Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நாகர்கோவில்

Posted: 11 Jul 2015 01:30 PM PDT

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி

Posted: 11 Jul 2015 01:30 PM PDT

சாத்தான்குளம் புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Posted: 11 Jul 2015 01:29 PM PDT

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 92 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆத்தூர் பாசனக் கால்வாயில் அமலைச்செடிகள் அகற்றம்

Posted: 11 Jul 2015 01:28 PM PDT

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆத்தூரில் முன்கார் சாகுபடிக்கு இடையூறாக இருந்த அமலைச்செடிகள் அகற்றப்பட்டன.

மக்கள் நீதிமன்றம்: 254 பிறப்பு, இறப்பு பதிவு வழக்குகளுக்கு தீர்வு

Posted: 11 Jul 2015 01:28 PM PDT

கோவில்பட்டி நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 254 பிறப்பு, இறப்பு பதிவு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் 18இல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 11 Jul 2015 01:27 PM PDT

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

உடன்குடி பகுதியில் அடிக்கடி பழுதாகி நிற்கும் பேருந்துகள்: பொதுமக்கள் அவதி

Posted: 11 Jul 2015 01:27 PM PDT

உடன்குடி பகுதியில் கிராமங்களை இணைக்கும் பெரும்பாலான நகரப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்பதால் பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

5 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை கட்டடம் திறப்பு

Posted: 11 Jul 2015 01:26 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை கட்டடங்களை மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் திறந்து வைத்தார்.

தீவிபத்துக்கு காரணமான விவசாயி கைது

Posted: 11 Jul 2015 01:17 PM PDT

சாத்தான்குளம் அருகே கோழிப்பண்ணை  மற்றும் மரங்கள் எரிந்து தீவிபத்துக்கு காரணமான விவசாயியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மீன்பிடி துறைமுகத்தில் ஏல அட்டைகளை திருடி மீன் ஏலம் எடுத்த இருவர் கைது

Posted: 11 Jul 2015 01:16 PM PDT

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஏல அட்டைகளை திருடி மீன்களை ஏலம் எடுத்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டியில் தீ விபத்து: தீக்குச்சி மரத்தடிகள் சேதம்

Posted: 11 Jul 2015 01:15 PM PDT

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பில் உள்ள தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்குச்சி தயாரிக்க பயன்படும் மரத்தடிகள் எரிந்து சேதமடைந்தன.

வியாபாரியை மிரட்டிய இளைஞர் கைது

Posted: 11 Jul 2015 01:14 PM PDT

சாத்தான்குளம் அருகே வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

நாசரேத் அருகே இளம்பெண் தற்கொலை

Posted: 11 Jul 2015 01:13 PM PDT

நாசரேத்  அருகே இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாரியில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 11 Jul 2015 01:11 PM PDT

முக்காணி அருகில் லாரியில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

கடம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட ஊருணி நிலம் மீட்பு: ஆட்சியர் நடவடிக்கை

Posted: 11 Jul 2015 01:11 PM PDT

கடம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஊருணி நிலம் ஆட்சியரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டது.

அகதிகள் முகாமில் மருத்துவ முகாம்

Posted: 11 Jul 2015 01:10 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் 2 புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்

Posted: 11 Jul 2015 01:10 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு முதல் ஊடகவியல் மக்கள் தொடர்பியல், மதிப்பூட்டப்பட்ட மீன் வளர்ப்பியல் என இரண்டு பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளள.

எரிவாயு உருளைகளை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 11 Jul 2015 01:09 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வணிக நோக்கில் பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குமரி குகநாதீஸ்வரர் கோயில் அருகே ஆட்டோ நிறுத்தத்தை 2 வாரத்துக்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Jul 2015 01:08 PM PDT

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயில் அருகே நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களை 2 வாரத்துக்குள் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குலசேகரம் அரசு மருத்துவமனையில் குறைகளை போக்க கோரி 21 இல் திமுக மறியல்

Posted: 11 Jul 2015 01:08 PM PDT

குலசேகரம் அரசு மருத்துவமனையில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க 8 ஆம் ஆண்டு தொடக்க விழா

Posted: 11 Jul 2015 01:07 PM PDT

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்சூளையில் விபத்து: தொழிலாளி சாவு

Posted: 11 Jul 2015 01:06 PM PDT

மார்த்தாண்டம் அருகே செங்கல்சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அடுக்கப்பட்டிருந்த செங்கல்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை

Posted: 11 Jul 2015 01:05 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி பரவலாக மீண்டும் சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகர்கோவிலில் அதிமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

Posted: 11 Jul 2015 01:05 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி விழா மற்றும் அதிமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரி வஞ்சியாதித்தன் புதுத் தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருதங்கோடு ஊராட்சியில் குடிநீர் தொட்டி திறப்பு

Posted: 11 Jul 2015 01:04 PM PDT

விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மருதங்கோடு ஊராட்சி கழுவன்திட்டை காலனி பகுதியில் அமைக்கப்பட்ட சிறுமின்விசைத் திட்ட குடிநீர் தொட்டியை எஸ். விஜயதாரணி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

சாத்தான்குளம் அருகே தீ விபத்துக்கு காரணமான விவசாயி கைது

Posted: 11 Jul 2015 01:03 PM PDT

சாத்தான்குளம் அருகே கோழிப்பண்ணை  மற்றும் மரங்கள் எரிந்து நிகழ்ந்த  தீ விபத்துக்கு காரணமான விவசாயியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குமரி அரசு மருத்துவமனைகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 11 Jul 2015 01:02 PM PDT

குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார்.

இளைஞரின் தலைக்கவச விழிப்புணர்வு பிரசாரப் பயணம் குமரியில் நிறைவு

Posted: 11 Jul 2015 01:02 PM PDT

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சமூகசேவகர் ஆறுமுகம், தனது பயணத்தை கன்னியாகுமரியில் சனிக்கிழமை நிறைவு செய்தார்.

மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பு

Posted: 11 Jul 2015 01:01 PM PDT

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் வீடு இழந்த குடும்பத்துக்கு இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கம்பர் உணர்த்தும் வானியல்

Posted: 11 Jul 2015 12:49 PM PDT

சூரியனைச் சுற்றி இயங்குவன கோள்கள். அதனால், சூரியன் "கோளரசு' எனப் பெயர் பெற்றது. கோள்களின் இயக்கக் காலமும் இயல்பும் மாறுபடுகின்றன. கோள்களில் சில சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும் காலங்களில் இயற்கை மாற்றங்களும் நிகழ்வதுண்டு.

சொல் தேடல் -16

Posted: 11 Jul 2015 12:45 PM PDT

வாழ்க்கைத் தொடருக்குப் பிறப்பு எழுவாய்; இறப்பு வினைமுற்று. எல்லாத் தொடர்களும் ஒன்றுபோல் இல்லை. சில தொடர்கள் செறிவான சிறிய தொடர்கள்! சில பொருளற்ற நீண்ட

கோதைக் கும்மி

Posted: 11 Jul 2015 12:41 PM PDT

திருநெல்வேலியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் அழகிய சொக்கநாதப் பிள்ளை. இவர் சிவ பக்தராக இருந்தாலும், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது "கோதைக் கும்மி' என்ற பெயரில்

ஆன்மிகம் வேறு; ஆன்மீகம் வேறு!

Posted: 11 Jul 2015 12:40 PM PDT

சொல் அறிவோம்' பகுதியில் "ஆன்மீகம் அல்ல, ஆன்மிகமே! ஆன்மீகம் என்று எழுதுவது தவறு' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தது சரியல்ல. ஏனெனில், ஆன்மிகம் வேறு;

இஃப்தார் விருந்து: கணவரை இழந்த பெண்கள் பங்கேற்பு

Posted: 11 Jul 2015 12:40 PM PDT

தில்லியின் பிருந்தாவன் பகுதியில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கணவரை இழந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த வாரம் கலாரசிகன்

Posted: 11 Jul 2015 12:39 PM PDT

இந்த வாரம் கலாரசிகன்

பள்ளி முதல்வரை மிரட்டியதாக புகார்: ஆம் ஆத்மி எம்எல்ஏவின் கணவர் மீது வழக்கு

Posted: 11 Jul 2015 12:39 PM PDT

பள்ளி முதல்வரை மிரட்டியதாக, தில்லியின் ஷாலிமார் பாக் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ வந்தனா குமாரியின் கணவருக்கு எதிராக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தலில் வாக்களிக்க கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

Posted: 11 Jul 2015 12:39 PM PDT

"தேர்தலின்போது வாக்களிக்கும்படி வாக்காளரை கட்டாயப்படுத்த முடியாது; அது கட்டாயமும் கிடையாது' என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவிற்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தில்லிக்கு போதை பொருள்கள் கடத்தல்: தான்சானியாவை சேர்ந்த இருவர் கைது

Posted: 11 Jul 2015 12:38 PM PDT

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்றதாக, தான்சானியா நாட்டைச் சேர்ந்த  ஜான் கூகு (30), ஃபுன்டிகிரா ரமலான் இஸ்மாயில் (30) ஆகியோரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் வெள்ளிக்கிழமை கிழமை கைது செய்தனர்.

சிறப்பு ஆயுதப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Posted: 11 Jul 2015 12:37 PM PDT

தில்லி அருகே உள்ள சத்தர்பூரில் சிறப்பு ஆயுதப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தில்லி விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

Posted: 11 Jul 2015 12:36 PM PDT

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி மிரட்டலையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சனிக்கிழமை பலப்படுத்தப்பட்டன.

புதுதில்லி

Posted: 11 Jul 2015 12:36 PM PDT

ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த:குமரி வீரரின் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

Posted: 11 Jul 2015 12:36 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கித் தாக்குதலில் வீர மரணம் அடைந்த குமரி மாவட்ட ராணுவ வீரர் அனீஷின் உடல் சொந்த ஊரில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

பயண சலுகை ரசீது மோசடி: விசாரணைக்கு சிசோடியா உத்தரவு

Posted: 11 Jul 2015 12:35 PM PDT

விடுமுறை பயணச் சலுகை ரசீது மோசடி தொடர்பாக, அரசுப் பள்ளியின் முதல்வர், முன்னாள் முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை உத்தரவிட்டார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில்:வீடு, வீட்டுமனைகள் கண்காட்சி தொடக்கம்

Posted: 11 Jul 2015 12:35 PM PDT

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் வீடு மற்றும் வீட்டுமனைகள் கண்காட்சி, திருநெல்வேலியில் சனிக்கிழமை தொடங்கியது.

ரியல் எஸ்டேட் அதிபர் "என்கவுண்ட்டர்' வழக்கு: சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை உத்தரவு

Posted: 11 Jul 2015 12:34 PM PDT

தலைநகரில் உள்ள உணவகத்தில் கடந்த மே மாதம் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் விஷிஸ்த் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் மத்திய உள்துறை ஒப்படைத்துள்ளது.

நில அபகரிப்பு வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

Posted: 11 Jul 2015 12:34 PM PDT

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ மனோஜ் குமாரின் போலீஸ் காவலை மேலும் 2 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

கட்டட விபத்து: ரகுபதி அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யாதது ஏன்? :கருணாநிதி

Posted: 11 Jul 2015 12:34 PM PDT

சென்னையில் கட்டட விபத்து தொடர்பாக நீதிபதி ரகுபதியின் அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படாதது ஏன் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த எஸ்டிஎம்சி முடிவு

Posted: 11 Jul 2015 12:33 PM PDT

தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) முடிவு செய்துள்ளது.

துணை செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Posted: 11 Jul 2015 12:33 PM PDT

நாடு முழுவதும் சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள துணை செவிலியர் உள்ளிட்ட ஊழியர்களின் பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய துணை செவிலியர்கள், பேறுகால உதவியாளர்களின் அகில இந்திய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தங்கம் விலை தொடர்ந்து சரிவு:ஒரு பவுன் ரூ. 19,720-க்கு விற்பனை

Posted: 11 Jul 2015 12:32 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 16 குறைந்து, சனிக்கிழமை ரூ. 19,720-க்கு விற்பனையானது.

தலைநகரில் நாள் முழுவதும் நீடித்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 11 Jul 2015 12:32 PM PDT

தலைநகர் தில்லியில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நீடித்த மழை, சனிக்கிழமை நாள் முழுவதும் தொடர்ந்ததால் தில்லிவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கட்டாய தலைக்கவச சட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை:உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

Posted: 11 Jul 2015 12:32 PM PDT

கட்டாய தலைக் கவச சட்டத்தில் இருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல் கூறினார்.

குற்றாலத்தில் மழை: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 11 Jul 2015 12:31 PM PDT

குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக சனிக்கிழமை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பிற மொழி இலக்கியங்கள் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன: தில்லி இலக்கிய நிகழ்வில் ஆய்வாளர்கள் பெருமிதம்

Posted: 11 Jul 2015 12:31 PM PDT

பிற மொழி இலக்கியங்கள் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன என தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தில்லிகை இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி அருகே கிராமத்துக்குள் புகுந்த யானைகள் வனப் பகுதிக்கு விரட்டியடிப்பு

Posted: 11 Jul 2015 12:30 PM PDT

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே கிராமத்தில் இரு யானைகள் புகுந்தன. அவற்றை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை வனப் பகுதிக்கு விரட்டினர்.

இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தல்

Posted: 11 Jul 2015 12:30 PM PDT

இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்கும் வகையில், இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள, மரண தண்டனை வழங்கக் கூடிய பிரிவுகளை நீக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தில்லியில் சனிக்கிழமை வலியுறுத்தினர்.

10 ஆண்டுகளுக்கும் மேலான சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்

Posted: 11 Jul 2015 12:30 PM PDT

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

இஃப்தார் விருந்தில் பங்கேற்க மம்தாவுக்கு கேஜரிவால் அழைப்பு

Posted: 11 Jul 2015 12:29 PM PDT

ரமலான் நோன்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) தான் ஏற்பாடு செய்துள்ள இஃப்தார் விருந்தில் பங்கேற்கும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்தார்.

ராஜீவ் காந்தி கொலையாளிகளின் மனுக்கள்: 15-இல் அரசியல் சாசன அமர்வு விசாரணை

Posted: 11 Jul 2015 12:29 PM PDT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் 15-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

127 கோடியைத் தாண்டியது இந்திய மக்கள்தொகை!

Posted: 11 Jul 2015 12:28 PM PDT

இந்தியாவின் மக்கள்தொகை 127 கோடியைத் தாண்டியது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா மாறும் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தில் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது:சுகாதாரத் துறை செயலர்

Posted: 11 Jul 2015 12:27 PM PDT

இந்தியாவிலேயே தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தனியார் கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 11 Jul 2015 12:25 PM PDT

தனியார் கல்வி நிறுவனகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மருத்துவமனையில் அனுமதி

Posted: 11 Jul 2015 12:24 PM PDT

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திடீர் உடல் நலக்குறைவினால் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்பூர் கலவரம்: ஜவாஹிருல்லா கோரிக்கை

Posted: 11 Jul 2015 12:24 PM PDT

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓய்வு பெற்றார்

Posted: 11 Jul 2015 12:23 PM PDT

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் சென்னையில் மின்னணு பராமரிப்புத் துறை துணை ஃபோர்மேனாகப் பணியாற்றிய கே.மணி சனிக்கிழமை (ஜூலை 11) ஓய்வு பெற்றார்.

தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழி:பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

Posted: 11 Jul 2015 12:22 PM PDT

தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

ராஜீவ் கொலை வழக்கு: தமிழர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை தேவை

Posted: 11 Jul 2015 12:21 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் "லோக் அதாலத்':ஒரே நாளில் 19 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு

Posted: 11 Jul 2015 12:21 PM PDT

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் 19,318 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் முறையீட்டாளர்களுக்கு ரூ. 104 கோடியே 42 லட்சத்து 76,123 மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

மேட்டூர் அணையில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 11 Jul 2015 12:19 PM PDT

காவிரியின் கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளின் நலனைக் கருதி மேட்டூர் அணையிலிருந்து உடனடியாகத் தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பாஜக ஆட்சி அடுத்த ஓராண்டு நீடிக்குமா?: ஈவிகேஎஸ். இளங்கோவன்

Posted: 11 Jul 2015 12:18 PM PDT

மத்திய பாஜக ஆட்சி அடுத்த ஓராண்டுக்கு தொடருமா என்பதே சந்தேகம்தான் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.

கடையநல்லூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுமா?

Posted: 11 Jul 2015 12:15 PM PDT

முன்னாள் அமைச்சரும், கடையநல்லூர் பேரவைத் தொகுதி உறுப்பினருமான செந்தூர் பாண்டியன் காலமானதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படை குறைப்பு குறித்து ஆய்வு தேவை

Posted: 11 Jul 2015 12:14 PM PDT

""வடகிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளதால், அங்குள்ள மத்திய பாதுகாப்புப் படைகளை குறைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து, இந்த பிராந்திய முதல்வர்கள் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

காமராஜரைப் பற்றிப் பேச காங்கிரஸாருக்கு தகுதி இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 11 Jul 2015 12:13 PM PDT

காமராஜரைப் பற்றிப் பேச காங்கிரஸாருக்கு தகுதி இல்லை என, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் 5.15 கோடி பேருக்கு ஆதார் எண்கள்

Posted: 11 Jul 2015 12:12 PM PDT

தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரத்து 671 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடு- கட்டுப்பாட்டு அலுவலக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

காஞ்சிபுரம்

Posted: 11 Jul 2015 12:11 PM PDT

வேலூர்

Posted: 11 Jul 2015 12:10 PM PDT

பொது மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்

Posted: 11 Jul 2015 12:10 PM PDT

ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்தப்படும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நிகழ் ஆண்டு எப்போது நடைபெறும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.

அவசிய காலங்களில் மட்டுமே அதிக விலைக்கு மின்சாரம்:கருணாநிதிக்கு தமிழக அரசு பதில்

Posted: 11 Jul 2015 12:10 PM PDT

தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதால், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சிறை முற்றுகைப் போராட்டம்

Posted: 11 Jul 2015 12:09 PM PDT

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் சார்பில் சிறை முற்றுகைப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முலாயம் சிங் மிரட்டியதாக ஐ.பி.எஸ். அதிகாரி புகார்

Posted: 11 Jul 2015 12:09 PM PDT

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தனக்கு மிரட்டல் விடுத்ததாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

தமிழக, ஆந்திர போலீஸ் சோதனை: 6,800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Posted: 11 Jul 2015 12:09 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக, ஆந்திர எல்லையில் உள்ள கிராமங்களில் இரு மாநில போலீஸார் இணைந்து நடத்திய கள்ளச் சாராய வேட்டையில் 6,800 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவதூறு வழக்கு சட்டப்பிரிவுகள்:மத்திய அரசு பதில் மனு தாக்கல்

Posted: 11 Jul 2015 12:09 PM PDT

அவதூறு வழக்குத் தொடுக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500 ஆகிய பிரிவுகள், கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டி

Posted: 11 Jul 2015 12:08 PM PDT

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 11.77 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட திரவ நிலை ஆக்ஸிஜன் தொட்டியை பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

ஜூலை 15}இல் மத்திய கொள்கைக் குழு கூட்டம்

Posted: 11 Jul 2015 12:08 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் மத்தியக் கொள்கைக் குழுவின் ஆட்சி மன்றக் கூட்டம், தில்லியில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

உலக மக்கள் தொகை தினப் பேரணி, கருத்தரங்கம்

Posted: 11 Jul 2015 12:08 PM PDT

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திருவள்ளூரில் பேரணி, கருத்தரங்கை பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

அமேதியில் பிரியங்காவின் மகன்

Posted: 11 Jul 2015 12:07 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதிக்கு பிரியங்காவின் மகன் ரேகன் திடீரென வருகை புரிந்ததும், அத்தொகுதி கிராம மக்களுடன் சேர்ந்து உணவருந்தியதும், அக்கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 62 லட்சம் ஒதுக்கீடு

Posted: 11 Jul 2015 12:07 PM PDT

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள  பொது நிதியிலிருந்து ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது என ஒன்றியக் குழுக் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிகார் ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது

Posted: 11 Jul 2015 12:07 PM PDT

பிகார் மாநிலம், ஆரா சிவில் நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான லம்பு சர்மா, நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பித்த விவகாரம் தொடர்பாக, பிகார் மாநில ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ சுனில் பாண்டேவை

சாலை விபத்தில் தந்தை, மகன் சாவு

Posted: 11 Jul 2015 12:07 PM PDT

படாளம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.

தாமரைப்பாக்கம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

Posted: 11 Jul 2015 12:06 PM PDT

தாமரைப்பாக்கம் அருகே வெள்ளியூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேர்வு வாரிய முறைகேடு: பெண் அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

Posted: 11 Jul 2015 12:06 PM PDT

"மத்திய பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணி தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பெண் அமைச்சர்

பட்னவீஸ் குடும்பத்தினர் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டவர் கைது

Posted: 11 Jul 2015 12:05 PM PDT

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் குடும்பத்தினர் இடம்பெற்ற புகைப்படத்தை, சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பூண்டி ஒன்றிய குழுக் கூட்டம்

Posted: 11 Jul 2015 12:05 PM PDT

பூண்டி ஒன்றியக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுக்கூட உரிமையாளர்களுக்காக ஆஜராவதா?அட்டர்னி ஜெனரலுக்கு கேரள முதல்வர் கண்டனம்

Posted: 11 Jul 2015 12:05 PM PDT

கேரளத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு எதிரான வழக்கில், நான்கு மதுக் கூடங்களின் (பார்) உரிமையாளர்களுக்காக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும் கண்டனம் தெரிவித்தார்.

பிடிபி எம்.பி.யின் உதவியாளர் வாகனத்துக்கு தீவைப்பு

Posted: 11 Jul 2015 12:05 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (பிடிபி) சேர்ந்த எம்.பி. நஸிர் அகமது லாவேயின் உதவியாளரின் வாகனத்துக்கு ஒரு கும்பல் தீவைத்தது.

அரசு மதுக்கடையில் மதுப்புட்டிகள் திருட்டு

Posted: 11 Jul 2015 12:05 PM PDT

தேவரியம்பாக்கம் பகுதியில் அரசு மதுபானக் கடையில் வெள்ளிக்கிழமை இரவு ஜன்னல் கதவை உடைத்த மர்ம நபர்கள் ரூ. 2000 ரொக்கம், மதுப்புட்டிகளை திருடிச் சென்றுள்ளனர்.

எஃப்டிஐஐ தலைவர் பதவியிலிருந்து கஜேந்திர சௌஹான் விலக வேண்டும்:பாஜக கூட்டணிக் கட்சி வலியுறுத்தல்

Posted: 11 Jul 2015 12:04 PM PDT

புணேயில் உள்ள இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சிப் பயிற்சிக் கல்லூரியின் (எஃப்டிஐஐ) தலைவர் பதவியிலிருந்து கஜேந்திர சௌஹான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசுக் கட்சி (ஆர்பிஐ-ஏ) வலியுறுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 4 ஆண்டுச் சிறை

Posted: 11 Jul 2015 12:04 PM PDT

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆர்.கே. பேட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 11 Jul 2015 12:03 PM PDT

பாறை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை இடித்து அகற்றினர்.

காஷ்மீர் விவகாரம்: அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு

Posted: 11 Jul 2015 12:03 PM PDT

ரஷியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் நடத்திய ஆலோசனையின்போது, காஷ்மீர் விவகாரத்தை அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசித் தீர்க்க கருத்தொற்றுமை ஏற்பட்டது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™