Tamil News | Online Tamil News |
- முதல்வர் ஜெ.,க்கு ஓய்வு: கருணாநிதி அறிவுரை
- பயங்கரவாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது: கஜகஸ்தான் நாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
- 'வியாபம்' ஊழல் வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை: எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்தார் ம.பி., முதல்வர்
- ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும்: பா.ஜ., தவிர்த்து அனைத்து கட்சிகளும் கோரிக்கை
- சென்சார் போர்டு தில்லுமுல்லு: சி.ஏ.ஜி., 'பகீர்'
- அரசியல் கட்சிகளுக்கு 'தகவல் ஆப்பு' வருமா?
- சாதனை விளக்க கூட்டம் நடத்த ஜெ., உத்தரவு
- மெட்ரோ ரயில் மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.8: வாரிய அதிகாரிகள் கருணை காட்டுவரா?
- அணு ஆராய்ச்சி மையம் மீது விமானம் பறந்ததால் சந்தேகம்
- ஈரான் படகு ஊடுருவியது எப்படி? என்.ஐ.ஏ., விசாரணை கோருகிறது கேரளா
- மதுவால் மூன்று தலைமுறை பாதிப்பு : அரசு மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு
| முதல்வர் ஜெ.,க்கு ஓய்வு: கருணாநிதி அறிவுரை Posted: ''முதல்வர் ஜெயலலிதா, தன் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள, ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தென் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஆலந்துாரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலை வகித்தார். |
| பயங்கரவாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது: கஜகஸ்தான் நாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் Posted: அஸ்தானா: ''இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் இஸ்லாமிய பாரம்பரியம் தான், இந்த நாடுகளில் பயங்கரவாதத்தை நிராகரித்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்றார். அங்கு பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.உஸ்பெகிஸ்தானில் இருந்து நேற்று, அதன் அண்டை நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் சென்றார் மோடி. அதன் தலைநகர் அஸ்தானாவில், மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்குள்ள, நசர்பெயேவ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... |
| Posted: போபால்: மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற, 'வியாபம்' முறைகேடு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்றமர்ம மரணங்களால், மாநில முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகானுக்கு பல தரப்பிலும்நெருக்கடி கொடுக்கப்பட்டதை அடுத்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த, உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய, அவர் முன்வந்துள்ளார். இதன் மூலம், எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு அவர் பணிந்துள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் அரசுப் பணியாளர் தேர்வு போன்றவற்றை துவக்கத்தில் நேர்மையாக நடத்தி வந்த, வியாபம் என்ற பணியாளர் தேர்வு வாரியத்துடன், மறைமுகமாக கைகோர்த்த, அரசியல் தலைவர்கள், ... |
| ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும்: பா.ஜ., தவிர்த்து அனைத்து கட்சிகளும் கோரிக்கை Posted: புதுடில்லி: 'நாட்டில், எந்தெந்த ஜாதிகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை, அனைவரும் அறியும் வகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய அரசு வெளியிட வேண்டும்' என, பா.ஜ., தவிர்த்து, காங்கிரஸ், - சமாஜ்வாதி, - ஆர்.ஜே.டி., - ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.இதை வலியுறுத்தி, வரவிருக்கும், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில், பிரச்னை எழுப்ப, அக்கட்சிகள் உறுதிபூண்டுள்ளன.நாடு முழுவதும், பெரியதும், சிறியதுமாக, லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. தமிழகத்தில், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. நம் ... |
| சென்சார் போர்டு தில்லுமுல்லு: சி.ஏ.ஜி., 'பகீர்' Posted: மும்பை: சென்சார் போர்டு எனப்படும் திரைப்பட தணிக்கை வாரியம் விதிமுறைகளை கண்டுகொள்ளாமல், 'ஏ' பிரிவு படங்களுக்கு, 'யுஏ' மற்றும் 'யு' சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும், ஒரு சிலருக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. |
