Tamil News | Online Tamil News |
- நெருங்கும் தேர்தல்: விரைவுபடுத்தப்படும் திட்டங்கள்
- குண்டர் சட்டத்தில் 'உள்ளே' போகும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : 3 ஆண்டில் 116 பேரை கைது செய்த சேலம் இன்ஸ்பெக்டர்
- சத்தீஸ்கரில் அரசு விடுதி மாணவியரிடம் அத்துமீறல்: நள்ளிரவில் புகுந்த அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு
- முதல்வர் வேட்பாளர்கள் ஸ்டாலின், அன்புமணி, விஜயகாந்த் மும்முரம்: பலத்தை நிரூபிக்க மண்டல மாநாடுகள் நடத்துவதில் தீவிரம்
- இந்திய அதிகாரிகளுக்கு ரூ.62 கோடி லஞ்சம்
- சிறப்பு அந்தஸ்து தொடரும்: காஷ்மீர் ஐகோர்ட் உத்தரவு
- பணிகள் பற்றி கேள்வி எழுப்பினால் எச்சரிக்கையா?: கருணாநிதி கோபம்
- இனிப்பு கொடுத்த இந்திய வீரர்கள்: வாங்க மறுத்த பாக்., ராணுவம்
- தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் எண்ணிக்கை குறைவு: நாடு முழுவதும் 2014ல் 5,000 பேர் விபரீத முடிவில் பலி
- அம்மாடியோவ்... உலக நடிப்புடா சாமி!
- சந்தேகத்தில் கைது செய்த இந்தியரை விடுவித்தது சீனா
- ம.பி.,யில் நிருபர் இறந்தது எப்படி? விசாரிக்க 'யுனெஸ்கோ' கோரிக்கை
- பார்லி.யை சுமூகமாக நடத்துவது எப்படி?: தே.ஜ.,கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்ட பிரதமர் மோடி திட்டம்
| நெருங்கும் தேர்தல்: விரைவுபடுத்தப்படும் திட்டங்கள் Posted: சட்டசபை தேர்தல் நெருங்குவதால், திட்டங்களை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இதற்காக, நிதி ஒதுக்கீடுகளை விரைந்து அளிக்கவும், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.தமிழக சட்டசபைக்கு, 2016 ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அனுமதி:இந்நிலையில், 2016 மார்ச், 31ம் தேதிக்குள், நிதி ஒதுக்கீடுகளை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது. நடப்பு 2015 - 16 பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், மானிய கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், நிதி ஒதுக்கீடுகளுக்கு மட்டும் சட்டசபை அனுமதி பெறப்பட்டு உள்ளது. திட்டங்களை ... |
| Posted: தமிழகத்தில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், குண்டர் சட்டத்தில் சிக்கும் கைதிகள் எண்ணிக்கை, அதிகமாகிறது. குற்றவாளிகள், ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டோரை கைது செய்வதில், சேலம், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில், இது வரை 116 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளார்.தமிழகத்தின் முக்கிய நகரங்களில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், தொடர்ந்து ... |
| சத்தீஸ்கரில் அரசு விடுதி மாணவியரிடம் அத்துமீறல்: நள்ளிரவில் புகுந்த அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு Posted: ராய்ப்பூர்:சத்தீஸ்கரில், பள்ளிச் சிறுமியர் தங்கியிருக்கும் அரசு விடுதியில், சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் நுழைந்த உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிலர், 10க்கும் மேற்பட்ட மாணவியரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அந்த கொடூரத்தில் ஈடுபட்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உட்பட பலர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகஇருந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர், போலீசில் சரணடைந்துள்ளார். சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமண் சிங் முதல்வராக உள்ளார். இங்குள்ள, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும், கோர்பா என்ற மாவட்டத்தில், பள்ளி மாணவியர் ... |
| Posted: தமிழக அரசியல் களத்தில், முதல்வர் வேட்பாளர்களாக வலம் வரும் ஸ்டாலின், அன்புமணி, விஜயகாந்த் ஆகியோர், தங்கள் ஆதரவு பலத்தை நிரூபிக்க, மண்டல மாநாடுகளை நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தி.மு.க.,வில், அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளரான, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், நேற்று, கடலுாரில் நடந்த பிரம்மாண்டமான மண்டல மாநாட்டில் பங்கேற்றார். அதற்கு முன், மதுரையில் இதுபோன்ற மிகப்பெரிய மாநாட்டை அக்கட்சி நடத்தி, ஆதரவு பலத்தைக் காட்டியது. தொடர்ச்சியாக, திருச்சி, ஈரோடு, நெல்லை என, மண்டல மாநாடுகள் நடத்தவும், இக்கட்சி திட்டமிட்டுள்ளது. ... |
| இந்திய அதிகாரிகளுக்கு ரூ.62 கோடி லஞ்சம் Posted: கோவா மாநிலத்தில், நீர் மேம்பாட்டு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு, ஒரு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம், 62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த, பிரபல கட்டுமான நிறுவனம், 'லுாயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல்'. இந்த நிறுவனம், வெளிநாடுகளில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்கு, லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, நியூஜெர்சியில் உள்ள, பெடரல் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதில், இந்தியாவின் கோவாவில் செயல்படுத்தப்பட்ட ... |
| சிறப்பு அந்தஸ்து தொடரும்: காஷ்மீர் ஐகோர்ட் உத்தரவு Posted: ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் முப்தி முகமது சயீது தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்துக்கு அரசியல் அமைப்பு சட்டம், 370வது பிரிவின்படி, சிறப்பு அந்தஸ்து, துவக்கம் முதலே அளிக்கப்பட்டுள்ளது. 'இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும்' என, பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு, அங்குள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பான ஒரு வழக்கு, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அத்தார், மக்ரே ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' ... |
| பணிகள் பற்றி கேள்வி எழுப்பினால் எச்சரிக்கையா?: கருணாநிதி கோபம் Posted: சென்னை : 'ஓட்டளித்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து, கேள்வி எழுப்பினால், எச்சரிக்கை செய்வது தான் ஜனநாயகமா' என, கேள்வி எழுப்பி உள்ளார், தி.மு.க., தலைவர் கருணாநிதி.அவரது அறிக்கை:அ.தி.மு.க., அரசு சார்பில், 15ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம், 16 மற்றும் 17ம் தேதிகளில், தொடர்ச்சியாக நடைபெற்றதைப் போலவும், அந்த நாட்களிலும், முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்கு வந்ததைப் போலவும் ஜோடித்து, ஒவ்வொன்றாக செய்திக் குறிப்பு வெளியிடுகின்றனர்.அப்படியென்றால், அது மாநில மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?மக்கள் மனதிலும், பத்திரிகைகளிலும் தோன்றும், இதையெல்லாம் ... |
| இனிப்பு கொடுத்த இந்திய வீரர்கள்: வாங்க மறுத்த பாக்., ராணுவம் Posted: ஜம்மு: ரம்ஜான் மாதம் முடிந்து, புதிய மாதம் துவங்குவதை கொண்டாடும் விதமாக, எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் அளித்த இனிப்புகளை வாங்கிக் கொள்ள, பாக்., ராணுவ வீரர்கள் மறுத்து விட்டனர். கடந்த சில நாட்களாக, இந்தியா - பாக்., எல்லைப் பகுதிகளில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், பாக்., ராணுவம் திடீர் தாக்கு தல் நடத்தி வருகிறது. அதற்கு, இந்திய தரப்பு, தக்க பதிலடி தந்து வருகிறது. இதனால், ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் நோன்பு மாதமான, ரம்ஜான் முடிந்து, ... |
| Posted: புதுடில்லி: நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி போல, விவசாயிகள் தற்கொலை, கடந்த ஆண்டில், வெகுவாக குறைந்துள்ளது என்ற செய்தி அமைந்துள்ளது. 2013ல், 11 ஆயிரத்து, 700 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2014ல், 5,000 விவசாயிகள் மட்டுமே தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக, தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட, விவசாயிகள் நலத்திட்ட நடவடிக்கைகளால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை போலும் என, நினைத்தால் அது தவறு. |
| அம்மாடியோவ்... உலக நடிப்புடா சாமி! Posted: புதுடில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் மூத்த தலைவர்களான, பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோரை, கெஜ்ரிவால், கட்சியை விட்டு நீக்கினார். டில்லியில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த இருவரையும், கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில், 'பிரசாந்த் பூஷனும், யோகேந்திர யாதவும், மீண்டும் கட்சியில் சேர்ந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளேன்' என, கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு, ... |
| சந்தேகத்தில் கைது செய்த இந்தியரை விடுவித்தது சீனா Posted: பீஜிங்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட இந்தியர், ராஜிவ் மோகன் குல்ஷ்ரஸ்தாவை, சீனா நேற்று விடுவித்தது. தென்ஆப்ரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில், கடந்த வாரம், சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட மங்கோலியாவிற்கு, 20 சுற்றுலா பயணிகள் சென்றனர். அவர்களில் சிலர், ஓட்டல் அறையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின், 'வீடியோ' வை பார்த்ததாக கூறப்படுகிறது. அதனால் மொத்த குழுவையும் கைது செய்த சீன போலீஸ், விசாரணைக்கு பிறகு, இங்கிலாந்தை சேர்ந்த, ஆறு பேரை மட்டும் விடுவித்தது. இதையடுத்து, இந்திய துாதரகம் ... |
| ம.பி.,யில் நிருபர் இறந்தது எப்படி? விசாரிக்க 'யுனெஸ்கோ' கோரிக்கை Posted: ஐக்கிய நாடுகள்: 'வியாபம்' ஊழல் விவகாரம் தொடர்பாக, செய்தி சேகரிக்கச் சென்ற, டில்லி, 'டிவி' நிருபர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து, தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என, 'யுனெஸ்கோ' எனப்படும், ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் தலைவர் வலியுறுத்தி உள்ளார். |
| பார்லி.யை சுமூகமாக நடத்துவது எப்படி?: தே.ஜ.,கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்ட பிரதமர் மோடி திட்டம் Posted: புதுடில்லி: பார்லி. மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி துவங்குகிறது. நிலஎடுப்பு மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட 11 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், லலித்மோடி விவகாரம், ம.பி.யை உலுக்கி வரும்வியாம் முறைகேடு ,உள்ளிட்டபல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பார்லி. முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எதிர்கட்சிகளை வியூகத்தினை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 19,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |