Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கொச்சி– மதுரை நெடுஞ்சாலையில் கல் குழிக்குள் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Posted: 03 Aug 2015 11:22 PM PDT

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிஜூ (வயது 40). இவரது மனைவி ஷீபா (35). இவர்களது மகள் மீனாட்சி (7), 4 வயது மகன் சூர்யா ஆகியோருடன் இடுக்கியில் இருந்து கொச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றார்.

இந்திய எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் தாக்குதலில் ஒருவர் பலி

Posted: 03 Aug 2015 11:04 PM PDT

காஷ்மீரில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் தாக்குதலில் ஈடுபடுகிறது. எல்லையில் உள்ள காஷ்மீர் கிராமப் பகுதியிலும் பாகிஸ்தான் படைகள் குண்டுகளை வீசி வருகிறது. இன்று அதிகாலை ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள அக்னூர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படைகள்

பாராளுமன்றம் காந்தி சிலை அருகே மன்மோகன் சிங், சோனியா, ராகுல் காந்தி திடீர் போராட்டம்

Posted: 03 Aug 2015 10:42 PM PDT

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பதவி விலக கோரி பாராளுமன்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடக்கி வருகின்றன. பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 5 நாட்கள் கூட்டத்தில் பங்கேற்க

அமர்நாத் யாத்திரை: 303 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது

Posted: 03 Aug 2015 10:38 PM PDT

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 303 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.

பெங்களூர் பள்ளியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மூன்று வயது குழந்தை: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

Posted: 03 Aug 2015 10:33 PM PDT

கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ள அந்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்

25 எம்.பி.க்கள் சஸ்பெண்டு: காங்கிரசுக்கு ஆதரவாக 9 கட்சிகள் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்தன

Posted: 03 Aug 2015 10:28 PM PDT

லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பதவி விலக கோரி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.

ஐ.எஸ். தீவிரவாத படையில் சேர்ந்து போரிட்ட 6 இந்திய வாலிபர்கள் பலி: இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தகவல்

Posted: 03 Aug 2015 09:52 PM PDT

சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சிறு பகுதியை கைப்பற்றி பேராதிக்கம் செலுத்திவரும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 6 இந்திய வாலிபர்கள் கொல்லப்பட்டதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்பிடிப்பதற்கு என்றே கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ ஆகிய பெருநகரங்களில் சில

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: ஐதராபாத்தில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்

Posted: 03 Aug 2015 08:49 PM PDT

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததால் ஆவேசம் அடைந்த உள்ளூர் மக்கள் அந்த போலீஸ் நிலையத்தை தாக்கி சூறையாடினர். ஐதராபாத் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'போனாலு' விழாவின்போது இன்னொருவருடன் வாக்குவாதம் செய்து, சண்டை போட்டதாக

பாகிஸ்தான் இன்றும் அத்துமீறல்: 12 எல்லை பாதுகாப்பு நிலைகளின் மீது துப்பாக்கிச் சூடு, மோர்ட்டார் குண்டு வீச்சு

Posted: 03 Aug 2015 08:36 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் அக்னூர் செக்டர் அருகேயுள்ள இந்திய எல்லையோர பாதுகாப்பு படை நிலைகளின் மீது இன்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆவேச தாக்கல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியப் படைகள் தக்க பதிலடி தந்ததாகவும், தொடர்ந்து

தானே அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது

Posted: 03 Aug 2015 08:31 PM PDT

மராட்டிய மாநில தலைநகர் மும்பை அருகேயுள்ள தானேயில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மும்பையை அடுத்த தானேயில் கிருஷ்ணா நிவாஸ் என்ற இடத்தில் 3 மாடி

மந்திரிகள் பதவி விலகினால் மட்டுமே விவாதிப்பது ஆக்கப்பூர்வமாக இருக்கும்: எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா பேச்சு

Posted: 03 Aug 2015 08:28 PM PDT

தவறு செய்த மந்திரிகள் பதவி விலகினால் மட்டுமே பாராளுமன்றத்தில் விவாதிப்பது ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று சோனியா காந்தி பேசினார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில்

ஆபாச இணையதளங்கள் முடக்கம்: முன்னாள் மத்திய மந்திரி கண்டனம்

Posted: 03 Aug 2015 07:48 PM PDT

857 ஆபாச இணைய தளங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. இதற்கு முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ராஜங்க மந்திரி மிலிந்த் தியோரா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

Posted: 03 Aug 2015 07:25 PM PDT

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அவையில் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜனதாவை சேர்ந்த மூத்த மந்திரி சுஷ்மா சுவராஜ், முதல்-மந்திரிகள் வசுந்தரா ராஜே, சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய

25 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: ஜனநாயகத்தின் கறுப்பு தினம் - சோனியா காந்தி

Posted: 03 Aug 2015 05:03 PM PDT

பாராளுமன்றத்தை இயங்க விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக கூறி 25 காங்கிரஸ் எம்.பி.க்களை பாராளுமன்றம் சஸ்பெண்ட் செய்தது. இந்த நாள் ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் பற்றி மக்களவை காங்கிரஸ் தலைவர்

வட மாநிலங்களில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு

Posted: 03 Aug 2015 04:03 PM PDT

குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 180-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 69 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,213 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. குஜராத்தில் 71 பேரும், ராஜஸ்தானில் 38 பேரும் பலியாகி உள்ளனர்.

ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகள் புக்கிங் செய்யலாம்: இந்திய ரெயில்வே தகவல்

Posted: 03 Aug 2015 03:36 PM PDT

இந்திய ரெயில்வே துறையில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக மத்திய ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குறிப்பாக, தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக்கிங் செய்ய அடையாள

நிலமசோதா விவகாரத்தில் பா.ஜனதா இறங்கி வந்தது: சர்ச்சைக்குரிய திருத்தங்களை கைவிட சம்மதம்

Posted: 03 Aug 2015 02:41 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் மசோதா, கடந்த 2013-ம் ஆண்டு, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதில் 15 திருத்தங்களை கொண்டு வந்து, அவசர சட்டம் பிறப்பித்தது. நிலங்களை கையகப்படுத்த அவற்றின்

சுஷ்மா சுவராஜ் பதவி விலகக் கோரி பாராளுமன்றத்தில் அமளி: 25 காங். எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் உத்தரவு

Posted: 03 Aug 2015 02:19 PM PDT

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் லலித் மோடி விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்து உள்ளன. நிதி மோசடியில் சிக்கிய ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான்

தமிழ் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு: விண்ணப்பித்த 5 வாரங்களில் முடிவு எடுக்கவேண்டும் - தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 03 Aug 2015 12:40 PM PDT

திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் ஏழாம் அறிவு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் 'யு' சான்றிதழ் பெற்றபோதும் அதற்கு தமிழக அரசு கேளிக்கை வரி அளிக்க மறுத்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

விளம்பரங்களுக்கு 22.33 கோடி செலவு: உயர் நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்

Posted: 03 Aug 2015 12:10 PM PDT

வழக்கு விசாரனண ஒன்றுக்காக, உயர் நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ள தகவல் படி அரசின் கொள்கைகளை விளக்குவதற்காக விளம்பரங்களுக்கு 22.33 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™