்றத்தை கொண்டுவராது மிஸ்டர் மோடி என்று தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்தவர் பாலிவுட் நடிகை ஸ்ருதி சேத். |
| காசோலை மோசடி வழக்குகளில் பணத்தை விரைவாக மீட்க சட்ட திருத்தம் Posted: 06 Aug 2015 04:46 PM PDT காசோலை மோசடி வழக்குகளில் சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும், பணத்தை விரைவாக மீட்கவும் வகை செய்து மாற்றுமுறை ஆவணச்சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாமீது நேற்று விவாதம் நடந்தது. |
| பாராளுமன்றத்தில் 1 அல்லது 2 பயங்கரவாதிகள் உள்ளனர்: மீண்டும் சர்சையில் சாத்வி பிராச்சி Posted: 06 Aug 2015 04:12 PM PDT விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் முக்கிய தலைவரான சாத்வி பிராச்சி, இந்திய பாராளுமன்றத்தில் 1 அல்லது 2 பயங்கரவாதிகள் உள்ளனர் கூறி மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமனை தூக்கில் |
| லலித்மோடி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு சுஷ்மா சுவராஜ் சவால் Posted: 06 Aug 2015 03:48 PM PDT ஊழல் வழக்கில் சிக்கியஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரது மனைவி மினால் மோடி, புற்றுநோய் தாக்கி போர்ச்சுக்கல் நாட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது லண்டனில் இருந்த லலித் மோடி தனது மனைவியை பார்த்து வர போர்ச்சுக்கல் செல்வதற்கு இங்கிலாந்து அரசு |
| பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது: நடைமுறையில் இல்லாத 295 சட்டங்கள் ஒழிப்பு - மோடி அரசு அதிரடி Posted: 06 Aug 2015 03:48 PM PDT பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நடைமுறையில் இல்லாத சட்டங்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. |
| திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ரூ.13 ஆயிரம் திருட்டு: பெங்களூரு பக்தர் கைது Posted: 06 Aug 2015 03:05 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். கோவில் வளாகத்தில் எப்போதும் பலத்த பாதுகாப்பு இருந்து வருகிறது. நேற்று நண்பகல் 1½ மணியளவில் வாலிபர் ஒருவர் கோவிலில் உள்ள பிரதான உண்டியலில் கையை விட்டு |
| பீகாரில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை Posted: 06 Aug 2015 02:46 PM PDT பீகார் மாநில பா.ஜனதாவின் பாட்னா பிரிவுக்கு பொதுச்செயலாளராக இருந்தவர் அவினாஷ் குமார். இவர் நேற்று காலையில் பாட்னா டால்டலி சாலையில் அமைந்துள்ள தனது வீட்டின் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |