மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்திரி தொடர்பு அம்பலம்
- ஆந்திராவில் இன்று பந்த்: வேலூர்–திருப்பதி பஸ்கள் ஒடவில்லை
- ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. லம்பா போதைக்கு அடிமையானவர்: பா.ஜனதா கடும் தாக்கு
- அமர்நாத் யாத்திரை: 47 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது
- சவூதி அரேபிய ஜெயிலில் வாடிய 53 இந்தியர்கள் கொச்சி திரும்பினர்
- சானியா மிர்சாவுக்கு அபராதம்: ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
- ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் கைது
- ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முஹம்மது நவீத் 14 நாள் விசாரணை காவலில் அடைப்பு
- சீனாவின் பிரபல ஸையோமி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்
- பீகார் தேர்தல்: பா.ஜ.க. தலைவர்கள் 700 ரதங்களில் பிரசாரம்
- 30 ஆண்டுகளாக பயன்படுத்தாத நுகர்வோர் சட்டத்தை மேகி நூடுல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக பிரயோகிக்க அரசு முடிவு
- கனிம சுரங்க முறைகேடு குறித்து குமாரசாமியிடம் விசாரணை: மாநில அரசுக்கு தொடர்பு இல்லை - சித்தராமையா பேட்டி
- பாகிஸ்தானில் தவிக்கும் இளம்பெண்ணை மீட்கும் மத்திய அரசின் முயற்சிக்கு சல்மான்கான் ஆதரவு
- தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பு
- ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பெங்களூருவில் இணைப்பு மேம்பாலம் கட்டப்படும்: சித்தராமையா பேச்சு
- காஷ்மீரில் விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி திட்டமா?
- இது சர்வாதிகார நாடு அல்ல- ஆபாசப்படம் பார்ப்பதை தடுக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
- நிலம் கையகப்படுத்தும் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் தள்ளிவைப்பு
- பாராளுமன்றத்தை முடக்குவதா? காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி
- 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
| ம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்திரி தொடர்பு அம்பலம் Posted: 10 Aug 2015 11:18 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் கல்வி மற்றும் அரசுப் பணி தேர்வு வாரியத்தில் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. இதுபற்றி மாநில போலீசாரின் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது கடைநிலை ஊழியரில் தொடங்கி கவர்னர் வரை இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. |
| ஆந்திராவில் இன்று பந்த்: வேலூர்–திருப்பதி பஸ்கள் ஒடவில்லை Posted: 10 Aug 2015 10:54 PM PDT ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி கடந்த 8–ந்தேதி திருப்பதி மாநகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது பொதுக்கூட்ட மேடை அருகே திருப்பதி மஞ்சால வீதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் முனிகோட்டி (வயது43) என்பவர் திடீரென |
| ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. லம்பா போதைக்கு அடிமையானவர்: பா.ஜனதா கடும் தாக்கு Posted: 10 Aug 2015 10:40 PM PDT டெல்லி சாந்தினிசவுக் தொகுதி ஆம்ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா. இவர் தொண்டர்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை வடக்கு டெல்லியின் காஷ்மீரே கேட் பகுதியில் போதை பொருள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| அமர்நாத் யாத்திரை: 47 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது Posted: 10 Aug 2015 10:29 PM PDT அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 47 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் |
| சவூதி அரேபிய ஜெயிலில் வாடிய 53 இந்தியர்கள் கொச்சி திரும்பினர் Posted: 10 Aug 2015 10:24 PM PDT அரபு நாடுகளான சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் விசா காலம் முடிந்தும் நாடு திரும்பாதவர்கள், பாஸ்போர்ட்டுகளை தொலைத்தவர்கள் போன்றவர்கள் அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் |
| சானியா மிர்சாவுக்கு அபராதம்: ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை Posted: 10 Aug 2015 10:06 PM PDT இந்தியாவின் டென்னிஸ் இளவரசி சானியா மிர்சா போக்குவரத்து விதிகளை மீறியதால், ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறை அவருக்கு அபராதம் விதித்துள்ளது. நேற்று இரவு, ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில் பகுதியில் நடத்தப்பட்ட |
| ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் கைது Posted: 10 Aug 2015 09:45 PM PDT ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லியில் ஜந்தர்மந்தரில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. அதில் அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, 66 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள் எம்.எல்.சி.க்கள் ஆகியோர் விமானத்தில் சென்று கலந்து கொண்டனர். |
| ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முஹம்மது நவீத் 14 நாள் விசாரணை காவலில் அடைப்பு Posted: 10 Aug 2015 09:43 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பஸ் மீது தாக்குதல் நடத்தியவர்களில் பிடிபட்ட முகமது நவீத் யாகூபை 14 நாள் விசாரணை காவலில் அடைக்க இங்குள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த வாரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பஸ் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். |
| சீனாவின் பிரபல ஸையோமி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சந்திரபாபு நாயுடு வெளியிட்டார் Posted: 10 Aug 2015 09:21 PM PDT உலக அரங்கில் தற்போது 1.5 பில்லியனாக(150 கோடியாக) இருந்துவரும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை வரும் 2017-ஆம் ஆண்டு 1.7 பில்லியனாக(170 கோடியாக) உயரும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. |
| பீகார் தேர்தல்: பா.ஜ.க. தலைவர்கள் 700 ரதங்களில் பிரசாரம் Posted: 10 Aug 2015 08:54 PM PDT பீகார் மாநில சட்ட சபைக்கு அக்டோபர், நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியை முடிவு செய்து விட்ட தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் அதை வெளியிட உள்ளது. பீகார் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கும், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைக் |
| Posted: 10 Aug 2015 08:31 PM PDT மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன. |
| Posted: 10 Aug 2015 08:29 PM PDT கனிம சுரங்க முறைகேடு குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கனிம சுரங்க முறைகேடு குறித்து சிறப்பு விசாரணை குழு(எஸ்.ஐ.டி.) |
| பாகிஸ்தானில் தவிக்கும் இளம்பெண்ணை மீட்கும் மத்திய அரசின் முயற்சிக்கு சல்மான்கான் ஆதரவு Posted: 10 Aug 2015 08:17 PM PDT இந்தியாவை சேர்ந்த 23 வயது இளம்பெண் கீதா, தன்னுடைய 8-வது வயதில் ரெயிலில் தவறுதலாக பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கு லாகூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த அவரை சில மனிதாபிமானம் படைத்தவர்கள் மீட்டு ஆதரவுக்கரம் நீட்டினர். இந்த நிலையில், ஏறத்தாழ 15 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோர் யார் என்று தெரியாமல், பாகிஸ்தானில் தவிக்கும் அவரை இந்தியா அழைத்து வர மத்திய வெளியுறவு அமைச்சகம் முயற்சி எடுத்து வருகிறது. இதனை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், கீதா தங்களுடைய மகள் என்று நாட்டின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 4 குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவதாக செய்திகள் வெளியானது |
| தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பு Posted: 10 Aug 2015 08:15 PM PDT கேரளாவில் ஓணம் பண்டிகை வருகிற 28-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் திருவோணம் 28-ந்தேதி நடைபெற உள்ளது. கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழாவின் போது கலர் பொடிகளை தூவியும், கதகளி ஆடியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லியும் |
| ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பெங்களூருவில் இணைப்பு மேம்பாலம் கட்டப்படும்: சித்தராமையா பேச்சு Posted: 10 Aug 2015 08:05 PM PDT பெங்களூரு மாநகராட்சி தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தல் அறிக்கையை முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டு பேசியதாவது:- |
| காஷ்மீரில் விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி திட்டமா? Posted: 10 Aug 2015 08:00 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் விமானத்தை கடத்த சதி திட்டம் நடந்ததாக தகவல்கள் வெளியானது. விமானம் கடத்தலுக்கு வாய்ப்பு இல்லை என்றும், இதுகுறித்து முதல்-மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார். |
| Posted: 10 Aug 2015 07:49 PM PDT மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வாஸ்வானி என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆபாசப்படங்களை பார்ப்பதும், அதை பகிர்ந்துகொள்வதும் ஜாமீனில் விட முடியாத கடும் குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறி இருந்தார். |
| நிலம் கையகப்படுத்தும் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் தள்ளிவைப்பு Posted: 10 Aug 2015 07:42 PM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த மசோதாவை எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அந்த குழு தனது அறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதாக |
| பாராளுமன்றத்தை முடக்குவதா? காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி Posted: 10 Aug 2015 07:32 PM PDT 2 நாட்கள் விடுமுறைக்கு பின் பாராளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. நிதி மோசடியில் ஈடுபட்ட ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் நடைபெற்ற மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா |
| 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு Posted: 10 Aug 2015 07:30 PM PDT தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி லோகேஸ்வரி உள்ளிட்ட 7 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவதற்கான தகுதிக்குரிய |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |