Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரமலான்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

Posted: 18 Jul 2015 01:20 PM PDT

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் சனிக்கிழமை  சிறப்புத் தொழுகை நடத்தினர். பின்னர், ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

காரைக்குடி பகுதியில் ஜூலை 20 மின்தடை

Posted: 18 Jul 2015 01:19 PM PDT

காரைக்குடி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது.

கடலோரப் பகுதியில் கடத்தலைத் தடுக்க தமிழக காவல் துறை கியூ பிரிவு எஸ்.பி. அதிரடி ஆய்வு

Posted: 18 Jul 2015 01:16 PM PDT

ராமேசுவரம், தனுஸ்கோடி கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு குறித்தும், கியூ பிரிவு போலீஸார்களுடன்  ஆலோசணை செய்து தமிழக காவல்துறை கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி சனிக்கிழமை இரவு அதிரடி ஆய்வு செய்தார்.

மோசடி செய்த நகைகளை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.யிடம் புகார் மனு

Posted: 18 Jul 2015 01:15 PM PDT

சிவகங்கை அருகே நாடமங்கலம், உத்திகுளம், பூவாரி கிராமத்தினரிடம் அடமானம் வைத்த நகைகளை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரையிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.

காளையார்கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

Posted: 18 Jul 2015 01:13 PM PDT

காளையார்கோவிலில் உள்ள தொண்டி சாலையின் இருபுறமும் விளம்பரப் பலகைகள் மற்றும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றன.

இலங்கை அகதிகள் முகாம்களில் கடலோரக் காவல்படை ஐ.ஜி. ஆய்வு

Posted: 18 Jul 2015 01:12 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், கடலோரக் காவல்படை ஐ.ஜி. சொக்கலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

காரைக்குடி தமிழிசைச் சங்க இசை நிகழ்ச்சி

Posted: 18 Jul 2015 01:11 PM PDT

காரைக்குடி தமிழிசைச் சங்கம் சார்பில், ஜூலை மாத இன்னிசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரமலான்: தொண்டியில் ஏழைகளுக்கு பொருள்கள் வழங்கும் விழா

Posted: 18 Jul 2015 01:11 PM PDT

தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஏழை முஸ்லிம்ளுக்கு ஃபித்ரா எனும் பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் திருக்கோயிலில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சுவாமி தரிசனம்

Posted: 18 Jul 2015 01:10 PM PDT

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களில் புத்தாக்கப் பயிற்சி

Posted: 18 Jul 2015 01:05 PM PDT

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இரு நாள் புத்தாகப் பயிற்சி, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. 

உசிலம்பட்டி தினசரி சந்தை பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க பூமிபூஜை

Posted: 18 Jul 2015 12:57 PM PDT

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி சந்தையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க சனிக்கிழமை பூஜை நடைபெற்றது.

பட்டாசு ஆலை வேன் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி

Posted: 18 Jul 2015 12:55 PM PDT

சிவகாசி அருகே கடந்த புதன்கிழமை பட்டாசு ஆலை வேன் கவிழ்ந்து தீப்பிடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சனிக்கிழமை நிதியுதவி வழங்கினார்.

சிவகாசியில் மாவட்ட ஹேண்ட்பால் போட்டி

Posted: 18 Jul 2015 12:55 PM PDT

சிவகாசியில் சனிக்கிழமை மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான ஹேண்ட்பால் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ரோட்டரி கிளப் ஆப் பைரோ சிட்டி சங்கம் நடத்தியது.

ரமலான் பண்டிகை: முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை

Posted: 18 Jul 2015 12:54 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை பள்ளி வாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சத்யா வித்யாலயாவில் ஆரோக்கிய உணவு குறித்த கலந்தாய்வு

Posted: 18 Jul 2015 12:54 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு முறை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

சாத்தூரில் சுற்றித் திரிந்த 6 சிறுவர்கள் பள்ளியில் சேர்ப்பு

Posted: 18 Jul 2015 12:52 PM PDT

சாத்தூரில் சுற்றித் திரிந்த ஆறு சிறுவர்கள், வெள்ளிகிழமை புன்னகையை தேடி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு பள்ளியில் சேர்க்கபட்டனர்.

கணவர் மாயம்: மனைவி புகார்

Posted: 18 Jul 2015 12:51 PM PDT

தனது கணவரைக் காணவில்லை என்று மனைவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்துள்ளார்.

தமிழக தொல்லியல் கழக கருத்தரங்கு

Posted: 18 Jul 2015 12:50 PM PDT

ராஜபாளையத்தில் சனிக்கிழமை தமிழக தொல்லியல் துறை சார்பில்  புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள் குறித்த 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது. துவக்க விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை

Posted: 18 Jul 2015 12:49 PM PDT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்டோ மோதி அரசு ஊழியர் காயம்

Posted: 18 Jul 2015 12:48 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ மோதியதில் அரசு ஊழியர் பலத்த காயமடைந்தார்.

அருப்புக்கோட்டையில் கந்துவட்டி புகார்: 2 பேர் மீது வழக்கு

Posted: 18 Jul 2015 12:48 PM PDT

அருப்புக்கோட்டையில் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக பெண் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

Posted: 18 Jul 2015 12:47 PM PDT

தேனியில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம் கல்வி மாவட்ட சதுரங்க போட்டிகள்

Posted: 18 Jul 2015 12:46 PM PDT

போடியில் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க குறுவட்ட போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

Posted: 18 Jul 2015 12:45 PM PDT

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 18 Jul 2015 12:45 PM PDT

தேனி அருகே பூதிப்புரத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

தேனி மாவட்டத்தில் ரமலான் திருநாள் சிறப்புத் தொழுகை

Posted: 18 Jul 2015 12:42 PM PDT

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை ரமலான் திருநாளை முன்னிட்டு ஊர்வலம், பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம்

Posted: 18 Jul 2015 12:41 PM PDT

பழனி மலைக்கோயிலுக்கு ரமலான் திருவிழா விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தனியார் பால் நிறுவனங்களால் பாதிப்பு:பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

Posted: 18 Jul 2015 12:39 PM PDT

பால் கொள்முதல் விலையை குறைத்து வழங்கும் தனியார் பால் விற்பனை நிறுவனங்களால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கம் குற்றம்சாட்டியது.

"வாடகைத் தாய் முறைக்கு தனிச் சட்டம் இல்லை'

Posted: 18 Jul 2015 12:37 PM PDT

இந்தியாவில் வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் தனிச் சட்டம் எதுவும் இல்லை என சிருஷ்டி குழந்தையின்மை சிகிச்சைக்கான மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாமுண்டி சங்கரி தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: காலியிடங்கள் எவ்வளவு?

Posted: 18 Jul 2015 12:37 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் இட ஒதுக்கீட்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இவை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org--இல் வெளியிடப்பட்டுள்ளன.

தங்கம் விலை நிலவரம்

Posted: 18 Jul 2015 12:35 PM PDT

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 குறைந்து, பவுன் ரூ. 19,472-க்கு விற்பனையானது.

கிராமந்தோறும் இயற்கை வேளாண்மைப் பொருள் விற்பனை அங்காடி

Posted: 18 Jul 2015 12:34 PM PDT

கிராமங்கள் தோறும் இயற்கை வேளாண் பொருள்களை விற்பனை செய்ய அங்காடிகளை அமைக்க வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

திருவாரூரில் எண்ணெய் கிணறுக்கு தடை விதிக்க வேண்டும்: வைகோ

Posted: 18 Jul 2015 12:34 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறு தோண்ட தடை விதிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 18 Jul 2015 12:33 PM PDT

தேனி மாவட்டம், குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தமிழக காய்கறிகள் மீதான கேரளத்தின் தடையை நீக்க வாசன் வலியுறுத்தல்

Posted: 18 Jul 2015 12:33 PM PDT

தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு விதித்துள்ள தடையை நீக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

பேராசிரியருடன் நெகிழ்ச்சியான சந்திப்பு

Posted: 18 Jul 2015 12:32 PM PDT

திருச்சி கல்லூரியில் 60 ஆண்டுகளுக்கு முன் தனக்கு இயற்பியல் பாடம் நடத்திய பேராசிரியரை, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் திண்டுகல்லில் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

துணை மருத்துவப் படிப்புகளுக்கு 19 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

Posted: 18 Jul 2015 12:32 PM PDT

துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாளான சனிக்கிழமை வரை மொத்தம் 19 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் உதவித்தொகை பெற அஞ்சல் அட்டை மூலம் அழைப்பு

Posted: 18 Jul 2015 12:31 PM PDT

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை பெற்ற 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, உதவித்தொகை பெறுவதற்கான அழைப்பை அஞ்சல் அட்டை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழங்கால புத்தகங்களை மறுபதிப்பு செய்ய வேண்டும்: நாஞ்சில் நாடன்

Posted: 18 Jul 2015 12:30 PM PDT

பழங்கால தமிழ்ப் புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Posted: 18 Jul 2015 12:30 PM PDT

கள்ளிமந்தையத்தில் அதிமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க கட்சிகளிடையே போட்டி

Posted: 18 Jul 2015 12:29 PM PDT

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் போட்டி போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று எஸ்.திருநாவுக்கரசர் பேசினார்.

"மக்கள் பிரச்னைகளுக்காக திமுக, தேமுதிகவுடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தயார்'

Posted: 18 Jul 2015 12:29 PM PDT

மக்கள் பிரச்னைகளுக்காக திமுக, தேமுதிகவுடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

வைகை அணை பகுதியில் ஜூலை 20 மின்தடை

Posted: 18 Jul 2015 12:29 PM PDT

பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள வைகை அணை துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

மேற்படிப்புக்கு நிதியுதவி கோரும் அரசுப் பள்ளி மாணவி

Posted: 18 Jul 2015 12:29 PM PDT

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவி பி.உமாசங்கீதா, இளநிலை பொறியியல் (பி.இ.) பட்ட மேற்படிப்பு பயில நிதியுதவி கோரியுள்ளார்.

பாகுபலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 90 பேர் கைது

Posted: 18 Jul 2015 12:28 PM PDT

தேனி மாவட்டத்தில் தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் பாகுபலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன் முற்றுகையிட்ட 90 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குமரியில் கடல் சீற்றம்: படகு சேவை பாதிப்பு

Posted: 18 Jul 2015 12:28 PM PDT

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சனிக்கிழமை படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை

Posted: 18 Jul 2015 12:28 PM PDT

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு: இணையதளத்தில் முடிவுகள் வெளியீடு

Posted: 18 Jul 2015 12:27 PM PDT

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) எழுத்துத் தேர்வு முடிவை இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிட்டது.

கல்லூரி மாணவிகள் பேரவைத் தேர்தல்

Posted: 18 Jul 2015 12:27 PM PDT

தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மணப்பாடு கடற்கரையில் வளரும் மணல் திட்டுகளால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் அவதி

Posted: 18 Jul 2015 12:26 PM PDT

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் வளரும் மணல் திட்டுகளால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித் தொழிலுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கடம்பூர்: குடிநீர் குழாயில் மோட்டார் இணைத்தால் நடவடிக்கை

Posted: 18 Jul 2015 12:26 PM PDT

கடம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்:திமுக, பாமக, காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 18 Jul 2015 12:26 PM PDT

அதானி குழுமத்துடன் தமிழக அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கனடா செல்கிறது டோர்னியர் விமான கருப்புப் பெட்டி

Posted: 18 Jul 2015 12:25 PM PDT

விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய கடலோரக் காவல் படையின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 18 Jul 2015 12:25 PM PDT

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இதுவரை பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மதுவுக்கு எதிராக தனி இயக்கம்:பிரதமருக்கு அன்புமணி கோரிக்கை

Posted: 18 Jul 2015 12:25 PM PDT

"தூய்மை இந்தியா' திட்டம் போன்று, மதுவுக்கு எதிராக நாடு முழுவதும் தனி இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

திருச்செந்தூர்: கட்டட அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்வதாகப் புகார்

Posted: 18 Jul 2015 12:25 PM PDT

திருச்செந்தூர் பகுதியில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கிட பேரூராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்வதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

தூத்துக்குடி, கோவில்பட்டியில் ரமலான் சிறப்புத் தொழுகை

Posted: 18 Jul 2015 12:24 PM PDT

புனித ரமலான் பண்டிகையையொட்டி தூத்துக்குடியில் சனிக்கிழமை இரண்டு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

கவைமக

Posted: 18 Jul 2015 12:24 PM PDT

தமிழர் தொன்று தொட்டே அறிவியல் புலமையுடன் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பல்வேறு ஆதாரங்களைத் தந்துகொண்டிருக்கிறது.

காயல்பட்டினத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

Posted: 18 Jul 2015 12:24 PM PDT

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ரமலானையொட்டி பள்ளிகள் மற்றும் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

அகில இந்திய கபடி: சென்னை,மும்பை,திருவனந்தபுரம் அணிகள் சிறப்பிடம்

Posted: 18 Jul 2015 12:23 PM PDT

குளத்தூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான மின்னொளி தொடர் கபடி போட்டிகளின் 2ஆம் நாள் ஆட்டத்தில் சென்னை, மும்பை, திருவனந்தபுரம் கபடி அணிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

சொல் தேடல் -17

Posted: 18 Jul 2015 12:23 PM PDT

நல்வாழ்வுக்கு உடல் வலிமையும் நலமும் கட்டாயத் தேவை. சுவர் இல்லாமல் சித்திரம் எழுத இயலுமா? "உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே' என்கிறார் திருமூலர். ஒவ்வொருவரும் உடலை உறுதியோடு வைத்துக்கொள்ளவும்,

பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

Posted: 18 Jul 2015 12:22 PM PDT

கோவில்பட்டியில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மாதா கோயில் பகுதியில் ரூ.6.26 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை

Posted: 18 Jul 2015 12:22 PM PDT

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயப் பகுதியில் ரூ. 6.25 லட்சத்தில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் சனிக்கிழமை பார்வையிட்டார்.

நாசரேத் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 18 Jul 2015 12:21 PM PDT

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், உள்தர உறுதிப்படுத்தும் குழுவும் இணைந்து அனைத்து முதலாமாண்டு மாணவ,மாணவிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது.

எட்டயபுரம் வங்கியில் வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம்

Posted: 18 Jul 2015 12:21 PM PDT

எட்டயபுரத்தில் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

Posted: 18 Jul 2015 12:20 PM PDT

திருச்செந்தூரில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் ரமலான்  கொண்டாட்டம்

Posted: 18 Jul 2015 12:19 PM PDT

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மழலையர் பிரிவு மாணவ மாணவிகள் சார்பில் ரமலான் கொண்டாடப்பட்து.

பொய்யாமொழிப் புலவர்

Posted: 18 Jul 2015 12:19 PM PDT

இன்றைக்கு நமக்குக் கிட்டியுள்ள சங்கப் பாடல்களில் தனியொருவராக அதிகமாகப் பாடல்களைப் பாடியருப்பவர் கபிலர் பெருமான் ஒருவர்தான்.

குளத்துவாய்பட்டி அகதிகள் முகாமில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

Posted: 18 Jul 2015 12:19 PM PDT

விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்துவாய்பட்டி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மு. ரவிகுமார், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குடவோலைச் சீட்டும் குலுக்கல் சீட்டும்

Posted: 18 Jul 2015 12:19 PM PDT

மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்க யானையிடம் மாலையைக் கொடுத்து வீதி வழியே அழைத்துச் செல்வர்.

சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் மறியல்

Posted: 18 Jul 2015 12:18 PM PDT

தூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 18 Jul 2015 12:18 PM PDT

இந்தவாரம் கலாரசிகன்

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: கொட்டாரத்தில் 37.5 மி.மீ. பதிவு

Posted: 18 Jul 2015 12:18 PM PDT

குமரி மாவட்டத்தில் பரவலாக சனிக்கிழமை அதிகாலை சாரல் மழை பெய்தது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 37.5 மி.மீ. மழை பதிவானது.

வியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Posted: 18 Jul 2015 12:17 PM PDT

திருவட்டாறு அருகேயுள்ள புத்தன்கடை வியாகப்பர் ஆலயத் திருவிழா   கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ரமலான் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Posted: 18 Jul 2015 12:16 PM PDT

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஜூலை 26-இல் உண்ணாவிரதம்: லாலுவுடன் சரத் யாதவ் பங்கேற்பு

Posted: 18 Jul 2015 12:16 PM PDT

சமூக - பொருளாதார, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வலியுறுத்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் (ஆர்ஜேடி) லாலு பிரசாத் தலைமையில், வரும் 26-ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் பங்கேற்கப்போவதாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் (ஜேடியு) சரத் யாதவ் கூறினார்.

வீடு புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

Posted: 18 Jul 2015 12:16 PM PDT

களியக்காவிளை அருகே சனிக்கிழமை அதிகாலையில் வீடு புகுந்து, அங்கு படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில்

Posted: 18 Jul 2015 12:15 PM PDT

என்னதான் நடக்கிறது இலங்கையில்...? ராஜபட்சவின் பலமும் சிறீசேனாவின் பலவீனமும்

Posted: 18 Jul 2015 12:15 PM PDT

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அடுத்த மாதம் 17-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேதி அறிவித்தாகிவிட்டது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற அதிபர்

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

Posted: 18 Jul 2015 12:15 PM PDT

மார்த்தாண்டம் சிட்டி அரிமா சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

மத்திகோடு ஊராட்சியில் ச.ம.க. கொடியேற்று விழா

Posted: 18 Jul 2015 12:14 PM PDT

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் சரத்குமார் பிறந்த தினத்தையொட்டி மத்திகோடு ஊராட்சியில் அக்கட்சியின் கொடியேற்று விழா நிகழ்ச்சி  நடைபெற்றது.

கடந்த ஆண்டில் 5,650 விவசாயிகள் தற்கொலை!

Posted: 18 Jul 2015 12:14 PM PDT

"விவசாய நாடு' என்று போற்றப்படும் நமது நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

"பாகிஸ்தானில் வீழ்த்தப்பட்ட உளவு விமானம் சீனத் தயாரிப்புதான்'

Posted: 18 Jul 2015 12:14 PM PDT

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா உளவு விமானம், சீனாவில் தயாரிக்கப்பட்டது என சீன ஊடகம் சனிக்கிழமை தெரிவித்தது.

விவசாய மானியத்துக்கு ஆதார் எண் அவசியம்: வேளாண்மைத் துறை உத்தரவு

Posted: 18 Jul 2015 12:13 PM PDT

தமிழகத்தில் விவசாய மானியங்களைப் பெற வேண்டுமெனில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென வேளாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு ஆதார் எண் இல்லாததால் மானியத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 5 மாவோயிஸ்டுகள் கைது

Posted: 18 Jul 2015 12:12 PM PDT

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்கள் 5 பேரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக மாவோயிஸ்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற பல கோடி லஞ்சம்

Posted: 18 Jul 2015 12:11 PM PDT

இந்தியாவில் 2 நீர்மேம்பாட்டு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்கு அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு சுமார் ஆறரை கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நிறுவனமான லூயிஸ் பெர்கர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் நோயாளியை தள்ளிவிட்ட 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம்

Posted: 18 Jul 2015 12:11 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் பெண் நோயாளி ஒருவரை கங்கை நதிக்கரையில் தள்ளிவிட்டுச் சென்ற 2 பயிற்சி மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சு நடத்துவோம்

Posted: 18 Jul 2015 12:11 PM PDT

இரு தரப்பு பிரச்னைகளை தீர்ப்பதற்காக பாகிஸ்தானுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

குஜராத் ரத யாத்திரை:பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 18 Jul 2015 12:10 PM PDT

குஜராத் ரத யாத்திரையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்:7 பேர் மீது தேசத் துரோக வழக்கு

Posted: 18 Jul 2015 12:10 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 7 இளைஞர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குமாரபுரத்தில் மனுநீதி நாள் முகாம்

Posted: 18 Jul 2015 12:10 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் வருவாய்க் கிராமத்தில் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரமலான் தொழுகை:முஃப்தி, ஒமர் பங்கேற்பு

Posted: 18 Jul 2015 12:10 PM PDT

 ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஹஸ்ரத்பால் மசூதியில் ரமலான் தினத்தையொட்டி, அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீதும், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் ஜூலை 20 மின் தடை

Posted: 18 Jul 2015 12:09 PM PDT

நாகர்கோவில் உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (ஜூலை 20) மின் தடை செய்யப்படவுள்ளது.

புரி நவகளேபர ரத யாத்திரை கோலாகலத் தொடக்கம்

Posted: 18 Jul 2015 12:09 PM PDT

ஒடிஸா மாநிலம், புரியில் ஸ்ரீ ஜகந்நாதர் நவகளேபர ரத யாத்திரை சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

பொது நல வழக்குக்கு ரூ.50,000 வைப்பு நிதி:மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Jul 2015 12:09 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு நிர்வாகக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்டுள்ள பொது நல மனு மீதான விசாரணைக்கு முன்னதாக மனுதாரர் ரூ.50,000 செலுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கணிதப் போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களால் அமெரிக்கா வெற்றி

Posted: 18 Jul 2015 12:08 PM PDT

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 மாணவர்களால் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில், அமெரிக்கா வெற்றி பெற்றது.

அதிமுக நிர்வாகிக்கு மருத்துவ நிதியுதவி

Posted: 18 Jul 2015 12:08 PM PDT

கொட்டாரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிக்கு மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டது.

தில்லி மகளிர் ஆணைய தலைவியாக ஸ்வாதி மாலிவால் பதவியேற்பு

Posted: 18 Jul 2015 12:07 PM PDT

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான நவீன் ஜெய்ஹிந்தின் மனைவி ஸ்வாதி மாலிவால், தில்லி மகளிர் ஆணைய தலைவராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

லக்வியின் குரல் மாதிரியை ஆதாரமாக பயன்படுத்த முடியாது

Posted: 18 Jul 2015 12:07 PM PDT

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத் தலைவரும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய முக்கிய நபருமான ஜகியுர் ரஹ்மான் லக்வியின் குரல் மாதிரியை ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்று பாகிஸ்தானின் மத்தியப் புலனாய்வு அமைப்பின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

10,000 பேருந்துகளை நிறுத்த 500 ஏக்கர் நிலம்: டிடிஏவுக்கு தில்லி அரசு கடிதம்

Posted: 18 Jul 2015 12:07 PM PDT

தில்லியில் 10 ஆயிரம் பேருந்துகளை நிறுத்துவதற்கான பணிமனைகள் அமைக்க 500 ஏக்கர் நிலம் வழங்க கோரி, தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) தில்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™