Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'வியாபம்' ஊழலில் தொடரும் மரணங்கள்: விசாரணைக்கு உதவிய 'டீன்' சாவு

Posted:

புதுடில்லி:மத்திய பிரதேசத்தில், 'வியாபம்' ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவிய டாக்டர், டில்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் உள்ளிட்ட, 40 பேர், இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்வதற்கு, 'வியாபம்' எனப்படும், தொழில்முறை தேர்வு வாரியம் செயல்படுகிறது.இந்த வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதில் உள்ளவர்கள், பெருமளவில் ...

ஹிஜ்புல் முஜாகிதீன் தலைவர் குறித்து 'ரா' மாஜி அதிகாரி பரபரப்பு தகவல்

Posted:

புதுடில்லி:'ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் செய்யது சலாகுதீன், இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தார். ஆனால், அரசு தரப்பில் இந்த விஷயத்தில் போதிய ஆர்வம் காட்டப்படவில்லை' என, உளவு அமைப்பான, 'ரா'வின் முன்னாள் தலைவர் துலாத் தெரிவித்துள்ளார்.

இந்திய உளவு அமைப்பான, 'ரா'வின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் துலாத். இவர், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரின் ஆலோசகராக ( ஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரம்) பதவி வகித்தார்.அவர், 'காஷ்மீர்: வாஜ்பாய் ஆட்சி காலம்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், காந்தகார் விமான கடத்தல் உள்ளிட்ட பல பரபரப்பான ...

10 சதவீத பொருளாதார வளர்ச்சி: வறுமை ஒழிய அருண் ஜெட்லி யோசனை

Posted:

புதுடில்லி:''நாட்டில் வறுமையை ஒழிக்க, 10 சதவீத பொருளாதார வளர்ச்சி, அரசு கொள்கையில் சீர்திருத்தங்கள் அவசியம்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

நாட்டின் சமூக, பொருளாதார, ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அறிக்கை, கடந்த 3ம் தேதி வெளியானது. கிராமப்புற மக்களில் மூன்றில் ஒருவருக்கு நிலமில்லை; கூலி வேலை செய்தே, இவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர் என்ற ஜீரணிக்க முடியாத உண்மை, நாட்டை உலுக்கி எடுத்தது. இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'பேஸ்புக்'கில் நேற்று வெளியிட்டுள்ள நிலைத்தகவல் வருமாறு:சமூக, பொருளாதார, ஜாதி ...

சித்திரை திருவிழாவில் 'தூய்மை இந்தியா' பிரசாரம்

Posted:

கொச்சி:மதுரை சித்திரை திருவிழா, காஷ்மீர் அமர்நாத் யாத்திரை போன்ற பிரசித்தி பெற்ற திருவிழாக்களில், 'துாய்மை இந்தியா' திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்றபின், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், வீதிகள் ஆகியவற்றை துாய்மையாக வைத்து கொள்வதற்காக, துாய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டது. அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர், நடிகையர், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, செய்து ...

கூட்டணிக்கு அவசரமில்லை: கருணாநிதி 'அட்வைஸ்'

Posted:

'அடுத்த ஆண்டுக்கான, சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில், இப்போது அவசரம் காட்ட வேண்டாம். அ.தி.மு.க., முடிவு தெரிந்த பின், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளை சேர்க்கலாம்' என, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம், கருணாநிதி ஆலோசனை கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கட்சிகள் முனைப்பு:
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து, வரும் சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, பா.ஜ., - காங்., - த.மா.கா., - விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் முனைப்பு காட்டி ...

தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்: சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸ்

Posted:

வேலுார்: ஆம்பூர் கலவரம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த பவித்ரா கிடைத்தார். சென்னையில் பதுங்கிஇருந்த அவரை, போலீசார் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின், பெண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டார்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனி; இவரது மனைவி பவித்ரா. கடந்த மாதம், 24ம் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக, ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜமில் அகமதுவை, விசாரணைக்காக பள்ளிகொண்டா போலீசார் அழைத்துச் சென்றனர். ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. பின், வீட்டிற்கு திரும்பிய ஜமில் அகமது உடல்நலம் ...

கடும் நிதி நெருக்கடியால் காங்கிரஸ் கட்சி திவால்? உறுப்பினர்களிடம் நிதி வசூலிக்க திட்டம்

Posted:

புதுடில்லி : நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்களிடம் இருந்து, ஆண்டுதோறும், 250 ரூபாய் வசூலிக்க போவதாக, காங்., அறிவித்து உள்ளது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், இதுவரை இல்லாத வகையில், காங்., படுதோல்வியை சந்தித்தது. லோக்சபாவில், தற்போது காங்கிரசுக்கு, 44 உறுப்பினர்களே உள்ளனர்.

அவசியம்:
இதனால், கட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்தியிலும், அந்தந்த மாநிலங்களிலும் நடக்கும் தேர்தல்களை சந்திப்பதற்கு, போதிய நிதியை திரட்ட வேண்டிய அவசியம், காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளதாக, அக்கட்சி ...

மலிவான விலையில் கோழி குழம்பு: எம்.பி.,க்கள் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: மிக மலிவான விலை யில் எம்.பி.,க்களுக்கு, சைவம் மற்றும் கோழி குழம்பு போன்ற அசைவ உணவுகள் பார்லிமென்ட் கேன்டீன்களில் தரப்படுவதாக வெளியான செய்தியால் நொந்து போன, எம்.பி.,க்கள், 'பார்லிமென்டில் கேன்டீனே தேவையில்லை' என கூறி வருகின்றனர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்படி, கடந்த 2013 - 14ம் நிதியாண்டில் மட்டும், பார்லிமென்டில் மலிவு விலையில் நடத்தப்படும் கேன்டீன்களால், 14 கோடி ரூபாய் நஷ்டம் என தெரியவந்தது. மேலும், பார்லி மென்ட் கேன்டீன்களில், கோழி குழம்பு உணவு வெறும், 45 ரூபாய்க்கும், ஐதராபாத் பிரியாணி 51 ரூபாய்க்கும், பருப்பு, ஒன்றரை ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு: உயர் நீதிமன்றம் விசாரிக்க விஜயகாந்த் கோரிக்கை

Posted:

சென்னை: 'தேர்தல் முறைகேட்டிற்கு முடிவு கட்ட, உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த ஒரு வாரமாக, 40 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, அவசர நிலை குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. அப்போதைய பிரதமர் இந்திராவிற்கு ஆதரவாக, அரசு அதிகாரிகள் தேர்தல் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவர் எம்.பி.,யாக வெற்றி பெற்றது செல்லாது என, நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.அதேபோன்ற ...

6 நாடுகளுக்கு மோடி இன்று பயணம்

Posted:

புதுடில்லி: பிரதமர் மோடி, ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கேற்பு:
பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளுக்கு, இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 13ம் தேதியுடன் முடிவடையும் இச்சுற்றுப்பயணத்தின் போது, 'பிரிக்ஸ்' மற்றும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடி, தன் பயணத்தின் முதல் நாளான இன்று, உஸ்பெகிஸ்தான் செல்கிறார். அங்கிருந்து நாளை, கசகஸ்தான் போகிறார். பின் 8ம் தேதி, ரஷ்யா செல்லும் ...

'பேஸ்புக்'கில் புகார்: ரயில்வே கலக்கல்

Posted:

புதுடில்லி: ரயில் பயணிகள் புகார் அளிப்பதற்கு வசதியாக, 'பேஸ்புக்' கணக்கு, ரயில் பயணத்தில் ஏற்பட்ட நிறை, குறைகளை அறிய, பயணிகளிடம் கருத்து கேட்பு என, பல திட்டங்களை அறிவித்து, இந்திய ரயில்வே கலக்கி வருகிறது.ரயில் பயணிகள் தங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியம் குறித்து புகார் அளிப்பதற்கு வசதியாக, பேஸ்புக் சமூக வலைதளத்தில், 'சி.பி.ஆர்.ஓ., - என்.சி.ஆர்.,' என்ற பெயரில், வலைப் பக்கம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த வலைப் பக்கத்துக்கு வரும் புகார்களை, ரயில்வே புகார்கள் கண்காணிப்பு மையம் அவ்வப்போது கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்.மேலும், அனைத்து ரயில் பெட்டிகளிலும், '1512' ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™