| அரசியல் கட்சிகளுக்கு 'தகவல் ஆப்பு' வருமா? Posted: புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளையும் கொண்டு வரலாமா என்பது குறித்து, பதிலளிக்குமாறு, மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மற்றும் காங்கிரஸ், பா.ஜ., உட்பட ஆறு தேசிய கட்சிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.ஏ.டி.ஆர்., எனப்படும், சமூக சீரமைப்புக்கான அமைப்பு என்ற, அரசுசாரா தொண்டு நிறுவனம், அரசியல் கட்சிகளையும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என, சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக, அந்த அமைப்பின் சார்பில், பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் ... |
| சாதனை விளக்க கூட்டம் நடத்த ஜெ., உத்தரவு Posted: சென்னை : முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., அரசு மக்கள் பணியில் முழு அர்ப்பணிப்போடு, நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டில், வெற்றி நடைபோடுகிறது.இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும், எடுத்துக்காட்டாக திகழும், முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி, பாராட்டுகளையும், சான்றிதழ்களையும் பெற்று வருகிறது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், முதல்கட்டமாக, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. ஏழை மக்களுக்காக, 298 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இப்படி பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.இவற்றை விளக்கியும், ... |
| மெட்ரோ ரயில் மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.8: வாரிய அதிகாரிகள் கருணை காட்டுவரா? Posted: 'சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனில், மின் வாரிய அதிகாரிகள், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் ஜப்பான் நாட்டின் நிதி உதவியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமான, சி.எம்.ஆர்.எல்., மூலம், சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் மின்சாரத்தை, மின் வாரியம், ஒரு யூனிட், 8 ரூபாய் என்ற கட்டணத்தில் வழங்குகிறது.முதல் கட்டமாக, ஆலந்துார் - கோயம்பேடு இடையே, கடந்த, 29ம் தேதி முதல் மெட்ரோ ரயில் ஓடத் துவங்கி உள்ளது. இதில் பயணிக்க, ஒருவருக்கு, 10 முதல், 40 ரூபாய் வரை கட்டணம் ... |
| அணு ஆராய்ச்சி மையம் மீது விமானம் பறந்ததால் சந்தேகம் Posted: மும்பை: மும்பையில் உள்ள, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மேலே, ஆளில்லா விமானம் பறந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. கடந்த, 1954ம் ஆண்டு, ஜனவரி 3ம் தேதி, மும்பையில் உள்ள டிராம்பேயில், பாபா அணு ஆராய்ச்சி மையத்தை, மத்திய அணுசக்தி துறை துவக்கியது. இங்கே, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, பல ஆய்வுக் கூடங்கள் உள்ளன. இந்த மையத்துக்கு எப்போதும், பயங்கரவாத மிரட்டல் உள்ளது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மும்பையை சேர்ந்த, கல்லுாரி பேராசிரியர் ஒருவர், ஆராய்ச்சி மையத்தின் மீது, ... |
| ஈரான் படகு ஊடுருவியது எப்படி? என்.ஐ.ஏ., விசாரணை கோருகிறது கேரளா Posted: திருவனந்தபுரம்: ''கேரள கடற்பகுதிக்குள், ஈரான் நாட்டைச் சேர்ந்த மீன்பிடி படகு, அத்துமீறி ஊடுருவியது குறித்த வழக்கை, தேசிய புலானாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்,'' என, கேரள உள்துறை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, ரமேஷ் சென்னிதலா கூறினார். கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கேரள கடற்பகுதிக்குள் சமீபத்தில், ஈரான் நாட்டைச் சேர்ந்த மீன்பிடி படகு அத்துமீறி ஊடுருவியது. அந்த படகை, இந்திய கடலோரக் காவல் படையினர் வழிமறித்து பிடித்தனர்; படகில் இருந்த, 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஏழு பேர் ஈரான் ... |
| மதுவால் மூன்று தலைமுறை பாதிப்பு : அரசு மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு Posted: சென்னை: 'தமிழகத்தில், மூன்று தலைமுறைகள், மதுவால் கெட்டு குட்டி சுவராகியுள்ளன. இனியாவது, முதல்வர் ஜெயலலிதா, மதுக்கடைகளுக்கு முடிவு கட்டுவாரா என, தாய்மார்கள் எதிர்பார்க்கின்றனர்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க, அரசின் நிர்வாக சீர்கேட்டால், ஒட்டுமொத்த தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும், ஐந்து லட்சம் லிட்டர் பால் வீணாவதாகவும், இப்பிரச்னை குறித்து, இரண்டு மாத காலமாக தொடர்ந்து போராடியும், அரசு துளியும் கண்டு கொள்ளவில்லை என, புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுவால் ஏற்படும் கொடுமைகளால், பல குடும்பங்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 08,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |