Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விருதுநகர் மாவட்ட நூலகர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 24 Jul 2015 01:10 PM PDT

விருதுநகர் மாவட்ட நூலகர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

1,783 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Posted: 24 Jul 2015 01:09 PM PDT

விருதுநகர் தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1783 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பருவமழை இல்லை: குடிநீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து குறைவு

Posted: 24 Jul 2015 01:09 PM PDT

ராஜபாளையத்திற்கு மேற்கே வனப் பகுதியில் போதியளவில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால், ராஜபாளைம் ஆறாவது மைல் குடிநீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை.

சிவகாசி

Posted: 24 Jul 2015 01:08 PM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

Posted: 24 Jul 2015 01:08 PM PDT

விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பட்டாசு வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்: டாக்டர். கிருஷ்ணசாமி கோரிக்கை

Posted: 24 Jul 2015 01:07 PM PDT

சிவகாசி அருகே கடந்த 15ஆம் தேதி பட்டாசு ஆலை வேன் கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுக் கல்லூரி கட்டுமானப் பணி: அமைச்சர்கள் ஆய்வு

Posted: 24 Jul 2015 01:07 PM PDT

சாத்தூர் அருகே புதிதாக கட்டபட்டுவரும் அரசு கல்லூரியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வெள்ளிகிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 24 Jul 2015 01:06 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர், டி.மானகசேரியில் அம்மா திட்ட முகாம் உதவி ஆணையர் (கலால்) எஸ்.குணசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அழிவின் விளிம்பில் துவாளு

Posted: 24 Jul 2015 01:06 PM PDT

மிக நுட்பமான ஒளிப்படக் கருவி ஒன்றை செயற்கைக்கோளில் பொருத்திக் கொண்டு பூமியை வலம் வந்தால்,

சாத்தூர் ஒன்றியத்தில் தெருமுனை பிரசாரம்

Posted: 24 Jul 2015 01:06 PM PDT

சாத்தூர் ஒன்றியப் பகுதியில் வியாழக்கிழமை அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

கால்நடை உற்பத்தி திறன் பெருக்குதல் கருத்தரங்கு

Posted: 24 Jul 2015 01:05 PM PDT

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை ஒருங்கிணைந்த மண் வள மேம்பாடு மூலம் பசுந்தீவனம், கால்நடை உற்பத்தி திறன் பெருக்குதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

விஷம் அருந்தி முதியவர் தற்கொலை

Posted: 24 Jul 2015 01:05 PM PDT

சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரைச் சேர்ந்தவர் சித்தன்(60). இவர்அழகாபுரியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி மற்றொரு மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றார். பின்னர், அழகாபுரிபேருந்து நிறுத்தம் அருகே விஷம் அருந்தி மயங்கியநிலையில் கிடந்தாராம்.

பெற்றால்தான் பிள்ளையா?

Posted: 24 Jul 2015 01:04 PM PDT

"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்றார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட குழலினும்,

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

Posted: 24 Jul 2015 01:03 PM PDT

சிவகாசி ரிசர்வ்லைன் காந்திநகரைச் சேர்ந்தவர் ராமர் (23) இவர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பெட்டிக்கடையில் மதுபாட்டில் வைத்திருந்த இருவர் கைது

Posted: 24 Jul 2015 01:00 PM PDT

சிவகாசி புதுரோட்டுத் தெருவில் பெட்டிக் கடை வைத்திருக்கும் கமலக்கண்ணன்(21), ரிசர்வ்லைன் பேருந்து நிறுத்தம் அருகே கடை வைத்திருக்கும் முருகன்(42) இருவரும் தங்களது பெட்டிக்கடையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தார்களாம். தகவலின்பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவரிகளிடமிருந்து 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தீக்குச்சி ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து

Posted: 24 Jul 2015 01:00 PM PDT

கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து சிவகாசி அருகே வடமலாபுரத்தில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலைக்கு வெள்ளிக்கிழமை தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் குச்சி மூட்டையை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.

பைக் மோதியதில் மூதாட்டி சாவு

Posted: 24 Jul 2015 12:59 PM PDT

விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதன் மனைவி ராமாயி(75). இவர் வியாழக்கிழமை தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, வடமலாபுரம் நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த ராமாயி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முடக்குவதால் என்ன லாபம்?

Posted: 24 Jul 2015 12:55 PM PDT

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்தான் மிக அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பல ஆண்டுகள் முடங்கிக் கிடந்த இந்திய நாடாளுமன்றத்துக்குப் புதுப் பொலிவு ஏற்பட்டது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, மழைக் காலக் கூட்டத் தொடரின் முதல் வாரமே அமளி துமளியாக வீணடிக்கப்பட்டிருக்கிறது.

பயிற்சியாளர் பதவி: வேன் ஆஷை நீக்க ஹாக்கி இந்தியா உயர்நிலை குழு பரிந்துரை

Posted: 24 Jul 2015 12:48 PM PDT

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து பால் வேன் ஆஷை நீக்க ஹாக்கி இந்திய அமைப்பின் உயர்நிலை குழு

தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட்: மழையால் 4-ஆம் நாள் ஆட்டம் ரத்து

Posted: 24 Jul 2015 12:47 PM PDT

தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

சர்வதேச கோஃல்ப் போட்டியில் சாதனை படைத்த இந்திய சிறுவன்

Posted: 24 Jul 2015 12:47 PM PDT

சர்வதேச கோஃல்ப் போட்டியில் 10 வயது இந்திய சிறுவன் சுபம் ஜக்லன் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அகில இந்திய கார் பந்தயம்: கோவையில் ஜூலை 30-இல் தொடக்கம்

Posted: 24 Jul 2015 12:46 PM PDT

அகில இந்திய சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இரண்டாவது சுற்று கார் பந்தயம் கோவையில் ஜூலை 30-இல் தொடங்கி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஓமன், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி

Posted: 24 Jul 2015 12:45 PM PDT

இந்தியாவில் அடுத்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற

ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட தேசிய வாள் சண்டை வீரர் பலி: லஞ்சம் தர மறுத்ததால் போலீஸார் வெறிச் செயல்

Posted: 24 Jul 2015 12:45 PM PDT

லஞ்சம் தர மறுத்ததால் தேசிய வாள் சண்டை வீரரை ரயில்வே போலீஸார் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர்

ரஷிய ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியர்கள்

Posted: 24 Jul 2015 12:44 PM PDT

ரஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் - வீராங்கனைகள் முன்னேறியுள்ளனர்.

இந்திய "ஏ' அணி முன்னிலை: 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஓஜா

Posted: 24 Jul 2015 12:43 PM PDT

ஆஸ்திரேலிய "ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிரக்யான் ஓஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உதவ,

அடுத்த ஏப்ரலில் பிரிக்ஸ் அமைப்பு வங்கியின் முதலாவது கடனுதவி: கே.வி.காமத்

Posted: 24 Jul 2015 12:40 PM PDT

""பிரிக்ஸ் அமைப்பு நாடுகளால் தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது முதலாவது கடனுதவியை

லட்சுமி விலாஸ் வங்கி: முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.40.26 கோடி

Posted: 24 Jul 2015 12:40 PM PDT

லட்சுமி விலாஸ் வங்கி ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிகர லாபமாக ரூ.40.26 கோடி ஈட்டியுள்ளது என

பெல் செயல் இயக்குநராக கோபிநாத் பொறுப்பேற்பு

Posted: 24 Jul 2015 12:39 PM PDT

உயர் அழுத்தக் கொதிகலன் ஆலை, இணைப்பில்லா எஃகு குழாய் ஆலை, தொழிலக வால்வுகள் ஆலை ஆகியவற்றை உள்ளடக்கிய

அமெரிக்காவில் திரையரங்கில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் சாவு, 7 பேர் காயம்

Posted: 24 Jul 2015 12:38 PM PDT

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள திரையரங்கில் 50 வயது நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில்

அமெரிக்கத் தாக்குதலில் அல்-காய்தா தளபதி சாவு

Posted: 24 Jul 2015 12:36 PM PDT

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின்

ஹஃபீஸ் சயீத் அமைப்பை சேர்ந்தவர் பாகிஸ்தானில் கைது

Posted: 24 Jul 2015 12:36 PM PDT

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான

4 கால் பாம்பின் எலும்புப் படிமம்: முதல் முறையாக பிரேசிலில் கண்டெடுப்பு

Posted: 24 Jul 2015 12:35 PM PDT

பிரேசிலில் நான்கு கால்களைக் கொண்ட பாம்பு ஒன்றின் எலும்புப் படிமத்தை  விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

லிபிய கடல் பகுதியில் 40 அகதிகள் பலி?

Posted: 24 Jul 2015 12:34 PM PDT

லிபிய கடல் பகுதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 40 அகதிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எகிப்து படகு விபத்து: சாவு எண்ணிக்கை 31-ஆக உயர்வு

Posted: 24 Jul 2015 12:34 PM PDT

எகிப்தின் நைல் நதியில் சரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் பயணிகள் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 13 பேரது சடலங்கள்

ஆப்கன் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் விவகாரம்: சீனா மவுனம்

Posted: 24 Jul 2015 12:33 PM PDT

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அது நிறைவேற்றப்படுவதற்கு

ஐ.எஸ். மீது துருக்கி வான்வழித் தாக்குதல்

Posted: 24 Jul 2015 12:33 PM PDT

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத நிலைகள் மீது துருக்கி நாட்டுப் போர் விமானங்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தின.

கடவுள் பெயரை வைத்து வர்த்தகம் மேற்கொள்ளத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்

Posted: 24 Jul 2015 12:32 PM PDT

கடவுள்களின் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்வதற்குத் தடை கோரும் பொது நல மனுவை

"சரக்கு ரயில்களுக்கான தனிப் பாதை திட்டம் 2019-இல் நிறைவடையும்'

Posted: 24 Jul 2015 12:31 PM PDT

ரூ.81,459 கோடி யில் உருவாகி வரும் சரக்கு ரயில்களுக்கான தனிப் பாதை அமைக்கும் திட்டம் (டிஎஃப்சி), 2019ஆம் ஆண்டில்

யாகூப் மேமன் மனு மீது ஜூலை 27-இல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

Posted: 24 Jul 2015 12:30 PM PDT

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி யாகூப் மேமன்

சுப்பிரமணியன் சுவாமி மீதான வழக்கு விசாரணைக்கு 4 வாரத் தடை

Posted: 24 Jul 2015 12:30 PM PDT

அயோத்தி பிரச்னை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெறுப்பூட்டும் வகையில் பேசியதாகத் தொடுக்கப்பட்ட

திக்விஜய் சிங் "பிறவி சதிகாரர்': செளஹான் தாக்கு

Posted: 24 Jul 2015 12:29 PM PDT

""காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங், பிறவி சதிகாரர் ஆவார்'' என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்

சத்தீஸ்கர் பொது விநியோக முறைகேடு: விசாரணைக்கு உத்தரவிட முடியாது; மத்திய அரசு

Posted: 24 Jul 2015 12:28 PM PDT

சத்தீஸ்கர் மாநில பொது விநியோகத் திட்டத்தில் ரூ. 36,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள

69 எம்.பி.க்கள் எழுப்பிய ஒரே விவகாரம்!

Posted: 24 Jul 2015 12:26 PM PDT

மக்களவையில் ஒரே விவகாரம் தொடர்பாக 69 உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கும் ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க அனுமதிக்கமாட்டோம்: ராகுல் காந்தி

Posted: 24 Jul 2015 12:26 PM PDT

விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களது நிலத்தை மத்திய அரசு பறிப்பதற்கு காங்கிரஸ் அனுமதிக்காது என்று

பான் எண் கட்டாயம் தெரிவிப்பதற்கான பரிந்துரை ரத்து?

Posted: 24 Jul 2015 12:23 PM PDT

ரூ. 1 லட்சத்துக்கும் மேல் செலவு செய்யும்போது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான் நம்பர்) கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற

மருத்துவ நுழைவுத் தேர்வு: "பர்தா' அணிய அனுமதி கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 24 Jul 2015 12:23 PM PDT

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிய அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட

எய்ம்ஸ் மருத்துவமனையை இடம் மாற்ற எதிர்ப்பு: ஜம்முவில் 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு

Posted: 24 Jul 2015 12:22 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமையவிருக்கும் "எய்ம்ஸ்' மருத்துவமனையை, ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு மாற்றும் மத்திய அரசின்

முலாயம் மீது வழக்குப்பதிவு செய்ய உ.பி. போலீஸார் மறுப்பு

Posted: 24 Jul 2015 12:21 PM PDT

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி

"விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காதல் தோல்வியே காரணம்': மத்திய அமைச்சர் பதிலால் சர்ச்சை

Posted: 24 Jul 2015 12:21 PM PDT

காதல் தோல்வி, குழந்தை யின்மை உள்ளிட்ட பிரச்னைகளே விவசாயிகளின் தற்கொலை களுக்கு பெரிதும் காரணம் என

கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்க கிரிக்கெட் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்: எஸ்.ஐ.டி. அறிக்கை

Posted: 24 Jul 2015 12:20 PM PDT

நாட்டில் கருப்புப் பண உற்பத்தியைத் தடுக்க, கிரிக்கெட் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தால்

ஒடிஸாவில் பெரும் தொழில் திட்டங்களுக்கு உதவ 10 மாவட்டங்களில் ஆயத்த நில வங்கி

Posted: 24 Jul 2015 12:18 PM PDT

முதலீடுகளை எளிதில் கவரும் வகையில் பெரும் தொழில் திட்டங்களுக்கு இடைஞ்சல் இன்றி நிலம் கையகப்படுத்துவதை உறுதிசெய்யும்

"ஆம் ஆத்மி' அரசுக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க பாஜக

Posted: 24 Jul 2015 12:18 PM PDT

"ஆம் ஆத்மி' அரசுக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.

முஸ்லிமாக இருப்பதால் தங்குமிடம் மறுக்கப்படுகிறது

Posted: 24 Jul 2015 12:17 PM PDT

முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவராக இருப்பதால் தில்லியில் தனக்கு தங்குமிடம் மறுக்கப்படுவதாக ஆதங்கப்பட்டுள்ள தில்லி பல்கலைக்கழக பேராசிரியை, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனக்கு எதிராக அரசியல் சதி

Posted: 24 Jul 2015 12:17 PM PDT

போலிச் சான்றிதழ் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள தில்லி முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர், தனக்கு எதிராக அரசியல் சதி நடைபெறுகிறது என்றும் அதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் கூறினார்.

சுயநிதி அரசு பி.டி.எஸ். கலந்தாய்வு இன்று நிறைவு

Posted: 24 Jul 2015 12:16 PM PDT

தமிழகத்தில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இதுவரை 555 மாணவர்கள்

சட்டப்பேரவைத் தலைவருடன் பள்ளிக் குழந்தைகள் சந்திப்பு

Posted: 24 Jul 2015 12:15 PM PDT

 தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயலை தில்ஷாத் கார்டனில் உள்ள கிரீன் ஃபீல்டு பள்ளிக் குழந்தைகள் வெள்ளிக்கிழமை சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, தில்லியின் வரலாறு, தில்லி சட்டப்பேரவையின் வரலாறு ஆகியவை குறித்து குழந்தைகளுக்கு அவர் விளக்கினார்.

முன்னாள் குடியரசு தலைவரின் ஊடகச் செயலரிடம் வழிப்பறி

Posted: 24 Jul 2015 12:15 PM PDT

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் ஊடகச் செயலராகப் பணியாற்றிய அர்ச்சனா தத்தாவிடம் (60) தில்லி லோதி கார்டன் பகுதியில் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி. தேர்வு வாரிய முறைகேடு வழக்கு: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted: 24 Jul 2015 12:15 PM PDT

மத்தியப் பிரசேத தொழில் கல்வி, அரசுப் பணித் தேர்வு வாரிய முறைகேடு வழக்குகள் அனைத்தையும் தன் வசம் ஏற்று

கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்க கிரிக்கெட் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்

Posted: 24 Jul 2015 12:14 PM PDT

நாட்டில் கருப்புப் பண உற்பத்தியைத் தடுக்க, கிரிக்கெட் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.

மூன்றாண்டுகளில் விபத்துக்குள்ளான 20 போர் விமானங்கள்

Posted: 24 Jul 2015 12:14 PM PDT

விமானப் படையைச் சேர்ந்த மூன்று சுகோய் ரக விமானங்கள் உள்பட 20 போர் விமானங்கள், கடந்த 3 ஆண்டுகளில் விபத்துக்குள்ளானதாக

என்.எல்.சி. பிரச்னை முதல்வர் ஜெயலலிதா தீர்வு காண வேண்டும்: கருணாநிதி

Posted: 24 Jul 2015 12:13 PM PDT

என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று த

கடந்த 3 ஆண்டுகளில் 3,000 விவசாயிகள் தற்கொலை

Posted: 24 Jul 2015 12:12 PM PDT

கடந்த 3 ஆண்டுகளில், பயிர் இழப்பு, கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை, வறட்சி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த காரணங்களால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தில்லி லோக் ஆயுக்த நியமன நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன

Posted: 24 Jul 2015 12:12 PM PDT

தில்லியில் லோக் ஆயுக்த நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Posted: 24 Jul 2015 12:11 PM PDT

ஊதியம் வழங்காததைக் கண்டித்து, திருவண்ணாமலை நகராட்சி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடகளப் போட்டிகள் ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி சிறப்பிடம்

Posted: 24 Jul 2015 12:11 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மாதாந்திர தடகள விளையாட்டுப் போட்டிகளில், ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனர்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி இடம் தேர்வு

Posted: 24 Jul 2015 12:10 PM PDT

முதல்வர் உத்தரவின்படி, ஆரணியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட ஏதுவாக பழைய பேருந்து நிலையத்தில் தனி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பணிக் கொடை அளிப்பு

Posted: 24 Jul 2015 12:10 PM PDT

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜ.கூத்தனுக்கு ஓய்வூதிய பணிக் கொடையாக ரூ.2,31,064- க்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்வி விழிப்புணர்வு முகாம்

Posted: 24 Jul 2015 12:10 PM PDT

திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளி சார்பில், முதியோர் கல்வி, கல்வி விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வெடிபொருள்களுடன் டிராக்டர் பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 24 Jul 2015 12:09 PM PDT

வந்தவாசி அருகே அரசு அனுமதியின்றி வெடிபொருள்களைக் கொண்டு செல்ல முயன்ற டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் ராணுவ வீரர் சாவு

Posted: 24 Jul 2015 12:09 PM PDT

திருவண்ணாமலை அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.

பெண் மாயம்

Posted: 24 Jul 2015 12:09 PM PDT

வேட்டவலம் அருகே கேரள மாநிலத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மனைவியைக் காணவில்லை என்று போலீஸில் அவரது கணவர் புகார் அளித்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 24 Jul 2015 12:08 PM PDT

தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், படிஅக்ரகாரம் கிராமத்தில் அரசின் சிறப்பு மருத்து

ஜவ்வாதுமலை கோடை விழா இன்று தொடக்கம்

Posted: 24 Jul 2015 12:08 PM PDT

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 2 நாள் நடைபெறும் கோடை விழா சனிக்கிழமை தொடங்குகிறது. இதில், தமிழக அமைச்சர்கள் மூன்று பேர் கலந்து கொள்கின்றனர்.

வெண்குன்றம் ஊராட்சித் தலைவருக்கு மத்திய அரசு விருது

Posted: 24 Jul 2015 12:08 PM PDT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவர் ஈ.முனுசாமிக்கு மத்திய அரசு விருது வழங்கி, கெளரவித்தது.

ஜூலை 25 மின் தடை

Posted: 24 Jul 2015 12:08 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க விவகாரம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Posted: 24 Jul 2015 12:07 PM PDT

இறந்த வாக்காளர்களை நன்கு உறுதி செய்த பிறகே, அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று

சென்னை ரயில் குண்டு வெடிப்பு: தேடப்படும் 4 பேர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம்  

Posted: 24 Jul 2015 12:06 PM PDT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் கடந்த ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் உள்பட நாட்டின்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

Posted: 24 Jul 2015 12:05 PM PDT

இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 14 பேரையும், அவர்களது மூன்று மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க

சுஷ்மாவுக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்காவிடில் வழக்கு: ராகுலுக்கு பாஜக எச்சரிக்கை

Posted: 24 Jul 2015 12:05 PM PDT

""வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சியின்

எதிர்க்கட்சிகளைக் கண்டித்து பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

Posted: 24 Jul 2015 12:04 PM PDT

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைக் கண்டித்து, மத்திய அமைச்சர்கள் உள்பட

காட்டு யானைகள் தாக்கி 8 வீடுகள் சேதம்

Posted: 24 Jul 2015 12:03 PM PDT

வால்பாறை அருகே குடியிருப்புகளுக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த காட்டு யானைகள் 8 வீடுகளின் ஜன்னல், கதவு

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்பட 17 பேர் விடுதலை

Posted: 24 Jul 2015 11:57 AM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்பட 17 பேரை விடுதலை செய்து,

தஞ்சையில் ஆகஸ்ட் 2-இல் காவிரி பாதுகாப்பு இயக்கக் கூட்டம்: வைகோ

Posted: 24 Jul 2015 11:57 AM PDT

காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ராமஜெயம் கொலை மர்மம் விலகுமா? சிபிசிஐடி-க்கு உயர் நீதிமன்றம் இறுதி வாய்ப்பு

Posted: 24 Jul 2015 11:56 AM PDT

திருச்சி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி-க்கு, சென்னை உயர் நீதிமன்ற

கிருஷ்ணகிரியில் 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

Posted: 24 Jul 2015 11:55 AM PDT

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதாக 3 பேரை கைது செய்த பறக்கும் படையினர்,

குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை

Posted: 24 Jul 2015 11:54 AM PDT

புதுக்கோட்டையில் குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் சடலத்தைப் போலீஸார்

ஒட்டன்சத்திரம் அருகே மான் வேட்டை: நெல்லை மருத்துவர் உள்பட 6 பேர் கைது; உதவி ஆய்வாளர் தப்பியோட்டம்

Posted: 24 Jul 2015 11:54 AM PDT

ஒட்டன்சத்திரம் அருகே மான் வேட்டையாடிய மருத்துவர் உள்பட 6 பேர் வெள்ளிகிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர் வன்முறை வழக்கு: சேலம் சிறையிலிருந்து 15 பேர் ஜாமீனில் விடுதலை

Posted: 24 Jul 2015 11:52 AM PDT

ஆம்பூர் வன்முறை வழக்கு தொடர்பாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 பேரில் 15 பேர் ஜாமீனில் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

சார்பு நீதிமன்றம் அமைக்கக் கோரி ஸ்ரீவைகுண்டத்தில் வழக்குரைஞர்கள் நூதனப் போராட்டம்

Posted: 24 Jul 2015 11:52 AM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி 9ஆவது நாளாக வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியைப் புறக்கணித்து, திருவோடு ஏந்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி வலியுறுத்தல்

Posted: 24 Jul 2015 11:51 AM PDT

அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

திருச்செந்தூர் கோயிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி மனு

Posted: 24 Jul 2015 11:50 AM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

என்எல்சி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்;நெய்வேலியில் பேருந்து சேவை பாதிப்பு: மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்

Posted: 24 Jul 2015 11:50 AM PDT

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி. ஊழியர்களுக்கு ஆதரவாக, போக்குவரத்துத் துறை தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில்

பாமக மாநாடு ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும்: ஜி.கே.மணி பேட்டி

Posted: 24 Jul 2015 11:50 AM PDT

வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாமக வடக்கு மண்டல மாநாடு, தமிழகத்தில் 2016-இல் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் மாநாடாக அமையும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

மூன்று மடங்காக உயர்ந்தது திட்ட மதிப்பீடு: மருதூர் கீழக்கால் விரிவாக்கப் பணி உயிர்பெறுமா?

Posted: 24 Jul 2015 11:49 AM PDT

திட்ட மதிப்பீடு உயர்ந்து கொண்டே போகும் நிலையில், மருதூர் கீழக்கால் மேம்பாட்டுப் பணியை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என தாமிரவருணி நதி நீர் பாதுகாப்பு பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Posted: 24 Jul 2015 11:49 AM PDT

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வேலூர் சன்பீம் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் பரிசுகளை வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

ரயிலில் அடிபட்டு ஆட்டோ ஓட்டுநர் சாவு

Posted: 24 Jul 2015 11:49 AM PDT

ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டுநர் ரயிலில் அடிபட்டு வெள்ளிக்கிழமை இறந்தார்.

வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா

Posted: 24 Jul 2015 11:49 AM PDT

பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவானத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடியில் மாநகராட்சியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jul 2015 11:49 AM PDT

தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜுலை 25 மின் தடை

Posted: 24 Jul 2015 11:48 AM PDT

பேர்ணாம்பட்டு, பரவக்கல், சின்னவரிகம் ஆகிய 3 துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மின் தடை ரத்து செய்யப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™