மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மத்திய பிரதேச நுழைவுத்தேர்வு ஊழல்: குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
- ஹேமமாலினி ட்விட்: விபத்தில் பலியான குழந்தையின் தந்தை போக்குவரத்து விதிகளை பின்பற்றியிருக்க வேண்டும்
- வியாபம் ஊழல் விவகாரத்தில் ராஜினாமா செய்ய மாட்டேன்: சவுகான் திட்டவட்டம்
- தூரந்தோ–சதாப்திக்கு பதில் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள்: 15–ந் தேதி முதல் அறிமுகம்
- மதுபார் ஊழல் வழக்கு: மந்திரி மாணி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை - லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தகவல்
- கேரள கடல் பகுதியில் மர்ம படகு ஊடுருவியது பற்றி தேசிய புலனாய்வு விசாரணை: உள்துறை மந்திரி தகவல்
- திருவனந்தபுரம் அருகே பக்தர்களை விரட்டிய மதம் பிடித்த யானை: மயக்க ஊசி போட்டு கட்டுக்குள் கொண்டுவந்த அதிகாரிகள்
- காஷ்மீரில் 17–ந்தேதி இப்தார் விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி
- பருவமழை தீவிரம்: இமாசல பிரதேசத்தில் கடும் மழை
- காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்திய வீரர் படுகாயம்
- யானை தந்தங்கள் வைத்திருப்பதா? நடிகர் ஜெயராமுக்கு வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு
- டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம் 13 மணி நேரத்திற்கு பின் மீண்டும் புறப்பட்டது
- தேசிய கீதத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை புகழும் வார்த்தையா? கல்யாண்சிங் பேச்சால் புதிய சர்ச்சை
- நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.160 ஆக உயர்த்தப்பட்டது
- நுழைவுத்தேர்வு ஊழல் தொடர்பாக பீகார் மாநிலத்தில் 6 பேர் கைது
- கர்நாடக அரசு மாணவர் விடுதிகளுக்கு தலையணை,மெத்தை வாங்கியதில் ரூ.19 கோடி ஊழல்: கர்நாடக மேல்-சபையில் தகவல்
- விலை உயர்வை கட்டுப்படுத்த 5 ஆயிரம் டன் உளுந்தம்பருப்பு இறக்குமதி: மத்திய அரசு தகவல்
- மேகி நூடுல்சை அழிப்பதற்கு அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 கோடி வழங்கிய நெஸ்லே
- நுழைவுத்தேர்வு ஊழல் சாதாரண பிரச்சினை: மத்திய சட்ட மந்திரி கருத்து
- ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டத்திற்கு தயாராகும் அன்னா ஹசாரே
| Posted: 07 Jul 2015 11:26 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் கல்வி நுழைவுத்தேர்வில் ஆள் மாறாட்டம், லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கியது போன்ற முறைகேடுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு முதல்–மந்திரி சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இதனால் இந்த ஊழல் புகாரை காங்கிரஸ் கையில் எடுத்துக்கொண்டு அரசுக்கு எதிராக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை |
| ஹேமமாலினி ட்விட்: விபத்தில் பலியான குழந்தையின் தந்தை போக்குவரத்து விதிகளை பின்பற்றியிருக்க வேண்டும் Posted: 07 Jul 2015 11:05 PM PDT அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்தில் பலியான குழந்தையின் தந்தை போக்குவரத்து விதிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்று நடிகை ஹேமமாலினி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் மதுரா லோக்சபா தொகுதி எம்.பி.யான ஹேமமாலினி கடந்த 2-ம்தேதி இரவு 9 மணியளவில், மதுராவிலிருந்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் நோக்கி தனக்கு சொந்தமான, மெர்சிடஸ் பென்ஸ் |
| வியாபம் ஊழல் விவகாரத்தில் ராஜினாமா செய்ய மாட்டேன்: சவுகான் திட்டவட்டம் Posted: 07 Jul 2015 11:04 PM PDT வியாபம் ஊழல் தொடர்பாக மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– வியாபம் முறைகேடு பற்றி தெரியவந்ததும் அதில் ஆழமான விசாரணைக்கு உத்தரவிட்டேன். இந்த விவகாரம் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விசாரணை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை |
| தூரந்தோ–சதாப்திக்கு பதில் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள்: 15–ந் தேதி முதல் அறிமுகம் Posted: 07 Jul 2015 10:21 PM PDT ரெயில்வேயானது தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தவிர தூரந்தோ, சதாப்தி போன்ற பலவகையான ரெயில்களை இயக்கி வருகிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மட்டும் ஒரே கட்டண விகிதம் இருக்கும் தூரந்தோ ரெயில், முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டது. இடையில் எங்கும் நிற்காது. தேவைக்கு |
| மதுபார் ஊழல் வழக்கு: மந்திரி மாணி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை - லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தகவல் Posted: 07 Jul 2015 10:11 PM PDT கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உம்மன் சாண்டி மந்திரி சபையில் நிதி மந்திரியாக மாணி உள்ளார். இவர் கேரளாவில் மூடப்பட்ட மதுபான பார்களை திறக்க பார் உரிமையாளர் சங்கத்திடமிருந்து ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு |
| கேரள கடல் பகுதியில் மர்ம படகு ஊடுருவியது பற்றி தேசிய புலனாய்வு விசாரணை: உள்துறை மந்திரி தகவல் Posted: 07 Jul 2015 10:07 PM PDT கேரள மாநிலம் ஆலப்புழை கடல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மர்ம படகு ஊடுருவியது. அந்த படகை கடலோர பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். அந்த படகில் இருந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களில் 7 பேர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், 5 பேர் |
| Posted: 07 Jul 2015 09:55 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையில் பிரசித்திபெற்ற மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவசங்கரன் என்ற ஆண் யானை உள்ளது. இந்த யானை கோவில் திருவிழா மற்றும் அந்த பகுதியில் உள்ள சில விழாக்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு |
| காஷ்மீரில் 17–ந்தேதி இப்தார் விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி Posted: 07 Jul 2015 09:16 PM PDT புனித ரம்ஜான் மாதத்தை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி இப்தார் விருந்து அளிக்கிறார். இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான வருகிற 17–ந் தேதி நடக்கிறது. |
| பருவமழை தீவிரம்: இமாசல பிரதேசத்தில் கடும் மழை Posted: 07 Jul 2015 08:54 PM PDT இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்குள்ள சிர்மார் மற்றும் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. |
| காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்திய வீரர் படுகாயம் Posted: 07 Jul 2015 08:39 PM PDT காஷ்மீர் எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் உள்ள 6 எல்லைப்புற சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் விடிய விடிய சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். |
| யானை தந்தங்கள் வைத்திருப்பதா? நடிகர் ஜெயராமுக்கு வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு Posted: 07 Jul 2015 08:39 PM PDT ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஜெயராம், 'பெரும்பாவூர் கண்ணன்' என்ற யானையை வளர்த்து வந்தார். அது, 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. அதன் ஒரு ஜோடி தந்தங்களை ஜெயராமே வைத்துக்கொள்ள கேரள வனத்துறை அனுமதி |
| டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம் 13 மணி நேரத்திற்கு பின் மீண்டும் புறப்பட்டது Posted: 07 Jul 2015 08:36 PM PDT டெல்லியில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது. துருக்கி விமானம் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கில் இருந்து |
| தேசிய கீதத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை புகழும் வார்த்தையா? கல்யாண்சிங் பேச்சால் புதிய சர்ச்சை Posted: 07 Jul 2015 08:26 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில், ராஜஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், அந்த மாநிலத்தின் கவர்னர் கல்யாண்சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் புதிய சர்ச்சைக்கு வித்திட்டார். |
| நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.160 ஆக உயர்த்தப்பட்டது Posted: 07 Jul 2015 08:23 PM PDT நாடு முழுவதும் உள்ள கூலி தொழிலாளர்களுக்கான தேசிய தளமட்ட குறைந்தபட்ச கூலி ரூ.137 ஆக இருந்து வந்தது. இதை மத்திய அரசு ரூ.160 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர்களுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி |
| நுழைவுத்தேர்வு ஊழல் தொடர்பாக பீகார் மாநிலத்தில் 6 பேர் கைது Posted: 07 Jul 2015 08:20 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வு ஊழல் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஒரு குழுவினர் பீகார் மாநிலம் சென்று தீவிர விசாரணை நடத்தியது. பீகார் மாநிலத்தில் மட்டும் சுமார் 40 மாணவர்கள் இந்த மகா ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். |
| Posted: 07 Jul 2015 08:17 PM PDT பெலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று கர்நாடக மேல்-சபை கூட்டம் தொடங்கியது. அப்போது பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று, "சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர், பழங்குடியின அரசு மாணவர் விடுதிகளுக்கு தலையணை மற்றும் மெத்தை கொள்முதல் செய்ததில் ரூ.19 கோடி முறைகேடு |
| விலை உயர்வை கட்டுப்படுத்த 5 ஆயிரம் டன் உளுந்தம்பருப்பு இறக்குமதி: மத்திய அரசு தகவல் Posted: 07 Jul 2015 07:47 PM PDT கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை மற்றும் பல்வேறு வகையான பருப்புகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை ஒரு கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. |
| மேகி நூடுல்சை அழிப்பதற்கு அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 கோடி வழங்கிய நெஸ்லே Posted: 07 Jul 2015 01:58 PM PDT இந்தியாவில் மேகி நூடுல்சில் ரசாயனக் கலப்பால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி அதன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மொத்த நூடுல்ஸ் விற்பனை 90 சதவீதம் சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. |
| நுழைவுத்தேர்வு ஊழல் சாதாரண பிரச்சினை: மத்திய சட்ட மந்திரி கருத்து Posted: 07 Jul 2015 01:27 PM PDT ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய சட்ட மந்திரி சதானந்த கவுடாவிடம் நிருபர்கள், நுழைவுத்தேர்வு ஊழல் பற்றி கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், இது சாதாரணமான ஒரு பிரச்சினை. இது போன்றவற்றுக்கு எல்லாம் பிரதமர் பதில் அளிக்க தேவையில்லை. எங்களுடைய உள்துறை மந்திரி (ராஜ்நாத் சிங்), சம்பந்தப்பட்ட துறை |
| ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டத்திற்கு தயாராகும் அன்னா ஹசாரே Posted: 07 Jul 2015 10:08 AM PDT ஒரு பதவி ஒரு பென்சன் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடுதழுவிய அளவில் போராட்டம் நடத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே திட்டமிட்டுள்ளார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். தனது போராட்டம் குறித்து பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், "நமது படைவீரர்களையும் விவசாயிகளையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் நலன்களுக்காக கொடுக்கும் வாக்குறுதிகளும், செயல்படுத்துவதும் வெவ்வேறாக உள்ளன. ஜனநாயகத்தில், மக்களின் துயரங்களை அரசு கேட்க வேண்டும். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |