Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மாரி வெற்றி - மாரி-2 தயாராகிறது!

Posted:

சமீபகாலமாக ஒரு படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகரித்து வருகிறது. முனி, காஞ்சனா, காஞ்சனா-2 என தொடர் படங்களை எடுத்தார் லாரன்ஸ். தற்போது வௌியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி, இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதேப்போன்று கமலின் விஸ்வரூபம்-2 உருவாகி வருகிறது.

அந்த வரிசையில் நடிகர் ...

'கரகாட்டக்காரன்' கனகா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் லட்சுமி மேனன்!

Posted:

''கும்கி'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, கொம்பன் போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். பள்ளி மாணவியாக இருந்த லட்சுமி மேனன், இப்போது கல்லூரி மாணவியாக உயர்ந்துள்ளார். தற்போது ...

குறும்படங்களுக்காக யூடியூப் சேனலை துவக்கிய ஐஸ்வர்யா தனுஷ்

Posted:

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், முன்னணி நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், குறும்படங்களின் வளர்ச்சிக்காக, "டென் எண்டர்டெய்ன்மெண்ட்" என்ற பெயரில் யூடியூப் சேனலை துவக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ், கோலிவுட்டில், "3" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பின், வை ...

சுசீந்திரனின் உதவியாளர் இயக்கும் ''அழகென்ற சொல்லுக்கு அமுதா!''

Posted:

ரால்ப் புரொடக்ஷன்ஸ் ரபேல் சல்தானா தயாரிப்பில், நாகராஜன் இயக்கும் படம் "அழகென்ற சொல்லுக்கு அமுதா". ஒரு இளைஞனுடைய காதலில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமே "அழகென்ற சொல்லுக்கு அமுதா".

ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா நாயகியாகவும் நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகா சுரேஷ், சுவாமிநாதன், ...

சின்னத்திரை இயக்குநர் விடுதலை காலமானார்!

Posted:

பிரபல சின்னத்திரை இயக்குநர் விடுதலை காலமானார். அவருக்கு வயது 52. ''எத்தனை மனிதர்கள்'', ''வார்த்தை தவறிவிட்டாய்'', ''அக்கினிசாட்சி'', ''ஆனந்தம்'', ''அவளும் பெண் தானே'', ''குறிஞ்சி மலர்'' போன்ற சின்னத்திரை சீரியல்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் ...

நாளை முதல் பல்பு சாங் ஆல்பம்!

Posted:

Kinetoscope நிறுவனத்தின் சார்பில் DR.S. செல்வமுத்து & மஞ்சுநாத் இணைந்து தயாரிக்கும் வீடியோ ஆல்பம் 'Bulbu Song'. பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத், வாகை சூடவா இனியா ஆகியோர் நடித்துள்ள இப்பாடலுக்கு மஸ்தான்-காதர் இசையமைத்துள்ளார். 'எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ' என்ற 'பல்பு சாங்' ஆல்பத்தின் பாடல் நாளை(ஜூலை 25) ...

பாவனா நடிக்கும் ஓபன் யுவர் ஹார்ட்!

Posted:

ஐந்து மாதங்களுக்கு முன்பு பாவனா அப்படி சொன்னபோது பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.. இவருக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என சிலரும், சரிதான் மார்க்கெட் போய்விட்டது போல என சிலரும் கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள்.. அப்படியென்ன சொன்னார் பாவனா.. மலையாளத்தில் உருவாகும் குறும்படம் ஒன்றில் நடிக்கபோகிறேன் என்றுதான் சொன்னார். அதற்குத்தான் ...

மலையாளத்தில் உருவாகும் புதிய காமெடி கூட்டணி..!

Posted:

ஒரு படம் ஹிட்டாகும்போது அதில் நடித்த ஹீரோ-காமெடியன் என்கிற கூட்டணிதான் உருவாக வேண்டும் என்பதில்லை.. கவுண்டமணி செந்தில் போல காமெடியர்களின் கூட்டணியும் திடீரென் உருவாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தலாம. அப்படித்தான் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாராட்டை பெற்று ...

வாபஸ் ஆகிறதா வாலு பட வழக்கு?

Posted:

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில், சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்த வாலு படம் கடந்த மூன்று வருடங்களாக பல தடவை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. கடைசியாக ஜூலை 17- ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், வாலு படம் தொடர்பாக நிக் ஆர்ட்ஸ் ...

பிருத்விராஜ் நடிக்கும் பிரமாண்ட வரலாற்று படம் ''ஸ்யாமாந்தகம்'

Posted:

கதைக்கு பிரமாண்டம் தேவைப்பட்டால் அதற்கு பட்ஜெட் என்பது ஒரு தடையே அல்ல என்பதை 'பாகுபலி'யின் வெற்றி அழுத்தமாக பறைசாற்றி விட்டது. இதற்கு முன் பட்ஜெட் பிரச்சனையினாலேயே தனது கனவுப்படமான 'மருதநாயகம்' படத்தை நிறுத்திவைத்திருந்த கமல் கூட அடுத்து அந்தப்படத்தை தூசிதட்ட இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இதேபோல மகாபாரத கதையில் ...

'பஹத் பாசில் தம்பி படம் ; திருட்டுத்தனமாக அப்லோடு செய்தவர் பிடிபட்டார்..!

Posted:

மலையாள திரையுலகில் பிரேமம் படம் ஆன்லைனில் லீக்கான பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வந்தப்பாடில்லை.. அதற்குள் இன்னொரு படத்தை அனுமதியின்றி 'யு-டோரண்ட் இணையதளத்தில் திருட்டுத்தனமாக அப்லோடு செய்தவர் பிடிபட்டுள்ளார். பஹத் பாசிலின் தம்பி பர்ஹான் பாசில் ஹீரோவாக அறிமுகமான படம் 'ஞான் ஸ்டீவ் லோபஸ்'.. நடிகை கீது மோகன்தாசின் கணவரும் ...

சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு!

Posted:

நடிகர் சூர்யாவுக்கு நேற்று பிறந்தநாள். வழக்கமாக தன் பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடனும் நெருக்கமான நண்பர்களுடன் மட்டும் கொண்டாடுபவர் சூர்யா. இந்த வருடம் வழக்கத்தைவிட சற்று விமரிசையாகக் கொண்டாட எண்ணினாராம் சூர்யா. அதற்கு ஜோதிகா மீண்டும் நடிக்க வந்ததும் முக்கியமான ஒரு காரணம் என்கிறார்கள். ஜோதிகா நடிப்பைவிட்டு ...

பெண் பெயரில் நடிக்கும் குஞ்சாக்கோ போபன்..!

Posted:

மலையாளத்தில் இதுவரை நம் ஹீரோக்கள் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். ஆனால் பெண் பெயரில் நடித்திருக்கிறார்களா..? அதுவும் படத்தின் டைட்டில் ரோலில். அந்த அதிர்ஷ்டசாலி, சாக்லேட் பாயாக இருந்து இப்போது சாக்லேட் அங்கிளாக மாறியிருக்கும் குஞ்சாக்கோ போபன் தான். படத்தின் பெயர் 'மைக்கேல் ராஜம்மா'. இப்படிப்பட்ட பெயரிலேயே வாழ்ந்த ...

அதிமுக., கட்சியில் இணைகிறேனா...? த்ரிஷா பதில்!

Posted:

சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. தமிழ், மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். புதுமுக நடிகைகளின் வரவு பல இருந்தும் த்ரிஷாவிற்கான படங்களும், வாய்ப்புகளும் குறைவில்லாமல் இருந்து கொண்டிருக்கிறது. தற்போது ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர் படத்தில் நடித்திருப்பவர் அடுத்தப்படியாக கமலின் ...

ஜூலை 26ந் தேதி பிலிம் ஃபேர் விருது விழா ஒளிபரப்பாகிறது

Posted:

கடந்த மாதம் 26ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 62வது பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடந்தது. தென்னிந்திய மொழியில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், கலைஞர்கள் விருது பெற்றார்கள். தமிழில் வேலையில்லா பட்டதாரி படமும், கத்தி படமும், மெட்ராஸ் படமும் நிறைய விருதுகளை வென்றது. கமல், மம்முட்டி, மோகன்லால், நாகார்ஜுனா, ...

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் கோலிசோடா சாந்தினி

Posted:

கோலிசோடா படத்தில் நடித்த சாந்தினியை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. கோலிசோடா பசங்களின் காட்மதரான சுஜாதா ஆச்சியின் மகளாக நடித்திருந்தார். தற்போது அவர் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள குரங்கு கைல பூமாலை படம் ஆகஸ்ட் 7ந் தேதி வெளிவருகிறது. ஜெகதீஷ், கிருஷ்ணா, பிரவீன் குமார், கணேஷ் என்ற 4 பேர் ஹீரோக்களாக ...

தமிழுக்கு வருகிறார் ஷ்ரவ்யா

Posted:

சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான படம் லவ் யூ பங்காரம். அதில் நடித்த ஷ்ரவ்யா இப்போது தெலுங்கின் டாப் ஹீரோயின்கள் பட்டியலில் இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இப்போது ஹீரோயினாகி கனவு கன்னியாகியிருக்கிறார். தெலுங்கில் ஹிட் படத்தில் நடித்து விட்டு தமிழுக்கு வருகிறார்.
புகழ்மணி ...

கருத்தம்மா ராஜஸ்ரீ ரீ எண்ட்ரியாகிறார்

Posted:

பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு ராஜஸ்ரீ. கருத்தம்மா படத்தில் அறிமுகம். அதன் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்பு ஹீரோயின் மார்க்கெட் விழுந்ததும் ரன், வேட்டையாடு விளையாடு, நந்தா படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார். பின்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு உடல் குண்டாகிவிட்டதால் ...

அப்பாடக்கர் பெயர் மாற்றம் ஏன்?: இயக்குனர் விளக்கம்

Posted:

ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி நடிக்கும் அப்பாடக்கர் படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பெயரை தற்போது சகலகலாவல்லவன் என்று மாற்றியிருக்கிறார்கள். பெயர் மாற்றம் ஏன்? என்பதற்கு படத்தின் இயக்குனர் சுராஜ் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
அப்பாடக்கர் ...

நடிகை ஷில்பா மர்ம மரணம்: காதலன் கைது

Posted:

தமிழில் சிறகு என்ற படத்தில் நடித்தவர் நடிகை ஷில்பா. சில மலையாள படங்களிலும் மலையாள சீரியல்களிலும், சந்தன மழை என்ற தமிழ் சீரியலிலும் நடித்து வந்தார். 19 வயதான ஷில்பா தன் பெற்றோருடன் திருவனந்தபுரம் அருகில் உள்ள சொந்த ஊரான பாலராமாபுரத்தில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டுச் சென்ற ஷில்பா அங்குள்ள ஆற்றில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™