Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கற்பழிப்பு வழக்கில் ஐகோர்ட் பிறப்பித்த சமரச உத்தரவு வாபஸ்: குற்றவாளிக்கு வழங்கிய ஜாமினையும் ரத்து செய்தார் நீதிபதி

Posted:

சென்னை : சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை, சமரச மையத்திற்கு அனுப்பி வைத்து பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று வாபஸ் பெற்றது. நீதிபதி, குற்றவாளிக்கு வழங்கிய இடைக்கால ஜாமினையும் ரத்து செய்தார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர், மோகன். 15 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இவரால், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி கர்ப்பமுற்று, குழந்தையும் பெற்றார்.இந்த வழக்கை விசாரித்த, கடலுார் மகளிர் நீதிமன்றம்,மோகனுக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய்அபராதமும் விதித்தது. சிறுமிக்கு, 2 லட்சம் ...

பார்லி.,யில் நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறுமா? முட்டுக்கட்டை போட எதிர்க்கட்சிகள் தீவிரம்

Posted:

புதுடில்லி: விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில்,நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.பார்லிமென்டின் கடந்த கூட்டத்தொடரின் போது, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், பார்லிமென்டின் இரு சபைகளின் கூட்டுக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறப்பட்டது.அடுத்த கூட்டத்தொடர், வரும் 21ம் தேதி துவங்கவுள்ள நிலையில், மேலும் கால அவகாசம் கேட்டு, கூட்டுக் குழுவின் தலைவரும், பா.ஜ., தலைவருமான ...

கிரிமினல் அவதூறு சட்டம் அவசியம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்

Posted:

புதுடில்லி: 'இந்திய குற்றவியல் சட்டத்தில், கிரிமினல் அவதுாறு சட்ட வழிவகைகள் அவசியம் தேவை; இவை, பொதுவாழ்வில் ஈடுபடுபவரின் புகழ், கவுரவத்தை காப்பதோடு, பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல தலைவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்துக்கள் கூறியதை அடுத்து, அவர்களுக்கு எதிராக, தமிழக அரசு, கிரிமினல் அவதுாறு வழக்கு தொடுத்துள்ளது. இதை எதிர்த்து, இத்தலைவர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதைத் ...

40 கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த இலக்கு: 15ம் தேதி 2 மெகா திட்டங்கள் துவக்கம்

Posted:

புதுடில்லி: வரும், 2022ம் ஆண்டுக்குள், 40 கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான, தேசிய திறன் மேம்பாட்டு கொள்கை மற்றும் ராஷ்டிரிய கவுஷல் விகாஸ் திட்டத்தை, வரும் 15ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.கடந்த 2009ல், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வரும் 2022க்குள், 50 கோடி பேரின் திறனை மேம்படுத்தப் போவதாக திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் அறிவிக்கப்பட்டதோடு சரி; அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் முடங்கிக் கிடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசு, ...

முட்டை சப்ளையில் முறைகேடு: அரசுக்கு கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை : 'மவுலிவாக்கம் கட்டடம் இடிந்தது தொடர்பான, ரகுபதி கமிஷன் அறிக்கையை, இதுவரை வெளியிடாமல் இருப்பது ஏன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:சென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடிக் கட்டடம் இடிந்து, 61 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க, நீதிபதி ரகுபதி கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன், விசாரணை அறிக்கையை, 2014 ஆகஸ்ட் 25ம் தேதி, அரசுக்கு அளித்துவிட்டது.ஆனாலும், அறிக்கையை இன்னும் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை. விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்த ஆறு மாதத்திற்குள், சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என சட்டம் உள்ளது.ஆனால், ...

கடனில் மின் வாரியம்: விஜயகாந்த் புகார்

Posted:

சென்னை: 'தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால், பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, மின்வாரியம் கடனில் சிக்கித் தவிக்கிறது' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசு சூரிய ஒளி மின் கொள்கையை வெளியிட்டபோது, 'ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் வீதம் அடுத்த, மூன்று ஆண்டுகளில், 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டது.ஆனால், 2003 முதல், 2014 வரை, தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், 'சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, ...

எல்லை பகுதியை வேவு பார்க்கும் பாக்.,கின் கண்காணிப்பு கேமராக்கள்

Posted:

ஜெய்ப்பூர் : இந்திய ராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்க, ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது என்று பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது.

'எல்லை கோட்டில் இருந்து, 500 மீட்டர் வரை கேமரா உள்ளிட்ட எந்த உபகரணமும் பயன்படுத்தக் கூடாது' என்று சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானை ஒட்டியுள்ள, பாக்., எல்லை பகுதியை கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை, நமது ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்சல்மார், பாட்மேர், பிகானீர், ஸ்ரீகங்கா நகர் எல்லை பகுதிகளில், ...

ஜெ., விடுதலைக்கு எதிரான 'அப்பீல்' மனு: திருத்தங்களுடன் மீண்டும் கர்நாடகா தாக்கல்

Posted:

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேரின் விடுதலையை எதிர்த்து, கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய திருத்தங்களை சரி செய்து, புதிய மனுவை, கர்நாடகா அரசு, நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரை, கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.இந்த தீர்ப்பில், சில கணக்கு பிழைகள் உள்ளன என்பது உட்பட, பல்வேறு கேள்விகளை எழுப்பி, 2,700 பக்கம் கொண்ட, ...

அமேதிக்கு பிரியங்கா மகன் திடீர் விசிட்

Posted:

அமேதி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எம்.பி.,யாக உள்ள அமேதி தொகுதி யில், புது விருந்தாளியாக, அவரது சகோதரி பிரியங்காவின் மகன் வந்து தங்கிச் சென்றது, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உ.பி., மாநிலம் அமேதி, காங்கிரஸ் தலைவர்களின் பாரம்பரிய தொகுதியாக திகழ்கிறது. நேரு குடும்பத்தைச் சேர்ந்த பலர், இத்தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,க்களாகி உள்ளனர். தற்போது, காங்., துணைத் தலைவர் ராகுல், இந்த தொகுதி யின் எம்.பி.,யாக உள்ளார். இவரின் சகோதரி பிரியங்கா, அடிக்கடி அமேதிக்கு வந்து பொதுமக்களுடன் அளவளாவி விட்டு செல்வது வழக்கம். பிரியங்காவின் மகன் ரேகன், 14, தன் ...

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: இலங்கை பிரதமர் ரணில் உறுதி

Posted:

கொழும்பு: ''இலங்கை தமிழர்களுக்கு, மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அதிகார பகிர்வு அளிக்கப்படும்,'' என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாக்குறுதி அளித்துள்ளார்.இலங்கையில் கடந்த, 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். அதன் பின், தமது பகுதிகளுக்கு அதிகாரபகிர்வு அளிக்கப்பட வேண்டுமென, தமிழர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை பார்லிமென்டுக்கு வரும் ஆகஸ்ட் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதையொட்டி, யு.என்.பி., எனப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் சிறப்புக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™